வெள்ளி, 18 அக்டோபர், 2019

5 மாதங்களில் ரூ.80,000 கோடி வீழ்ச்சி : மோடி ஆட்சியின் பொருளாதார சரிவு அம்பலம் - ப.சிதம்பரம் ட்வீட்

5 மாதங்களில் ரூ.80,000 கோடி வீழ்ச்சி : மோடி ஆட்சியின் பொருளாதார சரிவு அம்பலம்
- திரு ப.சிதம்பரம் ட்வீட்!

மோடி ஆட்சியில் நாட்டின் ஏற்றுமதி சுமார் 6.6 சதவிகிதமும், இறக்குமதியில் சுமார் 13.9 சதவிகிதமும் குறைந்துள்ளதாக ட்விட்டரில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பா.ஜ.க அரசு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அக்கட்சி தலைவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர்.


ஆனால் பா.ஜ.கவின் தவறான பொருளாதாரக் கொள்கையால் பெரும் பின்னடைவை இந்திய பெருளாதாரம் சந்தித்து வருகிறது. இதனை மூடிமறைக்கப் பல வேலைகளை பா.ஜ.க மேற்கொண்டாலும் பெரும் நிறுவனங்களின் முதலாளிகள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பற்றி வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

எந்தாண்டும் இல்லாத அளவிற்கு பா.ஜ.க அரசினால் சிறு குறு தொழில்கள் மட்டுமின்றி பெரும் நிறுவனங்களும் மூடப்படும் அபாயத்தை எட்டியுள்ளன. குறிப்பாக கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஆட்டோமொபைல் துறையின் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.

இந்நிலையில், சிறையில் இருக்கும் ப.சிதம்பரம் சார்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் பதிவிட்டு வருகின்றனர்.
அதில், “இந்த இரண்டுப் பொருளாதார அறிகுறிகள் குறித்து தெரியப்படுத்தினால் மக்களே ஒரு முடிவுக்கு வருவார்கள் என குறியிப்பிட்டுள்ளாவர். முதலாவதாக, நாட்டின் ஏற்றுமதி சுமார் 6.6 சதவிகிதமும், இறக்குமதியில் சுமார் 13.9 சதவிகிதமும் குறைந்துள்ளது. இந்த விழ்ச்சியின் அர்த்தம் என்னவெனில், மாதம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலையின்றி தவித்து வருவதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “இரண்டாவதாக, வங்கிகளில் கடன் வாங்குவது குறைந்துள்ளது. அதனால் கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாதங்களில் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், தற்போது எந்த புதிய முதலீடும் வரவில்லை என்பதாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக வெளியிட்ட மற்றொரு ட்விட்டர் பதிவில், “இந்தியாவில் நகர மற்றும் கிராமப்புறங்களில் தனிமனிதர்களின் நுகர்வு குறைந்துவிட்டது. அதாவது ஏழை மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது.

அதனால் குறைவான அளவே நுகர்வு நடைபெறுகிறது. அதனால் நாட்டு மக்கள் அதிகமானோர் தீவிரமான பசியோடு இருக்கிறார்கள். அதன்வெளிப்பாடே பட்டினி நாடுகள் குறியீட்டில் இந்தியா 117 நாடுகளில் 112-வது இடத்திற்குச் சென்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக