ஞாயிறு, 19 ஜூன், 2022

அக்னி வீரர்கள், மத்திய ஆயுத காவல்படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் சேர 10% காலி இடங்களை அவர்களுக்கு ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


பிரதமர் திரு நரேந்திர மோடியால் வழிநடத்தப்படும் இந்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டத்தின் கீழ் நான்கு வருடங்களை நிறைவு செய்த அக்னி வீரர்கள், மத்திய ஆயுத காவல்படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் சேர 10% காலி இடங்களை அவர்களுக்கு ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தொடர் சுட்டுரைச் செய்திகளின் வாயிலாக உள்துறை அமைச்சக அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:

“பிரதமர் திரு நரேந்திர மோடியால் வழிநடத்தப்படும் இந்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டத்தின் கீழ் நான்கு வருடங்களை நிறைவு செய்த அக்னி வீரர்கள், மத்திய ஆயுத காவல்படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் சேர 10% காலி இடங்களை அவர்களுக்கு ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்கிறது”.

“மத்திய ஆயுத காவல்படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் அக்னி வீரர்களை பணியிலமர்த்துவதற்கு அறிவிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வயது வரம்பை விட 3 ஆண்டுகள் தளர்வு வழங்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்கிறது. மேலும் அக்னிவீரரின் முதல் பிரிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வயது வரம்பைத் தாண்டி 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்”.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக