செவ்வாய், 2 நவம்பர், 2021

இந்தியாவின் வேகமான வளர்ச்சி மூலம் மக்களின் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாகவும், சௌகர்யமாகவும் ஆக்குகிறது.- குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு


 சிறந்த நிர்வாகம் அடிமட்ட அளவில் ஊடுருவ வேண்டும் என    குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தினார்.

இந்திய பொது நிர்வாக கழகத்தின் (IIPA) 67-ஆவது ஆண்டு பொதுக் குழுக் கூட்டத்திற்கு குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு தலைமை தாங்கினார். அப்போது அவர்  பேசியதாவது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் கொள்கைகளையும், திட்டங்களையும் மத்திய அரசு உருவாக்குகிறது மற்றும் இந்தியாவின் வேகமான வளர்ச்சி மூலம் மக்களின் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாகவும், சௌகர்யமாகவும் ஆக்குகிறது. இந்திய பொது நிர்வாக கழகம் ஒரு முன்னணி நிறுவனம், பொது நிர்வாகக் கொள்கை மற்றும் அதை செயல்படுத்துவதற்காக இது தன்னை அர்ப்பணித்துள்ளது. விநியோக முறையில் உள்ள திறன் குறைபாடுகளைப் போக்க இந்நிறுவனம் முக்கிய பங்காற்ற வேண்டும். நாட்டில் அரசு சீர்த்திருத்தங்களில் புதிய அலைகளை ஏற்படுத்த தகுதியான நிறுவனம் இந்திய பொது நிர்வாக கழகம்.

தற்போதைய மற்றும் உருவாகும் சவால்களுக்கு ஏற்ப ஐஐபிஏ தன்னை மாற்றிக்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.  டிஜிட்டல் பயிற்சித் துறையில் ஐஐபிஏ தற்போது முன்னணி நிறுவனமாக உள்ளது. கர்மயோகி திட்டத்தில் மிக முக்கிய பங்காற்றியது.  2020-21ஆம் ஆண்டில் 66 ஆன்லைன் பயிற்சித் திட்டங்களை ஐஐபிஏ வெற்றிகரமாக நடத்தி 8,353 அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்துள்ளது. 

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் ஐஐபிஏ சிறப்பாக செயல்படுகிறது.  ஐஐபிஏ நிர்வாக கவுன்சிலை பயனுள்ள வகையில் திறமையாக  மாற்ற கடந்த ஓராண்டில் ஐஐபிஏ-யின் விதிமுறைகளில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக