வெள்ளி, 26 மார்ச், 2021

ஊழலில் ஊறித் திளைத்த அ.தி.மு.க. ஆட்சியை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்தில்தான் பா.ஜ.க.வோடு அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருக்கிறது. - கே.எஸ்.அழகிரி


ஏழைகள் என்ற சொல்லை இல்லாமல் செய்வதே எங்கள் லட்சியம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். பாஜகவுடன் சேர்ந்து ஏழைகளே இல்லாமல் செய்து கொண்டிருக்கிறீர்கள். பொது முடக்கத்துக்குப் பிறகு வாழ்வாதாரத்துக்கே வழியின்றி ஏழைகள் இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் வாயு சிலிண்டர் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு என கடும் சுமையை ஏற்றி மக்களைச் சித்ரவதை செய்து கொண்டிருக்கிறீர்கள். நடுத்தர வர்க்கம் நடுத்தெருவுக்கு வந்துவிட்டது. ஏழைகள் பசியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் லட்சியம் என்றோ நிறைவேறிவிட்டது. 

திங்கள், 22 மார்ச், 2021

தமிழ்நாடு மற்றும் புதுவை திருக்கோயில்களில் கருவறை அர்ச்சனை, குடமுழுக்கு, வேள்விகள் அனைத்தும் தமிழ் மந்திரங்களை ஓதி, தமிழ்வழியில் நடக்க வேண்டும்.

 திருக்கோயில்களில் அர்ச்சனை  தமிழ் மந்திரங்களில் நடக்க வேண்டும்! 

கோருவோருக்கு மட்டுமே சமற்கிருதத்தில் நடக்க வேண்டும்!

தெய்வத் தமிழ்ப் பேரவை தீர்மானம்!

தமிழ்நாடு மற்றும் புதுவை திருக்கோயில்களில் கருவறை அர்ச்சனை, குடமுழுக்கு, வேள்விகள் அனைத்தும் தமிழ் மந்திரங்களை ஓதி, தமிழ்வழியில் நடக்க வேண்டும் என்ற நோக்கிலும், தமிழர் ஆன்மிகத்தை சமகாலத்திற்கேற்ப வளர்க்கும் நோக்கிலும் தமிழ் ஆன்மிகச் சிந்தனையாளர்கள், தமிழ் வழிபாடு செய்விக்கும் சான்றோர்கள் ஆகியோர்களைக் கொண்ட கலந்தாய்வுக் கூட்டம் தேனி மாவட்டம் – குச்சனூரில் நேற்று (21.03.2021) நடைபெற்றது. இதன் முதல் கூட்டம், கடந்த 14.02.2021 அன்று திருச்சியில் நடைபெற்றது. 

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும்! - தொல்.திருமாவளவன்


ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக 6 நாடுகளால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரவுள்ள நிலையில், அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

சாத்தான்குளத்தில் தந்தை மகன் அடித்துக் கொல்லப்பட்ட கொடுமை போன்ற பாவங்களை கூட்டாக செய்த அதிமுக – பாஜக கூட்டணிக்கு தக்க பாடம் புகட்டுங்கள்.- மு.க.ஸ்டாலின்

 "தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை கொன்று - சாத்தான்குளத்தில் தந்தை மகன் அடித்துக் கொல்லப்பட்ட கொடுமை போன்ற பாவங்களை கூட்டாக  செய்த அதிமுக – பாஜக கூட்டணிக்கு தக்க பாடம் புகட்டுங்கள்"

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.

நீங்கள் தந்திருக்கும் இந்தச் சிறப்பான உற்சாகமான வரவேற்பிற்கு நன்றி. உங்களைத் தேடி நாடி ஆதரவு கேட்க வந்திருக்கிறேன். தேர்தலுக்காக வந்து போகிற ஸ்டாலின் நானல்ல. எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் எப்படிப்பட்ட நிலையிலும் உங்களோடு இருப்பவன்தான் இந்த ஸ்டாலின் என்ற உரிமையோடு உங்களிடம் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.

சனி, 20 மார்ச், 2021

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், வயது வரம்பின்றி அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும்.- DR.S.ராமதாஸ்

அதிகரிக்கும் கொரோனா: பாதுகாப்பு விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்று அனைத்துத்  தரப்பினரும் நிம்மதி பெருமூச்சு விட்டு வந்த நிலையில், கொரோனா வைரஸ் மீண்டும் மிக வேகமாக பரவத் தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு அதிக அளவில் கொரோனா ஏற்பட்டுள்ள நிலையில், உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

திங்கள், 15 மார்ச், 2021

அதிமுகவின் சமூகநீதிக்கான தேர்தல்அறிக்கைக்கு வரவேற்பு: முழுமையானசமூகநீதி மலரும் நாள் மிக அருகில்! - DR.S.ராமதாஸ்


அதிமுகவின் சமூகநீதிக்கான தேர்தல் அறிக்கைக்கு வரவேற்பு: முழுமையான சமூகநீதி மலரும் நாள் மிக அருகில்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் வெகுவிரைவில் தாக்கல் செய்யவிருக்கும் சாதிவாரி மக்கள்தொகை குறித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அனைத்து சமூகங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் முழுமையான சமூகநீதி மலர்வதற்கு இது பெரும் உதவியாக இருக்கும்.

சனி, 13 மார்ச், 2021

மத்திய பாஜக அரசைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் நடத்தும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின்.


 பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் நடத்தும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின்.

இந்திய ஒன்றியத்தின் வலிமை மிகுந்த பொருளாதாரக் கட்டமைப்பான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது ஒன்றையே முழுநேரக் கொள்கையாகக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் நலனுக்கு விரோதமான செயல்பாடுகளால், எளிய மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருக்கும் பொதுத்துறை வங்கிகள் கடும் நெருக்கடியைச் சந்திக்கின்றன. பொதுத்துறை வங்கிகளை இணைத்து, வங்கிச் சேவைகளின் பரவலாக்கத்தை முடக்கிய மத்திய அரசு, ஏற்கனவே ஐ.டி.பி.ஐ. வங்கிப் பங்குகளை விற்று தனியார்மயமாக்கியது போல மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க முன்வந்துள்ளது.

அனைத்துச் சுகாதார நிலையங்களும் 24 மணிநேர மருத்துவம் அளிக்கும் மையங்களாக மேம்படுத்தப்படும் என்று பாமக வாக்குறுதி அளித்திருந்தது.- DR.S.ராமதாஸ்


 பா.ம.க. தேர்தல் அறிக்கை : அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் இலவசமாக வழங்கப்படும்!

இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, நலவாழ்வுத் துறையில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியாவின் நிர்வாகத் தலைநகரம் புதுதில்லி, பொருளாதாரத் தலைநகரம் மும்பை என்றால், நலவாழ்வுத் தலைநகரம் சென்னை என்று அழைக்கப்படும் அளவுக்குச் சென்னையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவதில் சென்னையில் உள்ள மருத்துவமனைகள் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தன. பிற மாநிலங்கள், பிற நாடுகளில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுக் காப்பாற்ற முடியாது என்று கைவிரிக்கப்பட்ட புகழ்பெற்ற மனிதர்கள் சென்னை மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதும், நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளின் மூலம் அவர்கள் குணப்படுத்தப்பட்டதும் வரலாறு ஆகும்.

வெள்ளி, 12 மார்ச், 2021

பா.ஜ.க.வின் கொத்தடிமை ஆட்சியை வீட்டுக்கனுப்பும் கவுண்ட்டவுன் (Countdown) ‘‘அமைதிப் புரட்சி’’ தொடங்கி விட்டது! - கி.வீரமணி


நாளை முதலமைச்சராக மக்களால் அமர்த்தப்படவிருக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஏழு தொலைநோக்கு வளர்ச்சித் திட்டங்கள்!

ஆட்சியில் இருந்தபோது சாதிக்க முடியாத அ.தி.மு.க. ஆட்சி முடியப் போகும்போது அவசர அவசரமாக திட்டங்களை அறிவிப்பதா?

தளபதி ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது நிச்சயம்!

புதிய தமிழ்நாடு புலரப் போவதும் நிச்சயம்! நிச்சயம்!!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், நாளைய முதலமைச்சருமான அருமை சகோதரர் மானமிகு மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்திறன் - எதிர்க்கட்சியினர் உள்பட அனைவரையும் மிகப்பெரிய வியப்புக்குள்ளாக்குகிறது!

கடந்த சில மாதங்களாக அவரது அயராத உழைப்பு, ‘‘அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றம்‘’ என்ற பாடத்தைக் கற்பித்து, புதியதோர் திருப்பத்தை தமிழ்நாட்டில் இன்னும் இரண்டே மாதங்களில் ஏற்படுத்தும் திசையைக் காட்டும்  நம்பிக்கை ஒளியாகி நிற்கிறது!

கோட்டைக்குப் போகும்முன்பே முதல் பரிசு!

வெற்றிடம் என்று கூறியவர்கள் வெட்கப்படும் அளவுக்கு அவரது அரசியல் அணுகுமுறை புதுமையதாய், அமைதிப் புரட்சியின் பூபாளமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது!

மக்களாட்சி நிறுவ முதல் தேவை - மக்களின் மனமறிதல் - குறைகேட்டல் - நிவர்த்திக்க திட்டமிடல்.

இவற்றில் முதல் பரிசு பெற்றுவிட்டது - கோட்டைக்குப் புகுமுன்னரே - இந்தக் கொள்கைச் சிங்கம்!

கிராமத்து விவசாயிகள், ஊராட்சியில் உள்ள கிராமத்து பல தரப்பட்ட மக்கள் - தாய்மார்கள் இவர்களது உளமறிந்த உளவியல் வித்தகராகி, அதற்குச் செயல்வடிவம் தரவே தனக்கு ஆட்சி - அது காட்சிக்கு அல்ல; மக்களின் மீட்சிக்கு, இருட்டு நீங்கிய விடியலுக்கு என்று திட்டமிட்டு செயலாற்றுகிறார்; முத்தாய்ப்பாக, கூட்டணி கட்சிகளை வெற்றிப் பாதைக்கு 2019 -ஆண்டையும் மீறும் வகையில் திட்டமிட்டு, அரவணைத்து, அரசியல் கூட்டணியைக் கட்டிக் காத்து, மேலும் வலுவுள்ளதாக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றியின் நுழைவு வாயிலுக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமாகிறார்!

அதிசயிக்கத்தக்க திட்டம் இவர் மார்ச் 7 ஆம் தேதி திருச்சி சிறுகனூரில் மக்கள் கடலின்முன் எடுத்துரைத்த 10 ஆண்டு செயல் திட்டம் - மக்களாட்சி என்றால், உண்மையில் அது அனைவருக்கும் அனைத்தும் தருவதுதான்!

‘குடிஅரசு’ இதழைத் தொடங்கும்போது

தந்தை பெரியார் கூறிய அதே இலட்சியம்!

‘குடிஅரசு’ என்று தனது வார ஏட்டினைத் தொடங்கிய தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் லட்சியமாக ‘அனைவருக்கும் அனைத்தும்‘ என்ற இந்த இரண்டே சொற்களில் சமூகநீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி எல்லாவற்றையும் அடக்கி விட்டார்.

அதை அப்படியே கொள்கைத் திட்டமாக, தொலைநோக்குத் திட்டமாகக் கொண்டு, தாழ்ந்த தமிழகமாக, தேய்ந்த தமிழ்நாடாக ஆக்கப்பட்ட கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க.வின் ‘‘கொள்ளை ஆட்சிக்கு’’ விடை கொடுத்து, வரும் பத்தாண்டுகளுக்கு ஒரு புதிய ‘‘கொள்கை ஆட்சியை’’ நிறுவ அருமையான ஏழு திட்டங்களை அறிவித்திருப்பது காலத்தே செய்யும் கடமையாகும்.

இங்கிலாந்து நம் ஜனநாயகத்தின் மாடல் (அரசியல் சட்ட வகுப்பே) - அந்த அடிப்படை நாடாளுமன்ற விதிகளையே பெரிதும் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. அங்கே எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு அதன் ஆக்கப்பூர்வ பணியைச் செய்ய இத்தகைய திட்டங்களைத் தருவது, நிழல் அமைச்சரவை (Shadow Cabinet) அமைத்து அதற்குரிய திட்டங்களை வெளியிட்டு, அடுத்த பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் எப்போதும் தயார் நிலையில் இருப்பார்.

சிறந்த ஜனநாயக இலக்கணம் அது. தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது இந்த ஏழு திட்டங்களும் வளமான தமிழ்நாட்டை உருவாக்கும் திட்டங்கள்.

ஏற்றந்தரும் ஏழு திட்டங்கள்!

ஏழிசை போல் எளிய மக்களின் காதுகளில் இசையாக ஒலித்து ரீங்காரம் செய்து, அவர்தம் வாழ்க்கையை வளப்படுத்தப் போகும் திட்டங்கள்.

1. பொருளாதாரம் 2. வேளாண்மை 3. நீர்வளம் 4. கல்வி, சுகாதாரம் 5. நகர்ப்புற வளர்ச்சி 6. ஊரகக் கட்டமைப்பு 7. சமூகநீதி இப்படி எழுச்சிமிகு ஏழு திட்டங்களும் ஏற்றந்தரும் வளரச்சிப் படிகளாகும்.

எளிய மக்களின் வறுமையை விரட்டி, வளமையை கொழிக்கச் செய்ய, நோய்த் தடுப்புடன் வருமுன்னர் காக்க, பறிக்கப்படும் சமூக கல்வியை குலதர்மச் சிறையிலிருந்து மீட்டு, சமதர்மப் பூங்காவிற்கு அழைத்து வர, வளர்ச்சிக்குத் தேவை அடிக்கட்டுமானம்; ஆனால், அது விவசாயிகளின் விழிகளைப் பிடுங்கி அமைப்பதாக இருக்காமல், அவர்களின் வழியும் கண்ணீரைத் துடைப்பது என, ஓர் அமைதிப் புரட்சிக்கு வித்திடும் அருமையான திட்டங்கள்.

இதைக் கண்டவுடன், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் என்று முதல் நாள் அவர் அறிவித்த பின்னர் (வழமை போல் பின்னால் கூறுகிறார்) ‘‘நாங்கள் மாதம் ரூ.1500 தருவோம்; 6 சிலிண்டர் விலையில்லாது தருவோம்‘’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

ஆட்சியில் இருக்கும்போது செய்தது என்ன?

ஆட்சியில் இருக்கும்போது, குறைந்தபட்சம் மாநில வரியைக் குறைத்து, மக்களது வாட்டத்தைப் போக்க முயற்சிக்காமல், வீட்டிற்குப் போகும் வேளையில், விதண்டாவாத மனப்பான்மையோடு இப்படி ‘‘ஏல அரசியல் பேரம்‘’ செய்வதைப் புரியாதவர்களா நம் தாய்மார்கள்?

‘‘ஆசை வெட்கமறியாது; பதவிப் பசி எதையுமே அறியாது’’ என்பதை அறியாதவர்களா பொதுமக்கள்? என்றாலும், மக்கள் ஆயத்தமாகி விட்டார்கள் - மாநிலத்தையேகூட அடகு வைத்து, மகளிர் நலனை அச்சப் படுகுழியில் தள்ளி, பதவியில் உள்ள பெண் அதிகாரிகளின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கி, குற்றமிழைத்தோருக்குப் பாதுகாப்பு அரண் அமைத்துவிட்டு, தாய்மார்களை ஏமாற்ற இப்படி ஒரு மாய்மாலமோ!

புதிய தமிழ்நாடு காண - பொழுது புலர்வது நிச்சயம்!

234 தொகுதிகளிலும் வெற்றி முரசின் ஒலி கேட்டாகவேண்டும்!

தமிழ்நாட்டின் கல்வி, வேலை வாய்ப்பு, சமூகநீதி, பாலியல் நீதிகளில் உரிமைகளைப் பறித்த பாதக பா.ஜ.க.வின் கொத்தடிமை ஆட்சியை வீட்டுக்கனுப்பும் கவுண்ட்டவுன் (Countdown) ‘‘அமைதிப் புரட்சி’’ தொடங்கி விட்டது!

உதயசூரியன் உதிப்பது நிச்சயம்!

விடியலைத் தரவிருக்கும் தளபதி ஸ்டாலின் வெற்றியும் நிச்சயம்!

புதிய தமிழ்நாடு காண பொழுது

புலர்வதும் நிச்சயம்! நிச்சயம்!!


தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நாம் வெற்றியை நோக்கி படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.- DR.S.ராமதாஸ்


என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நாம் வெற்றியை நோக்கி படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம். அதிமுகவுடனான தொகுதிப் பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு  ஆகியவற்றை நாம் வெற்றிகரமாக முடித்திருக்கிறோம். நமக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே  தொகுதிப்பங்கீட்டில் எந்த மனக்கசப்பும் இல்லை என்பதே நமது அணிக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

ஊபா எனப்படும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 72 சதவிகிதம் அதிகரித்துள்ளது.- கே.எஸ்.அழகிரி



ஊபா எனப்படும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 72 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு இச்சட்டத்தின் கீழ் 1,226 வழக்குகள் பதியப்பட்டு, 1948 பேர் கைது செய்யப்பட்டனர். 2015 ஆம் ஆண்டில் 897 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,128 பேர் கைது செய்யப்பட்டனர். 2016 ஆம் ஆண்டில் 922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 999 பேர் கைது செய்யப்பட்டனர். 2017 ஆம் ஆண்டில் 901 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு. 1,554 பேர் கைது செய்யப்பட்டனர். 2018 ஆம் ஆண்டு 1,182 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,421 பேர் கைது செய்யப்பட்டனர்.

வெள்ளி, 5 மார்ச், 2021

"மார்ச்-7: 'விடியலுக்கான முழக்கம்' இலட்சிய பிரகடனம்; மார்ச்-10: கழக வெற்றி வேட்பாளர்கள் பட்டியல்; மார்ச்-11: களத்தின் கதாநாயகனான கழக தேர்தல் அறிக்கை - மு.க.ஸ்டாலின்

 "மார்ச்-7: 'விடியலுக்கான முழக்கம்' இலட்சிய பிரகடனம்;

மார்ச்-10: கழக வெற்றி வேட்பாளர்கள் பட்டியல்;

மார்ச்-11: களத்தின் கதாநாயகனான கழக தேர்தல் அறிக்கை;

உதயசூரியன் வெளிச்சத்தில் தமிழகம் விடியட்டும்"

-  மு.க.ஸ்டாலின் அவர்கள் மடல்.

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒற்றை எதிர்பார்ப்பு, ஆட்சி மாற்றம். அதுவும், பத்தாண்டுகால அ.தி.மு.க.வின் ஆட்சியால் இருண்டு பாழாகிக் கிடக்கும் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வேறுபாடின்றி வெளிச்சம் பாய்ச்சும் வல்லமை மிக்க தி.மு.கழகம் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஆவலான எதிர்பார்ப்பாக உள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றிடும் பெரும் பொறுப்பு, தேர்தல் களத்திற்கு ஆயத்தமாகிவிட்ட, தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களுக்கும், உங்களில் ஒருவனான எனக்கும் இருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல:-2021 தேர்தல் அறிக்கை


முக்கிய அம்சங்கள்

கல்வி
1. மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும்.
2. அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பையும், கல்வித் தரத்தையும் வலுப்படுத்துவதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளுக்கு மாறும் சூழலை உருவாக்க வேண்டும் என்பது தான் அரசின் இலக்கு ஆகும்.

வியாழன், 4 மார்ச், 2021

10.5% இட ஒதுக்கீடு பெற்ற வன்னியர் குல சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்!! முயன்றால் முடியாதது எதுவுமில்லை.! - டாக்டர் K. கிருஷ்ணசாமி


அரவணைப்போருடன் அணிவகுப்போம்! 
அதிகார பகிர்வுடன் ஆட்சியமைப்போம்!!
10.5% இட ஒதுக்கீடு பெற்ற வன்னியர் குல சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்!!
முயன்றால் முடியாதது எதுவுமில்லை.!

20% எம்.பி.சி இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினர்களுக்கு 7.5%, இதர பிரிவினருக்கு 2.5% இடப்பகிர்வு அளிக்கும் வகையில் தமிழகச் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாவட்டங்களில் உள்ள வன்னிய மக்களின் நீண்டகால கோரிக்கை மற்றும் போராட்டங்களின் விளைவாகத் தமிழக அரசு எடுத்த முடிவு இது. இம்முடிவு குறித்து மற்ற சமுதாயங்கள் எந்த அளவிற்கு மகிழ்ச்சி கொள்வார்கள் என தெரியாது. 10.5% தனி இடஒதுக்கீடு பெற்றுள்ள வன்னியர் குல சகோதரர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த இடப்பகிர்வில் எந்த பிரிவினருக்கும் முன்னுரிமை அளிக்கப்படாமல், அவரவருக்கான பங்கை அனுபவிக்கும் சமமான நிலை இருப்பதாகவே கருதலாம். மிகப் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கின்ற காரணத்தினால் அதில் உள்ள எந்த சமுதாயத்திற்கும் அவர்கள் அடையாளத்துடன் அவர்களுக்கான பங்களிப்பையும் மாநில அரசுகள் விரும்பும் நேரத்தில் நிறைவேற்ற முடிகிறது. இந்த எதார்த்தத்தோடு தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையின் அவசியத்தை இணைத்துப் பார்க்கவும், முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதையும் புரிந்து கொள்ள முன் வரவேண்டும். 

செவ்வாய், 2 மார்ச், 2021

10.5% இடப்பங்கீடு: நமது கோட்டையில்121 தொகுதிகளிலும் வெற்றிக்கனிபறித்து வலிமையைக் காட்டுவோம்!-Dr.S.ராமதாஸ்

10.5% இடப்பங்கீடு: நமது  கோட்டையில்
121 தொகுதிகளிலும் வெற்றிக்கனி
பறித்து வலிமையைக் காட்டுவோம்!-Dr.S.ராமதாஸ்
                  

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!