வெள்ளி, 2 ஜூலை, 2021

ரூ.2.7 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டில், மேற்கொள்ளப்படும் 20 முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களில் உள்ள 59 பிரச்சினைகள் குறித்து மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஆய்வு செய்தார்.


 நாட்டில் மேற்கொள்ளப்படும் 20 மிகப் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து, திட்ட கண்காணிப்பு குழுவுடன் ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல் கடந்த மாதம் 29ம் தேதி ஆய்வு செய்தார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு சோம் பிரகாஷ், பீகார், ஹரியானா, தமிழ்நாடு அரசுகளின் தலைமை செயலாளர்கள் உட்பட மத்திய, மாநில அதிகாரிகள் பலர் கலந்துகா கொண்டனர். இதில் முக்கிய உள் கட்டமைப்பு திட்ட பணிகளின் முன்னேற்றங்களை பாதிக்கும் பிரச்சினைகள், மற்றும் குறித்த நேரத்தில் முடிப்பதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

புனேவில் உள்ள (Serum Institute) சீரம் நிறுவனத்தின் தடுப்புமருந்து உற்பத்தி ஆலையை திரு மன்சுக் மாண்டவியா பார்வையிட்டார்


 புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தின் தடுப்புமருந்து உற்பத்தி ஆலையை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு மன்சுக் மாண்டவியா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருந்துகள் துறை செயலாளர் திருமிகு எஸ் அபர்ணா உடனிருந்தார்.

பெருந்தொற்றின் போது சீரம் நிறுவனம் ஆற்றி வரும் சிறப்பான பங்கை திரு மாண்டவியா பாராட்டினார். அனைவருக்கும் தடுப்பு மருந்தை உறுதி செய்வதற்காக நமது அனைத்து தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுக்கு ஆதரவளிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

புதிய கொரோனா வகைகளின் மரபணு வரிசை முறைகளை விரைவாகக் கண்காணிக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.


 தடுப்பூசி, மருந்துகள் மேம்பாட்டை விரைவுபடுத்த,  புதிய கொரோனா வகைகளின் மரபணு வரிசை முறைகளை விரைவாகக் கண்காணிக்க வேண்டும் என  குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். 

ஐதராபாத் வந்த குடியரசு துணைத் தலைவர் , அழியும் நிலையில் உள்ள இனங்களின் பாதுகாப்பு ஆய்வு கூடத்தை (LaCONES) பார்வையிட்டார். இந்த ஆய்வு கூடத்தின், பொறுப்பு விஞ்ஞானி டாக்டர் கார்த்திகேயன் வாசுதேவன் அளித்த விளக்கத்தை குடியரசு துணைத் தலைவர் பார்வையிட்டார். மேலும், தேசிய வனவிலங்கு மரபணு வள வங்கி, இனப்பெருக்கக் கூடம், விலங்குகளின் கூண்டுகள் ஆகியவற்றையும் குடியரசு துணைத் தலைவர் பார்வையிட்டார்.

தேசிய மருத்துவர்கள் தினத்தில் நோயில்லா உலகை உருவாக்க பாடுபடும் அவர்களின் வாழ்கை என்றென்றும் சிறக்க வேண்டும்.- ஜி.கே.வாசன்

 நோயில்லா உலகை உருவாக்க பாடுபடும் மருத்துவர்களின் வாழ்கை என்றென்றும் சிறக்க வேண்டும். - ஜி.கே.வாசன்

வருடம் தோறும் ஜூலை 1 - ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது . 

டாக்டர் பி.சி. ராய் அவர்களின் சேவையை போற்றும் விதமாக அவரது பிறந்தநாளை தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது . 

கூடங்குளத்தில் 5 மற்றும் 6வது அணு உலைகளுக்கான விரிவாக்கப்பணிகளை உடனடியாக கைவிட வேண்டும்! - கே.பாலகிருஷ்ணன்

 ஜூலை 1-2, தேதிகளில் சென்னையில் நடைபெறும் மாநில செயற்குழு கூட்ட தீர்மானம்

கூடங்குளத்தில்  5 மற்றும் 6வது அணு உலைகளுக்கான விரிவாக்கப்பணிகளை  உடனடியாக கைவிட வேண்டும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை - கே.பாலகிருஷ்ணன்

 தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்சாரம் தயாரிப்பதற்கான இரண்டு அணு உலைகள் ஏற்கனவே இயங்கி வருகிறது. அதை ஒரு அணு உலை பூங்காவாக மாற்றுவதற்கான திட்டத்தோடு, அடுத்தடுத்த அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளையும் பாஜக அரசு தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. கடந்த 2016 இல் மூன்று மற்றும் நான்காம் அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான பணிகளை பிரதமர் மோடி துவக்கி வைத்த போதே எழுந்த மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, அதில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளையும் நிர்மாணிப்பதற்கான இடம் தற்போது தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்க உள்ளதாகவும், அதற்கு அணுசக்தி துறையின் ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.