சனி, 23 ஏப்ரல், 2022

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

 


தேசிய பஞ்சாயத்து ராஜ் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். 2022 ஏப்ரல் 24 அன்று காலை 11:30 மணிக்கு நாட்டில் உள்ள அனைத்து கிராம சபைகளுடன் அவர் உரையாற்றுவார். சம்பா மாவட்டத்தில் உள்ள பாலி பஞ்சாயத்துக்கும் அவர் செல்லவிருக்கிறார். இந்தப் பயணத்தின்போது ரூ. 20,000 கோடி மதிப்பிலான பலவகை வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கவும் அடிக்கல் நாட்டவும் உள்ளார். அம்ரித் சரோவர் திட்டத்தையும் அவர் தொடங்கி வைப்பார். இதன் பின்னர் மாலை 5 மணி அளவில் மும்பையில் மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பார். இங்கு அவர் முதலாவது லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருதினைப் பெற்றுக் கொள்வார்.

ஜம்மு-காஷ்மீரில் பிரதமர்

ரூ 3 ஆயிரத்து 500 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வாணி கால் குவாசி கண்ட் சாலையில் கட்டப்பட்டுள்ள சுரங்க பாதையையும் பிரதமர் திறந்து வைப்பார் 8.45 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை வாணி கால் குவாசி கண்டு இடையேயான தூரத்தை 16 கிலோ மீட்டர் அளவுக்கு உழைக்கும் மேலும் பயண நேரமும் சுமார் ஒன்றரை மணி நேரம் குறையும் இது இரட்டை சுரங்கப்பாதை யாகும் ஒன்று இரு வழிகளிலும் பயணம் செய்வதற்கான து இவற்றில் 500 ஒவ்வொரு 100 மீட்டருக்கும் மீட்டர் தூரத்திலும் ஒன்றை ஒன்று கடந்து செல்லும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட சாலைகளாக இருக்கும் பராமரிப்பு மற்றும் அவசரகால வெளியிட்டதற்காக இந்த சுரங்கப்பாதை ஜம்மு விற்கும் காஷ்மீருக்கும் இடையேயான இடையே அனைத்து பருவத்திலும் தொடர்பை ஏற்படுத்த உதவும் இந்த இரண்டு பகுதிகளையும் நெருக்கமாக கொண்டு வரும்

ரூ 7,500 கோடி செலவில் கட்டப்படவுள்ள தில்லி - அமிர்தசரஸ் - கத்ரா என மூன்று விரைவுசாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இவை தில்லி - அமிர்தசரஸ் - கத்ரா ஆறுவழி விரைவுப்

பாதைக்கான நான்கு வழிப் பாதை இணைப்பாக இருக்கும்

தேசிய நெடுஞ்சாலை 44ல் உள்ள பல்சுவாவிலிருந்து குர்ஹா பைல்தரன், ஹிராநகர்; குர்ஹா பைல்தரன், ஹிராநகரிலிருந்து ஜாக், விஜய்பூர்; ஜாக், விஜய்பூரிலிருந்து குஞ்வினி, ஜம்மு என இருக்கும் இந்தப் பாதை ஜம்மு விமானநிலையத்தை இணைக்கும்.

ராட்லே மற்றும் க்வார் புனல் மின் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். கிஷ்த்வார் மாவட்டத்தின் செனாப் ஆற்றின் குறுக்கே ரூ. 5,300 கோடி செலவில் 850 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட ராட்லே புனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.

கிஷ்த்வார் மாவட்டத்தின் செனாப் ஆற்றின் குறுக்கே ரூ. 4,500 கோடி செலவில் 540 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட க்வார் புனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பிராந்தியத்தின் மின் தேவைகளை எதிர்கொள்ள இந்த இரு திட்டங்களும் உதவும்.

பாலியில் 500 கிலோ வாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டத்தையும் அவர் தொடங்கி வைப்பார். இதன் மூலம் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத முதலாவது பஞ்சாயத்தாக இது மாறியிருக்கிறது.

ஸ்வமிதா அட்டைகளைப் பயனாளிகளுக்குப் பிரதமர் வழங்கவிருக்கிறார். பல்வேறு வகைகளில் சாதனைகள் புரிந்ததற்கு விருதுகளை வென்றுள்ள பஞ்சாயத்துகளுக்குப் பரிசுத் தொகையை தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று அவர் பரிவர்த்தனை செய்துவைப்பார். இந்தப் பகுதியின் கிராமப்புற பாரம்பரியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இன்டாக் புகைப்பட காட்சிக் கூடத்திற்கும் செல்லவிருக்கும் பிரதமர், ஊரகத் தொழில்துறை அடிப்படையில் மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ள நோக்கியா ஸ்மார்ட்பூருக்கும் செல்வார்.

நீர்நிலைகள் புனரமைப்பு செய்யப்படுவதை உறுதி செய்யும் விதமாக ஜம்மு-காஷ்மீர் பயணத்தின்போது அமிர்த சரோவர் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை உருவாக்குதல் அல்லது புனரமைத்தல் என்பதை இது நோக்கமாகக் கொண்டது. இது சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழாவை நோக்கிய அரசின் மற்றொரு சிறப்பு திட்டமாகும்.

மும்பையில் பிற்பகல் ஐந்து மணி அளவில் மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பார். இந்த நிகழ்ச்சியில் பிரதமருக்கு முதலாவது லதா மங்கேஷ்கர் விருது வழங்கப்படும். பாரதரத்னா லதா மங்கேஷ்கர் நினைவாக நிறுவப்பட்டுள்ள இந்த விருது தேசக் கட்டுமானத்திற்கு தலைசிறந்த பங்களிப்பு செய்த தனி நபர் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக வழங்கப்படும்.


வீட்டு வசதி வாரிய வீடுகள்: தனியாருடன் சேர்ந்து கட்டினால் ஏழைகளுக்கு கிடைக்காது! - DR.S.ராமதாஸ்

 வீட்டு வசதி வாரிய வீடுகள்: தனியாருடன்

சேர்ந்து கட்டினால் ஏழைகளுக்கு கிடைக்காது! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் இனி தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு முயற்சியில் கட்டப்படும்; கூட்டு முயற்சி ஒப்பந்தத்தின்படி வீட்டு வசதி வாரியத்திற்கு கிடைக்கும் வீடுகளைக் கூட தனியார் கட்டுமான நிறுவனங்களிடம் விற்பனை செய்ய விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்திருக்கிறார். இந்தத்  திட்டம் செயல் வடிவம் பெற்றால் வீட்டு வசதி வாரியம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே சிதைந்து விடும்.

தமிழக சட்டப்பேரவையில் வீட்டு வசதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய அவர்,‘‘வீட்டு வசதி வாரிய நிலங்களை தனியார் கட்டுமான நிறுவனங்களிடம் கொடுத்து கூட்டு முயற்சியில் வீடுகள் கட்டப்படும். அதற்காக தனியார் நிறுவனங்களுக்கு பணம் தரத் தேவையில்லை. மாறாக தனியார் நிறுவனங்கள் அவர்களுக்கான வீடுகளை எடுத்துக் கொண்டு மீதமுள்ள வீடுகளைத் தருவார்கள். அதை விற்று பணமாக்கினால் போதுமானது’’ என்று கூறியிருக்கிறார்.

அமைச்சர் முன்மொழிந்துள்ள திட்டம் வீட்டு வசதி வாரியத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை விட  மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். அமைச்சர் தெரிவித்துள்ள திட்டத்தை செயல்படுத்தினால் வீட்டு வசதி வாரியத்தின் செயல்பாடுகள் எளிமையாகும்; வீட்டு வசதி வாரியத்திற்கு லாபம் கிடைக்கும்; ஆனால், வீட்டு வசதி வாரியம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அது நிறைவேறாது; மாறாக வீட்டு வசதி வாரியமும் ஒரு வீட்டு வணிக நிறுவனமாக மாறி விடும். இது தேவையில்லை.

இந்தியா விடுதலை அடைந்த ஆண்டிலேயே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடங்கப்பட்டு விட்டது. வீட்டு வசதி வாரியத்தின் இணையதளத்தில், அதன் நோக்கமாக, ‘‘வீட்டுவசதி தேவைகளை பூர்த்தி செய்வதில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ‘அனைவருக்கும் வீடு’ என்ற சிறந்த நோக்கத்துடன் முக்கிய பங்கு வகிக்கிறது. கட்டுமானத்தில் சமீபத்திய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொதுமக்களின் தேவைகளின் அடிப்படையில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவு (EWS), குறைந்த வருவாய் பிரிவு (LIG), மத்திய வருவாய் பிரிவு (MIG) மற்றும் உயர் வருவாய் பிரிவினருக்கு (HIG) வீடுகள் வழங்கிட சிறந்த நோக்கத்துடன் செயல்படுகின்றது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் வீடு என்ற இலக்கை இதுவரை எட்ட முடியவில்லை என்றாலும் கூட, அந்த இலக்கை நோக்கி வீட்டு வசதி வாரியம் பயணிக்கிறது என்பதை மறுக்க முடியாது. வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் ஏழைகளாலும் வீடுகள் வாங்க முடிகிறது. எடுத்துக்காட்டாக சென்னையின் பல பகுதிகளில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒரு சதுர அடி ரூ.15,000 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டால், வீட்டு வசதி வாரிய வீடுகள் ரூ.7,000 முதல் ரூ.8,000 என்ற அளவில், பாதி விலையில் விற்கப்படுகின்றன. வீட்டு வசதி வாரிய வீடுகளில் வாகன நிறுத்தம் போதிய அளவில் இல்லாமை உள்ளிட்ட சில வசதிகள் குறைவாக இருந்தாலும் கூட கொடுக்கும் பணத்திற்கு அதிக மதிப்பாக உள்ளது. ஏழை, நடுத்தர மக்களின் வீட்டுக் கனவை நிறைவேற்றுகிறது.

 கூட்டு முயற்சியில் தனியாருடன் இணைந்து கட்டப்பட்டால் வீடுகளில் சில வசதிகள் கூடுதலாக இருக்கலாம். ஆனால், அந்த வீடுகளின் விலைகள் ஏழைகளால் வாங்க முடியாத அளவுக்கு விண்ணைத் தொடும் உயரத்தில் இருக்கும். சென்னை உள்ளிட்ட நகரங்களில் தனியார் நிறுவனங்களின் வீடுகளை  உயர்வகுப்பினரால் மட்டுமே வாங்க முடியும். கூட்டு முயற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஏழைகளின் வீட்டுக் கனவு கலைந்து விடும். அதிலும் குறிப்பாக, நிலம் கொடுத்ததற்கு ஈடாக வீட்டு வசதி வாரியத்திற்கு வழங்கப்படும் வீடுகளையும் கட்டுமான நிறுவனத்திடமே வாரியம் விற்கும் விதி செயல்படுத்தப்பட்டால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சென்னை போன்ற மாநகரங்களில் வீடு வாங்குவதை மறந்து விடலாம்.

தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் வீடுகளை கட்டுவதற்காக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ள காரணத்தை ஏற்க முடியாது. வீட்டு வசதி வாரிய வீடுகளை ஒப்பந்ததாரர்கள் மூலம் தரமாக கட்ட முடியவில்லை என்பதால் தான், கூட்டு முயற்சியில் வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் தலைசிறந்த பொறியாளர்கள் வீட்டு வசதி வாரியத்தில் உள்ளனர். அவர்களை வைத்துக் கொண்டு தனியாருக்கு இணையான தரத்துடன் வீடுகளை கட்ட முடியவில்லை என்று கூறுவது நம்மை நாமே குறைத்து மதிப்பிடுவதாகும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நினைத்தால் தனியார் நிறுவனங்களை விட தரமான, அழகான வீடுகளை, குறைந்த செலவில் கட்டித் தர முடியும்.

எனவே, தனியார்துறை கூட்டு முயற்சியில் வீட்டு வசதி வாரிய வீடுகளை கட்டும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். வீட்டு வசதி வாரியமே அதன் மேற்பார்வையில் தரமான வீடுகளைக் கட்டி, ஏழை & நடுத்தர மக்களுக்கு கட்டுபடியாகும் விலையில் தொடர்ந்து வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.


திங்கள், 18 ஏப்ரல், 2022

டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வை ஆங்கிலத்தில் மட்டும் நடத்துவதா? - DR. அன்புமணி ராமதாஸ்



 டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வை

ஆங்கிலத்தில் மட்டும் நடத்துவதா? - DR.அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வரும் ஜூன் 19-ஆம் தேதி நடத்தப்படவிருக்கும்  குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித் தேர்வின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்ட 5 பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் மட்டும் தான் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழை தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில் அம்மொழியை புறக்கணித்து விட்டு போட்டித் தேர்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது.

மதிப்பு அடிப்படையிலான நெறிமுறை சார்ந்த அரசியலுக்கான தேவையைக் குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்


 இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், வலுப்படுத்தவும் மதிப்பு அடிப்படையிலான நெறிமுறை சார்ந்த அரசியலுக்கான தேவையைக் குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திரப்பிரதேசத்தின் கிருஷ்ண மாவட்ட பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் மறைந்த திரு.பின்னாமநேனி கோடீஸ்வரராவின் உருவச்சிலையை மசூலிப்பட்டினத்தில் திறந்து வைத்து பேசிய அவர், பொது வாழ்க்கையில் தரம் தாழ்ந்து வருவது குறித்து கவலை தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள் தங்களின் அரசியல் எதிர்ப்பாளர்களை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவதை நிறுத்த வேண்டுமென்று திரு.நாயுடு வலியுறுத்தினார். முக்கியமான தேச விஷயங்களின் மீது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பொதுக் கருத்தை உருவாக்குவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். வளர்ந்து வரும் அரசியல்வாதிகள் பல்வேறு விஷயங்கள் மீது கோட்பாட்டு அடிப்படையிலான நிலையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மத்திய அரசு உத்தேசித்துள்ளவாறு ஜி.எஸ்.டி வரி விகிதம் உயர்த்தப்பட்டால் அது மக்களால் தாங்க முடியாத விலைவாசி உயர்வுக்கும், தொழில்துறை வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும்.- DR.S.ராமதாஸ்

 ஜி.எஸ்.டி வரிகள் உயர்த்தப்பட்டால் மக்கள்

பாதிக்கப்படுவர்: தொழில் வீழ்ச்சியடையும்! - DR.S.ராமதாஸ்

இந்தியாவில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மத்திய அரசு உத்தேசித்துள்ளவாறு ஜி.எஸ்.டி வரி விகிதம் உயர்த்தப்பட்டால் அது மக்களால் தாங்க முடியாத விலைவாசி உயர்வுக்கும், தொழில்துறை வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும்.

மத்திய அமைச்சர் எல். முருகன் தேவையில்லாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம்! - ஆர்.எஸ்.பாரதி எம்.பி


 "மத்திய அமைச்சர் எல். முருகன் தேவையில்லாமல்,  திராவிட முன்னேற்றக் கழகத்தை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம்!"

- திமுக அமைப்புச் செயலாளர் திரு ஆர்.எஸ்.பாரதி எம்.பி., அவர்கள் எச்சரிக்கை.

பொறுப்புள்ள பதவியில் அமர்ந்துள்ள எல்.முருகன் பொறுப்பற்ற முறையில் செய்திகள் வெளியிடுவது அவருடைய அறியாமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஏற்கனவே கடந்த  80 ஆண்டுகாலத்திற்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்வாளாக இயங்கி வரும் முரசொலி அறக்கட்டளை கட்டிடம் குறித்து, வேலூரில் இவர் பேசிய அவதூறு பேச்சு குறித்து, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கில், இவர் வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென்று, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 

ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் “உடான்“ திட்டம், தலைசிறந்த பொது நிர்வாகத்திற்கான பிரதமரின் விருதுக்கு தேர்வு


 மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின், பிராந்திய இணைப்புக்கான முன்னோடித் திட்டமான உடான், 2020-ம் ஆண்டுக்கான பொது நிர்வாகப் பிரிவில் சிறந்த திட்டத்திற்கான பிரதமரின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.   “மத்திய அரசின் புதுமைக் கண்டுபிடிப்பு(பொது)“  பிரிவின்கீழ் இந்த விருது வழங்கப்பட உள்ளது.  

மத்திய / மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் தலைசிறந்த மற்றும் புதுமையான திட்டங்களை அங்கீகரித்து, பெருமைப்படுத்தும் விதமாக, மத்திய அரசு, இந்த விருதை ஏற்படுத்தியுள்ளது. இலக்குகளை எட்டி சாதனை படைப்பது மட்டுமின்றி,  நல்லாட்சி,  தரமிக்க சாதனைகள், தொலைதூர இணைப்பு போன்றவற்றை ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது உருவாக்கப்ட்டுள்ளது.  இந்த விருது, ஒரு சுழற்கோப்பை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.10லட்சம் ஊக்கத்தொகை ஆகியவற்றைக் கொண்டதாகம்.   

புதன், 13 ஏப்ரல், 2022

கெயில் அத்துமீறலால் உழவர் தற்கொலை: குழாய் பாதையை தடுத்து நிறுத்துங்கள் ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்! - DR.அன்புமணி ராமதாஸ்

 கெயில் அத்துமீறலால் உழவர் தற்கொலை: குழாய் பாதையை தடுத்து நிறுத்துங்கள் ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்!

 - DR.அன்புமணி ராமதாஸ்

தருமபுரி மாவட்டம் கரியப்பன அள்ளி கிராமத்தில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலையும், உழவர்களின் எதிர்ப்பையும் மீறி, எரிவாயு குழாய் பாதை அமைப்பதற்கான பணிகளில் கெயில் நிறுவன அதிகாரிகள் முயன்றதால், பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதையறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். கெயில் நிறுவன அதிகாரிகளின் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

சனி, 9 ஏப்ரல், 2022

தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் காக்கும் வகையில் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- DR.அன்புமணி ராமதாஸ்

 அமைதி, சட்டம்-ஒழுங்கைக் காக்க மதுக்கடைகளை மூட வேண்டும்!

மயிலாடுதுறையில் சட்ட விரோதமாக டாஸ்மாக் மது விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். குடிகளைக் கெடுக்கும் குடி சட்டம் - ஒழுங்கையும், அமைதியையும் சிதைக்கத் தொடங்கியிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

காவிரி பாசன மாவட்டங்களின் முக்கிய நகரங்களில் ஒன்றான மயிலாடுதுறை பழைய பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு அருகில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப் பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவருக்கும், தமிழ்மணி என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அதில் ஜீவானந்தத்தை தமிழ்மணி அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

பா.ஜ.க. ஆட்சி அமைந்து எட்டு ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றனர். - கே.எஸ்.அழகிரி


 பா.ஜ.க. ஆட்சி அமைந்து எட்டு ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றனர். இதனால் விலைவாசி உயர்வு, விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பு, தொழில் உற்பத்தி முடக்கம், வேலை இழப்பு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து கடுமையான பாதிப்புகளுக்கு மக்கள் உள்ளாகி வருகிறார்கள். மேலும் வறுமையில் வாடுகிற மக்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. 

குழந்தைகள் விரும்பும் கலைகளைக் கற்க பள்ளிகளும், பெற்றோரும் ஊக்குவிக்க வேண்டும்.- திரு எம்.வெங்கையா நாயுடு


 இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவிக்க, குழந்தைகள் தேர்வு செய்யும் எந்தவித கலையையும் கற்பதற்கு அவர்களைப் பெற்றோரும், பள்ளிகளும் ஊக்குவிக்க வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

62-வது தேசிய கண்காட்சி கலை விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, சங்கீத நாடக அகாடமி மற்றும் லலித் கலா அகாடமி விருதுகளை வழங்கி குடியரசு துணைத்தலைவர் உரையாற்றினார்.

மேல்நாட்டு கலாச்சாரம் காரணமாக நமது பாரம்பரியமான நாட்டுப்புறக் கலைகள் மறைந்து வருவதாக குடியரசு துணைத்தலைவர் கூறினார். இத்தகைய கலைகளுக்கு அரசுகளும், சமுதாயமும் புத்துயிர் ஊட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்திதான் இந்தியா; அமித்ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாட்டை தகர்த்துவிடும் - வைகோ எச்சரிக்கை

 இந்திதான் இந்தியா; அமித்ஷாவின் கருத்து

இந்திய ஒருமைப்பாட்டை தகர்த்துவிடும் - வைகோ எச்சரிக்கை

டெல்லியில் ஏப்ரல் -8 ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத்தின் 37 ஆவது அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில், “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். பல மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்து இருக்கிறார்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

வளர்ச்சி என்பதற்கு வரி தேவை. அது ‘கடிதோச்சி மெல் எறிக’ என்பதாக அமைய தமிழ்நாடு அரசும் கவனமாக இருப்பது அவசியம்! - கி.வீரமணி

15 ஆம் நிதிக் குழு தமிழ்நாட்டுக்கு நிதி தரவேண்டும் என்றால் - 
சொத்து வரியை உயர்த்தவேண்டியது அவசியம்!

பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் எதிர்க்கட்சிகள் ஆட்டுவதா?

தமிழ்நாட்டில் கடந்த 10 மாதங்களாக தி.மு.க. ஆட்சி, அதன் சீரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் சிறப்பாக நடைபெறுகிறது.

இக்கட்டான பொருளாதார நெருக்கடி உண்டாகும் வண்ணம் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி செய்தவர்கள், மக்கள் வரிப் பணத்தை எப்படி பயனுறு வகையில் செலவழிப்பது, அதற்கேற்ப எப்படி திட்டமிட்டு வருவாயைப் பெருக்குவது என்பது பற்றியெல்லாம் கவலைப்படாது கடனுக்கு மேல் கடன் வாங்கியது (வட்டிக் கட்டக் கூட புதுக்கடன் வாங்கிக் கட்டும் தவறான நிதி மேலாண்மையை நடத்திய நிலையில்). புதிய தி.மு.க. அரசு அனுபவம்மிக்க பொருளாதார மேதைகளையும், நிதி நிர்வாக அறிஞர்களையும் கொண்ட நிதி ஆலோசனைக் குழுவை - உலக அளவில் புகழடைந்தவர்களைக் கொண்டு அமைத்து அவர்களது ஆலோசனைப்படியே, கடும் நிதிப் பற்றாக்குறை, நெருக்கடியை சமாளித்திட ஏழை, எளிய மக்கள் பாதிக்காத வகையிலும், நடுத்தர மக்கள் ஓரளவு தாங்கும் வண்ணமும் புதிய வருவாய்  பெருக்கலை, நிதி ஆலோசகர்கள் கருத்துப்படி ஆராய்ந்தே முடிவெடுத்துள்ளனர்.

வியாழன், 7 ஏப்ரல், 2022

எம்.பி.பி.எஸ்: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு செல்லும்: உயர்நீதிமன்ற தீர்ப்பு சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி! - DR.S.ராமதாஸ்


எம்.பி.பி.எஸ்: அரசு பள்ளி மாணவர்களுக்கு  7.5% இடஒதுக்கீடு செல்லும்: உயர்நீதிமன்ற தீர்ப்பு சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.50% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. மாணவர் நலன் காக்கும் இந்தத் தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.

திங்கள், 4 ஏப்ரல், 2022

சொத்துவரி உயர்வை மறுபரிசீலனை செய்க! - வைகோ


 தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

600 சதுரடிக்குக் குறைவான பரப்பளவு உள்ள கட்டிடங்களுக்கு 25 சதவிகித சொத்துவரி உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் புதியதாக இணைந்த பகுதிகளில் 600 முதல் 1200 சதுரடி பரப்பளவு கொண்ட குடியிருப்புகளுக்கு 50 சதவிகிதம் சொத்துவரி உயர்த்தப்படுகிறது. சென்னையின் முக்கிய பகுதிகளில் 600 முதல் 1200 சதுரடி பரப்பளவு கொண்ட குடியிருப்புகளுக்கு 75 சதவிகிதமும், 1200 லிருந்து 1800 சதுரடி கொண்ட குடியிருப்புகளுக்கு 100 சதவிகிதமும் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 6033 அரசு பள்ளிகளில் உள்ள 8228 பழுதடைந்த கட்டிடங்கள் இன்னும் இடிக்கப்பட வில்லை என்று வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன.- DR.S.ராமதாஸ்

 மாணவர்களின் பாதுகாப்பில் சமரசம் கூடாது:

பழுதடைந்த பள்ளிகளை இடிக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் 6033 அரசு பள்ளிகளில் உள்ள 8228 பழுதடைந்த கட்டிடங்கள் இன்னும் இடிக்கப்பட வில்லை என்று வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன. மாணவர்களின்  பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கையில் வாழ்கிற பூர்வீகத் தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - கே.எஸ். அழகிரி


 இந்தியாவின் மிக நெருங்கிய அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு இல்லாத காரணத்தால் உணவு தானியங்கள், எரிபொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஏற்றுமதி கடுமையாகக் குறைந்து, இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய அவலநிலை அங்கு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காமல் மக்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பாக மணிக் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்திய ராணுவம் , ராணுவ மருத்துவ படையின் 258-வது நிறுவன தினத்தை ஏப்ரல் 3-ந்தேதி கொண்டாடியது.


 இந்திய ராணுவம் , ராணுவ மருத்துவ படையின் 258-வது நிறுவன தினத்தை ஏப்ரல் 3-ந்தேதி கொண்டாடியது. ‘’ சர்வே சந்து நிரமயா’’ என்பதை ராணுவ மருத்துவப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் பொருள் ‘’ அனைவரையும் நோயிலிருந்தும், இயலாமையிலிருந்தும் விடுவிப்போம்’’ என்பதாகும். அமைதி காலத்திலும், போர் சமயங்களிலும், பாதுகாப்பு படையினர் முதல் சிவில் நிர்வாகம் வரை சேவைபுரிவதில் இது சிறந்து விளங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக இடையறாமல், தன்னலமின்றி பாடுபட்டு, நாட்டுக்கு சிறப்பான தொண்டாற்றியுள்ளது.

நகர்ப்புற சொத்துவரி உயர்வு அரசாணையை, ரத்து செய்ய வலியுறுத்தி, ஏப்ரல்-6 ல் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்.! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

 நகர்ப்புற சொத்துவரி உயர்வு அரசாணையை, ரத்து செய்ய வலியுறுத்தி,

ஏப்ரல்-6 ல் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்.!

தொடர்ந்து இரண்டு வருட கரோனா முழு முடக்கம், அதனால் நாடெங்கும் நிலைகுலைந்து போன தொழில், வணிகம், வேளாண்மை அனைத்தும் இப்பொழுதுதான் மெல்லத் துளிர் விடுகின்றன. பள்ளிகளும், கல்லூரிகளும் அண்மையில் தான் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. கரோனா மூன்றாவது அலையின் பாதிப்பு மற்றும் அதன் அச்சம் நீங்கி, மக்கள் மெல்லமெல்ல இயல்புநிலைக்குத் திரும்புகிறார்கள். தங்களிடமிருந்த கையிருப்புகள் எல்லாம் கரைந்து, கடன் கூட வாங்க முடியாத அவலநிலையில் மக்கள் தத்தளிக்கிறார்கள். ரஷ்ய – உக்ரைன் போர், நேட்டோ நாடுகளின் பொருளாதாரத் தடைகள் அனைவரையும் பாதிக்கத் தொடங்கிவிட்டன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒவ்வொருவரின் பாக்கெட்டையும் தினந்தினம் பதம் பார்க்கிறது.

வன்னியர் இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த கூடுதல் புள்ளி விவரங்களைத் திரட்டி புதிய சட்டம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வலியுறுத்த எழுவர் குழு! - DR.S.ராமதாஸ்


பாட்டாளி மக்கள் கட்சி அவசர செயற்குழுக் கூட்டம்  -   தீர்மானம் 

வன்னியர் இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த கூடுதல் புள்ளி விவரங்களைத் திரட்டி புதிய சட்டம்: 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை  சந்தித்து வலியுறுத்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் எழுவர் குழு!

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள சமூகம் என்றால் அது வன்னியர்கள் தான். கையெழுத்திடத் தெரியாத மக்களும், பள்ளிப்படிப்பை முடிக்காத இளைஞர்களும் இந்த சமுதாயத்தில் தான் அதிகம். கல்வியறிவு பெற முடியாததால் வாழ்க்கையில் முன்னேற முடியாதது ஒருபுறமிருக்க, தங்களின் நிலங்களை ஏமாற்றுக்காரர்களிடம் மிக அதிக அளவில் இழந்த வரலாறும் இந்த சமுதாயத்திற்கு தான் உண்டு. கல்வி மற்றும் வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் தான் இந்த சமுதாயத்தை முன்னேற்ற முடியும் என்று கருதிய மருத்துவர் அய்யா அவர்கள், 1980-ஆம் ஆண்டில் தொடங்கி 43 ஆண்டுகளாக நடத்தி வரும் சமூகநீதிப் போராட்டத்தின் பயனாகவே வன்னிய சமுதாயத்து மக்கள் ஓரளவாவது கல்வியையும், வேலைவாய்ப்புகளையும் பெற்றிருக்கின்றனர்.

நகர்ப்புற அபரிமித சொத்து வரி உயர்வு தமிழக அரசின் அரசாணையை நிறுத்தி வைக்க வேண்டும்! முதல்வரின் அனுமதி இல்லாமல் இந்த உத்தரவு எப்படிப் பிறப்பிக்க முடியும்? - டாக்டர் K. கிருஷ்ணசாமி


முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் சொத்து வரி உயர்வு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா?
நகர்ப்புற அபரிமித சொத்து வரி உயர்வு  தமிழக அரசின் அரசாணையை நிறுத்தி வைக்க வேண்டும்! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

சொத்து வரியை உயர்த்த மத்திய நிதி ஆணையம் மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது எப்போது? 100 முதல் 200 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்த கட்டளையிட்டதா?

தமிழக அரசு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்!

வரிவிதிப்புகள் இல்லாமல், அரசு நிர்வாகம் நடைபெற இயலாது. ஆனால், வரிவிதிப்புகள் மக்கள் தாங்கக் கூடியதாக இருக்க வேண்டும். தாறுமாறான வரிவிதிப்புகள் அபரிமிதமான விலை உயர்வுக்கும், மக்களின் வாங்கும் சக்தியைக் குறைத்து, அவர்களை வீதிக்கு வந்து போராடவும் தூண்டும். கரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகள், ரஷ்ய உக்ரைன் போரால் ஏற்பட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுகளினால் அனைவரும் திண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஐந்து மாநில தேர்தலுக்காக மட்டுமே, கடந்த மூன்று மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த பத்து தினங்களாக தினமும் 70 முதல் 80 பைசாக்கள் வரை உயர்த்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டை தி.ஸ்டாக்கிஸ்டுகள்  தினமும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை” உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை போகும் அளவிற்கு அவசரத்தில் அரைவேக்காட்டுத்தனமாக முடிவு.- துரைமுருகன்


 “வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை” உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை போகும் அளவிற்கு அவசரத்தில் அரைவேக்காட்டுத்தனமாக முடிவு எடுத்த - அ.தி.மு.க. ஆட்சிக்குத் தலைமை வகித்த இன்றைய எதிர்க்கட்சி தலைவர் திரு. பழனிச்சாமி அவர்கள், “அரசு முறையான தரவுகளை நீதிமன்றத்தில் அளிக்கத் தவறியதால்தான் வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டது” என்று அபாண்டப் பழி சுமத்தியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-  திமுக பொதுச் செயலாளர் திரு. துரைமுருகன் அவர்கள் அறிக்கை.

அ.தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த சட்டம் என்றாலும் - வன்னியர் சமுதாயத்திற்கு அளித்த உள் இடஒதுக்கீட்டை நிலைநிறுத்திட உயர்நீதிமன்றத்திலும் - உச்சநீதிமன்றத்திலும் அனைத்து விதமான வாதங்களையும் முன் வைத்தது - மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியது திராவிட முன்னேற்றக் கழக அரசு. எந்த எந்த மூத்த வழக்கறிஞர்கள் வாதாடினார்கள் என்பது தீர்ப்பிலேயே இடம்பெற்றுள்ளது. அதுகூட வேறு ஏதோ மயக்கத்தில் உள்ள முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கும் தெரியவில்லை; எதிர்கட்சித் தலைவராக இருக்கும் திரு.  பழனிசாமி அவர்களுக்கும் புரியவில்லை. எங்கள் கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வருமான தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற நடத்திய சட்டப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதன் மூலம் - எடப்பாடி பழனிசாமியும், சண்முகமும் வன்னியர் சமுதாயத்திற்கு துரோகம் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் 77-ஆவது பாராவில் “அரசு தவறு செய்து விட்டது” (The Govt has Committed Error) என்று சுட்டிக்காட்டியுள்ள மூன்று காரணங்களை மயக்கம் தெளிந்த பிறகு திரு. சண்முகம் படித்துப் பார்த்தால் - அந்தத் தவறை இழைத்தது அ.தி.மு.க. ஆட்சி என்பதும், அந்தத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள “அரசு” அ.தி.மு.க. அரசு என்பதும் தெரியவரும். இன்னும் குறிப்பாக - அவர் புகழ் மகுடம் சூட்டுகிறாரே அந்த திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் திரு. சண்முகம் போன்றோர் “கூவத்தூர்” கூட்டணி வைத்து  நடத்திய அ.தி.மு.க. ஆட்சி என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் இந்த “உள் இட ஒதுக்கீடு” விவாதம் நடைபெற்றது 2012-ஆம் வருடம். அப்போதிருந்தது யார் ஆட்சி? அவர் இப்போது சொல்கிறாரே “எங்கள் அம்மா” என்று - அந்த அம்மாவின் ஆட்சி. அந்த ஆணையத்தில் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரை கொடுத்தபோது - அந்த ஆணையத்தில் உள்ள 7 உறுப்பினர்களில் (தலைவர் உள்பட) 6 பேர் எதிர்த்தார்களே அது யாருடைய ஆட்சி? அ.தி.மு.க. ஆட்சி. அந்த 6 பேரும் என்ன சொல்லி எதிர்த்தார்கள்? “எங்களுக்குச் சாதி அடிப்படையிலான புள்ளிவிவரங்களைக் கொடுக்காமல் எப்படி பரிந்துரை கொடுப்பது” என்று கேள்வி எழுப்பினார்கள். அப்போது அந்தக் கேள்விக்கு பதிலளித்து - தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து உரிய தரவுகளுடன் ஒருமனதாக ஒரு பரிந்துரையைப் பெறாமல் தூங்கியது - கோட்டை விட்டது யாருடைய ஆட்சி? அ.தி.மு.க. ஆட்சிதான். அப்போது நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக- அவசர அவசரமாக “ஒருமனதான பரிந்துரையைப் பெறாமல் அறிக்கை பெற்றது அ.தி.மு.க. ஆட்சியா இல்லையா?

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் இந்த அறிக்கை 24.5.2012-ல் கொடுக்கப்பட்டது. அந்தப் பரிந்துரையை 8 ஆண்டுகள் கிடப்பில் போட்டு வைத்திருந்தது யாருடைய ஆட்சி. அதுவும் அ.தி.மு.க. ஆட்சிதான். இதை இவர்களால் மறைக்க முடியுமா - அல்லது “அ.தி.மு.க. ஆட்சியே 2012 முதல் 2021 பிப்ரவரி மாதம் இந்தச் சட்டம் வரும் வரை நடக்கவே இல்லை” என்று வாதிடப் போகிறார்களா? தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அப்போதே முடக்கி வைத்து விட்டு - 2020-ல் மறுபடியும் திருத்தி அமைத்தது யாருடைய ஆட்சி? அது திரு. பழனிசாமி - சி.வி. சண்முகம் எல்லாம் “கூவத்தூரில்” பேரம் நடத்திய; கூத்து நடத்திய இவர்கள் ஆட்சிதானே! பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தையும் 8 ஆண்டு முடக்கி வைத்து விட்டு- 2021 சட்டமன்றத் தேர்தல் வந்த நேரத்தில் அரைவேக்காட்டுத்தனமாக – அவசர கோலத்தில்- அள்ளித் தெளித்து ஒரு உள் ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றி- இன்றைக்கு இந்த அளவிற்கு அந்தச் சமுதாயத்தை நெருக்கடிக்கு கொண்டு வந்து நிறுத்தியது யார்? எடப்பாடி பழனிசாமிக்கு இந்த வன்னியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என மனதளவில் உடன்பாடு இல்லை. அதே போல் சட்ட அமைச்சர் என்ற முறையில் வன்னியர் சமுதாய இடஒதுக்கீட்டை முறைப்படி கொண்டு வர வேண்டும் என்ற அக்கறையும் சி.வி.சண்முகத்திற்கு இருந்ததில்லை. ஆகவே வன்னியர் சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை உச்சநீதிமன்றம் வரை போகும் அளவிற்கு அலட்சியமாகச் செயல்பட்ட இந்த இரட்டையர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

2012-லேயே “சாதி வாரியான புள்ளிவிவரங்கள் தேவை” எனப் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்த நேரத்தில் - எட்டு வருடம் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இருந்ததும் அதிமுக ஆட்சிதான். அதில் சட்ட அமைச்சராக இருந்தவர்தான் இப்போது “மைக்” கிடைத்தவுடன் உளறிக் கொண்டிருக்கும் திரு. சண்முகம். ஆட்சியை விட்டுப் போகின்ற நேரத்தில் – அதுவும் “ஒரு பக்கம் உள் இட ஒதுக்கீடு கொடுக்க சட்டம்”- இன்னொரு பக்கம் “ஜாதி அடிப்படையில் தகவல் சேகரிக்க நீதியரசர் குலசேகரன் ஆணையம்” இரண்டையும் அமைத்துக் குழப்பியது திரு எடப்பாடி பழனிசாமிதான்! இந்த நீதியரசர் குலசேகரன் ஆணையத்தை 2012-ல் உடனே நியமிக்க யார் தடையாக இருந்தார்கள்- அப்போது சண்முகம் அதிமுகவில் இருந்தாரா அல்லது அந்தமான் தீவுகளில் இருந்தாரா? திரு. எடப்பாடி பழனிசாமி 2017-ல் முதலமைச்சரானார். அன்றிலிருந்து 2020 வரை என்ன செய்து கொண்டிருந்தார்? கலெக்ஷனில் காட்டிய அக்கறையை வன்னியர் சமுதாயத்தின் இந்த இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் காட்டியிருக்கலாமே?

தற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து நடத்தப்பட்ட அவசர செயற்குழுவில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய பா.ம.க. வழக்கறிஞர் திரு. பாலு அவர்களும் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் எப்படி தமிழ்நாடு அரசு - குறிப்பாக எங்கள் கழகத் தலைவர் தளபதி அவர்கள் இந்த இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்திட பாடுபட்டுள்ளார்கள் என்று மிகத் தெளிவாகப் பேசியிருக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ - நேற்று வரை அமைதி காத்த திரு எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பொறுக்கவில்லை. பொறாமைத் தீயில் வெந்து நொந்து போய் திமுக ஆட்சி மீது பழி போடுகிறார். தனது தவறு உச்சநீதிமன்றத்தில் தோலுரிக்கப்பட்டு விட்டதே என்று திமுக மீது பொய் குற்றச்சாட்டை முன் வைக்கிறார். இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தில் - அதிமுக ஆட்சியில் செய்த தவறுகளையும் கூட- வன்னியர் சமுதாய நலனைப் பாதுகாக்கும் நோக்கில் சட்டப் போராட்டம் நடத்தி - இந்த உள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உயர்நீதிமன்றம் தெரிவித்த 7 கருத்துக்களில் 6 கருத்துக்கள் சரியல்ல என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் இப்போது அளித்துள்ளது. அது எங்கள் கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் திறமையான சட்டப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. ஆனால் அதிமுக ஆட்சியில் - தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து முறையான தரவுகளுடன் பரிந்துரை பெறுவதில் நிகழ்ந்த தவறுகளும், குளறுபடிகளும், சண்முகம் போன்ற “உதவாக்கரை” சட்ட அமைச்சராக இருந்தவரின் அலட்சியமும் – தேர்தலுக்காக “வேண்டா வெறுப்பாக” திரு. எடப்பாடி பழனிசாமி அளித்த இட ஒதுக்கீடுமே இந்தச் சமுதாயம் வருந்தத்தக்க தீர்ப்பு வருவதற்கு காரணமாக அமைந்து விட்டது. இதுதான் உண்மை.

பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு அதிக விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி - அதில் வன்னியர் சமுதாயம் பயன்பெறும் வகையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தின் வளர்ச்சியை, பட்டியலின- பழங்குடியின மக்களின் முன்னேற்றத்தை சமூகநீதி மூலம் அழகு பார்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக் கொள்கையைச் செயல்படுத்தி - சமூகநீதியில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்கியவர். அவர் வழியில் வந்துள்ள எங்கள் கழகத் தலைவர் - முதலமைச்சர் தளபதி திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திரு. பழனிசாமி, திரு. சண்முகம் போன்றவர்கள் சமூகநீதி பற்றி வகுப்பு எடுக்க வேண்டாம். “போராட்டம் இன்றி இட ஒதுக்கீடு கிடைக்கும். தம்பி ஸ்டாலின் மீது நம்பிக்கை இருக்கிறது” என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் கூறியிருக்கிறார். எங்கள் கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதி அவர்களின் அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கும். நிச்சயம் வன்னியர் சமுதாயம் போற்றும் நல்ல முடிவினை உரிய நேரத்தில் எடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

‘யோகா’ பயிற்சி என்ற போர்வையில் - ‘சாக்கில்’ ஆர்.எஸ்.எஸின் ஷாகா பயிற்சி மதக்கலவரம், வெறுப்புப் பிரச்சார விதை ஊன்ற அனுமதிக்கலாமா? - கி.வீரமணி

 தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்திற்கு...!

‘யோகா’ பயிற்சி என்ற போர்வையில் - ‘சாக்கில்’ ஆர்.எஸ்.எஸின் ஷாகா பயிற்சி

மதக்கலவரம், வெறுப்புப் பிரச்சார விதை ஊன்ற அனுமதிக்கலாமா?

பள்ளி மைதானங்களிலும், பொது இடங்களிலும் 

நடத்துவது தடை செய்யப்படவேண்டும்! - கி.வீரமணி

2025 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸின் நூற்றாண்டு என்பதை மய்யப்படுத்தி தமிழ்நாடு போன்ற ஆர்.எஸ்.எஸ். வலுவாகக் காலூன்ற முடியாத மாநிலங்களில் திட்டங்களைத் தீட்டி செயல்பட உள்ளது. அதில் ஒன்றுதான் இளைஞர்களுக்கு ‘யோகா’ பயிற்சி என்ற பெயரில் ‘ஷாகா’ பயிற்சி அளிப்பதாகும்.