புதன், 9 டிசம்பர், 2020

தமிழ்நாட்டில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் ஒன்றில் கூட வன்னியர்கள் துணைவேந்தராக இல்லை. தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமுதாயமாக வன்னியர்கள் இருந்தாலும் இது தான் நிலை.- DR.S.ராமதாஸ்

இளைஞர்களின் சிந்தனைக்காக...
வன்னியர் துணைவேந்தர் ஆன வரலாறு! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் உயர்கல்வி நிறுவனங்கள் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டன. ஆனால், அந்த நிறுவனங்களில் துணைவேந்தராகும் வாய்ப்பு வன்னிய கல்வியாளர்களுக்கு பெரும் போராட்டத்திற்குப் பிறகு 21-ஆம் நூற்றாண்டு பிறக்கவிருந்த தருணத்தில் தான் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் மிக மூத்த பல்கலைக்கழகமான சென்னை பல்கலைக்கழகம் 1857-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதன் நிர்வாகம் 1950-ஆம் ஆண்டில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விடட்து. ஆனால், இந்தியா விடுதலை அடைந்து 52 ஆண்டுகள் ஆன பிறகும் 1999-ஆம் ஆண்டு வரை வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த எவரும் அந்த பல்கலைக்கழகத்திலோ அல்லது தமிழகத்தின் பிற பல்கலைக்கழகத்திலோ துணை வேந்தராக நியமிக்கப்பட்டதில்லை. அப்போது சென்னை பல்கலைக் கழகத்திற்கு புதிய துணைவேந்தர் ஒருவர் நியமிக்கப்படவிருப்பதை அறிந்த நான், அப்போதைய முதலமைச்சர் கலைஞரைத் தொடர்பு கொண்டு சென்னை பல்கலைக்கழகத்திற்கு வன்னியர் ஒருவரை துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தினேன். அதை கலைஞரும் ஏற்றுக் கொண்டார்.

அதன்படி தான் 1999-ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த முனைவர் பொற்கோ நியமிக்கப்பட்டார். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் சென்னை மாகாணத்தில் 1921-ஆம் ஆண்டிலிருந்தே இட ஒதுக்கீட்டு முறை நடைமுறையில் இருந்து வந்தது. ஆனாலும் கூட சென்னை பல்கலைக்கழகத்தில் 2000-ஆவது ஆண்டு வரை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்தது. சென்னை பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீட்டை அறிமுகம் செய்ய வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினேன். ஆனாலும், அதனால் எந்த பயனும் கிடைக்காத நிலையில், நமது முயற்சியால் முனைவர் பொற்கோ துணை வேந்தராக வந்த பிறகு 2002-ஆம் ஆண்டில் தான்,  163 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் வன்னியர் ஒருவர் கடைசியாக துணைவேந்தராக நியமிக்கப்பட்டது 2012-ஆம் ஆண்டில் தான். தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தராக ஜி.விஸ்வநாதன் 17.07.2012-இல் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு கடந்த 8 ஆண்டுகளாக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த எவரும் எந்தப் பலகலைக்கழகத்திலும் துணைவேந்தராக நியமிக்கப்படவில்லை. இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் ஒன்றில் கூட வன்னியர்கள் துணைவேந்தராக இல்லை. தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமுதாயமாக வன்னியர்கள் இருந்தாலும் இது தான் நிலை.

வன்னியர்களின் போராட்டத்தை நினைத்து வயிற்றெரிச்சலில் துடிக்கும் சக்திகளுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக