செவ்வாய், 27 ஜூலை, 2021

சட்டவிரோதக் குடியேற்றத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந் ராய் தெரிவித்தார்.

 

சட்டவிரோதக் குடியேற்றத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந் ராய் தெரிவித்தார்.

மக்களவையில் அவர் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:

செல்லுபடியாகக் கூடியப் பயண ஆவணங்கள் இன்றி, நாட்டில் நுழையும் வெளிநாட்டினர் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதப்படுகின்றனர். எந்தவித சட்டவிரோதக் குடியேற்றத்தையும் இந்தியா ஆதரிக்கவில்லை.

கோமாரி நோய் மற்றும் Pesté des Petits Ruminants (PPR) ஆகிய இரண்டு நோய்களை முற்றிலும் ஒழிப்பத்ற்காக கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டு திட்டம்.-- பால்வளம் அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா

 

நாடாளுமன்ற மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

கோமாரி நோய் மற்றும் பெஸ்டே டெஸ் பெடிட்ஸ் ருமினண்ட்ஸ் (பிபிஆர்) ஆகிய இரண்டு நோய்களை முற்றிலும் ஒழிப்பத்ற்காக கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.

தஜிகிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்பு


 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பினர் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஜூலை 27-29 வரை தஜிகிஸ்தானின் துஷான்பேவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த வருடாந்திர கூட்டத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு சார்ந்த விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும், கூட்டம் நிறைவடைந்த பிறகு அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 28-ஆம் தேதி திரு ராஜ்நாத் சிங் உரையாற்றுவார்.

 

மருந்துகளுக்கான உற்பத்திச் சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் ஆறு வருடங்களில் ரூ 1,96,000 கோடி மதிப்புள்ள ஏற்றுமதிகளுக்கு வாய்ப்புள்ளது.- திரு மன்சுக் மாண்டவியா


 நாடாளுமன்ற மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் படி, 2020 மே 29 அன்று மொத்தம் 8532 மருந்து நிறுவனங்கள் நாடு முழுவது இயங்கி வந்தன. இவற்றில் தமிழ்நாட்டில் 514 நிறுவனங்கள் அமைந்துள்ளன.

இந்திய உர நிறுவனத்தின் டால்ச்சர் ஆலைக்கு புத்தாக்கம் தர இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்தியாவின் ஆயுஷ் படிப்புகளைப் படிக்கும் வெளிநாட்டவருக்குக் கல்வி ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஆயுஷ் அமைச்சகம் எடுத்து வருகிறது.- திரு மகேந்திரபாய் முஞ்சப்பாரா


 நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் திரு மகேந்திரபாய் முஞ்சப்பாரா கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

ஆயுஷ் துறையில் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக, சர்வதேச  பிரச்சாரம், பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சுவார்த்தைகள், வர்த்தக வசதியளித்தல், பிரத்யேக ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழுவை நிறுவுதல், சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்க தொழில்துறை மற்றும் மருத்துவமனைகளுக்கு ஆதரவு, உலக சுகாதர அமைப்பு மற்றும் ஐஎஸ்ஓ ஆகியவற்றுடன் இணைந்து தர நிலைகளை உருவாக்குவதற்கக நிபுணர்களை பல்வேறு நாடுகளுக்கு அனுப்புதல், முதலீடுகளுக்கு ஊக்கம், சர்வதேச அயுஷ் நிறுவனங்களை அமைத்தல், இந்தியாவின் ஆயுஷ் படிப்புகளைப் படிக்கும் வெளிநாட்டவருக்குக் கல்வி ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஆயுஷ் அமைச்சகம் எடுத்து வருகிறது.