வியாழன், 16 டிசம்பர், 2021

மின்னணு சாதனங்கள் உற்பத்திக்கான குவி மையமாக இந்தியாவை நிலைநிறுத்த ரூ.2,30,000 கோடி நிதியுதவி வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.- பிரதமர் திரு நரேந்திர மோடி


 தற்சார்பு இந்தியா தொலைநோக்குத் திட்டத்தை மேலும், தீவிரப்படுத்தவும், மின்னணு சாதனங்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான உலகளாவிய குவிமையமாக இந்தியாவை  நிலை நிறுத்தவும் நீடித்து உழைக்கவல்ல செமி கண்டக்டர் மற்றும் காட்சிப்படுத்தும் மின்னணு சாதனங்கள் உற்பத்திச் சூழலை மேம்படுத்த விரிவானத் திட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

செமி கண்டக்டர் மற்றும் காட்சிப்படுத்தும் மின்னணு சாதனங்களை  உற்பத்தி செய்யும் மற்றும் வடிவமைக்கும் நிறுவனங்களுக்கு உலகளாவிய போட்டித் தன்மையுடன் ஊக்கத்தொகையை இந்தத் திட்டம் வழங்கும். உத்திகள் வகுத்தலில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பொருளாதாரத்தில் தற்சார்பான இந்தியாவின் தொழில்நுட்ப தலைமைத்துவத்திற்கு  இது வழிவகுக்கும்.

தொழில்துறையில் 4.0 டிஜிட்டல் மாற்றத்தின் அடுத்தக் கட்டத்திற்கு செமி கண்டக்டர்களும் காட்சிப்படுத்தும் சாதனங்களும். நவீன மின்னணு துறைக்கு அடித்தளம் அமைப்பவையாகும். இது அதிகப்படியான முதலீடுகள், அதிகபட்ச பொறுப்பு போன்றவற்றைக் கொண்டதாகும்.

ரூ.76,000 கோடி (பத்து பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டாலர்) ஒதுக்கீட்டுடனான மின்னணு சாதனங்கள், உபகரணங்களை ஒன்றிணைத்தல், முழுமையாக தயாரிக்கப்பட்ட பொருள்கள் உட்பட இந்தத் திட்டத்தின் வழங்கல் தொடரில் ஒவ்வொரு பகுதிக்கும் மத்திய அரசு  ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக செமி கண்டக்டர்களை அடித்தளமாகக் கொண்டு மின்னணு சாதனங்கள் உற்பத்திக்கான  குவி மையமாக  இந்தியாவை நிலைநிறுத்த ரூ.2,30,000 கோடி (30 பில்லியன் அமெரி்க்க டாலர்)  நிதியுதவி வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக