செவ்வாய், 4 டிசம்பர், 2018

குஜராத் அரசுக்கு கம்பி நீட்டிய அமேரிக்கா

குஜராத் அரசுக்கு கம்பி நீட்டிய அமேரிக்கா




குஜராத் அரசு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க மாநாடு ஒன்றை, 2019 ஜனவரியில் நடத்த திட்டமிட்டுள்ளது. குஜராத் தலைநகரான காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் ஜனவரி 18, 19 தேதிகளில் இம்மாநாடு நடைபெற உள்ளது. பிரமர் மோடி மாநாட்டைத் துவக்கிவைக்க உள்ளார்.

 இந்த மாநாட்டில் கனடா, செக் குடியரசு, டென்மார்க், பிரான்ஸ், ஜப்பான், நெதர்லாந்து, தென்கொரியா, தாய்லாந்து, அரபு அமீரகம் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்குதாரராக உள்ளன.

இந்நிலையில், பங்குதாரராக வருமாறு அமெரிக்காவுக்கும் குஜராத் அரசு அழைப்பு அனுப்பியிருந்தது. ஆனால், அதனை அமெரிக்கா ஏற்க மறுத்துள்ளது. இம்மாநாட்டில், அமெரிக்கா பங்குதாரர் ஆகாது என்று, அந்நாட்டின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக