வெள்ளி, 17 டிசம்பர், 2021

வெங்காய விலையை கட்டுப்படுத்த, 2.08 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. - திரு அஸ்வினி குமார் சவுபே

 நாடாளுமன்றத்தின் மக்களவையில், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

பல காரணங்களால் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன. தேவைக்கும், விநியோகத்துக்கும் சமநிலையற்ற தன்மை ஏற்படும்போது, விநியோக  சங்கிலியில் பாதிப்பு ஏற்படும்போது, விளைச்சல் பருவ மாறுபாடுகள், கள்ளச் சந்தையில் பதுக்குவதன்  மூலம் செயற்கையாக ஏற்படுத்தப்படும் தட்டுப்பாடு, சர்வதேச சந்தையில் விலை உயர்வு ,போன்றவை காரணமாக உணவுப் பொருட்கள் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன.

22 அத்தியாவசிப் உணவு பொருட்களின் சில்லரை மற்றும் மொத்த விலையை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. இதற்காக 172 விலை கண்காணிப்பு மையங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அவ்வப்போது பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

விலையை கண்காணிப்பது, பருப்புகளின் இருப்பு நிலவரத்தை தெரியப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் மாநிலங்களுக்கு கடந்த மே மாதம் வழங்கப்பட்டன.

துவரை, உளுந்து, பாசி பருப்பு ஆகியவற்றை தடையின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.

வெங்காய விலையை கட்டுப்படுத்த, 2.08 லட்சம் மெட்ரிக் டன்  வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  சமையல்  எண்ணெய் விலைகளை  கட்டுப்படுத்த வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக