செவ்வாய், 2 நவம்பர், 2021

ரயில்களில் கொண்டு செல்லப்படும் சரக்குகளின் அளவும் அதன் மூலமான வருவாயும் தொடர்ந்து அதிகரிப்பு.


 இந்திய ரயில்வேயில் கடந்த அக்டோபர் மாதத்தில் சரக்குப் போக்குவரத்தின் அளவும், வருவாயும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த அக்டோபர் மாதத்தில் ரயில்கள் மூலம் 117.34 மில்லியன் டன் சரக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு அக்டோபரில் கொண்டு செல்லப்பட்ட 109.01 மில்லியன் டன்னைவிட 7.63% அதிகம். கடந்த அக்டோபர் மாதத்தில் இந்திய ரயில்வே, சரக்கு போக்குவரத்தின் மூலம் ரூ.12,311.46 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே கால வருவாய் ரூ.10,416.60 கோடியைவிட 18.19% அதிகம்.  

ஹஜ்(Haj) 2022 குறித்த அறிவிப்பை மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி வெளியிட்டார்.


 அன்று (2021 நவம்பர் 1) முதல் ஹஜ் 2022-க்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை தொடங்குகிறது என்று மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி அறிவித்தார். 2022 ஜனவரி 31 வரை இது நடைபெறும்.

மும்பையிலுள்ள ஹஜ் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், குறிப்பிடத்தகுந்த சீர்திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஹஜ் 2022 நடைபெறுவதாக கூறினார்.

தில்லியில் டெங்குவுக்கான பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும், முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்.- திரு மன்சுக் மாண்டவியா


 தில்லியில் டெங்கு நிலவரம் குறித்து ஆராயவும், கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ளவும் தில்லி யூனியன் பிரதேச அரசுடன் உயர்நிலைக் கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார். 

வனங்களை அம்பானி, அதானி போன்ற தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்து நம் வனத்தையும், வளத்தையும் அழிப்பதற்கு ஒன்றிய அரசு துணிந்துவிட்டது.- கார்த்திகேய சிவசேனாபதி



வனப் பாதுகாப்பு சட்டத் திருத்தத்தில் உள்ள ஆபத்துகள்!

வனப் பாதுகாப்பு சட்டத் திருத்தத்தின் வரைவை வெளியிட்டு மாநில அரசுகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அதன் மீதான கருத்துகளைத் தெரிவிப்பதற்காக அக்டோபர் 2 முதல் நவம்பர் 1 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வனப் பாதுகாப்பு சட்ட திருத்த வரைவு தமிழில் கடந்த அக்டோபர் 28 அன்று தான் வெளியிடப்பட்டது. ஏறக்குறைய மூன்று நாட்கள் மட்டுமே கால அவகாசம் இருக்கும்படி சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு தமிழ்நாட்டின் கருத்துகளை புறக்கணிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. ஆகவே நவம்பர் 27 வரை கால அவகாசம் தந்து எங்களின் முழுமையான கருத்துகளைத் தெரிவிக்க அனுமதியளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசையும், ஒன்றிய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

இந்தியாவின் வேகமான வளர்ச்சி மூலம் மக்களின் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாகவும், சௌகர்யமாகவும் ஆக்குகிறது.- குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு


 சிறந்த நிர்வாகம் அடிமட்ட அளவில் ஊடுருவ வேண்டும் என    குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தினார்.

இந்திய பொது நிர்வாக கழகத்தின் (IIPA) 67-ஆவது ஆண்டு பொதுக் குழுக் கூட்டத்திற்கு குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு தலைமை தாங்கினார். அப்போது அவர்  பேசியதாவது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் கொள்கைகளையும், திட்டங்களையும் மத்திய அரசு உருவாக்குகிறது மற்றும் இந்தியாவின் வேகமான வளர்ச்சி மூலம் மக்களின் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாகவும், சௌகர்யமாகவும் ஆக்குகிறது. இந்திய பொது நிர்வாக கழகம் ஒரு முன்னணி நிறுவனம், பொது நிர்வாகக் கொள்கை மற்றும் அதை செயல்படுத்துவதற்காக இது தன்னை அர்ப்பணித்துள்ளது. விநியோக முறையில் உள்ள திறன் குறைபாடுகளைப் போக்க இந்நிறுவனம் முக்கிய பங்காற்ற வேண்டும். நாட்டில் அரசு சீர்த்திருத்தங்களில் புதிய அலைகளை ஏற்படுத்த தகுதியான நிறுவனம் இந்திய பொது நிர்வாக கழகம்.