திங்கள், 10 டிசம்பர், 2018

புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக, புதிய கான்கிரீட் வீடுகள்

கஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக, புதிய கான்கிரீட் வீடுகள்


புதுக்கோட்டையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் 27 வகையான நிவாரண பொருட்களை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக் கும் மின்சாரம் கிடைத்த பிறகே சென்னைக்கு செல்வேன் என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை தெரிவிக்கும் போது அவற்றை காதுகொடுத்து கேட்க வேண்டியது அமைச்சரின் கடமை. மக்களின் கோரிக்கைகளை முடிந்த அளவுக்கு அரசு மூலம் செய்து கொடுக்க வேண்டும். முடிய வில்லை என்றால் அதுதொடர்பாக மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு நான் செய்ததால்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் நிவாரண பணியின்போது என்னு டைய காரை யாரும் மறிக்க வில்லை

தமிழக அரசு மேற்கொண்ட தீவிர மீட்புப் பணியின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளதாக கூறினார். போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக பொதுமக்களுக்கு மின்சாரம், குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் 3 நாட்களுக்குள் வழங்கி சாதனை படைக்கப்பட்டதாக கூறிய அவர், சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய கான்கிரீட் வீடுகள் அரசால் அமைத்துத் தர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக