நாட்டில் மேற்கொள்ளப்படும் 20 மிகப் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து, திட்ட கண்காணிப்பு குழுவுடன் ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல் கடந்த மாதம் 29ம் தேதி ஆய்வு செய்தார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு சோம் பிரகாஷ், பீகார், ஹரியானா, தமிழ்நாடு அரசுகளின் தலைமை செயலாளர்கள் உட்பட மத்திய, மாநில அதிகாரிகள் பலர் கலந்துகா கொண்டனர். இதில் முக்கிய உள் கட்டமைப்பு திட்ட பணிகளின் முன்னேற்றங்களை பாதிக்கும் பிரச்சினைகள், மற்றும் குறித்த நேரத்தில் முடிப்பதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.




