புதன், 11 டிசம்பர், 2019

பாஜக கொள்கை திவாலாகிவிட்டதையே காட்டுகிறது.- திருமதி பிரியங்கா காந்தி

உங்கள் கொள்கை திவாலாகிவிட்டதையே காட்டுகிறது.- திருமதி பிரியங்கா காந்தி
நிர்மலா சீதாராமன் வெங்காயம், பூண்டு சாப்பிடமாட்டார் என்பது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால், நீங்கள் உங்களுக்கு மட்டும் நிதியமைச்சர் அல்ல, நாட்டுக்கு நிதியமைச்சர். அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலையால், சாமானிய மக்கள் நாள்தோறும் கொள்ளையடிக்கப்படுகிறார்கள். விரைவில் இதற்கு நீங்கள் தீர்வு காணுங்கள்.

வெங்காயத்தை விளைவிக்கும் விவசாயிகளுக்குக் கிலோவுக்கு 2 ரூபாய் முதல் 8 ரூபாய் வரைதான் கிடைக்கிறது. ஆனால், இடைத்தரகர்கள்தான் அதிகமாகச் சம்பாதித்து பணக்காரர்களாக மாறுகிறார்கள், விவசாயிகள் கடனால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இதுபோன்ற மோசமான கொள்கைகளால், வெங்காயம் விளையும் பகுதி குறைந்துள்ளது. நீங்கள் ஒன்றும் இதில் செய்யவில்லை. இப்போது வெங்காயம் மக்களைக் கண்ணீர்விட வைக்கிறது. விவசாயிகளும் எதையும் பெறவில்லை, சாமானிய மக்களும் அதிக விலை கொடுத்து வெங்காயம் வாங்குகிறார்கள். விவசாயிகள், மக்களுக்கு இடையே இடைத்தரகர்கள் தான் பெருமளவு பயன் அடைகிறார்கள். உங்கள் கொள்கை திவாலாகிவிட்டதையே காட்டுகிறது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக