திங்கள், 30 செப்டம்பர், 2019

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் - கால்வாய்கள் தூர்வாரப்பட்ட விவரங்கள் - டி.ஆர்.பாலு

"திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் - கால்வாய்கள் தூர்வாரப்பட்ட விவரங்கள்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி ஏரி குளங்களை தூர் வாரியது; தெரியாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசக்கூடாது"

- டி.ஆர்.பாலு அறிக்கை.
(திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர்)

முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமிக்கு “எதைப் பேசுவது என்று தெரியாமல்- கூட்டிக் கொண்டுவந்து சேர்த்த கூட்டத்தில் எதையாவது பேசிக் கொண்டிருப்பதை”ப் பார்க்கும் போது, அவர் வேறு யாருக்கோ எதற்கோ பயந்து, ஏதோ ஒரு நடுக்கத்தில் முதலமைச்சர் பதவியை விடமுடியாமல் நீடித்துக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. நிரூபிக்கப்படாத- திட்டமிட்டு பொய்யாக, போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றுவதற்காக, சூதான எண்ணத்துடன் கொடுக்கப்பட்ட ஒரு வீண் புகாரை மேற்கோள்காட்டி “வீராணம் ஊழல்” என்று கூறியிருக்கிறார். எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் கோடிட்டுக் காட்டிய வீராணம் திட்டத்தைத்தான், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கொண்டு வந்து நிறைவேற்றினார் என்ற அடிப்படை தகவலைக் கூடத் தெரிந்து கொண்டு பேசுவதற்கு முதலமைச்சர் தயாராக இல்லை என்பது வருத்தமளிக்கிறது.

கனரா வங்கிப் பணியில், தமிழ்நாட்டு இளைஞர்கள் புறக்கணிப்பு - வைகோ கண்டனம்

கனரா வங்கிப் பணியில்,
தமிழ்நாட்டு இளைஞர்கள் புறக்கணிப்பு

- வைகோ கண்டனம்
(பொதுச்செயலாளர், மதிமுக.)

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, என்எல்சி, பெல் மற்றும் அஞ்சல்துறை வேலைவாய்ப்புகளில், தமிழ்நாட்டு இளைஞர்களைப் புறக்கணித்துவிட்டு, வெளி மாநிலத்தவர்க்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் கொடுமை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

7 தமிழர்கள் விடுதலை; பஞ்சாப்புக்கு ஒரு நீதி, தமிழகத்துக்கு ஒரு நீதியா? - DR. ராமதாஸ்

7 தமிழர்கள் விடுதலை; பஞ்சாப்புக்கு
ஒரு நீதி, தமிழகத்துக்கு ஒரு நீதியா?
- DR. ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக)

சீக்கிய மத நிறுவனரும், அதன் 10 குருமார்களில் ஒருவருமான குருநானக்கின் 550 ஆவது பிறந்த நாளையொட்டி, 550 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பஞ்சாப் முதல்வர் பியாந்த்சிங்கின் படுகொலை வழக்கில் பயங்கரவாதி பல்வந்த் சிங்குக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்படிருப்பதுடன், 25 முதல் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 8 பயங்கரவாதிகளை விடுதலை செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

குருநானக்கின் 550-ஆவது பிறந்தநாளையொட்டி, 550 பேர் விடுதலை செய்யப்படுவது வழக்கமான ஒன்று தான். தமிழகத்திலும் பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் பிறந்தநாள்களையொட்டி இவ்வாறு ஏராளமானவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மீதமுள்ள 9 பயங்கரவாதிகள் தொடர்பான முடிவு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள பல்வந்த் சிங் ரஜோனா பஞ்சாப் முதல்வர் பியாந்த்சிங் படுகொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாவார்.

பஞ்சாபில் பயங்கரவாதத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை மேற்கொண்ட அம்மாநில காங்கிரஸ் முதலமைச்சர் பியாந்த்சிங் 31.08.1995 அன்று சண்டிகரில் உள்ள தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்துக் கொண்டு மகிழுந்தில் ஏற முயன்ற போது, பாபர்கல்சா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த தில்வார் சிங் என்பவர் நடத்திய மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். ஒருவேளை தில்வார் சிங்கின் உடலில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்காமல் போயிருந்தால், இரண்டாவது மனிதகுண்டாக செயல்பட பல்வந்த் சிங் தயாராக இருந்தார். வழக்கு விசாரணையின் போது தம்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதுடன், அதை பெருமையாக கருதுவதாக தெரிவித்தார். தூக்குத் தண்டனை விதிக்கப் பட்ட போதும் கூட, அதை குறைக்க வேண்டும் என்று கருணை மனுவை அவர் தாக்கல் செய்யவில்லை.

2012-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் பாதல் கொடுத்த கருணை மனுவின் அடிப்படையில் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் அமரீந்தர் சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடம் அளித்த மனுவின் அடிப்படையில் அவரது தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாதம் உச்சத்தில் இருந்தபோது பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக, பல்வேறு மாநில சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 8 பயங்கரவாதிகள் குருநானக்கின் பிறந்தநாளான நவம்பர் 29-ஆம் தேதி விடுதலை செய்யப்படவுள்ளனர். பல்வந்த் சிங்கும் அதேநாளில் விடுதலையாக வாய்ப்புள்ளது.

பல்வந்த்சிங் உள்ளிட்ட 9 பேரும் தடா சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் விடுதலைக்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை. அவர்களின் விடுதலைக்காக பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கடந்த 14-ஆம் தேதி விண்ணப்பித்தார். அடுத்த 14 நாட்களில் அவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கிறது. ஆனால், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், இராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர் விடுதலை பற்றி 2014-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்த போது, அதுகுறித்து தமிழக அரசிடம் கருத்து தெரிவிக்க வேண்டிய மத்திய அரசு, உடனடியாக உச்சநீதிமன்றத்திற்கு சென்று விடுதலைக்கு தடை வாங்குகிறது.

தொடர்ந்து நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டது. அதனடிப்படையில், 7 தமிழர்களை விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானத்தை, கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி அமைச்சரவை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைத்து இன்றுடன் 387 நாட்கள் ஆகியும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பஞ்சாப் மாநில அரசு அளித்த பரிந்துரை மீது 14 நாட்களில் மத்திய அரசு முடிவு எடுக்கிறது; தமிழர்கள் விடுதலை விஷயத்தில் 13 மாதங்களாகியும் இன்று வரை ஆளுனர் முடிவு எடுக்கவில்லை என்றால் அது எந்த வகையில் நியாயம்? இது கடுமையான இனப்பாகுபாடு அல்லவா?

இத்தனைக்கும் பல்வந்த்சிங் ரஜோனா பஞ்சாப் முதலமைச்சர் பியாந்த்சிங் படுகொலையில் தமக்குரிய பங்கை ஒப்புக்கொண்டிருக்கிறார். அதை பெருமையாக கருதுவதாகவும் கூறியிருக்கிறார். மற்றவர்களும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என்பது மட்டுமின்றி தங்களை பயங்கரவாதிகளாக அறிவித்துக் கொண்டவர்கள். மாறாக பேரறிவாளன் காவல்துறை அதிகாரியால் திரித்து எழுதப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட்டவர். மற்றவர்களும் ராஜிவ் கொலை வழக்கில் தெரிந்து எந்த தவறையும் செய்யாதவர்கள். பஞ்சாபில் காங்கிரஸ் முதலமைச்சரை படுகொலை செய்தவர்களை விடுதலை செய்ய காங்கிரஸ் அரசே பரிந்துரைக்கிறது; மத்திய அரசும் அதை ஏற்றுக் கொண்டு உடனடியாக உத்தரவு பிறப்பிக்கிறது. ஆனால், பேரறிவாளன் குற்றமற்றவர் என புலனாய்வு அதிகாரியும், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதியும் கூறிய பிறகும், 29 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த அவரும், மற்றவர்களும் விடுவிக்கப்படவில்லை என்றால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற தத்துவத்தை ஏற்க முடியவில்லை.

ஏற்கனவே கருணை அடிப்படையில் விடுதலை செய்வதில் நடிகர் சஞ்சய்தத்துக்கு காட்டப்பட்ட சலுகை 7 தமிழர்களுக்கும் மறுக்கப்பட்டது. இப்போது பஞ்சாபியர்களுக்கு ஒரு நீதி; தமிழர்களுக்கு ஒரு நீதி என்பதை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாளில் விடுதலை செய்வதற்கு ஆளுனர் ஆணையிட வேண்டும்.

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

பிள்ளையார் ஆலயம் அருகில், பௌத்த பிக்கு உடலுக்கு ஈமச் சடங்கு - வைகோ

பிள்ளையார் ஆலயம் அருகில்,
பௌத்த பிக்கு உடலுக்கு ஈமச் சடங்கு

- வைகோ MP, கண்டனம்.
(பொதுச்செயலாளர், மதிமுக)


தமிழ் ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு, பத்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. சிங்களக் கொலைவெறி அரசால் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள் போக, எஞ்சி உள்ள தமிழர்களை, கட்டமைக்கப்பட்ட பண்பாட்டுத் தாக்குதல்கள் மூலம் அழித்து ஒழிப்பதில் சிங்கள அரசும், பௌத்த மதவாதக் கும்பலும் கரம் கோர்த்துக்கொண்டு செயல்படுகின்றன.

வீடுகளில் சூரியஒளி மின்னுற்பத்தி ; முட்டுக்கட்டைகளை அகற்ற வேண்டும்! - DR.ராமதாஸ்

வீடுகளில் சூரியஒளி மின்னுற்பத்தி:
முட்டுக்கட்டைகளை அகற்ற வேண்டும்!
- DR.ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக.)


தமிழ்நாட்டில் சூரியஒளி மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அதற்காக தனிக் கொள்கையை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது. ஆனால், சூரிய ஒளி மின்னுற்பத்தி தொடர்பான தமிழக அரசின் இலக்குகளை எட்டுவதற்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள சில நிபந்தனைகள் தடையாக இருப்பது வருத்தமளிக்கிறது.

இலங்கை தமிழர் கோயிலில் சிங்கள இனவெறி தாக்குதல்: தமிழீழமே தீர்வு!

இலங்கை தமிழர் கோயிலில் சிங்கள
இனவெறி தாக்குதல்: தமிழீழமே தீர்வு!
- ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர், பாமக. )

இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் புனித வழிபாட்டுத் தலமான நீராவியடி பிள்ளையார் கோயிலில், புத்த துறவியின் உடலை தீயிட்டு எரித்து சிங்கள இனவெறித் தாக்குதலை புத்த துறவிகள் நடத்தியுள்ளனர். சிங்கள இராணுவத் துணையுடன் நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

கீழடியில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

கீழடியில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் அவர்கள், மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் (தனிபொறுப்பு) திரு. பிரகலாத் சிங் பாட்டீல் அவர்களுக்கு, கீழடியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எழுதியுள்ள கடித விவரம்:

கர்நாடகத்தில் தமிழ்க் கல்வியைக் காக்க தமிழக அரசு உதவ வேண்டும்! - DR. ராமதாஸ்

கர்நாடகத்தில் தமிழ்க் கல்வியைக்
காக்க தமிழக அரசு உதவ வேண்டும்!
- DR. க்அறிக்கை 
( நிறுவனர், பாமக. )

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வாழும் மாநிலமாகவும், தமிழ்ப் பள்ளிகள் அதிகமுள்ள மாநிலமாகவும் கர்நாடகம் திகழ்ந்து வந்தது. ஆனால், கட்டாயக் கன்னடக் கல்விக் கொள்கை குறித்த தவறான புரிதல் காரணமாக அங்குள்ள தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டு வருவது வருத்தம் அளிக்கிறது.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு, கோலார், சாம்ராஜ்நகர், மாண்டியா, மைசூர், சிவமொக்கா, தும்கூர், தாவண்கெரெ, மங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகும் அந்தப் பகுதிகளில் தமிழர்களின் குழந்தைகள் படிப்பதற்காக தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன. அப்பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக நடத்தப்பட்டது மட்டுமின்றி, அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியில் கற்பிக்கப்பட்டன.

இந்தியாவில் 1956&ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதும் கர்நாடகத்தின் அங்கமாகவே நீடித்த அந்த பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் செயல்பட்டு வந்தன. அவற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் குழந்தைகள் பயின்று வந்தனர். ஆனால், இப்போது நூற்றுக்கும் குறைவான தமிழ்ப் பள்ளிகள் மட்டும் தான் இயங்கி வருகின்றன. அதுமட்டுமின்றி அந்த பள்ளிகளில் தமிழ் மொழியும், தமிழ்வழிக் கல்வியும் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. கடந்த ஆண்டு அந்தப் பள்ளிகள் மூலம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 122 ஆக குறைந்து விட்டது. அதுமட்டுமின்றி ஒட்டுமொத்தமாக இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விட்டது.

கர்நாடகத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் வழியிலும், தமிழ் மொழியையும் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததற்கு காரணம் கர்நாடகத்தில் கன்னடம் படித்தவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும் என்று தவறாக செய்யப்பட்ட பிரச்சாரம் தான். இந்த பிரச்சாரத்தை நம்பி தமிழர் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், தமிழ் மொழியை படிப்பதை கைவிட்டு கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய மும்மொழிகளை படிக்கத் தொடங்கியுள்ளனர். இம்மூன்று மொழிகளை மட்டுமே பயில வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லாத சூழலில், தவறான நம்பிக்கை காரணமாக பெரும்பாலான தமிழர் குழந்தைகள் தமிழ் படிப்பதை கைவிட்டு விட்டனர். இதையே காரணம் காட்டி அரசு சார்பில் நடத்தப்பட்டு வந்த ஏராளமான தமிழ் பள்ளிகள் படிப்படியாக மூடப்பட்டு விட்டன. இதனால் தமிழிலும், தமிழ் மொழியையும் படிக்க விடும் குழந்தைகளுக்குக் கூட அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

இதே நிலை நீடித்தால் கர்நாடகத்தில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தாய்மொழி தெரியாமல் வாழும் அவலநிலை ஏற்பட்டு விடும். இத்தகைய நிலை ஏற்படுவதை தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. கர்நாடகத்தில் உள்ள தமிழ்க் குழந்தைகள் தமிழ் படிப்பதற்கு வசதியாக கர்நாடகத்திலுள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு தேவையான தமிழ்ப் பாடப் புத்தகங்கள் மற்றும் தமிழாசிரியர்களை அனுப்பி வைத்தல், கர்நாடகத்திலுள்ள தமிழ்ப் பள்ளிகளில் படித்து 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கல்வி உதவித் தொகை வழங்குதல், தமிழ் மொழியில் பட்டப்படிப்பு முதல் முனைவர் பட்ட ஆய்வு வரை தமிழக அரசு பல்கலைக்கழகங்களில் இலவசமாகவும், கல்வி உதவித் தொகையுடனும் படிக்க வகை செய்தல், தமிழ்ப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், தமிழ்க் கல்வியை விரிவாக்கவும் தனி வாரியம் ஒன்றை அமைத்து அதற்கு தாராளமாக நிதி உதவி அளித்தல் ஆகியவற்றின் மூலம் கர்நாடகத்தில் தமிழர்கள் குடும்பத்து குழந்தைகள் தடையின்றி தமிழ் வழியிலும், தமிழ் மொழியையும் கற்க முடியும்.

உலக அளவில் தமிழ் வளர்ச்சிக்காக தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அமெரிக்காவில் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி வழங்கியது. உலகம் முழுவதும் 30 பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை அமைக்க தமிழக அரசு உதவியுள்ளது. லண்டன், யாழ்ப்பாணம், மலேஷியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 5 பல்கலைக் கழகங்களில் நடப்பாண்டில் தமிழ் இருக்கை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

உலக அளவில் தமிழ்க் கல்வி & ஆராய்ச்சிக்கு உதவுவதைப் போலவே உள்நாட்டில் பிற மாநிலங்களிலும் தமிழ்க் கல்விக்கு அரசு உதவ வேண்டும். அதன்படி கர்நாடகத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் தமிழ்க் குழந்தைகள் தமிழ் கற்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.

தமிழ் தெரியாதவர்கள் சிவில் நீதிபதிகள் தேர்வை எழுத அனுமதிக்கக் கூடாது! - DR.ராமதாஸ்

தமிழ் தெரியாதவர்கள் சிவில் நீதிபதிகள்
தேர்வை எழுத அனுமதிக்கக் கூடாது!
-DR.ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர், பாமக)

தமிழ்நாடு நீதித்துறையில் சிவில் நீதிபதி பணிகளுக்கான போட்டித் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்மொழி தெரியாதவர்களும் இந்தப் போட்டித் தேர்வுகளை எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறித்தும், அதுகுறித்த வழக்கறிஞர்களின் எதிர்ப்பு - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விளக்கம் ஆகியவற்றையும் தினத்தந்தி நாளிதழ் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சிவில் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை, சாட்சியம் உள்ளிட்ட அனைத்தும் தமிழ் மொழியில் தான் நடக்கும். சிவில் நீதிமன்றங்களில் சொத்துகள் குறித்த வழக்குகள் தான் அதிக எண்ணிக்கையில் நடைபெறும். இந்த வழக்குகளை தீர்மானிப்பதற்கான முக்கிய ஆதாரங்கள் நிலப்பதிவு பத்திரங்கள் தான். இவை பெரும்பாலும் தமிழில் தான் இருக்கும். பத்திரங்களில் உள்ள வாசகங்களை அறிந்து கொள்ள தமிழ் மொழி மட்டும் தெரிந்திருந்தால் போதாது; உள்ளூர் மொழிநடையும் தெரிந்திருக்க வேண்டும். சிவில் வழக்குகளை கையள்வதில் மொழி சார்ந்து இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் நிலையில், தமிழ் மொழி அறியாதவர்கள் கூட சிவில் நீதிபதிகள் பணிக்கான போட்டித் தேர்வுகளை எழுதலாம் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தழுவி வகுக்கப்பட்டதாகவும், பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் அறிந்திருக்காவிட்டாலும் கூட தமிழகத்தில் தேர்வு எழுதலாம் என்று விதிமுறைகளில் இருப்பதை மாற்ற முடியாது என்றும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலர் நந்தகுமார் விளக்கம் அளித்திருக்கிறார். இந்த விதிகள் இப்போது கொண்டு வரப்பட்டவை அல்ல... தேர்வாணையம் அமைக்கப்பட்ட நாளில் இருந்தே இவ்விதிகள் நடைமுறையில் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவை அனைத்தும் உண்மை; அவற்றில் எதையும், மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. ஆனால், அந்த விதிமுறைகளின் காரணமாக இதுவரை பாதிப்புகள் ஏற்பட்டதில்லை; இப்போது தான் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அதன்காரணமாகத் தான் இந்த விதிகளுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது என்பதை அரசு உணர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளை இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் எழுதலாம் என்ற விதிமுறை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆனால், அப்போதெல்லாம் தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எவரும் தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர ஆர்வம் காட்டியதில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தொடர்வண்டித் துறை, அஞ்சல்துறை, வங்கிகள் என மத்திய அரசு பணிகள் மூலம் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை அபகரித்து வரும் வெளிமாநிலத்தவர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிகளில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட தமிழக அரசுப் பணிகளையும் கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவது ஒருபுறமிருக்க பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படும் ஆபத்து உள்ளது.

இதுஒருபுறமிருக்க, அலுவலகம் சார்ந்த பணிகளுக்கும் மக்களுக்கும் நீதி வழங்குவதற்கான நீதிபதிகள் பணிக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அலுவலகப் பணிகளை மேற்கொள்வோர் பெரும்பாலான நேரங்களில் உள்ளூர் மொழி தெரியாவிட்டாலும், தெரிந்த மொழியைக் கொண்டு சமாளித்து விட முடியும். ஆனால், வழக்கறிஞர்களின் வாதங்களையும், மக்களின் சாட்சியங்களையும் கேட்டறிந்து தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிபதிகளுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்காவிட்டால் அவர்களால் பணியை சரியாக செய்ய முடியாது. சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்பதற்காகத் தான் பாட்டாளி மக்கள் கட்சியும், வழக்கறிஞர்கள் சமுதாயமும் போராடி வருகின்றன. அவ்வாறு இருக்கும் போது தமிழ் தெரியாதவர்களை சிவில் நீதிபதிகளாக நியமித்தால் கீழமை நீதிமன்றங்கள் இந்தியிலும், பிற மொழிகளிலும் இயங்கும் நிலை உருவாகி விடும். இது நல்லதல்ல.

எப்போதோ எழுதப்பட்ட விதிகளை காட்டி தவறுகள் தொடர்வதை அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுமதிக்கக்கூடாது. விதிகள் எனப்படுபவை காலத்திற்கு ஏற்றவாறு திருத்தப்பட வேண்டும். எனவே, சிவில் நீதிபதிகள் உள்ளிட்ட தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் எந்த பணிகளாக இருந்தாலும் அவற்றில் தமிழர்களை மட்டுமே நியமிக்கும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தங்களைச் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சனி, 21 செப்டம்பர், 2019

தொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும்; வைகைக் கரை வரலாறு பதியட்டும்! - வைகோ

தொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும்;
வைகைக் கரை வரலாறு பதியட்டும்!

- வைகோ MP அறிக்கை
(பொதுச்செயலாளர், மதிமுக)

வைகைக் கரையில், கீழடியில் நடைபெற்று வருகின்ற தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்துள்ள பொருட்கள், கருவிகள், தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகுக்குப் பறைசாற்றி வருகின்றன.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு எழுதப்பட்ட கிரேக்க இலக்கியங்களில், மதுரை நகரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. பல நாடுகளின் தூதர்கள் பாண்டிய மன்னனின் அவையில் வீற்று இருந்தது வரலாறு.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மதுரையில் வைகை ஆற்றில் சிறுவர்கள் பழங்கால ரோமாபுரி நாணயங்களைச் சேகரித்து பழம் பொருட்கள் கடையில் விற்பனை செய்து வந்த தகவல்களை பல எழுத்தாளர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.

அதன் தொடர்ச்சிதான் கீழடி ஆய்வு. அங்கே கிடைத்துள்ள நூற்றுக்கணக்கான பொருட்கள், அயல்நாடுகளுக்கு அனுப்பப்பட்டு, ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, சங்க காலத்தைச் சேர்ந்தவை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. ஆனால் தமிழகத்தின் தொன்மை குறித்த ஆய்வுகளை மத்திய அரசு புறக்கணித்தே வருகின்றது. அதற்காகத் தமிழகம் போராட வேண்டியதிருக்கின்றது. உரிய நிதி வழங்குவது இல்லை. ஊக்குவிப்பதும் இல்லை.

கீழடி ஆய்வுகள் குறித்து 2017 மார்ச் 2017 அன்று அமைச்சர் மகேஷ் சர்மா அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். பள்ளிப் பாடங்களில் இந்திய வரலாறு என்ற பெயரில் அசோகர், அக்பர் என வட இந்திய வரலாறையே முதன்மையாகக் கற்பித்து வருகின்றார்கள். பண்டித நேருவால் போற்றப்பட்ட தமிழக வரலாறை, சேர சோழ பாண்டியர்களைப் புறக்கணித்து வருகின்றார்கள். இந்த நிலை இனியும் தொடரக்கூடாது.

காவிரி, வைகை, தாமிரபரணி நாகரிகங்களை முதன்மைப் படுத்துகின்ற வகையில் தமிழக அரசின் வரலாற்றுப் பாடத்திட்டங்களை மாற்றி எழுத வேண்டும்.

உதயச்சந்திரன் ஐஏஎஸ் அவர்கள் தொல்லியல்துறைக்குப் பொறுப்பு ஏற்ற பின்னர் மேற்கொண்டு வருகின்ற பணிகளையும், கீழடி ஆய்வுகளுக்கு தூண்டுகோலாக இயங்கி வருகின்ற தோழர் வெங்கடேசனையும் பாராட்டுகிறேன்.

தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகளுக்காக மேலும் பல இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கின்றது. கடலுக்குள் அமிழ்ந்து கிடக்கின்ற காவிரிபூம்பட்டினம் உள்ளிட்ட விரிவான ஆய்வுகளுக்கு மத்திய மாநில அரசுகள் ஊக்கம் அளித்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இடைத்தேர்தல் வாயிலாக ஒரு பதில் விரைவில் கிடைக்கும். - மு.க.ஸ்டாலின் பேட்டி.

திமுக தலைமையிலான கூட்டணி சார்பில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவும் – நாங்குநேரி தொகுதி மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும்

- மு.க.ஸ்டாலின் பேட்டி.
(தலைவர், திமுக)

இன்று (21-09-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், செய்தியாளர்களிடம் பேசியதன் விவரம் பின்வருமாறு:

இன்று தேர்தல் ஆணையம், நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கான தேதியை அறிவித்திருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதி, நாங்குநேரி தொகுதி மற்றும் புதுவை மாநிலத்தில் இருக்கும் காமராஜ் நகர் தொகுதி, இந்த 3 தொகுதிகளுக்குரிய இடைத்தேர்தலும் எதிர்வரும் அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதுகுறித்துப் பேசிட அண்ணா அறிவாலயம் வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி அவர்களுடனும் கட்சியின் முன்னோடிகளுடனும் விவாதித்தோம், கலந்து பேசினோம். அந்த அடிப்படையில் விக்கிரவாண்டி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், புதுவை மாநிலத்தில் இருக்கும் காமராஜ் நகர் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

கேள்வி : தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிடும் விக்கிரவாண்டி வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார்?

மு.க.ஸ்டாலின் : நாளை மறுநாள் வேட்பாளர்களுக்கான விருப்பமனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அறிவித்திருக்கிறோம். விருப்பமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளே, வேட்பாளர் தேர்வுசெய்யப்பட்டு அறிவிக்கப்பட இருக்கிறார்.

கேள்வி : காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப் படவிருக்கிறார்கள். எனவே, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எப்போது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதாக இருக்கிறீர்கள்?

மு.க.ஸ்டாலின்: தேர்தல் தேதியினை இன்றைக்கு தான் அறிவித்திருக்கிறார்கள். எந்தக் கட்சி எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று, கலந்துபேசி இன்றைக்குத்தான் நாங்கள் அறிவித்திருக்கிறோம். இதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சியில் இடம்பெற்றிருப்பவர்களோடும் கலந்து பேசி, அதுகுறித்து முடிவு செய்யப்பட்டதும் பின்னால் அறிவிப்போம்.

கேள்வி : தேர்தல் தேதி தற்போதுதான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, வேட்பாளர்கள் விருப்ப மனுத்தாக்கல் செய்வதற்கான நாட்கள் மிகவும் குறைவாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

மு.க.ஸ்டாலின் : விருப்பமனு தாக்கல் செய்வதற்கான நாட்கள் 23-ம் தேதியிலிருந்து 29-ம் தேதி வரையில் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், அதில் எந்தவிதச் சங்கடமும் இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் நாங்கள், எந்தெந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று இன்றைக்கே முடிவு செய்து விட்டோம்.

நாளை மறுநாள் தி.மு.க.,விலும், காங்கிரஸ் கட்சியிலும் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்பமனுக்களை முறைப்படி வாங்கப் போகிறோம். அதேபோல், விரைவில் வேட்பாளர்களையும் அறிவிக்கவிருக்கிறோம். அந்தப் பணிகளை வேகமாகவும், உடனடியாகவும் செய்வதற்கான முயற்சியில் முழுமையாக ஈடுபட இருக்கிறோம்.

கேள்வி : இந்தியா முழுவதும் பொருளாதார வீழ்ச்சி என்று பேசிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்திருக்கிறது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மு.க.ஸ்டாலின் : இவற்றுக்கெல்லாம் இந்தத் தேர்தல் வாயிலாக ஒரு பதில் விரைவில் கிடைக்கும்.

இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கு உயர்புகழ் தகுதி; மைய அரசே முழு நிதி வழங்க வேண்டும்! - DR. ராமதாஸ்

அண்ணா பல்கலைக்கு உயர்புகழ் தகுதி;
மைய அரசே முழு நிதி வழங்க வேண்டும்!
- DR. ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர், பாமக)

தமிழக அரசின் தொழில்நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் உயர்புகழ் கல்வி நிறுவனங்களில் ( Institution of Eminence ) ஒன்றாக அறிவிக்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்த தேவைப்படும் நிதி அண்ணா பல்கலை.யிடம் இல்லாத நிலையில் இந்த அரிய வாய்ப்பை அண்ணா பல்கலை இழக்க நேரிடுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

உலகின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்கள் ஒன்று கூட இடம்பெறாத நிலையில், அவற்றில் இந்திய பல்கலைக்கழகங்களை இடம்பெறச் செய்யும் நோக்கத்துடன் 10 அரசு கல்வி நிறுவனங்கள், 10 தனியார் கல்வி நிறுவனங்கள் என மொத்தம் 20 பல்கலைக்கழகங்களை உயர்புகழ் கல்வி நிறுவனங்களாக மத்திய அரசு அறிவிக்க உள்ளது. 10 அரசு கல்வி நிறுவனங்களில் தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகம், மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் ஆகியவை மட்டும் தான் மாநிலப் பல்கலைக்கழகங்கள் ஆகும். உயர்புகழ் கல்வி நிறுவனத் தகுதியை பெறுவதற்காக கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட ஏராளமான பணிகளை பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டியிருக்கும். இதற்காக ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதிகபட்சமாக ரூ.3,000 கோடி வரை செலவிட வேண்டியிருக்கும் என உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

உயர்புகழ் நிறுவனங்களாக அறிவிக்கப்படவுள்ள 10 அரசு கல்வி நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி உள்ளிட்ட 8 நிறுவனங்கள் மத்தியப் பல்கலைக்கழகங்கள் என்பதால் அவற்றுக்கான செலவை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். ஆனால், அண்ணா பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் ஆகிய மாநில பல்கலைக்கழகங்களுக்கு ஆகும் செலவில் பெரும்பகுதியை மாநில அரசுகளே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருப்பது தான் பெரும் முட்டுக்கட்டையை ஏற்படுத்தியிருக்கிறது. பல்கலைக்கழகங்களை தரம் உயர்த்துவதற்காக ஆகும் செலவில் 50% அல்லது ரூ.1000 கோடியில் எது குறைவோ அதை மட்டும் தான் மத்திய அரசு வழங்கும். அண்ணா பல்கலைக்கழகத்தை மேம்படுத்த ரூ.2750 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டிருப்பதால், மத்திய அரசு வழங்கும் ரூ.1000 கோடி தவிர மீதமுள்ள ரூ.1750 கோடியை 5 ஆண்டுகளில் அண்ணா பல்கலை திரட்ட வேண்டும். இது சாத்தியமல்ல.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு காலத்தில் பெருமளவில் உபரி நிதி இருந்தது என்றாலும், காலப் போக்கில் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கப் பணிகளாலும், மாணவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்கப்படுவதாலும் உபரி நிதி செலவாகி விட்டது. பல்கலைக்கழகத்தின் வழக்கமான செலவுகளுக்கே நிதி இல்லாததால் தான் அண்மையில் பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி கல்விக்கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் உயர்த்தியது. இத்தகைய சூழலில் அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுக்கு ரூ.350 கோடி செலவிடுவது கற்பனையில் கூட நடக்காத காரியம்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவைப்படும் ரூ.1750 கோடியை தமிழக அரசு வழங்குவதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவு. ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மாநில அரசுகளின் வரிவிதிப்பு அதிகாரம் கிட்டத்தட்ட பறிக்கப்பட்டு விட்டது. தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு வரி அல்லாத வருவாய் ஆதாரங்களும் பெரிதாக இல்லாத நிலையில் தமிழக அரசால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இவ்வளவு பெரிய தொகையை வழங்க முடியாது. அதேநேரத்தில் ரூ.1750 கோடியை அடுத்த 5 ஆண்டுகளில் செலவிடுவதற்கான உத்தரவாதத்தை தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் அளிக்காவிட்டால் இந்த தகுதி மராட்டியத்திலுள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகம் அல்லது அலிகார் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றி வழங்கப்படும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. மத்திய அரசின் இந்த செயல் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத சமூக அநீதியாகும்.

உயர்புகழ் கல்வி நிறுவனங்களுக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்ட போது, தேர்ந்தெடுக்கப்படும் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என்று தான் கூறப்பட்டதே தவிர, பல்கலைக்கழகங்கள் பெரும் தொகையை செலவிட வேண்டியிருக்கும் என்று எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது மாநில பல்கலைக்கழகங்களின் நிதி நிலை குறித்து அறிந்திருந்தும் அவை ரூ.2000 கோடி வரை செலவழிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது நியாயமற்றது. அதுமட்டுமின்றி இத்தகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8 மத்திய கல்வி நிறுவனங்களில் 3 நிறுவனங்களுக்கு இத்தகுதி வழங்கப்பட்டு விட்டது. சென்னை ஐ.ஐ.டி உள்ளிட்ட மீதமுள்ள 5 கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசே முழு நிதியையும் வழங்கவுள்ளது. சென்னை அடையாறில் சாலையின் ஒருபுறத்தில் அமைந்துள்ள சென்னை ஐ.ஐ.டிக்கு முழு நிதியை வழங்கவுள்ள மத்திய அரசு, மறுபுறம் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முழு நிதியை வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயம்?

உயர்புகழ் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதன் நோக்கமே உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்களை இடம்பெறச் செய்வது தான். இந்த நோக்கம் நிறைவேறினால் அது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தான் பெருமை சேர்க்குமே தவிர, மாநிலங்களுக்கு தனித்த பெருமை சேர்க்காது. அதுமட்டுமின்றி உயர்புகழ் கல்வி நிறுவனங்களை உருவாக்குவது மத்திய அரசின் கனவுத் திட்டம் ஆகும். இதற்காக மாநில அரசுகள் நிதி வழங்க வேண்டும் என நிபந்தனை விதிப்பது சரியல்ல.

எனவே, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் கல்வி நிறுவனமாக அறிவித்து மாற்றுவதற்கு முழு நிதியையும் மத்திய அரசே வழங்க வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் வலியுறுத்துகிறேன்.

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

கீழடி தமிழர்களின் பெருமிதம் ; ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும். - DR. ராமதாஸ்

கீழடி தமிழர்களின் பெருமிதம்: முந்தைய
ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும்!
- DR. ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர், பாமக.) 

மதுரை அருகே கீழடியில் நடத்தப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வின் மூலம் தமிழர் நாகரிகம் குறைந்தது 2600 ஆண்டுகள் பழமையானது என நிரூபிக்கப்பட்டிருப்பது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை பெருமிதப்பட வைத்துள்ளது. உலக வரலாற்றையே மாற்றியமைக்கப் போகும் கீழடி அகழாய்வு பணிகளை விரிவுபடுத்துவதும், விரைவுபடுத்துவதும் மத்திய, மாநில அரசுகளின் முதன்மைக் கடமையாகியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கீழடியில் பழங்கால தமிழர்கள் நாகரிகத்தை வரலாற்றை வெளிக்கொண்டு வரும் நோக்கத்துடன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட அகழாய்வில் தெரியவந்துள்ள முடிவுகளை தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் சென்னையில் நேற்று வெளியிட்டுள்ளார். அந்த ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள திமிலுள்ள காளையின் எலும்புகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பொருட்களில் 6 பொருட்கள் அமெரிக்காவின் மியாமி நகரிலுள்ள பீட்டா பகுப்பாய்வகத்திற்கு அனுப்பப்பட்டு, கரிம ஆய்வு செய்யப்பட்டதில், அவை கி.மு. 6&ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என தெரியவந்துள்ளது. இதன்மூலம் தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சிந்து வெளி நாகரிகத்தில் இருந்தது போலவே திமில் உள்ள காளைகளின் எலும்புகள் கண்டெடுக்கப் பட்டிருப்பதன் மூலம் அந்த நாகரிகத்துடன் தமிழர்களுக்கு உள்ள நெருங்கியத் தொடர்பு; ரோம் நாட்டைச் சேர்ந்த அரிட்டைன் பானை ஓடுகள் கிடைத்திருப்பதால் அக்கால ரோமப் பேரரசுடன் தமிழர்கள் வைத்திருந்த வணிகத் தொடர்பு ஆகியவை மெய்ப்பிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி வேளாண்மை, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் தமிழர்கள் சிறந்து விளங்கியது, பொருளாதார வளமையுடன் தமிழர்கள் வாழ்ந்தது ஆகியவற்றுக்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. விதவிதமான எழுத்து வடிவங்களை தமிழர்கள் பயன்படுத்தியிருப்பதால் அப்போதே தமிழர்கள் கல்வியில் சிறந்து விளங்கியதும் உறுதியாகிறது. தமிழர்கள் தங்கள் நாகரிகத்தைக் கொண்டாட இதைவிட வேறு காரணம் தேவையில்லை. அவ்வகையில் நான்காவது அகழாய்வு முடிவுகளை விரைவாக வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

அதேநேரத்தில் கீழடியால் கிடைத்த பெருமிதத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. காரணம்... கீழடியில் தமிழக அரசால் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வின் முடிவுகள் ஓராண்டு காலத்திற்குள் வெளியிடப்பட்டு விட்ட நிலையில், அதே கீழடியில் 2015 முதல் 2017 வரை நடத்தப்பட்ட முதல் 3 கட்ட ஆய்வுகளின் முடிவுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை என்பது தான். முதல் மூன்று கட்ட ஆய்வுகளில் 5,300க்கும் கூடுதலான பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல பொருட்கள் மியாமி நகரிலுள்ள பீட்டா பகுப்பாய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவை 2,218 ஆண்டுகள் பழமையானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆய்வு குறித்த அறிக்கை இன்று வரை வெளியிடப்படாததால், தமிழர்கள் நாகரிகம் குறித்த உலகமே வியக்கக்கூடிய வகையிலான பல உண்மைகள் மக்களை சென்றடையாமல் அறைகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளன.

கீழடி ஆய்வை முன்னின்று நடத்திய வல்லுனர் அமர்நாத் இராமகிருஷ்ணன் திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டதும், அவர் நடத்திய ஆய்வுகளின் முடிவுகளை எழுதும் பணி இன்னொரு வல்லுனரிடம் ஒப்படைக்கப்பட்டதும் தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு சில ஆணைகளை பிறப்பித்தும் கூட எந்த பயனும் ஏற்படவில்லை. கீழடியில் இதுவரை நடத்தி முடிக்கப்பட்டுள்ள 4 ஆய்வுகள் மற்றும் இப்போது நடைபெற்று வரும் ஐந்தாவது கட்ட ஆய்விலிருந்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் சேகரிக்கப்பட்டு தமிழகத்திலும், கர்நாடகத்திலும் பகுதி பகுதியாக கிடக்கின்றன. கீழடியில் சர்வதேச தரத்திலான அருங்காட்சியம் அமைத்து, அதில் இந்த பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்கள் முன்னோர்களின் வாழ்க்கை முறையை பார்த்து மகிழ வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இந்த விஷயத்தில் மத்திய அரசு ஆர்வம் காட்டாததால் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.

கீழடியில் இப்போது நடைபெற்று வரும் ஐந்தாம் கட்ட ஆய்வில் இரட்டை கல் சுவர் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது தமிழர்களின் நாகரிகம், கட்டிடக்கலை போன்றவை குறித்த புதிய உண்மைகளை வெளிக்கொண்டு வரும். இவை தமிழர்களின் பெருமையை மேலும் உயர்த்த்தும். எனவே, மத்திய அரசிடம் வலியுறுத்தி கீழடியில் நடத்தப்பட்ட முதல் மூன்று கட்ட ஆய்வுகளின் முடிவுகளையும், ஆதிச்சநல்லூரில் 15 ஆண்டுகளுக்கு நடத்தப்பட்டு இன்னும் வெளியிடப்படாமல் உள்ள ஆய்வுகளின் முடிவுகளையும் வெளியிடச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழடியில் சர்வதேசத் தரத்தில் அருங்காட்சியகம் அமைத்து இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பார்வைக்கு வைக்க வேண்டும். அடுத்தடுத்த கட்ட அகழாய்வுகளை தமிழக அரசே மேற்கொள்வதுடன், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை மாநிலப்பாடத்திட்ட பாடநூலில் ஒரு பாடமாக சேர்க்கவும் முன்வர வேண்டும்.

திங்கள், 16 செப்டம்பர், 2019

பள்ளிக்கூடம், அரசு சுவர்கள் அழகைச் சிதைப்போருக்கு என்ன தண்டனை? - DR.ராமதாஸ்

அரசு சுவர்கள், பாலங்களின் அழகைச்
சிதைப்போருக்கு என்ன தண்டனை?
- DR.ராமதாஸ் அறிக்கை

சென்னை பள்ளிக்கரணையில் பதாகை சரிந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட விபத்தில் சுபஸ்ரீ என்ற பெண் பொறியாளர் உயிரிழந்த விபத்து மற்றும் அதுகுறித்து தானாக வழக்குப் பதிவு செய்த உயர்நீதிமன்றம் தெரிவித்த கடுமையான கருத்துகள் ஆகியவற்றைத் தொடர்ந்து அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த பதாகைகளும், கட் அவுட்களும் வேகமாக அகற்றப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி சட்டவிரோதமாக பதாகைகள் வைப்போருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

பொதுமக்களுக்கும், சாலைகள் மற்றும் நடைபாதைகளை பயன்படுத்துவோருக்கும் மிகக்கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் அனுமதி இல்லாத பாதுகாப்பற்ற உயிர்க்கொல்லி பதாகைகள், அலங்கார வளைவுகள், கட்&அவுட்டுகள் ஆகியவற்றை அமைப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வருகிறேன். எனது வேண்டுகோள் பிற அரசியல் கட்சிகளால் செவிமடுக்கப்படவில்லை என்றாலும் கூட, உயர்நீதிமன்றத்தின் கண்டனத்தைத் தொடர்ந்து இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மனநிறைவளிக்கின்றன. இவை வரவேற்கத்தக்கவையாகும். இந்த நேரத்துக்கான நடவடிக்கைகளாக மட்டும் இருந்து விடாமல், இவை தொடர வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பமாகும். இந்த விருப்பம் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் பதாகை கலச்சாரத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இன்னொரு அருவருக்கத்தக்க கலாச்சாரம் அதன் கோர முகத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது. சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அரசு அலுவலகங்களின் சுவர்கள், பேருந்து நிறுத்தங்கள், பாலங்கள்.... அவ்வளவு ஏன்? பள்ளிக்கூட சுவர்களைக் கூட விட்டு வைக்காமல் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை எழுதுதல், சுவரொட்டிகளை ஒட்டுதல் என பொது இடங்களின் அழகைக் கெடுக்கும் செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். கட்சிகளுடன் போட்டி போடும் வகையில் திரைத்துறை சார்ந்த விளம்பரங்களும், சுவரொட்டிகளும் பொது இடங்களை அருவருக்கத்தக்கவையாகவும், பெண்களை முகம் சுழிக்க வைப்பவையாகவும் மாற்றிக் கொண்டிருக்கின்றன.

தைலாபுரத்திலிருந்து சென்னைக்கும், பிற நகரங்களுக்கும் மகிழுந்தில் பயணிக்கும் போது இயற்கை அழகை ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இடமும், வலமும் பார்த்துக் கொண்டிருக்கும் போது, இடைஇடையே பொது இடங்களில் செய்யப்பட்டுள்ள சட்டவிரோத விளம்பரங்களும், சுவரொட்டிகளும் தோன்றி ரசனையைக் கெடுக்கும். தனியார் சுவர்களில் அவற்றின் உரிமையாளர்களின் அனுமதியைப் பெற்று விளம்பரங்களை செய்வது விதிகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொது இடங்களின் அழகைக் கெடுக்கும் செயல்களை அனுமதிக்கக்கூடாது என்று பல தருணங்களில் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் எச்சரித்த பிறகும் இவை தொடருவது தான் வேதனை ஆகும்.

பொது இடங்களில் விளம்பரங்கள் செய்வதையும், சுவரொட்டிகள் ஒட்டுவதையும் தடுக்கும் வகையில் 1959-ஆம் ஆண்டில் தமிழ்நாடு திறந்தவெளிப்பகுதிகளின் அழகு சீர்குலைக்கப்படுதல் தடைச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின்படி அரசு சுவர்களில் விளம்பரம் செய்வோருக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். ஆனால், இத்தகைய சட்டவிரோத விளம்பரம் செய்வது தடுக்கப்படாத நிலையில், அது தொடர்பான வழக்கை 13.06.2016 அன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு, பொது இடங்களில் விளம்பரங்கள் செய்யப்படுவது தொடர்ந்தால் அதை செய்தவர்கள் மீதும், அதை தடுக்கத் தவறியவர்கள் மீதும் வழக்கமான சட்டத்தின்படி 3 மாத சிறை தண்டனை விதிக்கப் படுவது மட்டுமின்றி, கூடுதலாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, அதற்கான தண்டனையும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அதற்கும் சில காலத்திற்கு பிறகு பயனில்லை.

இந்த வழக்கில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை கடந்த 08.03.2019 அன்று விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகளை அனுமதிக்கவே முடியாது என்றும், இவற்றை அதிகாரிகள் தடுத்தே ஆக வேண்டும் என்றும் கடுமையாக கூறியது. ஆனால், அதன்பிறகும் இத்தகைய அத்துமீறல்கள் தொடகின்றன என்றால் அதற்கு காரணமானவர்களை எப்படி விமர்சிப்பது என்பது தான் தெரியவில்லை.

பொது இடங்களின் அழகு கெடுக்கப்படுவதைத் தடுக்க சென்னை மாநகராட்சி சார்பில் மா.சுப்பிரமணியன், சைதை துரைசாமி ஆகியோர் மேயர்களாக இருந்த போது பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அழகை சிதைப்பவர்களிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அரசுக்கு சொந்தமான இடங்களும், மலைகள், பாலங்கள் போன்றவற்றையும் நமது இல்லத்தின் வரவேற்பறையாக கருதினால் அவற்றின் அழகைச் சிதைக்க மனம் வராது. அதையும் மீறி பொது இடங்களின் அழகைக் குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான்.

இதைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களின் அழகை சிதைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் 1959-ஆம் ஆண்டின் தமிழ்நாடு திறந்தவெளிப் பகுதிகளின் அழகு சீர்குலைக்கப்படுதல் தடைச் சட்டத்தில் அரசு உரிய திருத்தங்களை செய்து, அதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்; பொது இடங்களின் அழகை மேம்படுத்தும் வகையில் அவற்றில் அழகான, தமிழர்களின் கலாச்சாரத்தை விளக்கும் வகையிலான ஓவியங்களை வரைய அரசு முன்வர வேண்டும்.

கலைஞரின் பிறந்த நாளை செம்மொழி நாளாக கடைபிடிப்போம் - மு.க.ஸ்டாலின்

கலைஞரின் பிறந்த நாள் ஜூன் 3-ஆம் தேதியை, செம்மொழி நாளாக கடைபிடிப்போம். திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


முத்தமிழறிஞர் கலைஞர் நமக்கு உருவாக்கிக் கொடுத்த மூன்று விழாக்கள் தான் இந்த முப்பெரும் விழாக்கள் கடந்த ஆண்டு முப்பெரும் விழாவை விழுப்புரத்தில் நடத்தினோம், அந்த விழாவில் சில அறிவிப்புகளைச் செய்தேன். கலைஞரின் பிறந்த நாள் ஜூன் 3-ஆம் தேதியை, செம்மொழி நாளாக கடைபிடிப்போம். கடந்த ஜூன் 3-ஆம் தேதியை செம்மொழி நாளாக கொண்டாடினோம். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அறக்கட்டளை தொடங்கப்பட்டு, மருத்துவம் மற்றும் கல்வி உதவித் தொகைகள் விரைவில் வழங்கப்படும்.

தமிழகத்தின் நான்கு மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் சிறப்பாக பணியாற்றியவர்களில் தலா ஒருவருக்கும் ஊராட்சி செயலாளர்களில் தலா ஒருவருக்கும் கழக விருது.

அந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது அவர்களை பாராட்டுவது மட்டுமல்ல அவர்களைப் போலவே மற்றவர்களும் பணியாற்ற வேண்டும் என்பதற்காக இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இப்படியெல்லாம் விருதுகள் கொடுப்பார்கள் என்பதற்காக அவர்கள் பணியாற்றவில்லை. ஆனாலும், பாராட்ட வேண்டியது தலைமைக்கழகத்தின் கடமை அதைத்தான் செய்துள்ளோம்.

அதேபோல் திறன் மிகு சாதனைகளைப் படைத்துள்ள இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்படும் என்று அறிவித்தேன். தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற துணைப் பேராசிரியர் எழிலரசி அவர்களுக்கும், மியான்மரில் நடைபெற்ற ஆசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கமும் மற்றும் பல்வேறு போட்டிகளில் பல பதக்கங்களை குவித்த கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சார்ந்த பூந்தளிர் அவர்களுக்கும், 16 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்ற சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள மல்லிக்குத்தம் கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கவின் சான்றோம் ஆகியோருக்கு இளம் சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் கலை இலக்கியவாதிகளுக்கு திராவிட படைப்பாளி விருது வழங்கப்படும் என்று அறிவித்திருந்தேன். கலை இலக்கியம் பத்திரிகை திரையுலகம் சின்னத்திரை என அந்தத்துறையில் சிறந்து விளங்கும் படைப்பாளிகளுக்கு கலைஞர் பிறந்த நாள் ஜூன் 3-ஆம் தேதியன்று விருதுகள் வழங்கப்படும்.

1999-ஆம் ஆண்டில் இருந்து 2019-ஆம் ஆண்டு வரையில் முரசொலி அறக்கட்டளையின் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அவர்களின் நன்னடத்தையைப் பொறுத்து அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக இதுவரையில் 320 பேருக்கும் நற்சான்று – பணமுடிப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அவர்களுக்கு வழங்கியிருக்கக்கூடிய தொகை 28 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாய்.

மாவட்ட, மாநில அளவில் கல்லூரி – பள்ளி மாணவர்களுக்கு புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியை 19997-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை நடத்தியிருக்கின்றோம், இதுவரையில், 7,241 பள்ளி மாணவர்களுக்கு, 7,153 கல்லூரி மாணவியர்களுக்கு என 14,394 மாணவ மாணவியருக்கு 2 கோடியே 78 இலட்சத்து 88 ஆயிரத்து 250 ரூபாய் இதுவரையில் வழங்கப்பட்டிருக்கின்றது.

தி.மு.கழக அறக்கட்டளை தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் ஆகியோர் பெயரில் விருதுகள் 1985-ஆம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டு வரையில் தொடர்ந்து 220 பேர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த ஆண்டு பெரியார் விருது, இளமை முதலே பகுத்தறிவு சுயமரியாதை கொள்கைகளை ஏற்று செயல்பட்டவரான திருவண்ணாமலை த.வேணுகோபால்.,க்கு வழங்கப்பட்டுள்ளது. அண்ணா விருது, ஆந்திர மாநிலத்தை சார்ந்த அண்ணாவின் ஆணையை ஏற்று வடக்கு எல்லைக்காக போராடிய சி.நந்தகோபாலுக்கு அண்ணா விருது வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் விருது, 1949-ஆம் ஆண்டு கழகம் தோன்றிய நாள் முதல் கழகத்தின் உறுப்பினராக இருக்கும் சேப்பாக்கம் எ.கே.ஜெகதீசன் அவர்களுக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது. பேவேந்தர் விருது, அண்ணாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் சத்தியவாணி முத்து அவர்கள் தனது 16 வயதிலேயே கழக உறுப்பினராக பணியாற்றும் சித்திரமுகி சத்தியவாணி முத்து பாவேந்தர் விருது பெற்றுள்ளார்.

பேராசிரியர் விருது, கழகம் நடத்திய சட்ட எரிப்பு இந்தி ஆதிக்க எதிர்ப்பு மிசா போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட தஞ்சை இறைவன் அவர்களுக்கு பேராசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஐவரும் விருதால் மட்டுமல்ல, விருதுக்கே பெருமை சேர்த்துள்ளார்கள். தலைமைக்கழகம் சார்பில் அவர்களுக்கு வாழ்த்துகள்.


இந்தித் திணிப்பை தடுக்க எத்தகைய தியாகத்துக்கும் திமுக தயார் - மு.க.ஸ்டாலின்

"இந்தித் திணிப்பை தடுக்க எத்தகைய தியாகத்துக்கும் திமுக தயார்" முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் உரை



திமுக 70 ஆண்டு பயணத்தில் நாம் பெறாத வெற்றியும் இல்லை நாம் பெறாத தோல்வியும் இல்லை. வெற்றியில் துள்ளி குதித்ததும் இல்லை தோல்வியில் துவண்டு போனதும் இல்லை நாம் சந்திக்காத அடக்கு முறைகள் இல்லை. பார்க்காத சிறைச்சாலைகள் இல்லை.

அன்போடு அல்ல கண்டிப்போடு சொல்கின்றேன் வேண்டாம் - மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


இந்த விழாவுக்கு முன்பாக ஒரு வேண்டுகோளை – அல்ல ஒரு கட்டளையை பிறப்பித்திருந்தேன்.

அறிஞர் அண்ணா அவர்கள்தான் நம் முகம், நம் முகவரி. - மதிமுக மாநாட்டில்மு.க.ஸ்டாலின் உரை

நாம் அனைவரும் ஒருதாய் மக்கள்; காஞ்சி தந்த வள்ளுவன், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் நமது தாய்; அறிஞர் அண்ணா அவர்கள்தான் நம் முகம் - நம் முகவரி!"

- மு.க.ஸ்டாலின் உரை.
(தலைவர், திமுக)


எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டோம்' என்று புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துக்காட்டிய அந்தப் பாடல் வரிகளுக்கேற்ப மிகுந்த எழுச்சியோடு உணர்ச்சியோடு, ஏன் மறுமலர்ச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முன்னின்று நடத்தும் இந்த மாநாட்டைத் தொடங்கிவைக்கக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன். வாய்ப்பினை எனக்கு உருவாக்கித் தந்திருக்கும் என் ஆருயிர் அண்ணன் வைகோ அவர்களுக்கும் அவருக்குத் துணை நின்று பணியாற்றிக் கொண்டிருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளுக்கும் இந்த மாநாட்டுக் குழுவைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

வங்கக் கடலோரத்தில் ஆறடி சந்தனப் பேழையில் உறங்கியும் உறங்காமலும் உறங்கிக்கொண்டிருக்கும் நம் அறிவுலக மேதை, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாள் இன்று. அவருடைய பிறந்தநாளில், பிறந்தநாள் என்ற தலைப்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாநாடு இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மீண்டும் சொல்கிறேன், இந்த மாநாட்டைத் திறந்து வைப்பது என்பது எனக்கு பெருமை மட்டுமல்ல; சிறப்பு மட்டுமல்ல; மகிழ்ச்சி மட்டுமல்ல; என்னுடைய வாழ்நாளில் கிடைத்திருக்கும் மிகப்பெரிய பெருமையாக நான் கருதுகிறேன்.. 'உன் கண்ணொளியின் கதகதப்பில் வளர்ந்தோமே, என் கண்கள் எல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்' என்று அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி, அவர் மறைந்த நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்களால் எழுதப்பட்ட கவிதை வரிகள் இந்த வரிகள்.

கால நதி வெள்ளத்திலே கன்னித்தமிழ் உள்ளத்திலே ஊறி நிற்கும் ஒரு பெயர்தான் அண்ணா அண்ணா. இதை உத்தமர்கள் யாவரும் சொன்னார் சொன்னார்' என்று கவியரசு கண்ணதாசன் அவர்கள் அண்ணாவைப் பற்றி எழுதிக்காட்டியிருக்கிறார். எழுத்தானவன் நல்ல எண்ணமானவன் பழுத்த சுவைத் தமிழனின் பண்ணானவன், அறியாமை வெள்ளத்தின் அறிவானவன், அறிவுச்சுடர் விளக்காய் அணையாதவன் குறையாத கடலுக்கு ஒப்பானவன் என்று எழுதினார் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதினார். அப்படிப்பட்ட பெருமைக்குரிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அதையொட்டி நடைபெறக்கூடிய இந்த மாநாட்டில் பங்கேற்று இந்த மாநாட்டைத் துவக்கிவைப்பதிலே நான் அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

அறிஞர் அண்ணா அவர்கள்தான் நம் முகம், நம் முகவரி. அதிலே யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நானும் அண்ணன் வைகோ அவர்களும் எத்தனையோ மேடைகளில் ஒன்றாக கலந்துக் கொண்டிருந்தாலும், இந்த மேடையில் ஒன்றாக இருப்பதில் உள்ளபடியே நான் மகிழ்ச்சியடைகிறேன். காரணம், நான் பங்கேற்கக்கூடிய ம.தி.மு.க.,வினுடைய முதல் மாநாடு - இந்த மாநாடு!

பொதுமேடைகளில் பங்கேற்றிருக்கிறோம். தி.மு.க மேடைகளில் கலந்துக் கொண்டிருக்கிறோம். பிரச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றியிருக்கிறோம். ஆனால், ம.தி.மு.க.,வின் மாநாடு என்பது இதுதான். அதனால்தான் சொன்னேன், என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத மாநாடாக இது அமைந்திருக்கிறது. நீர் அடித்து நீர் விலகாது என்பதைப்போல் நாம் ஒன்றாக ஆகியிருக்கிறோம். தனித்தனி வீட்டில் இருந்தாலும் நாம் ஒருதாய் மக்கள். அந்தத் தாய்தான் காஞ்சி தந்த வள்ளுவன், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். பிரிந்துகிடக்கக்கூடிய தமிழர்களை இணைக்கக்கூடிய வலிமை சில சொற்களுக்குத்தான் உண்டு. அத்தகைய சொற்களில் ஒன்று 'தமிழன்'. அத்தகைய சொற்களில் ஒன்று 'திராவிடம்'! அத்தகைய சொற்களில் ஒன்று தந்தை பெரியார்! அத்தகைய சொற்களில் ஒன்று அறிஞர் அண்ணா! அத்தகைய சொற்களில் ஒன்று முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்!

நாம் வேறு வேறு இயக்கங்களாகப் பிரிந்திருந்தாலும், கொள்கையில் ஒன்றாக நிற்கிறோம்; நிற்போம். நம்மை ஒற்றுமைப்படுத்துவதே இந்தச் சொற்கள்தான். எதை விட்டுக்கொடுத்தாலும் இந்த ஐந்தையும் ஒருக்காலும் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம். அதனால்தான் ம.தி.மு.க. மேடையில் ஸ்டாலின் நின்றுக் கொண்டிருக்கிறான். தி.மு.க. மேடையில் அண்ணன் வைகோ நிற்கிறார். இது ஒருசிலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஏன் ஒருசிலருக்கு கோபம் வரலாம். ஒருசிலருக்கு ஆத்திரம் வரலாம். பொறாமையாகக்கூட இருக்கலாம். திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரை ஸ்டாலின் எப்படி நிரந்தர தளபதியோ - அதுபோல் அண்ணன் வைகோ அவர்கள் நிரந்தரப் போர்வாள். இதுதான் கலைஞருடைய கனவு. இதுதான் அறிஞர் அண்ணாவுடைய கனவு. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு திருச்சியிலே நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டுவிழா நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு நான் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னேன். போர்வாளும் தளபதியும் ஒரே மேடையிலே என்று சொன்னேன். மேடையிலே மட்டுமல்ல, களத்திலும் ஒன்றாகத்தான் நாங்கள் நின்றுக் கொண்டிருக்கிறோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்ணன் வைகோ அவர்கள் கோபாலபுரத்திற்கு வந்தார்கள். உடல் நலிவுற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தலைவர் கலைஞர் அவர்களைச் சந்திக்க - உடல்நலம் விசாரிக்க வந்தார்கள்.

அண்ணன் வைகோ அவர்களை தலைவர் கலைஞர் பார்க்கிறார். தலைவர் கலைஞர் அவர்களை அண்ணன் வைகோ அவர்கள் பார்க்கிறார்.

தலைவர் கலைஞர் அவர்கள் அண்ணன் வைகோ அவர்களை அடையாளம் கண்டு கொண்டார். ஒருவேளை வைகோ அவர்களின் முகத்தை மறந்திருந்தாலும், கருப்பு துண்டை ஒருகாலும் தலைவர் கலைஞர் அவர்கள் மறந்திட மாட்டார். தலைவர் கலைஞர் அவர்கள் புன்முறுவல் பூத்தார். அண்ணன் வைகோ அவர்கள் கண் கலங்கினார்கள். அப்படி கண்கலங்கிய நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் கரங்களை பற்றுகின்றார். அதன் பிறகு என்னுடைய கரங்களையும் அண்ணன் வைகோ அவர்கள் பற்றிக் கொள்கிறார்கள்.

தலைவர் கலைஞரிடத்தில் அண்ணன் வைகோ அவர்கள் சொல்கிறார், ‘உங்களுக்கு எப்படி நான் பக்கபலமாக இருந்தேனோ. அதேபோல் தம்பிக்கு - அதாவது எனக்கு - பக்கபலமாக இருப்பேன்’ என்று உணர்ச்சியோடு சொன்னார். தலைவர் கலைஞர் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி அண்ணன் வைகோ அவர்கள் இப்போது எனக்கு பக்கபலமாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

எனக்கென்றால் தனிப்பட்ட ஸ்டாலின் என்ற இந்த மனிதருக்கு அல்ல, ஒட்டுமொத்தமாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அவர் பக்கபலமாக இருக்கிறார். அதுதான் முக்கியம்!

இந்த இனத்திற்கு - மொழிக்கு - கலாச்சாரத்திற்கு - இந்த நாட்டிற்கு 'காவல் அரண்' திராவிட முன்னேற்றக் கழகம். என்பதை உணர்ந்து, அதற்கு பக்க துணையாக அண்ணன் வைகோ அவர்கள் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அவருக்கு என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை - வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இன்று சென்னையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாடு கம்பீரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. இதேநேரத்தில் திருவண்ணாமலையில் தி.மு.கழகத்தின் சார்பில் நடைபெறும் முப்பெரும் விழா நிகழ்ச்சிகள், காலை முதல் இரவு வரை தொடர்ந்து நடைபெற இருக்கின்றது. அண்ணன் வைகோ அவர்களின் வேண்டுகோள் என்றுகூட நான் சொல்ல மாட்டேன். அவருடைய கட்டளையை நான் ஏற்றுக்கொண்டு, இந்த மாநாட்டை நான் தொடங்கி வைக்கக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பினை பெற்று, முடித்துக்கொண்ட பிறகு வேகவேகமாக நான் திருவண்ணாமலைக்கு சென்றாக வேண்டும்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் அண்ணன் கணேசமூர்த்தி அவர்கள் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அந்தநேரத்தில் உதயசூரியன் சின்னத்தில்தான் அவர் போட்டியிட்டார். அப்போது அண்ணன் வைகோ அவர்கள், "சின்னம் முக்கியமல்ல; எண்ணம் தான் முக்கியம்" என்று சொல்லி முடிவெடுத்தார். அதுபோல், அண்ணன் வைகோ அவர்கள் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் நடத்திட வேண்டும். "தேர்தல் முடிந்த பிறகு நீங்கள் மாநிலங்களவைக்கு வாருங்கள்" என்று நாங்கள் முடிவெடுத்தோம். அதுதான் முக்கியம்.

எனவே இவை இரண்டும் நிறைவேற்றப்பட்டு அந்த செயல்பாடுகள் இன்றைக்கு செயல் வடிவத்திற்கு வந்து. அதன்மூலமாக பல செயல்பாடுகளை இன்றைக்கு செய்து கொண்டிருக்கின்றோம் என்பது உங்களுக்குத் தெரியும்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில், 39 இடங்களில் வென்று ஒரு மிகப்பெரிய சரித்திரச் சாதனை வெற்றியை நாம் பெற்றிருக்கின்றோம்.

"இந்தியாவே ஒருமாதிரி இருந்தாலும், தமிழகம் தனி மாதிரி" என்பதை நாம் நிரூபித்துக் காட்டி இருக்கின்றோம். தனி மாதிரியாக இருந்தாலும், தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சேர்த்து நாம்தான் இன்றைக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நாட்டில் இருக்கும் நிலைகளெல்லாம் என்னவென்று பார்க்கிறோம்?

பொருளாதார வளர்ச்சி என்ன கொடுமைக்கு ஆளாகியிருக்கின்றது? எந்தளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது?

புதிய நிறுவனங்கள் உருவாகவில்லை; செயல்பட்டுக் கொண்டிருந்த நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்த துவங்கி இருக்கின்றது; புதிய வேலை வாய்ப்புகள் கிடையாது; இருந்த வேலைவாய்ப்புகளும் பறிபோய்க் கொண்டிருக்கிறது; வேளாண் துறை ஒட்டுமொத்தமாக சிதைந்து கொண்டிருக்கின்றது.

காஷ்மீரில் ஜனநாயகம் பட்டப்பகலில் பறிக்கப்பட்டிருக்கிறது. சர்வாதிகாரம் எல்லா மட்டத்திலும் தலைதூக்க துவங்கி இருக்கிறது.

ஜனநாயக அமைப்புகள் எல்லாம் இன்றைக்கு கேலிக்கூத்தாக்கப் படுகின்றது. இவைகள் எல்லாம் தமிழகத்திற்கான பிரச்சனைகள் மட்டுமல்ல, இந்திய அளவில் இருக்கும் பிரச்சனைகள். எனவே இதனை எதிர்த்து ஜனநாயக முறையில் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் இன்றைக்கு நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழகம் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறது!

ரயில்வே துறையாக இருந்தாலும் அஞ்சல் துறையாக இருந்தாலும் திட்டமிட்டு தமிழ்மொழி புறக்கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் போராடி போராடிதான் நாம் உரிமையை பெற வேண்டிய கட்டாயத்திற்கு வந்திருக்கிறோம். நாம் லேசாக கண் அயர்ந்தால் இந்தியைத் திணித்து விடுவார்கள். கொஞ்சம் அசந்து விட்டால் தமிழையே புறக்கணித்து விடுவார்கள். இந்தியை எதிர்த்து இன்று நேற்றல்ல 1938-ல் இருந்து போராடி வருகிறோம். 1949-ல் போராடினோம். 1950-ல் போராட்டம் நடத்தினோம். அடுத்து 1953-ல், போராட்டம் நடத்தி இருக்கிறோம். 1963-ம் ஆண்டு போராடி இருக்கிறோம். 1965-ம் ஆண்டு ஒரு மிகப்பெரிய போராட்ட களத்தை இந்த நாட்டு மக்கள் பார்த்திருக்கிறார்கள். 1987-ல் சட்ட எரிப்பு போராட்டத்தை நடத்தி இருக்கிறோம்.

இப்போதும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு வந்திருக்கிறோமா ? இல்லையா ?

அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். எவ்வளவு எதிர்த்தாலும் இந்தியை திணிப்பது அவர்களின் எதேச்சதிகாரமாக தொடர்ந்து இருந்துகொண்டு இருக்கிறதா, இல்லையா?

மொழியை திணிப்பது மட்டுமல்ல, நீட் தேர்வின் மூலமாக மருத்துவக் கல்வியை சிதைத்து விட்டார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை மாநில ஆளுநர் தடுத்து வைத்து இருக்கிறார். காவிரியில் துரோகம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ போன்ற திட்டங்களால் தமிழ் மண்ணை இன்றைக்கு சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருபக்கம் கலாச்சாரத் தாக்குதல் இன்னொரு பக்கம் ரசாயன தாக்குதல் நடந்து கொண்டிருக்கின்றது.

இதனை மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கிறன. இவற்றைத் தடுக்க வேண்டிய ஜனநாயக கடமை நமக்கு இருக்கிறது!

அதற்கு அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் நடைபெறும் இந்த மாநாடு பயன்பட வேண்டும் என்று நான் உங்கள் எல்லோரையும் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார், "முல்லை காட்டில் எருமை புகுந்தது போல, நெற்களஞ்சியத்தில் புயல் புகுந்ததுபோல, சோலையில் சூறாவளி புகுந்தது போல, மலர் தோட்டத்தில் தீ சூழ்ந்தது போல, மத்திய மாநில அரசுகளால் மக்களின் வாழ்க்கை இன்றைக்கு சிதைந்துக் கொண்டிருக்கிறது".

இதற்காக பல போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புகிறோம். சட்டமன்றத்தில் குரல் எழுப்பி கொண்டிருக்கிறோம். மக்களைத் திரட்டி போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறக்கூடிய ஒரு சூழ்நிலை வந்து இருக்கிறதா, இல்லையா? இந்தப் போராட்டங்களை நாம் கைகோர்த்து நடத்தியாக வேண்டும்.

இந்தப் போராட்டத்தின் முன்னணி போர்வாள் தான் இங்கு அமர்ந்திருக்கும் அண்ணன் வைகோ அவர்கள்.

நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி, யாருக்கும் பயப்படாமல், போராட்டத்தை முன்னெடுக்க கூடியவர்தான் அண்ணன் வைகோ அவர்கள். அவருக்கு யாரும் கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை.

அவருடைய சகோதரன் என்ற முறையில் நான் உரிமையோடு சொல்கிறேன், "கொஞ்சம் உடல்நலத்தை பேணி பாதுகாத்துக் கொள்ளுங்கள்"

என்னுடைய வேண்டுகோளாக மட்டுமல்ல, இதனை கண்டிப்போடு நான் சொல்கிறேன், உரிமையோடு நான் சொல்கிறேன். அந்த உரிமை எனக்கு இருக்கிறது என்ற நம்பிக்கையில் சொல்கிறேன். மதிமுக தொண்டர்களாக இங்கே அமர்ந்திருக்கும் உங்களுக்கும் அந்த உணர்வுதான் இருக்கும். அதை யாராலும் மறுக்க முடியுமா ?  எனவே, நான் சொல்கிறேன் அண்ணன் வைகோ அவர்களே, உடல்நலத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள். உங்களுக்காக அல்ல; உங்கள் குடும்பத்திற்காக அல்ல; இந்த இனத்தினுடைய - மொழியினுடைய - நாட்டினுடைய நலத்தை பேணி பாதுகாத்திட வேண்டும், அவருடைய ஆரோக்கியத்தில்தான் தமிழ்ப் பேரினத்தின் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது என்ற உணர்வோடு நான் சொல்கிறேன்.

போர்க்களம் தயாராகிக் கொண்டிருக்கிறது. தயாராகிக் கொண்டிருக்கும் போர்க்களத்திற்கு அத்தனை பேரும் புறப்படுவதற்கு தயாராக இருக்க வேண்டும். அதுதான் அறிஞர் அண்ணா பிறந்தநாள் கொண்டாடக் கூடிய இந்த நல்ல நாளில் நாம் எடுக்கக்கூடிய உறுதி மொழியாக இருக்க வேண்டும்.

பேரறிஞர் அண்ணாவின் புகழ் வாழ்க!

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை தீவிரம் - அமைச்சர் உதயகுமார்

பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம் - சென்னையில் அமைச்சர் உதயகுமார் பேட்டி.


புயல் பாதிக்கும் 4399 இடங்களில் மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு  மருத்துவமனைகளில் தேவையான உயிர்காக்கும் இயந்திரங்கள் தயார் நிலை உள்ளது மருத்துவமனைகளுக்கு தேவையான மின் வசதிகளும் செய்து தரப்படும் என அமைச்சர் உறுதி. டெல்டா பகுதிகளில் நிரந்தர புயல் பாதிப்பு மையங்கள் அமைக்கபட்டு உள்ளன, வெள்ளத்தில் கால்நடைகள மீட்பதற்கு 8624 மீட்பாளர்கள் நியமனம், உலகளாவிய அளவில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை செயல்பாட்டுக்கு பாராட்டு ஏரிகளை தூர்வாருதல், நீர்நிலைகளை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


சனி, 14 செப்டம்பர், 2019

இது இந்தியா.. ‘இந்தி'-யா அல்ல! - மு.க.ஸ்டாலின்

இது இந்தியா.. ‘இந்தி'-யா அல்ல!

உள்துறை அமைச்சர் தமது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

- மு.க.ஸ்டாலின் அறிக்கை.
(தலைவர், திமுக)


நமது அரசியலமைப்புச் சட்டத்தின் தொடக்கத்திலேயே இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் எனத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. வேறுபாடுகள் நிறைந்த மாநிலங்கள் ஒன்றி இணைந்திருக்கும் இந்த பன்முகத்தன்மைதான் இந்தியாவின் மிகப்பெரிய வலிமை. ‘வேற்றுமையில் ஒற்றுமை’என்பதே இந்தியாவின் பண்பாட்டு அடையாளம். பல்வேறு காரணங்களின் அடிப்படையிலான உள்நோக்கத்துடன், இந்த அடையாளத்தை சிதைத்து அழித்திடும் நடவடிக்கைகளை மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த நாள்முதலே மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள், “நாடு முழுமைக்கும் ஒரு மொழி என்பது மிகவும் அவசியம். அதுதான் உலகளவில் இந்தியாவிற்கான அடையாளத்தைத் தரும். அதிக மக்களால் பேசப்படும் இந்திமொழிதான் அந்த அடையாளத்திற்குரிய மொழி’எனக் கருத்து வெளியிட்டிருப்பது இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்தி பேசாத மக்கள் அனைவரையும் ‘இரண்டாம் தர குடிமக்களாக்கும்’ முயற்சியாகவே தெரிகிறது.

அதிகம் பேசப்படுவது இந்தி என்பதால் அதுதான் தேசிய மொழி என்றால், இந்தியாவில் அதிகம் பறக்கும் காக்கைதானே இந்தியாவின் தேசியப் பறவையாக இருந்திருக்க வேண்டும் என அன்றே கேட்டவர் நம் தி.மு.க.வின் நிறுவனர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அன்று தொடங்கி இன்றுவரை இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, தாய்த் தமிழைக் காத்து, பிற மாநில மொழிகளுக்கும் அரணாக விளங்கி வருகிறது தி.மு.கழகம்.

அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் சமத்துவத்துடன் பேணப்படவேண்டிய நிலையில், அதில் ஒரு மொழியான இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம் என்ற வகையில், இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில், நாட்டின் உள்துறை அமைச்சரே தன் கருத்தை வெளியிட்டிருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல; கடும் கண்டனத்திற்குரியதுமாகும்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தனது கருத்தை மறுபரிசீலனை செய்வது, இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் உகந்ததாக இருக்கும் எனக் கருதுகிறேன். எனவே அந்தக் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். பிரதமர் மோடி அவர்களும் இது குறித்து தன்னுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனின், தி.மு.கழகம் இன்னொரு மொழிப்போருக்கு ஆயத்தமாகும். தமிழ்நாட்டில் உள்ள நட்பு சக்திகள் மட்டுமின்றி, இந்தி ஆதிக்கத்தால் உரிமைகளை இழக்கும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களையும் இணைத்து ஜனநாயகப் போர்க்களத்தை சந்திக்க தி.மு.கழகம் தயங்காது.

குடிமைப்பணி, ரயில்வே, அஞ்சல்துறை, வங்கிப்பணி என ஒவ்வொன்றாக இந்தியைத் திணிக்க முயற்சித்து, இப்போது இந்தியா என்கிற ஒருமைப்பாடு நிறைந்த நாட்டுக்கு வேட்டு வைக்கும் வகையில், இந்திதான் இந்தியாவின் அடையாளம் என்கிற குரல் ஒலிக்கிறது. நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க தி.மு.கழகம் தயாராக இருக்கிறது; இது இந்தியா. ‘இந்தி’யா அல்ல என எச்சரிக்கிறது.

அமித்ஷா கருத்தை அவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில், அமித்ஷா அவர்களின் கருத்துக்கான எதிர்வினை குறித்து முடிவெடுக்கப்படும்.
 -  மு.க.ஸ்டாலின் பேட்டி
(தலைவர், திமுக)

இந்தியாவின் அடையாளமாக இந்தி ஒருபோதும் திகழ முடியாது - DR. ராமதாஸ்

ஒரே மொழியாக இந்தியை அடையாளப்படுத்த வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்து ராமதாஸ் எதிர்ப்பு.



இந்தியாவின் ஒற்றை மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து தவறானது. இந்தி மொழி நாளில் இந்தியை உயர்த்திப் பேச அவருக்கு உரிமை உண்டு. ஆனால், பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது!

நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூடாமல் விபத்துகளை குறைக்கும் முயற்சி ஈடேறாது! - DR. ராமதாஸ்

நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூடாமல்
விபத்துகளை குறைக்கும் முயற்சி ஈடேறாது!
- DR. ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர்,பாமக)


இந்தியாவில் சாலைவிபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்கும் நோக்கத்துடன் மோட்டார் வாகனச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்கள் குறித்தும், அதன் விளைவாக போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது குறித்தும் நாடு முழுவதும் விவாதங்கள் எழுந்துள்ளன. விபத்துகளுக்கு காரணமான மிகப்பெரிய ஓட்டையை அடைக்காமல்,

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

உண்மையைச் சொல்லணும்னு நான் நினைக்கிறேன் ; கேஸ் போடுவோம்'னு மிரட்டுறாங்க - மதுமிதா

உண்மையைச் சொல்லணும்னு நான் நினைக்கிறேன் கேஸ் போடுவோம்'னு மிரட்டுறாங்க - மதுமிதா 


பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியாக மதுமிதா நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், ஆனால் தொகுப்பாளர் கமல்ஹாசனும் கூட அதனை கண்டிக்கவில்லை எனவும் தபால் மூலம் அவர் புகார் அளித்துள்ளார். தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி 56-வது நாளில் வலுக்கட்டாயமாக போட்டியிலிருந்து வெளியேற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில்  'ஒண்ணு நீ இங்க இருக்கணும்.. இல்லாட்டி நாங்க இருக்கணும் டீ' எட்டு போட்டியாளர்கள் தன்னை கட்டாயப்படுத்தி போட்டியிலிருந்து வெளியேற்றியதாகவும். ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கத்தியால் தன் கையை அறுத்துக் கொண்டார். விதியை மீறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஷோவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  

அந்த எட்டு பேர்  தந்த மன அழுத்தத்தை மற்றும் நடந்த உண்மையைச் சொல்லணும்னு நான் நினைக்கிறேன். அதனாலதான் 'ஒண்ணு நீங்க பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு பண்ணுங்க, இல்லை நானே பேட்டி தாரேன். 

ஆனால் நிகழ்ச்சி தொடர்பா மதுமிதா வாழ்நாள் முழுவதும் எங்கயுமே பேட்டி தரக்கூடாதுன்னு விஜய் டிவி நிர்வாகத்துல இருந்து மெயில் அனுப்புறாங்க. நீங்க பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி  எங்கேயும் எதையும் பேசக்கூடாது. மீறினால் அக்ரிமென்ட் படி கேஸ் போடுவோம்னு மிரட்டுறாங்க. ஆனா, நிகழ்ச்சியில் கலந்துகிட்டதுக்காக டிவி நிர்வாகம் எனக்குப் பேசின சம்பளம் முழுசையும் இப்போ கொடுத்திட்டாங்க. ஆனால் வாயைக் கட்டிப் போட்டு வச்சிருக்காங்க.

நடிகை இலியானாவிடம் பலான கேள்வி கேட்ட ரசிகர்

நடிகை இலியானாவிடம் பலான கேள்வி கேட்ட ரசிகர் 


பிரபல நடிகையாக வலம் வந்த இலியானா. நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் . தெலுங்கு மற்றும் தமிழில்  இந்தியில் என பல வெற்றிப் படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இலியானாவும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூவ் நீபோனும் காதலித்து வந்தனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. சமூகவலைதளத்தில் தங்கள் தங்களை ஒருவருக்கு ஒருவர் பின் தொடர்வதை நிறுத்தினர். ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படத்தை நீக்கி உள்ளனர்.

சமூக வலைதளத்தில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருப்பர்  இலியானா தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது, ரசிகர் ஒருவர் மாமேன் நான் இருக்கும்போது நீ ஏன் புள்ள அதுக்குள்ள உன்னுடைய கன்னித்தன்மையை இழந்துட்டே?. அதற்கு பதிலளித்த நடிகை இலியானா, “ஏன் இதில் எல்லாம் மூக்கை நுழைக்கிறீர்கள். என்னிடம் நீங்கள் கேட்ட கேள்வியை உங்களின் அம்மாவிடம்  கேளு ” என்று காட்டமாக பதிலளித்துள்ளார். தன்னிடம் வரம்பு மீறி கேள்வி கேட்ட ரசிகர் நடிகை இலியானா பதிலடி கொடுத்துள்ளார்.



வியாழன், 5 செப்டம்பர், 2019

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண கணக்கீடு சுரண்டலின் உச்சம்! - DR.ராமதாஸ்

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் 
கட்டண கணக்கீடு சுரண்டலின் உச்சம்!
- DR.ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர்,பாமக)


தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது. சுங்கக் கட்டணம் நீண்ட காலமாகவும், அளவுக்கு அதிகமாகவும் வசூலிக்கப்படுவதற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ள காரணங்கள், கந்து வட்டியை நியாயப்படுத்தும் வகையில் தான் அமைந்துள்ளன.