திங்கள், 10 டிசம்பர், 2018

காவிரி மேலாண்மை தலைவரை நியமிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தரத் தலைவரை நியமிக்க உத்தரவிடுமாறு, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.


காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க உச்சநீதிமன்றம்  மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதை ஏற்று மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.

ரசிகர்கள் யாரும் வீட்டுக்கு வரவேண்டாம் - ரஜினிகாந்த்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக், திரிஷா, சிம்ரன், சசிகுமார் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். 

பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் உண்மையில் யோகா மிகச் சிறந்த கலை. மனதையும் உடலையும் வலிமையாக வைக்கும். எக்ஸ்ட்ரா என்ற வார்த்தை அருமையான வார்த்தை. எக்ஸ்ட்ரா புகழக் கூடாது. எக்ஸ்ட்ரா பேசக் கூடாது. எக்ஸ்ட்ரா சாப்பிடக் கூடாது. ஒரு குழந்தையை வித விதமாக அலங்காரம் செய்து ரசிப்பதை போல என்னை கார்த்திக் சுப்புராஜ் ரசித்தார். முன்பு போல இல்லை. எனக்கு 69 வயது என்று சொன்னேன். இருந்த போதிலும் ஒவ்வொரு காட்சியும் ரசித்து எடுத்தார் கார்த்திக் சுப்புராஜ். செட்டிலுள்ள அனைவரும் என்னுடைய ரசிகர்களாக இருந்ததால் ரசித்து ரசித்து எடுத்தார்கள். 


பிறந்தநாள் வரப் போகிறது. கடந்த முறையே ரசிகர்கள் வீட்டுக்கு வந்து ஏமாந்து போனார்கள்.ஆனால், இந்தமுறையில் வீட்டில் இருக்க மாட்டேன். அதனால், ரசிகர்கள் இந்தமுறையும் வீட்டுக்கு வரவேண்டாம். கஜா புயலால் ஏற்பட்ட இழப்பு நினைத்துக் கூட பார்க்க முடியாத பேர் இழப்பு. எல்லோரும் சேர்ந்தால் மட்டுமே அவர்களை மீட்டு வர முடியும். கஜா புயலால் உயிர் இழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நானும் எனது மன்றமும் உதவிகளைச் செய்துள்ளோம். அரசால் மட்டுமே அவர்களை முழுமையாக மீட்க முடியும்’ என்று தெரிவித்தார்.

திரிஷாவின் இளமையின் ரகசியம் கேட்டு அறிந்த ரஜினி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக், திரிஷா, சிம்ரன், சசிகுமார் நடித்துள்ளனர். 

பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு நடைபெற்றது. இந்த நிகழ்வில், நடிகர் ரஜினிகாந்த், நடிகைகள் சிம்ரன், திரிஷா, நடிகர்கள் பாபி சிம்ஹா, சசிகுமார், சமுத்திரகனி, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இசையமைப்பாளர் அனிருத் பங்கேற்றுள்ளனர்

பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் ஜித்து என ஒரு கேரக்டர் இருந்தது. அந்த கதாபாத்திரத்தை விஜய் சேதுபதி பண்ண போறார்ன்னு சொன்னதும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். சிம்ரன் நடிக்கப் போறாங்கன்னு தெரிஞ்சதும் செட் ஜாலியா ஆயிடுச்சு.

நான் பார்த்த நல்ல நடிகர் விஜய் சேதுபதி. அவர், சாதாரண நடிகன் அல்ல. அவர் ஒரு மகா நடிகன். அதைவிட அவர் ஒரு நல மனிதர். ரொம்ப நாள்கள் கழித்து நல்ல நடிகர் உடன் நடித்த அனுபவம். நான், பார்த்த தங்கமான மனிதர் சசிகுமார். திரிஷா முன்பு பார்த்தது போல இருப்பதற்கான ரகசியம் குறித்து கேட்டேன். அவர், யோகா என்று தெரிவித்தார். உண்மையில் யோகா மிகச் சிறந்த கலை.

மனதையும் உடலையும் வலிமையாக வைக்கும். எக்ஸ்ட்ரா என்ற வார்த்தை அருமையான வார்த்தை. எக்ஸ்ட்ரா புகழக் கூடாது. எக்ஸ்ட்ரா பேசக் கூடாது. எக்ஸ்ட்ரா சாப்பிடக் கூடாது. ஒரு குழந்தையை வித விதமாக அலங்காரம் செய்து ரசிப்பதை போல என்னை கார்த்திக் சுப்புராஜ் ரசித்தார். முன்பு போல இல்லை. எனக்கு 69 வயது என்று சொன்னேன். இருந்த போதிலும் ஒவ்வொரு காட்சியும் ரசித்து எடுத்தார் கார்த்திக் சுப்புராஜ். செட்டிலுள்ள அனைவரும் என்னுடைய ரசிகர்களாக இருந்ததால் ரசித்து ரசித்து எடுத்தார்கள்.

புதன், 5 டிசம்பர், 2018

தமிழகத்துக்கு கரம் கொடுங்கள் - நடிகர் அமிதாப்பச்சன்


நவம்பர் 15-ம் தேதி கஜா புயல் தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சூறையாடியது. அப்பகுதிகளில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.பல லட்சம் வீடுகள் கஜா புயலால் சூறையாடப்பட்டுள்ளது. இந்தப்பகுதிகளில் இருந்த தென்னைமரங்கள் 60 சதவிகிதம் புயலால் சாய்ந்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கஜா புயல் சேதங்கள் குறித்து பேசிய வீடியோவை கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், ‘நன்றி அமித் ஜி. கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அழிவுகளைத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். உங்களுடைய உதவியும் இத்தருணத்தில் தேவைப்படுகிறது. தமிழகத்துக்கு கரம் கொடுங்கள். நம் நாட்டில் பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும் உங்களைப் போன்ற மக்கள் அதை இணைக்கும் நூலாக இருக்கின்றனர் நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.

செவ்வாய், 4 டிசம்பர், 2018

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பணப் பட்டியலை கைப்பற்றிய வழக்கு

தேர்தல் ஜனநாயக நெறியின் நெஞ்சில், அதிமுக அரசு கொடூரமான தாக்குதலை நடத்தியிருக்கிறது



சென்னை - ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க வைத்திருந்த “பணப் பட்டியலை” வருமான வரித்துறை கைப்பற்றிய வழக்கு விசாரணையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தையும், சென்னை உயர்நீதிமன்றத்தையும் திசைதிருப்பி பெரிதும் அவமதிக்கும் வகையில் செயல்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.