வியாழன், 16 ஜூன், 2022

பறவைகள் கண்டறிதல் மற்றும் அடிப்படை பறவையியல்” குறித்த நான்காவது தொகுப்பு பயிற்சி நிறைவடைந்தது.


 பிரதமரின் திறன் இந்தியா இயக்கத்தின் கீழ் பசுமை திறன் மேம்பாட்டு திட்டத்தின் படி இந்தியாவின் இளைஞர்கள் ஆதாயம் தரும் வேலைவாய்ப்பை பெறும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் வன மேம்பாட்டு திறனுக்கான முன்முயற்சியை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் (2022 -2023) இந்த அமைச்சகம் “ பறவைகள் கண்டறிதல் மற்றும் அடிப்படை பறவையியல்” தொடர்பாக பசுமை திறன் மேம்பாட்டு சான்றிதழ் வகுப்புகளை நான்கு பிரிவுகளுக்கு நடத்தியுள்ளது. இந்த பயிற்சி வகுப்பு பறவையியலின் பல்வேறு அம்சங்கள் பற்றி அறிந்து கொள்ள நாடுமுழுவதுமுள்ள மாணவர்களுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த வகுப்புகளில் பங்கேற்றவர்களில் 30 சதவீத மாணவர்கள் ஏற்கனவே பொருத்தமான துறைகளில் பணியில் உள்ளனர். இந்த வகுப்புகள் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் நிதியுதவி வழங்கப்பட்டு கட்டணமின்றி நடத்தப்பட்டன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக