திங்கள், 9 டிசம்பர், 2019

தமிழக வீரர் - வீராங்கனையரின் பங்கு மகத்தானது. - மு.க.ஸ்டாலின் பெருமிதம்

இந்திய விளையாட்டுத் துறையின் மகுடத்தில் புதுப்புது வைரங்களைப் பதித்து மின்னிடச் செய்வதில் தமிழக வீரர் - வீராங்கனையரின் பங்கு மகத்தானது.
- மு.க.ஸ்டாலின்
(தலைவர்,திமுக)

நேபாளத்தில் நடைபெற்ற 13-வது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில், வாலிபால் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடிய இறுதிப் போட்டியில், இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.


இந்திய வாலிபால் அணியின் தலைவராக ஆடிய, ஜெரோம் வினித் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் - கறம்பக்குடி தாலுகா - கோட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது, தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கக் கூடியதாகும்.

ஜெரோம் வினித் அவர்களின் தாத்தா, ஒரு மொழிப்போர்த் தியாகி என்பது, தமிழுணர்வு கொண்ட நம் அனைவரையும் சிலிர்ப்படையச் செய்கிறது.

ஆடுகளமாக இருந்தாலும், போராட்டக் களமாக இருந்தாலும் அர்ப்பணிப்புடன் பங்கேற்கும் பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவரான, தங்கத் தமிழர் ஜெரோம் வினித் அவர்களுக்கும், அவர் தலைமையில் ஆடிய இந்திய வாலிபால் அணியினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல வெற்றிப் பதக்கங்கள் உங்கள் வசமாகட்டும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக