செவ்வாய், 4 டிசம்பர், 2018

இந்தியாவை சீண்டிய மைத்திரிபால சிறிசேனா

இந்தியாவை சீண்டிய மைத்திரிபால சிறிசேனா


இலங்கையில் அரசியல் குழப்பநிலை நீடித்துவரும் நிலையில் அந்நாட்டு  அதிபர் மைத்திரிபால சிறிசேனா விரிவான பேட்டி வெளியாகியுள்ளது . 


அந்த பேட்டியில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூர்யா முதலில் மகிந்த ராஜபக்சே அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரச் செய்தபோது, உரிய முறையைப் பின்பற்றவில்லை. பொதுவாக நம்பிக்கை வாக்கெடுப்பை மூன்று வகைகளில் மேற்கொள்ளலாம். பெயரைக் குறிப்பிட்டோ மின்னணு முறையிலோ இதைச் செய்யமுடியும். இப்போது முறையாக அவர்தரப்பில் செயல்படுவதால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் அளவுக்கு, அவர் நிலை ஆணைகளைக் கடைப்பிடித்துள்ளார்.

 நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் கட்சி தரப்பு வெற்றிபெறுமானால் அப்போது மகிந்த ராஜபக்சே உரிய முடிவெடுப்பார்  இப்போதைய அரசாங்கமானது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறும் கட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும்.

 அரசியலமைப்பின்படியும் இதுதான் சரியானது” பெரும்பான்மை ஆதரவைப் பெறும் கட்சியின் பிரதிநிதியாக இருந்தாலும் அதிபருடன் இணக்கமாகவும் இருக்க வேண்டும் நாடாளுமன்றத்தில் அதிக நம்பிக்கையைப் பெற்றாலும் கூட ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக்கமுடியாது.   

நாடாளுமன்ற ரகளை என்பது பல நாடுகளிலும் நடக்கும் பொதுவானது தான். இலங்கையில் மட்டும் இது நடப்பதில்லை. பல நாடுகளின் நாடாளுமன்றங்களிலும் மோதல்கள் நடக்கின்றன. இந்தியாவில்  ஒருவரையொருவர் துரத்துவதெல்லாம் நடக்கிறது. சில நேரங்களில் கைகால்களை உடைத்துக்கொள்ளவும் செய்கின்றனர் என்று மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக