திங்கள், 21 அக்டோபர், 2019

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை பலபேர்களுக்கு இன்னும் வந்தடையவில்லை. - ஜி.கே.வாசன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை பலபேர்களுக்கு இன்னும் வந்தடையவில்லை.
- ஜி.கே.வாசன்
(தலைவர், த.மா.கா)

கடந்த வருடம் கஜா புயலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த கடும் பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் முழுமையாக மீண்டு வரவில்லை.


இந்த சூழ்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை பலபேர்களுக்கு இன்னும் வந்தடையவில்லை. அதோடு பயிர்_காப்பீட்டுத் தொகை மிக குறைந்த அளவில் ஆதாவது 8% சதவிகிதமாக கணக்கிடப்பட்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் திருவாரூர், நாகை, தஞ்சை, மாவட்ட விவசாயிகள் பெரும்பாலோனோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பயிர் காப்பீட்டுத் தொகையை அதிகரித்து தருமாறு டெல்டா மாவட்ட விவசாயிகள் போராடி வருகின்றனர். கஜா_புயலால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீளமுடியாமல் தவிக்கும் அவர்களுக்கு தரும் காப்பீட்டுத் தொகையை கூட, அவர்கள் ஏற்கனவே வாங்கியிருந்த கடனுக்காக பிடித்தம் செய்கின்றனர். இது விவசாயிகளை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்குகிறது.

ஆகவே தமிழக அரசின் வேளாண்துறை விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையை உயர்த்தி அவற்றை முழுமையாக, உடனடியாக, அனைவருக்கும் கிடைக்க தமிழக அரசு உதவவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக