திங்கள், 20 டிசம்பர், 2021

கோவா விடுதலை தின வைரவிழாக் கொண்டாட்டத்தில் இணைந்த இந்திய கடற்படை


 கோவா மாநிலம் அதன் விடுதலை தினத்தை ஆண்டுதோறும் டிசம்பர் 19 ஆம் தேதி கொண்டாடி வருகிறது. கோவா விடுதலைப் பெற்றதன் 60 ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக, வைரவிழாக் கொண்டாட்டங்கள் பனாஜியில், 19 டிசம்பர் 2021 அன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியை குறிக்கும் விதமாக பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸாத் மைதானத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  இந்த நிகழ்ச்சியின் போது முப்படைகளையும் சேர்ந்த 100 வீரர்கள் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதுடன், பக்லர் இசைக் கலைஞர்களின் ‘தி லாஸ்ட் போஸ்ட்‘ பாடலும் இசைக்கப்பட்டது.

மிராமர் கடற்கரையில் நடைபெற்ற இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் சிவில் அமைப்புகளின் படகுகள் அணிவகுப்பையும், இந்திய கடற்படை விமானங்களின் சாகசங்களையும் பிரதமர் பார்வையிட்டார்.

வைரவிழாக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை இந்திய கடற்படையின் மேற்கு பிராந்திய வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங், கோவா பகுதி அதிகாரி ரியர் அட்மிரல் பிலிபோஸ்ஜி பினுமூட்டில் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக