புதன், 30 ஜனவரி, 2019

IAS மாணவிக்கு பரிந்துரை செய்த மு.க.ஸ்டாலின்



பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்குட்பட்ட மூக்கனூர் ஊராட்சியில் நடைபெற்ற திமுக ஊராட்சி சபை -க்கூட்டத்திலும், தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளின் அராஜக நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.

சனி, 26 ஜனவரி, 2019

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி இளவரசன் நீக்கம்


ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்புச் செயலாளராக இருந்த டாக்டர் இளவரசன் அவரது விருப்பத்துக்கு இணங்க அவர் வகிக்கும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்

ரஜினி மக்கள் மன்றத்துக்கு கடந்த வருடத் தொடக்கத்தில் வந்தவர் டாக்டர் இளவரசன். இவர் மன்றத்தின் அமைப்புச் செயலாளராகவும், ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 

அவர் அமைப்புச் செயலாளர் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் ஆனதும்தான் பல மாவட்ட நிர்வாகிகள் அதிர்ந்தனர். ஏனெனில் ரஜினி மன்றத்துக்காக இருபது ஆண்டுகள், முப்பது ஆண்டுகள் உழைத்தவர்களை எல்லாம் அனாயாசமாக தூக்கி வெளியே போட்டார் இளவரசன். புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், தேனி, திருவாரூர் என்று பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் இளவரசனால் நீக்கப்பட்டனர்.

 இப்படிப்பட்ட மிக மூத்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை பல மாவட்டங்களிலும் இளவரசன் நீக்கியதை அடுத்துதான் இளவரசன் மீது பல பேர் ரஜினிக்கு புகார்களை அனுப்பிக் கொண்டே இருந்தார்கள்” என்ற நிர்வாகிகள் தொடர்ந்தனர்.
இதையடுத்து டிசம்பர் மாத கடைசியிலேயே இளவரசன் நீக்கம் என்று செய்திகள் வந்தன. ஆனால் அதிகாரபூர்வ நடவடிக்கை எதுவும் இல்லை. இந்த நிலையில்தான் இன்று இளவரசன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிப்பு வந்திருக்கிறது.

ரஜினி இளவரசனை பெரிதும் நம்பினார். அதனால்தான் அவரை அழைத்து ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, அவரது வேண்டுகோளுக்கு இணங்கவே விடுவிக்கப்படுகிறார் 



ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்போம் என்கிற பிரதமர் மோடி, மத்தியில் லோக்பால் அமைப்பை கொண்டுவராதது ஏன் ? - மு.க.ஸ்டாலின்.



மொழிப் போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய மாநில அரசை கண்டித்து விமர்சித்துள்ளார்.

எடப்பாடி அரசு கொலை - கொள்ளை வழக்குகளில் சிக்கி, அடிமைத்தனமான ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகத் தோல்விகளை எடுத்துரைதார்.இப்படி கொலை வழக்கில் சிக்கியிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் அரசுக்கு பாதுகாப்பு அளிப்பது பாசிச பாஜக அரசு.

அரசு ஊழியர்கள் போராட்டம் வேதனை அளிக்கிறது - எடப்பாடி கே.பழனிசாமி



மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அரசுக்கு 100 ரூபாய் வருவாய் வந்தால் 75 ரூபாய் சம்பளத்திற்கே செலவாகிவிடுவதாகவும் கஜா புயல் பாதிப்புக்கு நிதி ஒதுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளதாக குறிப்பிட்டார். அவர்கள் அதிக சம்பளமும் சலுகையும் பெறும் அரசு ஊழியர்கள் நாட்டின் நிலை உணர்ந்து போராட்டத்தை கைவிட வேண்டும். இளைய தலைமுறையினரை உருவாக்கும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

வியாழன், 24 ஜனவரி, 2019

நமக்கு இரண்டு வேலைகள் காத்திருக்கிறது - மு.க.ஸ்டாலின்


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் “தேசம் காப்போம்” என்கிற தலைப்பில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது “மாயமான் காட்சி”

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை


“2015-ல் நடந்த முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் படு தோல்விகளை”, வண்ண மயமான தோரணங்களாகவும், ஆடம்பர “வரவேற்பு வளைவுகளாக”வும், மிகுந்த பணச்செலவிலான விளம்பரங்களாகவும் அமைத்து, கொலை-கொள்ளை புகார் கூறப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி - அதை அரசின் செலவில் அதிமுகவின் தேர்தல் பிரச்சார மாநாடாக மாற்றியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி. மூன்று லட்சத்து 431 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெறும் வகையில், பத்து லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக தனது நிறைவுரையில் வரைமுறையின்றி அளந்துவிட்டிருக்கும் அவர், “2019 ஆம் ஆண்டிற்கான” முதல் பொய் வாக்குறுதியை அவிழ்த்து விட்டு- கடைசி நேரத்திலும் தமிழக மக்களை தன்னால் இயன்ற அளவிற்கு ஏமாற்றி விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்.

வெள்ளி, 18 ஜனவரி, 2019

வரலாற்று சாதனை படைத்த கோலி அண்ட் கோ


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை டிரா செய்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக கைப்பற்றி கோலி அண்ட் கோ வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

முதல் இரண்டு போட்டிகளில், தலா ஒரு முறை இரு அணிகளும் வெற்றி பெற்று சமநிலை பெற்றன. இதனால் தொடரை நிர்ணயம் செய்யும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் கேதர் ஜாதவ் மற்றும் தமிழக வீரர் விஜய் சந்தர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது அதிகபட்சமாக ஹேண்ட்ஸ் கோம்ப் 58  இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சாஹல் 6 விக்கெட்டுகளையும், புவனேஷ்குமார், முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

அதைத் தொடர்ந்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ரோஹித் சர்மா 9 ரன்னில் வெளியேறினார். சிறிது நேரம் நிலைத்து ஆடிய தவானும் 23 ரன்னில் அவுட்டானார். டோனி 87 (அவுட்இல்லை), கேதர் ஜாதவ் (61 அவுட்இல்ல), விராட் கோலி (46) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 49.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிறப்பாக பந்துவீசிய சாஹல் ஆட்டநாயகன் விருதை பெற்றார். தொடர்ச்சியாக மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்த தோனி தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

டோனி கூறுகையில் ‘‘நம்பர் 4 அல்லது 6 என எந்த இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்வது மகிழ்ச்சியே. ஆட்ட சூழ்நிலைக்கு ஏற்ப இடத்தை மாற்றிக் கொள்ளும்போது, அணியின் வலிமையை சமமாக வைத்துக் கொள்வது முக்கியமானது. 14 வருடத்திற்குப் பிறகு நான் 4-வது இடத்தில் களம் இறங்க விரும்புகிறேன். அல்லது 6-வது இடத்தில் களம் இறங்கி விளையாட விரும்புகிறேன் என்று என்னால் சொல்ல இயலாது.

இன்று விளையாடிய மெல்போர்ன் பிட்ச் ‘ஸ்லோ’வானது. ஆகவே, விரும்பிய போதெல்லாம் ஹிட் ஷாட் அடிப்பது கடினம். இதை கடைசி வரை கடைபிடிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

வெள்ளி, 11 ஜனவரி, 2019

செல்போன் செயலிகள் மூலம் பணம் திருட்டு


   நம் கையில் உள்ள செல்போனில் நமக்கான எல்லா வசதியும் கிடைக்கிறது. பல வசதிகளுடன் செல்போன் செயலிகள் இருப்பது போல், பணமில்லா பரிவர்த்தனைகளுக்காகவும் பல புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் பேங்கிங் மூலம் சுலபமாக பரிவர்த்தனை செய்துவிட முடிகிறது. 

ஆனால் மற்ற செயலிகளில் சில சலுகைகளும், வசதிகளும் இருப்பதால் அவற்றை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறனர். இந்த செயலி மூலம் உங்களது வங்கி பணத்தை திருட மோசடி கும்பலுக்கு டெபிட் கார்டின் 16 இலக்க எண்ணில் கடைசி 4 எண்ணை தெரிந்து கொண்டாலோ அல்லது காலாவதியாகும் தேதி, மாதம் தெரிந்திருந்தாலோ போதுமானது.

உங்களது வங்கி கணக்கிற்குள் நுழையும் மோசடி கும்பல் உங்களது செல்போன் எண்ணை நீக்கிவிட்டு அவர்களது செல்போன் எண் மூலம் ஓடிபி (OTP) பெற்று இருக்கும் பணத்தை மொத்தமாக சுருட்டி விடுவார்கள்.

வங்கி பணத்தை நூதன முறையில் திருட கடை விரித்து அமர்ந்திருக்கும் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

சமூக நீதி அடித்தளத்தைத் தகர்க்க சதி!



சமூக நீதி அடித்தளத்தைத் தகர்க்க சதி!

-வைகோ கண்டனம்

காலம் காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் வாழ்க்கையில் விடியலின் வெளிச்சத்தைக் காண வழி வகுத்துதான் சமூக நீதிக்கொள்கை ஆகும்.
மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு சமூக நீதித் தத்துவத்தின் அடித்தளத்தையே தகர்த்துத் தரைமட்டம் ஆக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
நேற்று ஜனவரி 8 ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசன 124 ஆவது சட்டத் திருத்த முன்வடிவு, மோடி அரசின் மோசடியை அம்பலப்படுத்தி இருக்கின்றது.

ஸ்டாலின் கருத்துக்கு தமிழிசை பதிலடி


தமிழகத்தில் சுட்டுப்போட்டாலும் தாமரை மலராது என்ற ஸ்டாலின் கருத்துக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதில் தெரிவிக்கையில், "சுட்டு போட்டால் தாமரை மலராது. மக்கள் ஓட்டு போட்டால் தான் தாமரை மலரும்" எனக் கூறினார். 

கிராமசபைக்கூட்டம் பெயரில் நாடகசபை கூட்டம் அரங்கேற்றம்! ஒற்றையாக அமர்ந்து ஓரங்கநாடகம்? வரும்காலத்தில் ஓரங்கட்டப்படுவோம்? என்பதன் அறிகுறி? 5 முறை ஆண்ட திமுக! ஊழல் ஆட்சி! குடும்ப ஆட்சி! மறக்கமுடியுமா? உரக்கச்சொல்வோம்! ஏமாற்றவருகிறார்கள்! ஏமாறாதீர் என எடுத்து சொல்வோம் ! வெல்வோம்!

தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஒருநாளும் இறங்காது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தான் இந்த இட ஒதுக்கீடு. இதனை காங்கிரஸ் தலைவர்களும், பினராய் விஜயன் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

சனி, 5 ஜனவரி, 2019

ஆர்யா திருமணம் செய்துக் கொள்வாரா !!!

 
தமிழ் சினிமாவின் பெண்கள் வசீகரம் செய்யும் கனவு நாயகனாக வலம் வரும் நடிகர் ஆர்யாவுக்கு பெண் பார்ப்பதற்காகவே பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று நடத்தினார்கள், அதில் கலந்துகொண்ட பெண்களும், ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில் ஜெயம்ரவியின் வனமகன் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாயிஷா-சேகல் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது, கஜினிகாந்த் படத்தில் சாயீஷா சைகல்லுடன் இணைந்து நடித்த ஆர்யா தற்போது சூர்யாவின் காப்பான் படத்திலும் அவரும் சேர்ந்து நடித்து வருகிறார், திரைப்படம் வெளியான பிறகு, ஆர்யா மற்றும் சாயீஷா திருமணம் தொடர்பாக அறிவிப்பு வெளிவரலாம் என சொல்லப்படுகிறது. 

இம்முறையாவது ஆர்யா திருமணம் செய்துக் கொள்வாரா அல்லது இது வெறும் வதந்தியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.