வியாழன், 7 ஜனவரி, 2021

தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் SC பட்டியல் வெளியேற்ற கோரிக்கையில் எந்த சமரசமும் கிடையாது ! - டாக்டர் K. கிருஷ்ணசாமி



தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் SC பட்டியல் வெளியேற்ற கோரிக்கையில் எந்த சமரசமும் கிடையாது ! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

மதுரையில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை எஸ்சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பேரணி- ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அக்கட்சியின் தலைவர் டாக்டர் K. கிருஷ்ணசாமி பேசும்போது : 

அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் வழங்கப்படும் நிலையில் தாழ்ந்த சாதி என கூறி ஒரு பிரிவினரை பிரிப்பது ஏன்?

பட்டியலினத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் வெளியேற்றப்படுவதால் யாருடைய இட ஒதுக்கீட்டிற்கும் இடையூறு இருக்காது; அந்த சமூகத்துக்கு 6 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பது தான் தங்களின் கோரிக்கை என்று தெரிவித்தார்.

மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கூட்டத்தை பார்த்த பிறகாவது, தேவேந்திர குல வேளாளர் SC பட்டியல் வெளியேற்றம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடுவது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுப்பார் என்று நம்புவதாக கூறினார். SC பட்டியல் வெளியேற்றம் இல்லாமல் தேவேந்திர குல வேளாளர் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொதுப்பெயர் மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுவது, அரை கிணற்றை தாண்டுவது போன்ற செயல் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரத்தில் முதல்வர் பழனிச்சாமி மத்திய அரசுக்கு பரிந்துரையை அனுப்பும்வரை அவரை சந்திக்கப்போதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நாங்கள் இன்றிலிருந்து தலித்துகள் அல்ல. எங்கள் மீது படிந்துள்ள தலித் என்ற கறையை போக்க வேண்டும். இந்தியர்களாக வாழ விரும்புகிறோம். பட்டியலின வெளியேற்றம் செய்யாமல் அ.தி.மு.க., 2021 சட்டசபை தேர்தலுக்கு எப்படி ஓட்டு கேட்டு கிராமங்களுக்கு செல்ல முடியும். அப்படி ஓட்டு கேட்டு வந்தால் நீங்கள் விடுவீர்களா?

தனித்தொகுதிகளில் வெற்றிபெறும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவேந்திர குல சமூகத்தினருக்கு பிரச்சனை என்றால் வர மாட்டார்கள். ஆனால் பதவி ருசிக்காக அவர்களது கட்சிகளுக்கு அடிமைகளாக இருந்து வருகின்றனர் என்று சாடினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக