செவ்வாய், 3 டிசம்பர், 2019

மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பான வாழ்வு மேம்பட வேண்டும் - ஜி.கே.வாசன்

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், பாதுகாப்பு, வாழ்வாதாரம் ஆகியவற்றைஉறுதி செய்துகொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
ஜி.கே.வாசன்
(தலைவர், த.மா.கா)

உலகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பான வாழ்வு மேம்பட வேண்டும் என்பது தான் த.மா.கா வின் எதிர்பார்ப்பாகும்.


மாற்றுத்திறனுடையவர்கள் தங்களின் தனித்திறமையால் கல்வி, விளையாட்டு, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். ஆனாலும் நம் நாட்டில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இன்னும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள், சலுகைகள், பாதுகாப்பு போன்றவை முழுமை அடையவில்லை என்பது தான் உண்மை நிலை. மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்கும் மற்றும் பாரபட்சமாக நடத்தும் செயல்களை அனுமதிக்கக்கூடாது.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்ந்த நலத்திட்டங்கள் அவர்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கிறது என்றாலும் கூட தனியார் தொண்டு நிறுவனங்களும் உதவிக்கரமாக செயல்படுகிறது என்பது சிறப்புக்குரியது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய உரிமைகள், சலுகைகள், பாதுகாப்பு போன்றவை தடையில்லாமல், இடையூறு இல்லாமல் தொடர்ந்து கிடைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் கல்விக்கும், வேலை வாய்ப்பிற்கும், கடன் உதவிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் புதிய திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும்.

மேலும் மாற்றுத்திறனாளிகளின் நண்பர்கள், உற்றார் உறவினர்கள், பொது மக்கள் என அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்ய முன்வர வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் நலன் காப்பதற்கு பொது மக்கள் துணைநிற்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து, அவர்களின் வாழ்வு மேம்பட உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று நாமெல்லாம் அவர்களுக்கான உரிமைகள், சலுகைகள், பாதுகாப்பு ஆகியவை முழுமையாக கிடைக்க உறுதுணையாக இருந்து அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க வழி வகுக்க வேண்டும் என்று இந்நாளில் உறுதி ஏற்போம்.

மாற்றுத்திறனாளிகள் உடல் வலிமை மற்றும் மன வலிமையோடு வாழ்வில் பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக, நல்வாழ்க்கை வாழ த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக