செவ்வாய், 4 டிசம்பர், 2018
இந்தியாவை சீண்டிய மைத்திரிபால சிறிசேனா
குஜராத் அரசுக்கு கம்பி நீட்டிய அமேரிக்கா
குஜராத் அரசுக்கு கம்பி நீட்டிய அமேரிக்கா
குஜராத் அரசு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க மாநாடு ஒன்றை, 2019 ஜனவரியில் நடத்த திட்டமிட்டுள்ளது. குஜராத் தலைநகரான காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் ஜனவரி 18, 19 தேதிகளில் இம்மாநாடு நடைபெற உள்ளது. பிரமர் மோடி மாநாட்டைத் துவக்கிவைக்க உள்ளார்.
இந்த மாநாட்டில் கனடா, செக் குடியரசு, டென்மார்க், பிரான்ஸ், ஜப்பான், நெதர்லாந்து, தென்கொரியா, தாய்லாந்து, அரபு அமீரகம் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்குதாரராக உள்ளன.
இந்நிலையில், பங்குதாரராக வருமாறு அமெரிக்காவுக்கும் குஜராத் அரசு அழைப்பு அனுப்பியிருந்தது. ஆனால், அதனை அமெரிக்கா ஏற்க மறுத்துள்ளது. இம்மாநாட்டில், அமெரிக்கா பங்குதாரர் ஆகாது என்று, அந்நாட்டின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய அரசின் அளித்த அனுமதியை அடாவடி போக்கைக் கண்டித்தும், அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரியும் வருகிற டிசம்பர் 04 ஆம் தேதி திருச்சியில் ‘மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்’ நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர்.
லேபிள்கள்:
தமிழ்நாடு,
திமுக,
மு.க.ஸ்டாலின்
ஆர்.கே.நகரில் தப்பித்த டிடிவி தினகரன்
லேபிள்கள்:
அமமுக,
டிடிவி.தினகரன்,
தமிழ்நாடு
சனி, 6 ஆகஸ்ட், 2016
உலக அகதி நாள்
உலக அகதி நாள்
உலக அகதி நாள் (World Refugee Day), ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது.
2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆபிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20 இல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும்.
அன்றைய நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) ஒவ்வோர் ஆண்டும் இந்நிகழ்வுகளுக்கான கருப்பொருளைத் தீர்மானிக்கிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




