ஞாயிறு, 30 ஜனவரி, 2022

மனதின் குரல், 85ஆவது பகுதி ஒலிபரப்பு நாள் : 30.01.2022


எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.   இன்று மனதின் குரலின் மேலும் ஒரு பகுதி வாயிலாக நாம் ஒன்றிணைகிறோம்.  இது 2022ஆம் ஆண்டின் முதலாம் மனதின் குரல்.  நாடு-நாட்டுமக்கள் ஆகியோரின் ஆக்கப்பூர்வமான கருத்தூக்கங்கள்-சமூக அளவிலான முயல்வுகள்  நிறைந்திருக்கும் விஷயங்களை இன்று நாம் மீண்டும் முன்னெடுத்துச் செல்வோம்.  இன்று நமது வணக்கத்துக்குரிய அண்ணல் காந்தியடிகள் மறைந்த நாள்.  ஜனவரி மாதம் 30ஆம் தேதி என்பது அண்ணல் அளித்த கற்பித்தல்களை மீண்டும் நினைவில் கொள்ள வைக்கிறது.  சில நாட்கள் முன்பாகத் தான் நாம் நமது குடியரசுத் திருநாளைக் கொண்டாடினோம்.  தில்லியின் ராஜ்பத்தில் தைரியம் மற்றும் திறமைகளைப் பார்த்தோம், இவை அனைவருக்குள்ளும் பெருமிதத்தையும், உற்சாகத்தையும் நிரம்பச் செய்தன.  ஒரு மாற்றத்தையும் நீங்கள் கவனித்திருக்கலாம் - குடியரசு தினக் கொண்டாட்டங்கள் ஜனவரி மாதம் 23ஆம் தேதி அதாவது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாளன்று தொடங்கி, ஜனவரி மாதம் 30ஆம் தேதி, அதாவது காந்தியடிகள் காலமான தினம் வரை நடக்கும்.  இந்தியா கேட்டில் நேதாஜியின் டிஜிட்டல் உருவமும் நிறுவப்பட்டிருக்கிறது.  இது தேசமெங்கிலும் மிகப் பெரிய அளவு வரவேற்பைப் பெற்றது மக்கள் ஆனந்தப்பட்டார்கள், அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளை நம்மால் என்றுமே மறக்க இயலாது.

குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள்,மருத்துவ தரத்துக்கு உட்பட்டு, பணிநியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

 இந்திய ரயில்வே குறிப்பிட்ட பிரிவுகளில் பழகுனர் சட்டத்துக்கு உட்பட்டு 1963 ஆகஸ்ட் முதல் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் எந்தவித போட்டி அல்லது தேர்வு இன்றி பழகுனர்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். இத்தகைய  விண்ணப்பதாரர்களுக்கு ரயில்வே பயிற்சி மட்டுமே அளித்து வந்த போதிலும், பயிற்சி முடித்த நபர்களுக்கு 2004 முதல் 1-ம் மட்ட பணிகளில் உதவியாளர்களாக பணியமர்த்தப்படுகின்றனர்.

1820 மருத்துவர்கள் திடீர் நீக்கம் அநீதி: ஆரம்ப சுகாதார மையங்களில் அமர்த்துக! - DR.S.ராமதாஸ்

 1820 மருத்துவர்கள் திடீர் நீக்கம் அநீதி:

ஆரம்ப சுகாதார மையங்களில் அமர்த்துக! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாடு முழுவதும் மூடப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றி, மாற்றுப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்த 1820 மருத்துவர்களும், சுமார் 2000 பன்நோக்கு மருத்துவப் பணியாளர்களும் எந்த  முன்னறிவிப்பும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசுத் தரப்பிலிருந்து அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளுக்கு மாறாக மருத்துவர்களும், பிற பணியாளர்களும் நீக்கப்பட்டிருப்பது மனிதநேயமற்றது.

சனி, 29 ஜனவரி, 2022

கொவிட் அவசரகால நிதியை அனைத்து மாநிலங்களும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தினார்.


 கோவிட்டுக்கு எதிரான போராட்டம், மத்திய மாநில அரசுகளின் கூட்டு முயற்சி மற்றும் பொறுப்பு என்றும், இந்தச்  சவாலை நாம் கூட்டாகச்  சந்தித்தோம்’’ என 5 கிழக்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

ஒடிசா, பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் முதன்மைச்  செயலாளர்களுடன் கோவிட் தயார் நிலை குறித்து மத்திய சுகதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் , நித்தி ஆயோக் சுகாதார உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் ஆகியோர் உடன் இருந்தனர். 

கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030-திட்டத்தின் படி மேற்கொள்ளப்பட்ட பசுமை முன்முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் ஆய்வு


 மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், அனைத்துப்  பெரிய துறைமுகங்கள், கொச்சி கப்பல்கட்டும் தளம், இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்தியாவில் பசுமைத்  துறைமுகங்கள் மற்றும் பசுமைக்  கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு, கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030-திட்டத்தின்படி  மேற்கொள்ளப்பட்ட பசுமை முன்முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து  அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

மேல்தள சூரிய மின்சக்தி திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐஆர்இடிஏ-வும் கோவா கப்பல் கட்டும் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன.


 மேல்தள சூரிய மின்சக்தி திட்டத்தின் தொழில்நுட்ப- நிதி சார்ந்த நிபுணத்துவத்தை வழங்குவதற்கு  இந்திய புதுப்பிக்கவல்ல எரிசக்தி மேம்பாட்டு முகமை (ஐஆர்இடிஏ)  கோவா கப்பல் கட்டும் நிறுவனத்துடன் (ஜிஎஸ்எல்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.  இந்த இரண்டு பொதுத்துறை நிறுவனங்களும் முறையே புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றின் கீழ் செயல்படுகின்றன.

 இந்த ஒப்பந்தத்தில் ஐஆர்இடிஏ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு பிரதீப் குமார் தாஸ், ஜிஎஸ்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு பரத் பூஷன் நாக்பால் ஆகியோர் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

வெப்பம், புகை ஆகியவற்றை வெளியேற்றும் கூடுதல் வசதிகள் இருந்தால், இத்தகைய காயங்களைத் தவிர்க்க முடியும்.

 டைப்- III பேருந்துகளில் தீ எச்சரிக்கை அமைப்பு மற்றும் தீ பாதுகாப்பு நடைமுறைகளை அறிமுகப் படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஜனவரி 27-ம் தேதி வெளியிட்டுள்ளது. இதற்காக ஏஐஎஸ்-135-ல் திருத்தம் செய்யப்படுகிறது.

எதிர்கால மருத்துவத்திற்கு செயற்கை நுண்ணறிவும், டிஜிட்டல் மருத்துவமும் முக்கியமானவை என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்


 எதிர்கால மருத்துவத்திற்கு செயற்கை நுண்ணறிவும், டிஜிட்டல் மருத்துவமும் முக்கியமானவை என்று மத்திய  அறிவியல், தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) புவி அறிவியல் இணை அமைச்சர் (தனி பொறுப்பு), பிரதமர் அலுவலகம், ஊழியர் நலன், மக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி, விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

 ஜம்முவில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கல்விக் கழகத்திற்குப் பயணம் செய்த அமைச்சர், உருவாகி வரும் புதிய கட்டிடங்களை ஆய்வு செய்ததோடு அண்மையில் கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார். இந்த நிறுவனத்திற்கான தனித்துவ அடையாளத்தை உருவாக்க இத்தகைய துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார். தொலைதூர மருத்துவமும், ரோபோ அறுவை சிகிச்சையும் ஏற்கனவே பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன என்றும் இத்தகைய புதிய வழிமுறைகள் பெருந்தொற்று காலத்தில் மிகவும் பயன்பட்டன என்றும் அவர் கூறினார்.

கர்மயோகி இயக்கத்தின் கீழ், தஞ்சாவூர் நிஃப்டெம் தயாரித்த பயிற்சி தொகுப்புகள் வெளியீடு


 உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் தொலைநோக்கு ஆவணத்தை கர்மயோகி இயக்கத்தின் கீழ் மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் திரு பசுபதி குமார் பரஸ் இன்று வெளியிட்டார்.

இந்நிகழ்வின் போது தஞ்சாவூர் மற்றும் சோன்பட்டில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைதல் மற்றும் நிர்வாக நிறுவனங்களால் (நிஃப்டெம்) உருவாக்கப்பட்ட திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு பயிற்சி தொகுப்புகளும் வெளியிடப்பட்டன.

முல்லைப்பெரியாறு:பாதுகாப்பு ஆய்வுக்கு முன் பேபி அணையை வலுப்படுத்துவதற்கு மரங்களை அகற்ற அனுமதிக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

 முல்லைப்பெரியாறு:பாதுகாப்பு ஆய்வுக்கு முன் பேபி அணையை வலுப்படுத்துவதற்கு மரங்களை அகற்ற அனுமதிக்க வேண்டும்!

 -  DR.S.ராமதாஸ்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மனநிறைவு அளிக்கும் வகையில் இருப்பதாகவும், அதே நேரத்தில் அணையின் பாதுகாப்பு குறித்து அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது  என்றும் மத்திய நீர்வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின்  பாதுகாப்பு குறித்த ஆய்வு அவசியமானது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், அந்த ஆய்வு  முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான அடித்தளமாக  அமைய  வேண்டும்.

முதலமைச்சரால் ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்ட நிறுவனத்துடன் காவல்துறை ஒப்பந்தமா? - அன்புமணி ராமதாஸ்


 முதலமைச்சரால் ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்ட நிறுவனத்துடன் காவல்துறை ஒப்பந்தமா?

காவல்துறையினரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக சென்னை அப்பல்லோ பயிற்சி நிறுவனத்துடன் காவல்துறை தலைமை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. காவல்துறையின் நோக்கம் சரியானது; பயிற்சி நிறுவனத் தேர்வு மிகவும் தவறானது!

இந்தியா, ஆசியான் டிஜிட்டல் பணித்திட்டம் 2022-க்கு 2-வது ஆசியான் டிஜிட்டல் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.


 இரண்டாவது ஆசியான் டிஜிட்டல் அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் இணையம் வழியாக நேற்று நடைபெற்றது. தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் திரு தேவுசின்ஹ் சௌகான், மியான்மரின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அட்மிரல் டின் ஆங் சான் கூட்டாக இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினர்.

 அனைவரையும் உட்படுத்தும் டிஜிட்டல் உணர்வு மற்றும் ஒருங்கிணைப்பில் பிராந்திய டிஜிட்டல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு பொருத்தமான பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

‘‘எஸ்.சி., எஸ்.டி., சமூகத்தவர் பதவி உயர்வுபற்றி முடிவு செய்ய மாநிலங்களுக்கு உரிமை உண்டு'' - அதன்படி செயல்படுக! - கி.வீரமணி

 ‘‘எஸ்.சி., எஸ்.டி.,  சமூகத்தவர் பதவி உயர்வுபற்றி முடிவு செய்ய மாநிலங்களுக்கு உரிமை உண்டு'' - அதன்படி செயல்படுக! - கி.வீரமணி

வரவேற்கத்தக்க உச்சநீதிமன்றத்தின் இன்றைய சமூகநீதித் தீர்ப்பு!

ஒடுக்கப்பட்ட சமூக மக்களான எஸ்.சி., எஸ்.டி., போன்ற ஆதிதிராவிடர், பழங்குடி சமூக மக்கள் உத்தியோக மண்டலத்தில் பெரிய பதவிகளில் பெரிதும் இல்லாத நிலையில், பதவி உயர்வு அவர்களுக்குத் தருவதுபற்றி எழுந்த வழக்கில், உச்சநீதிமன்றம் அன்று (28.1.2022) அளித்துள்ள தீர்ப்பின்படி, மாநில அரசுகளே இதுபற்றி முடிவு எடுக்க முழு உரிமை பெற்றவை; அந்தந்த மாநில அரசுகள், அச்சமூக மக்கள், அப்பதவிக்குப் போதிய பிரதிநிதித்துவத்தை பெற்றிருக்கிறார்களா என்ற தகவல்களைத் திரட்டி, அதனடிப்படையில் முடிவு எடுக்க அம்மாநில அரசுகள் அதிகாரத்தைப் பயன்படுத்திச் செயல்படுத்தலாம் என்று வழங்கியுள்ள தீர்ப்பு, வரவேற்கத்தக்க தீர்ப்பாகும்.

உரிமைகளைக் கேட்டால் பணி நீக்குவதா? தொழிலாளர்களை பழிவாங்கும் நிறுவனம் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

 உரிமைகளைக் கேட்டால் பணி நீக்குவதா? தொழிலாளர்களை பழிவாங்கும் நிறுவனம் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

 - DR.S.ராமதாஸ்

சென்னை அருகே கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் செயல்பட்டு வரும் எலெக்ட்ரோஸ்டீல் காஸ்டிங்ஸ் நிறுவனத்தின் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அவர்களின் உரிமைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியதற்காக பணி நீக்கம் மேற்கொண்டு வருகின்றனர். அதைக் கண்டித்து மீண்டும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், தொழிலாளர்களை ஆலை நிர்வாகம் மிரட்டுவது கண்டிக்கத்தக்கது.

வெள்ளி, 28 ஜனவரி, 2022

படையில் இருந்து விலக்கப்பட்ட குக்ரி போர்க்கப்பல், டையு நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


 உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியக் கடற்படையின் முதல் ஏவுகணை ஏந்திய  போர்க்கப்பலான ஐஎன்எஸ் குக்ரி (பி49),  தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ நிர்வாகத்திடம் 26 ஜனவரி 2022 அன்று ஒப்படைக்கப்பட்டது.

நேர்த்தியாக நடைபெற்ற விழாவில் படையில் இருந்து விலக்கப்பட்ட ஐஎன்எஸ் குக்ரியை தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ மற்றும் லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான திரு பிரஃபுல் படேலிடம் ரியர் அட்மிரல் அஜய் வினய் பவெ ஒப்படைத்தார்.

நீர் மூழ்குதல் ஆதரவு கப்பல் திட்டத்தின் முதல் கப்பலைக் கட்டும் பணி கொல்கத்தாவில் தொடக்கம்.


 நீர் மூழ்குதல் ஆதரவு கப்பல் (டிஎஸ்சி) திட்டத்தின் முதல் கப்பலின் கட்டுமானப் பணி 27 ஜனவரி 2022 அன்று கொல்கத்தாவில் உள்ள டிட்டாகர் வேகன்ஸ் லிமிடெட் நிறுவனததில்  தொடங்கியது. இந்தியக்  கடற்படையின் பிரதிநிதிகள் காணொலி மூலம் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்தியக்  கடற்படைக்கு ஐந்து டிஎஸ்சிக்களை (யார்டுகள் 325 முதல் 329 வரை) கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் டிட்டாகர் வேகன்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் பிப்ரவரி 21-ல் கையெழுத்தானது.

இந்தியக் கடற்படை மற்றும் இந்தியா இன்ஃபோலைன் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்


 இந்தியக்  கடற்படை வேலை வாய்ப்பு நிறுவனம் (ஐஎன்பிஏ) மற்றும் இந்தியா இன்ஃபோலைன் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகியவை 27 ஜனவரி 2022 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. முன்னாள் கடற்படை வீரர்களை இந்தியா இன்ஃபோலைன் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் பணியமர்த்துவதற்காக இந்தப்  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்தியக்  கடற்படைப்  பணியாளர் சேவைகளின் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் சூரஜ் பெர்ரி மற்றும் இந்தியா இன்ஃபோலைன் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் செயல் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு மோனு ராத்ரா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

150 கிராமங்களுக்கு இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்ப உதவிகளை வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்


 இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் திரு.நாவர் கிஷோன் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமரை 27-ந் தேதி கிரிஷி பவனில் சந்தித்தார். தூதரை வரவேற்ற திரு.தோமர் இந்தியாவுக்கான தூதராக பதவியேற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்தார். இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான ராஜீய உறவுகள் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறித்து திரு.தோமர் மகிழ்ச்சி வெளியிட்டார். 12 மாநிலங்களில் செயல்பட்டு வரும் 29 திறன் மையங்கள், 25 மில்லியன் காய்கறி தாவரங்கள் மற்றும் 387 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தரமான பழ வகைகளை உற்பத்தி செய்து வருவது குறித்து அவர் திருப்தி வெளியிட்டார். இந்த மையங்கள் ஆண்டுக்கு 1.2 லட்சம் விவசாயிகளுக்கும் மேல் பயிற்சி அளித்து வருகிறது.

பாரம்பரியத்துடன் கூடிய இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் அனைவருக்குமான முயற்சிகள் சேர்க்கப்பட வேண்டும்.- பிரதமர் திரு.நரேந்திர மோடி


 இந்திய சாஸ்திரிய சங்கீதத்தின் நிபுணரான பண்டிட் ஜஸ்ராஜ் பிறந்த நாளான இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டினார். பண்டிட் ஜஸ்ராஜின் நித்தியமான இசை ஆளுமை பற்றி குறிப்பிட்ட பிரதமர், அவரது பெருமைமிகு பாரம்பரியத்தை பண்டிட் சாரங் தேவ் உயிர்ப்புடன் வைத்திருப்பதாக தெரிவித்தார். பண்டிட் ஜஸ்ராஜ் கலாச்சார அறக்கட்டளை தொடக்க விழாவில் காணொலி மூலம் பிரதமர் உரையாற்றினார்.

இந்திய இசை பாரம்பரிய வல்லுனர்கள் வெளியிட்ட விசாலமான ஞானம் குறித்து பிரதமர் குறிப்பிட்டார். இசையின் மகத்துவத்தை உணரும் ஆற்றல் குறித்து குறிப்பிட்ட திரு.மோடி, இந்த வகையில் இந்தியாவின் சாஸ்திரிய இசை பாரம்பரியம் மிகச் சிறப்பானது என்று கூறினார். “இசை நமது உலகளாவிய கடமைகளை தெரிந்து கொள்ள வைக்கும் ஊடகமாகவும், உலகப் பற்றுகளை கடக்க உதவுகிறது” என்று பிரதமர் தெரிவித்தார்.

அறிவிக்கப்பட்டும் அமைக்கப்படவில்லை: தமிழ்நாட்டிற்கு மேலும் 4 மருத்துவக் கல்லூரிகளை கேட்டுப் பெற வேண்டும்! - DR.S.ராமதாஸ்

அறிவிக்கப்பட்டும் அமைக்கப்படவில்லை:
தமிழ்நாட்டிற்கு மேலும் 4 மருத்துவக் கல்லூரிகளை கேட்டுப் பெற வேண்டும்! - DR.S.ராமதாஸ்

இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பதற்காக நாடு முழுவதும் அறிவிக்கப் பட்ட 157 புதிய மருத்துவக் கல்லூரிகளில் கணிசமானவை இன்னும் அமைக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. பல மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கும் நிலையில், அவற்றுக்கு மாற்று வழிகளை அரசு ஆராய வேண்டும்.

செவ்வாய், 11 ஜனவரி, 2022

பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் உலக அளவில் முன்னணியில் உள்ள இந்தியா, நடப்பு ஆண்டில் 198.48 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்துள்ளது.

 2021-ம் ஆண்டில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சகத்தின் பல்வேறு முன்முயற்சிகள், சாதனைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்த சில முக்கிய அம்சங்கள் வருமாறு:

தேசியப் பொருளாதாரத்திற்கு கால்நடைத் துறை பங்களிப்பதோடு, 80 மில்லியன் கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் உலக அளவில் முன்னணியில் உள்ள இந்தியா, நடப்பு ஆண்டில் 198.48 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்துள்ளது, இதன் மதிப்பு ரூ. 8.32 லட்சம் கோடிக்கும் அதிகமாகும். இருப்பினும், உலகின் பெரும்பாலான பால்வள நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய பண்ணை விலங்குகளின் உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது. குறைந்த உற்பத்தித்திறன் காரணமாக, கறவை மாடுகளை வளர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்கு லாபகரமான வருமானம் கிடைப்பதில்லை.

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

பல்கலைக்கழகளால் கைவிடப்பட்ட கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள்: தமிழக அரசே ஊதியத்தை வழங்க வேண்டும்! - DR.அன்புமணி ராமதாஸ்



பல்கலைக்கழகளால் கைவிடப்பட்ட கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள்: தமிழக அரசே ஊதியத்தை வழங்க வேண்டும்! - DR. அன்புமணி ராமதாஸ்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 10 கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த  4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதைக் கண்டித்தும், உடனடியாக ஊதியம் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் திருவரங்கம் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் மேற்கொண்டு  வரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.

கோவைக் கல்விக் கூடங்கள் ஆர்.எஸ்.எஸின் ஷாகா வன்முறை பயிற்சிக் கூடமா - மைதானமா? - கி.வீரமணி



காக்கிச் சட்டைக் காவல்துறை -காவிகளுக்கு வெண்சாமரமா?

கோவை மாநகரில் தொடர்ந்து பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். என்னும் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பின் ஷாகா என்னும் வன்முறைப் பயிற்சி நடந்து கொண்டுள்ளது.
கே.எம்.சி.எச். என்னும் செவிலியர் பள்ளியில்கூட பெண்களுக்கு வன்முறைப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்ட நிலையில், எதிர்ப்பின் காரணமாக பள்ளி நிர்வாகம் அங்கு ஷாகா பயிற்சி அளிப்பதற்கு அனுமதி மறுத்துவிட்டது - சில வாரங்களுக்கு முன்பு.

புதன், 5 ஜனவரி, 2022

நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமல்ல, அமித்ஷா ஒட்டுமொத்த தமிழக மக்களை அவமதித்து, இழிவுபடுத்தியிருக்கிறார்.- கே.எஸ்.அழகிரி


 தமிழகத்தில் உள்ள கிராமப்புற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை பாழடித்து, மருத்துவ கனவை சிதைத்து வருகிற நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுகிற வகையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை அனைத்து எதிர்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இக்கோரிக்கையை வலியுறுத்துவதற்காக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து நாடாளுமன்ற தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்கள் மனு வழங்க முயற்சி செய்தனர். ஆனால், கொரோனா தொற்றை காரணம் காட்டி குடியரசுத் தலைவர் சந்திக்க மறுத்துவிட்டார். அவரிடம் வழங்க வேண்டிய மனுவை அவருடைய செயலாளரிடம் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

திங்கள், 3 ஜனவரி, 2022

புதிய உறுப்பினர்கள் சேர்ப்பீர்! எந்நாளும் கழகம் வென்றிட, தொடர்ந்து மேலும் மேலும் வலிவும் பொலிவும் சேர்ப்பீர்! - மு.க.ஸ்டாலின் கடிதம்.

 "புதிய உறுப்பினர்கள் சேர்ப்பீர்!  எந்நாளும் கழகம் வென்றிட, தொடர்ந்து மேலும் மேலும்  வலிவும் பொலிவும் சேர்ப்பீர்!" -  மு.க.ஸ்டாலின் கடிதம்.

புதிய உறுப்பினர்கள் சேர்ப்பீர்!

நம் உயிருடன் கலந்த தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆழமாகச் சிந்தனை செய்து அற்புதமாக வடிவம் தந்த  திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கம், அன்றும் இன்றும் என்றும் இளைஞர் பட்டாளத்தின் நம்பிக்கைக்குரிய அரசியல் இயக்கம் என்பது வரலாற்றுப் பேருண்மை. பேரறிஞர் அண்ணா அவர்களும் கலைஞர், நாவலர், பேராசிரியர் உள்ளிட்ட அவரது நம்பிக்கைக்குரிய தம்பிமார்களும் நமது இந்த இயக்கத்தைத் தொடங்கியபோது எழுச்சியும் எண்ணத் தெளிவும் மிக்க இளைஞர்களாக இருந்தவர்கள். அவர்களின் பின்னே ஆயிரமாயிரமாய்த் தொடங்கி இலட்சோப இலட்சமாக இளைஞர்கள் திரண்டு அணி வகுத்தார்கள். திராவிட இன உணர்வை - தமிழ்மொழிச் சிந்தனையை - சமூகநீதியை - சுயமரியாதையை - பகுத்தறிவை நாடெங்கிலும் நாள்தோறும் முழங்கினார்கள். தேர்தல் அரசியலுக்கு வர விரும்பாத தந்தை பெரியாரின் இலட்சியங்களை, பேரறிஞர் அண்ணாவும் அவரது ஆற்றல் மிக்க தம்பிமார்களும் அரசியல் இயக்கத்தின் வழியே, மக்களைத் திரட்டி, ஆட்சியைப் பிடித்து, தழுவிய இலட்சியங்களை முழுவதுமாக நிறைவேற்றிடத் தொடங்கினர். இளைஞர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் இயக்கமாகத் தி.மு.கழகம் இமயமென உயர்ந்து நின்றது.