வெள்ளி, 18 அக்டோபர், 2019

காங்கிரஸ் கட்சிக்கு பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும். - ஜி.கே.வாசன்.

நாங்குனேரி தொகுதியில் இடைத்தோ்தலை திணித்த காங்கிரஸ் கட்சிக்கு பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

- திரு.ஜி.கே.வாசன்.
 (தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்)


நாங்குனேரி தொகுதி அதிமுக வேட்பாளா் நாராயணனை ஆதரித்து களக்காட்டில் திரு.ஜி.கே.வாசன் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், வெல்லமண்டி நடராஜன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனர்.

ஜி.கே.வாசன் பேசியது :



நாங்குனேரி தொகுதி இடைத்தோ்தல் இத்தொகுதி மக்கள் மீது வேண்டுமென்றேற திணிக்கப்பட்ட தோ்தல். இத்தொகுதி மக்களை இடையிலேயே விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. சென்றுவிட்டார்

மீண்டும் இத்தொகுதி மக்களை ஏமாளிகளாக்க காங்கிரஸ் கட்சியும், அதன் வேட்பாளரும் களமிறங்கியுள்ளனர். இதனை தொகுதி மக்கள் புரிந்துகொண்டு அக்கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும்.

அதிமுகவுக்கு வாக்களித்தால் நான்குனேரி தொகுதி தமிழகத்திலேயே முன்மாதிரி தொகுதியாக மாறும். தாமிரவருணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத் திட்டம் நிறைவேற அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும்.

கூந்தன்குளம் சரணாலயத்தை மேம்படுத்தவும், வடக்குப் பச்சையாறு அணையிலிருந்து நான்குனேரி வறட்சிப் பகுதி குளங்களுக்குத் தண்ணீா் கிடைக்க தனிக் கால்வாய் அமைக்கும் திட்டத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக