வெள்ளி, 2 ஜூலை, 2021

புனேவில் உள்ள (Serum Institute) சீரம் நிறுவனத்தின் தடுப்புமருந்து உற்பத்தி ஆலையை திரு மன்சுக் மாண்டவியா பார்வையிட்டார்


 புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தின் தடுப்புமருந்து உற்பத்தி ஆலையை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு மன்சுக் மாண்டவியா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருந்துகள் துறை செயலாளர் திருமிகு எஸ் அபர்ணா உடனிருந்தார்.

பெருந்தொற்றின் போது சீரம் நிறுவனம் ஆற்றி வரும் சிறப்பான பங்கை திரு மாண்டவியா பாராட்டினார். அனைவருக்கும் தடுப்பு மருந்தை உறுதி செய்வதற்காக நமது அனைத்து தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுக்கு ஆதரவளிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

தடுப்பு மருந்து உற்பத்தியின் அளவை அதிகரிப்பது குறித்தும் அவர் விவாதித்தார்.

புனேவின் பிம்ப்ரியில் உள்ள இந்துஸ்தான் ஆன்டிபயோடிக்ஸ் லிமிடெட்டில் கிருமி நாசினியை உற்பத்தி செய்வதற்கான நவீன வசதியை திரு மாண்டவியா பின்னர் திறந்து வைத்தார்.

இந்தியாவில் இத்தகைய வசதி கொண்டிருக்கும் ஒரே பொதுத்துறை நிறுவனம் இந்துஸ்தான் ஆன்டிபயோடிக்ஸ் லிமிடெட் மட்டுமே என்று அமைச்சர் தெரிவித்தார். கொவிட்-19 பாதிப்பை குறைக்கும் வகையிலான கைகளில் தடவிக்கொள்ளக் கூடிய கிருமி நாசினி இங்கு தயாரிக்கப்படும் என்று அவர் கூறினார். புரோபனால் மற்றும் எத்தனால் அடிப்படையிலான இந்த கிருமிநாசினி வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிப்பதில் சிறப்பாக செயல்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக