வியாழன், 5 டிசம்பர், 2019

பாஸ்டேக் திட்டத்தின்படி குறியீட்டு அட்டையைப் பெறுவதற்கான காலத்தை நீட்டிக்கவும் - ஜி.கே.வாசன்

மத்தியஅரசு சுங்கச்சாவடி களில் 'பாஸ்டேக்' எனப்படும் மின்னனு முறையில் கட்டணம் வசூலிக்கும் முறையை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதி முதல் அமல்படுத்த த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
-ஜி.கே.வாசன்
(தலைவர், த.மா.கா)

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்த 'பாஸ்டேக்' திட்டத்தில் பதிவு செய்வதற்கான காலத்தை இன்னும் நீட்டித்து அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்த மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்.


வாகன ஓட்டிகளுக்கு பயன் தர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த நினைக்கும் மத்திய அரசு அதற்காக பதிவு செய்வதற்கான காலத்தை சற்று நீட்டித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

டிசம்பர் 15 ஆம் தேதி வரை காலக்கெடு விதித்துள்ள மத்திய அரசு இன்னும் 15 நாட்கள் கூடுதலாக வழங்கி ஜனவரி 1 முதல் 'பாஸ்டேக்' மூலமாக கட்டணம் பெறும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் போது ஏற்படும் காலவிரயத்தை போக்கிடவும், தேவையற்ற விவாதங்கள், சண்டை சச்சரவுகள் ஏற்படாமல் இருக்கவும் தொடர் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

மேலும் சுங்கக் கட்டணத்தை வசூலிக்க மேற்கொள்ளும் முயற்சிகளில் காட்டும் ஆர்வத்தை சாலையின் தரத்தை மேம்படுத்துவதிலும், சாலைப்பாதுகாப்பிலும், சாலை விதிகளை கடைபிடிப்பதிலும் காட்ட வேண்டும்.

சுங்கச்சாவடிகளை முறையாக பராமரித்து, சாலைப் போக்குவரத்தில் இடையூறு, தடங்கல் ஏற்படாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் பயணம் சிரமத்திற்கு உட்படாத வகையில் இருக்க வேண்டும் என்பது தான் பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

எனவே மத்திய அரசு வாகன ஓட்டிகளின் நலன் கருதி பாஸ்டேக் திட்டத்தின்படி குறியீட்டு அட்டையைப் பெறுவதற்கான காலத்தை நீட்டிக்கவும், வர இருக்கின்ற 2020 ஜனவரி 1 முதல் இம்முறையை அமல்படுத்தலாம் என்றும் த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக