எம்.எச்.ஜவாஹிருல்லா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.எச்.ஜவாஹிருல்லா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 நவம்பர், 2021

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை: தமிழக அரசின் அரசாணை ஏமாற்றம் அளிக்கின்றது. - எம் எச் ஜவாஹிருல்லா



 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை: தமிழக அரசின் அரசாணை ஏமாற்றம் அளிக்கின்றது

கருணையுள்ளதுடன் முதலமைச்சர் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை குறித்துக் கடந்த நவம்பர் 15 அன்று தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள அரசாணை எண் 488 பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைவாசிகள் குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகள் இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 18 ஜூலை, 2021

மீன் வள மசோதா மீனவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் கொடும் சட்டம் ! - எம் எச் ஜவாஹிருல்லா



மீன் வள மசோதா  மீனவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் கொடும் சட்டம்…!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

மீனவர்களுக்கு எதிரான மீன்வள மசோதாவை மழைக்கால கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு நிறைவேற்ற இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

மீனவர்கள் இந்த வகையான மீன்களை தான் பிடிக்க வேண்டும் இந்த வகை வலையை வைத்து தான் மீன் பிடிக்க வேண்டும் இந்தப் பகுதியில்தான் மீன் பிடிக்க வேண்டும் இவைகளுக்கெல்லாம் அரசு உரிமங்கள் வாங்க வேண்டும் அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு போடவேண்டிய சட்டங்களை ஏழை-எளிய மீனவர்கள் மீது திணிப்பது மாபெரும் அபத்தம். 

செவ்வாய், 6 ஜூலை, 2021

சமூக தொண்டர் ஸ்டேன்ஸ் சுவாமி உயிரிழப்பு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்!.- எம்.எச்.ஜவாஹிருல்லா


 சமூக தொண்டர் ஸ்டேன்ஸ் சுவாமி உயிரிழப்பு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்!

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சமூக தொண்டர் அருட்தந்தை ஸ்டேன்ஸ் சுவாமி அவர்கள் இன்று மும்பை மருத்துவமனை ஒன்றில் மரணித்த செய்தி ஆறாத் துயரத்தை அளித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக பாடுபட்டு வந்தவர் ஸ்டேன் சுவாமி.ஆதிவாசி மக்களின் நிலத்தை சூறையாடும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக நீதிமன்றம் உள்ளிட்ட உரிமைப் போராட்டங்களை நடத்திக் காட்டியவர். ஆதிவாசிகளை நக்சல்கள் என்று முத்திரைக் குத்திக் கண்மூடித்தனமாக கைது செய்ததை எதிர்த்தவர். அம்மக்களின் விடுதலைக்காகத் சட்ட போராட்டங்களையும் முன்னின்று நடத்தியவர். பழங்குடி மக்களின் உரிமைகளை உச்ச நீதிமன்றத்தில் நிலைநாட்டியவர் ஸ்டேன் சுவாமி அவர்கள்.

வியாழன், 26 மார்ச், 2020

கொரோனாவிலிருந்து மட்டுமல்ல பசியிலிருந்தும் பிணியிலிருந்தும் மக்களைக் காக்க வேண்டும் - எம்.எச்.ஜவாஹிருல்லா


கொரோனாவிலிருந்து மட்டுமல்ல பசியிலிருந்தும் பிணியிலிருந்தும் மக்களைக் காக்கத் தமிழக அரசு புதுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - எம்.எச்.ஜவாஹிருல்லா

கொரோனா நோய்க் கிருமி பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் முழுமையான முடக்கத்தை மத்திய அரசு அறிவித்து அது நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. கொடிய நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிகவும் தேவையானதே. எனவே தான் வழிப்பாட்டுத் தலங்கள் உட்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இந்த முடக்கத்தை ஏற்றுக் கொண்டு இல்லங்களில் முடங்கியுள்ளனர். மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் அரசின் பல்வேறு துறையைச் சேர்ந்த ஊழியர்கள் முன்னெப்போதும் சந்தித்திராத இந்த நெருக்கடியான சூழலில் முழு அர்ப்பணிப்பதுடன் செயல்பட்டு வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றிகள், பாராட்டுகள், பிரார்த்தனைகள்.

மருத்துவ நெருக்கடி நிலையாக உள்ள இச்சூழலில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு மக்களைக் கொரோனாவிலிருந்து மட்டுமல்ல முடக்கத்தின் காரணமாகப் பசியிலிருந்தும். பிணியிலிருந்தும் மக்களைக் காக்கப் புதுமையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

திங்கள், 23 மார்ச், 2020

மலேசியவில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - Dr. MH. #ஜவாஹிருல்லா


மலேசியாவில் தவிக்கும் இந்தியர்கள்: தாயகம் அழைத்து வர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - எம்.எச்.ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

கடந்த பல நாட்களாக மலேசியாவிலிருந்து தாயகம் திரும்ப சுமார் 500 இந்தியர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 55 பேர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளும் முடிவடைந்து விமானம் ஏறவிருந்த நிலையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விமான நிலையத்திலேயே தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவர்கள் தவிர விமான நிலையத்திற்கு வந்து இந்தியாவிற்கான விமான சேவை ரத்துச் செய்யப்பட்டதால் சுமார் 500 பேர் அருகில் உள்ள இடங்களில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மலேசியாவில் இருப்பதற்கான விசா முடிவடைந்தவர்களும் நாடு திரும்ப இயலாமல் துயரத்தில் உள்ளனர்.

சனி, 21 மார்ச், 2020

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்போம்.- எம்.எச்.ஜவாஹிருல்லா


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்போம். தடுப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தை இழந்துள்ள ஏழை எளிய மக்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்! - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

உலகளவில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி பெரும் பாதிப்பையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் இந்த வைரஸ் பரவல் சங்கிலியை உடைப்பதற்காகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பொதுமக்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டும். அதன் ஒரு பகுதியாக நாளை (22.3.2020) “சுய ஊடரங்கு” நடைபெற உள்ளது. இந்த சுய ஊரடங்கு நிகழ்வுக்குப் பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

செவ்வாய், 10 மார்ச், 2020

பா.ஜ.க தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறுபான்மை மக்கள் மீது வன்முறை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர்


கோவையில் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பின்பு மமக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், என்.பி.ஆர் எந்த விதத்திலும் உதவி செய்யாது. இதை வைத்து காழ்ப்புணர்வு கொண்ட கட்சிகள் மக்களுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை எடுக்க உதவும். சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழக சட்டமன்றத்திலும் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். எந்த விதத்தில் வந்தாலும் தமிழக அரசு என்.பி.ஆர், என்.ஆர்.சியை அமல்படுத்த கூடாது. சி.ஏ.ஏ, என்.பிஆர், என்.ஆர்.சி ஆகியவற்றிக்கு எதிராக போராடுபவர்களை அச்சுறுத்தும் வகையில் காவல் துறை செயல்படுகின்றது. 

பா.ஜ.க தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறுபான்மை மக்கள் மீது வன்முறை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர். இவர்கள் மீது டி.ஜி.பியை சந்தித்து மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

இன்றைய தினம் கோவையில் “அய்யாவழி பாலமுருகனை” கைது செய்து இருப்பதை கண்டிக்கின்றோம்.

இது பாரபட்சமான நடவடிக்கை மக்களுக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை இல்லை. அனுராக் தாகூர், கபில் மிஸ்ரா ஆகியோர் மீதும் நடவடிக்கை இல்லை. கருப்பு சட்டங்கள் குறித்து கருத்து சொல்லும் நெல்லை கண்ணன், பாலமுருகனை கைது செய்யப்படுகின்றனர் .

கோவையில் தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை கண்டிக்கின்றோம். இந்து முன்னணி நிர்வாகி ஆனந்தை தாக்கிய உண்மை குற்றவாளிகளை காவல் துறை கைது செய்ய வேண்டும். கண்காணிப்பு கேமரா அனைத்து பகுதிகளில் இருக்கும் நிலையில் இந்து முன்னணி அலுவலகம் தாக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய காவல் துறை முனைப்புடன் செயல்பட வேண்டும். ஆத்துப்பாலம் பகுதியில் நடைபெறும் பாலம் கட்டுமான பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

சென்னையில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமான தாக்குதல்


சென்னையில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமான தாக்குதல் 

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் கண்டன அறிக்கை

இன்று வடசென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக அமைதியான முறையில் போராடியவர்கள்மீது காவல்துறை கொடூரமான கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளது வன்மையாக கண்டிக்கிறேன்.