செவ்வாய், 27 டிசம்பர், 2022

தமிழ்நாட்டில் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் ஆசிய வளர்ச்சி வங்கியும் ரூ.1,040 கோடி கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

 தமிழ்நாட்டின் மூன்று நகரங்களில்  பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு, கழிவு நீர் அகற்றுதல் மற்றும் குடிநீர் விநியோக முறைகளை உருவாக்குவதற்காக மத்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் ரூ.1,040 கோடி கடன் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. 

தமிழ்நாடு நகர்ப்புற முதலீட்டு திட்டத்திற்கான மூன்றாவது தொகுப்பு கடன் ஒப்பந்தத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் ரஜித் குமார் மிஸ்ரா  இந்தியா சார்பிலும், ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில் இவ்வங்கியின் இந்திய அலுவலகப் பொறுப்பு அதிகாரி ஹோ யூன் யோங்கும்  கையத்திட்டனர்.

ஐதராபாதில் உள்ள கேசவ் நினைவு கல்வி சங்கத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு உரை


 நாட்டின் 75வது விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ஐதராபாதில் உள்ள கேசவ் நினைவு கல்வி சங்கத்தில் (27.12.2022) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு உரையாற்றினார். ஐதராபாத் விடுதலை இயக்கம் தொடர்பாகவும், அதில் பங்கேற்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் தொடர்பாகவும் நடைபெறும் புகைப்பட கண்காட்சியையும் அவர் தொடங்கிவைத்தார்.

நீர் மின் திட்டங்களில் முன்னெச்சரிக்கை அமைப்புமுறையை அமல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.- மத்திய எரிசக்தி அமைச்சகமும், டி.ஆர்.டி.ஓ-வும் கையெழுத்து


 அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள நீர் மின் திட்டங்கள்/ மின் நிலையங்களுக்கான முன்னெச்சரிக்கை அமைப்பு முறையை அமல்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் மத்திய எரிசக்தி அமைச்சகமும், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ-வும் கையெழுத்திட்டுள்ளன. எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு அலோக் குமாரும், டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் தலைவர் மற்றும் பாதுகாப்புத் துறையின் (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) செயலாளருமான டாக்டர் சமீர் வி. காமத்தும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தமிழக அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.- DR. அன்புமணி ராமதாஸ்


 மக்களுக்கு அரசு சேவைகள் விரைவாக கிடைப்பதை உறுதி செய்ய பொதுச்சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்! 

- DR. அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் பொதுமக்கள் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள அனைத்து சான்றிதழ்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்திருக்கிறார். மக்களுக்கு அரசின் சேவைகள் தாமதமின்றி கிடைக்க வேண்டும் என்ற  நோக்குடன் முதலமைச்சர் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது. இதை சட்டப்பூர்வமாக்க தமிழகத்தில் பொதுச்சேவை பெறும் உரிமையை செயல்படுத்த வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடாகும்.

நிரப்பப்படாமல் காலியாக கிடக்கும் ஆசிரியர் பணிகள்: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைவரை உடனே நியமிக்க வேண்டும்! - DR .அன்புமணி ராமதாஸ்



 நிரப்பப்படாமல் காலியாக கிடக்கும் ஆசிரியர் பணிகள்: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைவரை உடனே நியமிக்க வேண்டும்! 

- DR .அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றை மேற்கொள்ள வேண்டிய  ஆசிரியர் தேர்வு வாரியம் முழுநேர தலைவர் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. ஆசிரியர்கள் நியமனம் சார்ந்த முக்கிய பதவி 3 மாதங்களாக காலியாக இருப்பது கல்வி வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது.

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீசைலம் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணித்தார்.


 ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு திட்டப்பணிகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கிவைத்தார். 43 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தப்பணிகளுக்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் முழுமையாக நிதி அளித்திருந்தது.

 தேசிய புனித யாத்திரை  புத்துயிர் நடவடிக்கை, ஆன்மீகம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான பிரஷாத் (PRASHAD) திட்டத்தின் கீழ் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்ரீசைலம் ஆலயத்தை உலகத்தரத்திலான வழிபாட்டுத்தலமாகவும், சிறந்த சுற்றுலா மையமாகவும் மாற்றும் நோக்கில் இதற்கான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கொவிட் தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.


 கொவிட் தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார். இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இன்று  திரு மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டார். கொவிட் தொடர்பான நம்பகமான தகவல்களை மட்டும் பகிருமாறு அப்போது அவர் இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.  கொவிட் சிகிச்சையின் சுகாதார பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளையும், பங்களிப்பையும் தலைவணங்கி பாராட்டுவதாக அவர் கூறினார்.

எஃகு உற்பத்தியில் இந்தியா தற்போது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு, உலகின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா எஃகு உற்பத்தியாளராகவும் வளர்ந்துள்ளது.


 கட்டுமானம், உள்கட்டமைப்பு, வாகன உற்பத்தி, பொறியியல், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு குறிப்பிடத்தக்க துறைகளில் எஃகு, மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் எஃகுத் துறை அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. எஃகு உற்பத்தியில் இந்தியா தற்போது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு, உலகின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா எஃகு உற்பத்தியாளராகவும் வளர்ந்துள்ளது.

உற்பத்தி மற்றும் பயன்பாடு:

நடப்பு நிதியாண்டின் (2022,ஏப்ரல்- நவம்பர்) முதல் எட்டு மாதங்களில் எஃகுத் துறையின் உற்பத்தி செயல்பாடு மிகுந்த ஊக்கமளிப்பதாக இருந்தது. உள்நாட்டு எஃகு உற்பத்தி 78.090 மில்லியன் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 6.09% அதிகமாகும். உள்நாட்டு எஃகின் பயன்பாடு கடந்த ஆண்டின் 67.32 மில்லியன் டன்னைவிட 11.9% அதிகரித்து, இந்த ஆண்டு 75.340 மில்லியன் டன்னாக பதிவானது. உள்நாட்டு கச்சா எஃகு உற்பத்தி, 81.96 மில்லியன் டன்னாக, கடந்தாண்டை விட 5.6% அதிகமாக இருந்தது.

திங்கள், 26 டிசம்பர், 2022

வீர பாலகர் தினம், பாஞ்ச் பிராண்ஸ் எனப்படும் ஐந்து தீர்மானங்களுக்கான உயிர் சக்தி போன்றதாகும்.- பிரதமர் திரு நரேந்திர மோடி


 வீர பாலகர் தினத்தையொட்டி புதுதில்லி மேஜர் தயான்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் இன்று  பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது 300 சிறார்கள் பங்கேற்று சப்த கீர்த்தனைகள் பாடிய நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொண்டார்.  சுமார் 3000 குழந்தைகள் பங்கேற்ற அணிவகுப்பையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். குரு கோபிந்த் சிங்கின்  பிரகாஷ் பூரப் தினமான 2022 ஜனவரி 9-ந் தேதி அன்று   ஒரு அறிவிப்பை வெளியிட்ட பிரதமர், டிசம்பர் 26-ந் தேதி வீர பாலகர் தினமாக கொண்டாடப்படும் என்று தெரிவித்தார். ஸ்ரீ குரு கோபிந்த் சிங்கின் மகன்களான சாஹிப்ஜாதா பாபா ஜோராவர் சிங் மற்றும் சாஹிப்ஜாதா பாபா ஃபதேசிங்கின் தியாகத்தை குறிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

புதன், 5 அக்டோபர், 2022

பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிட்டார்



பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையைப்  பிரதமர் திரு. நரேந்திர மோடி  பார்வையிட்டார்.

இந்த மருத்துவமனையின் சி பிளாக்கிற்கு பிரதமர் வருகை தந்தார்.  பின்னர் பிலாஸ்பூர் வளாகத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின்  முப்பரிமாண மாதிரி காட்சியை அவர் பார்வையிட்டார். பின்னர் இந்த  மருத்துவமனை திறப்பு விழாவைக்  குறிக்கும் வகையில் ரிப்பன் வெட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். சிடி ஸ்கேன் மையம், அவசரகால சிகிச்சை மற்றும் விபத்துக்கான சிகிச்சை பகுதிகளை பிரதமர் பார்வையிட்டார்.

திங்கள், 12 செப்டம்பர், 2022

சென்னை மழைநீர் கால்வாய் பணிகள் மந்தம்: இந்த பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே கண்காணிக்க வேண்டும்.- DR.அன்புமணி ராமதாஸ்

 சென்னை மழைநீர் கால்வாய் பணிகள் மந்தம்:

வெள்ள ஆபத்தை தடுக்க விரைவுபடுத்துங்கள்! - DR.அன்புமணி ராமதாஸ்

சென்னையில் வெள்ள ஆபத்தை தடுக்கும் நோக்கத்துடன் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் கால்வாய் பணிகள் திட்டமிடப்பட்டதை விட மிகவும் மந்தமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் விரைவுபடுத்தப்படாவிட்டால், எந்த நோக்கத்திற்காக இந்தப் பணிகள் பல நூறு கோடி  செலவில் தொடங்கப்பட்டனவோ, அந்த நோக்கமே நிறைவேறாமல் போய்விடக்கூடிய ஆபத்து உள்ளது.

ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்ட பி17ஏ ரக போர்க்கப்பலான தரகிரி(Taragiri) அறிமுகம்.


 எம்.டி.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்ட பி17ஏ ரக போர்க்கப்பலான தரகிரியை கடற்படை மனைவியர் நல சங்கத்தின் (மேற்கு பிராந்தியம்) தலைவர் திருமதி சாரு சிங் இன்று அறிமுகப்படுத்தினார். மேற்கு கடற்படையின் தலைமைத் தளபதி அஜேந்திர பஹதுர் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

டெல்டாவை சீரழிக்கும் தொழில்திட்டங்களை, குறிப்பாக ஹைட்ரோகார்பன் திட்டங்களை தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தை பாதுகாக்க வேண்டும்.- DR.அன்புமணி ராமதாஸ்

 "காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட செய்ய வேண்டும்!" - DR.அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட எந்த ஹைட்ரோகார்பன் திட்டமும், உழவர்களின் எதிர்ப்புக்கு பணிந்து கைவிடப்படவில்லை என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.  காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகும், அதில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனி ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது; ஒரு குடும்பம் கூட நடுத்தெருவுக்கு வரக்கூடாது. - DR.அன்புமணி ராமதாஸ்

 ஆன்லைன் சூதாட்டத் தடை நீங்கி ஓராண்டு:

தடுமாற்றமின்றி அவசரச் சட்டம் பிறப்பிப்பீர்! - DR.அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து நாளையுடன்  ஓராண்டு நிறைவடைகிறது. கடந்த ஓராண்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு 27 உயிர்கள் பலியான பிறகும் அதை தடை செய்யும் விஷயத்தில் தமிழக அரசு துணிச்சலாக செயல்படத் தயங்குவது ஏமாற்றமளிக்கிறது.

சனி, 30 ஜூலை, 2022

கடந்த எட்டு ஆண்டுகளில், நாட்டின் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பணிகள் துரித கதியில் செய்யப்பட்டுள்ளன.- நரேந்திர மோடி


 பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நடைபெற்ற முதலாவது  அகில இந்திய மாவட்ட சட்ட சேவைகள் அதிகாரிகள் கூட்டத்தின் தொடக்க அமர்வில் உரையாற்றினார். இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி யு.யு.லலித், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, இணையமைச்சர் திரு எஸ்.பி.சிங் பாகேல், மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகத் தலைவர்கள்  மற்றும் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையங்களின்  தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 'இலவச சட்ட உதவிக்கான உரிமை' குறித்த நினைவு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இது விடுதலையின் அமிர்த கால நேரம். அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் தீர்மானங்களுக்கான நேரம் இது. எளிதாக தொழில் செய்வது போலவும், எளிதாக வாழ்வது போலவும், நாட்டின் இந்த அமிர்த யாத்திரையில் எளிதாக நீதி கிடைத்தலும் சமமாக முக்கியமானது, என்றார்.

ஞாயிறு, 24 ஜூலை, 2022

போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி வரும் 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் பா.ம.க மாபெரும் போராட்டம்! - DR.S.ராமதாஸ்

 போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி வரும் 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் பா.ம.க மாபெரும் போராட்டம்!  - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப் பொருள் கலாச்சாரம் நாளுக்குநாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. போதைக் கலாச்சாரத்தால் மிகப்பெரிய பேரழிவை நோக்கி தமிழ்நாடு பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் மேற்கொள்ளாதது ஏமாற்றமளிக்கிறது.

ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகிய இந்திய நாகரிக விழுமியங்களை மேம்படுத்த, ஆன்மீக மறுமலர்ச்சி அவசியம் – குடியரசு துணைத்தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு


 ஒற்றுமை, அமைதி மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகிய  உலகளாவிய விழுமியங்களை இந்திய நாகரிகம், நிலைநிறுத்துகிறது என்று குடியரசு துணைத்தலைவர்  திரு எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.  இந்தப் பழமையான மதிப்புகளைப் பாதுகாக்கவும் பரப்பவும் ஆன்மீக மறுமலர்ச்சி அவசியம் என அவர் கூறினார்.

குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ,  “பாடு, நடனமாடு,  பிரார்த்தனை செய் - ஸ்ரீல பிரபுபாதாவின் உத்வேகம் தரும் கதை” என்ற புத்தகத்தை வெளியிட்ட பின்னர் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், சுவாமி பிரபுபாதா போன்ற சிறந்த துறவிகள் மற்றும் ஆன்மீக குருக்களிடமிருந்து உத்வேகம் பெறவும், அவர்களின் குணங்களை இளைஞர்கள் உள்வாங்கவும் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சிறந்த மனிதர்களாக மாற ஒழுக்கம், கடின உழைப்பு, பொறுமை மற்றும் கருணை ஆகியவை முக்கியம் எனக்கூறிய அவர்,  "நீங்கள் எப்போதும் சாதி, பாலினம், மதம் மற்றும் பிராந்தியம் என்ற குறுகிய கருத்துக்களுக்கு அப்பால் உயர்ந்து சமுதாயத்தில் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கொண்டுவர உழைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். இஸ்கான் நிறுவனர் ஸ்ரீல பிரபுபாதரின் இந்த வாழ்க்கை வரலாற்று நூலை  டாக்டர் ஹிந்தோல் சென்குப்தா எழுதியுள்ளார்.

வியாழன், 21 ஜூலை, 2022

சென்னை புழுதிக்காடாக மாறுவதை சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.- DR. அன்புமணி ராமதாஸ்


 மெட்ரோ ரயில், மழைநீர் வடிகால் பணிகள்: மக்களுக்கு நோயை ஏற்படுத்தும் புழுதியை 

கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்! - DR. அன்புமணி ராமதாஸ்

சென்னை மாநகரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளால் வரலாறு காணாத புழுதி உருவாகி சென்னை மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. புழுதியையும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் கட்டுப்படுத்துவது இந்த வளர்ச்சித் திட்டங்களின் ஓர் அங்கமாக சேர்க்கப்பட்டிருக்கும் போதிலும், அது பின்பற்றப்படாதது கண்டிக்கத்தக்கது.

ஸ்வாவ்லம்பான்' (தற்சார்பு) கடற்படையின் கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டு மயமாக்கல் நிறுவனத்தின் முதல் கருத்தரங்கம்


 ஸ்வாவ்லம்பான்' (தற்சார்பு) கடற்படை கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டு மயமாக்கல்(என்.ஐ.ஓ.ஓ) நிறுவனத்தின் முதல் கருத்தரங்கம் 18 - 19 ஜூலை 2022 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமை விருந்தினராக பங்கேற்றார். பாதுகாப்புத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இரண்டுநாள் கருத்தரங்கில், கடற்படை வீரர்கள், கல்வியாளர்கள், தொழில்துறையினர், கொள்கை வகுப்பவர்கள், சிந்தனையாளர்கள், மாணவர்கள் மற்றும் அரசு மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  தலைமையகத்தின் பணியாளர்கள் மற்றும் கடற்படையின் மற்ற பிரிவுகளை சேர்ந்தவர்கள் இணையவழியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மாலத்தீவுகளின் நீதி சேவை ஆணையத்திற்கும், இந்தியாவுக்கும் இடையே நீதி ஒத்துழைப்பு துறையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்


 மாலத்தீவு குடியரசின் நீதி சேவை ஆணையத்திற்கும், இந்தியாவுக்கும் இடையே நீதி ஒத்துழைப்பு துறையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இது நீதி ஒத்துழைப்பு துறையில் இந்தியாவுக்கும், இதர நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான எட்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தமாகும்.

புதன், 20 ஜூலை, 2022

52% வரை மின்கட்டண உயர்வை தாங்க முடியாது; உடனடியாக கைவிட வேண்டும்! - DR.S.ராமதாஸ்

 52% வரை மின்கட்டண உயர்வை தாங்க

முடியாது; உடனடியாக கைவிட வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் மின்கட்டணங்களை ஓர் அலகிற்கு 27.50 பைசா முதல் ரூ.1.25 உயர்த்தப் போவதாக  தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களால் மின் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாது.

திட்டமிட்டு வெளியூர்களிலிருந்தெல்லாம் ஆட்களைத் திரட்டிய பின்னணி என்ன? பொதுச்சொத்துகளை நாசம் செய்தவர்களை ஊக்குவிப்பது நாகரிகமான அரசியலா? -கி.வீரமணி

 சின்னசேலம் கனியாமூர் பள்ளி தொடர்பான கலவரங்கள்!

திட்டமிட்டு வெளியூர்களிலிருந்தெல்லாம் ஆட்களைத் திரட்டிய பின்னணி என்ன? பொதுச்சொத்துகளை நாசம் செய்தவர்களை ஊக்குவிப்பது நாகரிகமான அரசியலா?

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், விரைந்து நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் நமது முதலமைச்சர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க விரும்புவோர் ஏமாந்து போவார்கள்!

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் நிச்சயம் கிடைக்கும்! குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதும் உறுதி!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், பிளஸ் டூ மாணவி சிறீமதி 13.7.2022 அன்று ‘மர்மமான’ முறையில்  இறந்துள்ளார்; அவர் 3 ஆவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துள்ளார் என்று கூறப்படும் நிலையில், இறந்த மாணவியின் உடல் உடற்கூறு ஆய்வு - மறு உடற்கூறு ஆய்வுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்து, நேற்று (19.7.2022) அது முடிந்தது. இதனை எதிர்த்து மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் இதற்குத் தடை கேட்ட வழக்கில், அது உச்சநீதிமன்றத்தால் மறுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடந்ததையொட்டி ஏற்பட்ட வன்முறை வெடித்த கலவரம் அதிர்ச்சியூட்டக் கூடியதாக உள்ளது.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எழுப்பிய கேள்விகள் ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய கேள்விகள் - அரசியலுக்கு அப்பாற்பட்டு.

டிஜிட்டல் கட்டமைப்பு, சுகாதார கவனிப்பு மற்றும் மருந்துகள் போன்ற துறைகளில் ஆப்பிரிக்காவுடன் தனது ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.- திரு பியூஷ் கோயல்


 இரு நாடுகளின் விருப்பங்களை நிறைவேற்ற நான்கு துறைகளில் ஆப்பிரிக்காவுடன் தனது ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. முதலாவது துறை சூரிய மின்சக்தியாகும். இது தூய்மையான எரிசக்தியை கொண்டு வரவும், எரிசக்தி பாதுகாப்புக்கும், உதவுவதோடு ஆப்பிரிக்காவில் வேலைவாய்ப்பை உருவாக்கும். இரண்டாவது பாதுகாப்பு வர்த்தகம் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ராணுவ பரிமாற்றங்கள், ராணுவ வாகனங்கள் உற்பத்தி ஆகியவை மூன்றாவது நேரடி மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு இது தகவல் தொழில்நுட்பம்/ ஆலோசனை மற்றும் திட்ட ஏற்றுமதிகளுக்கு உதவும். நான்காவது சுகாதார கவனிப்பும், மருந்து உற்பத்தி துறையும்.

செவ்வாய், 19 ஜூலை, 2022

அரசு கட்டடங்களுக்கு கால்கோள் விழா நடத்தும்போது ‘பூமி பூஜை’ - சடங்கு - வழிபாடு என்பன அரசமைப்புச் சட்டத்திற்கும், பகுத்தறிவுக்கும் முரணானவை! - கி.வீரமணி


 

அரசு கட்டடங்களுக்கு கால்கோள் விழா நடத்தும்போது ‘பூமி பூஜை’ - சடங்கு - வழிபாடு என்பன அரசமைப்புச் சட்டத்திற்கும், பகுத்தறிவுக்கும் முரணானவை!

முதலமைச்சருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தனித்தன்மையைப் பாதுகாக்கவேண்டும்!

‘திராவிட மாடல்’ என்பது உண்மையான மதச்சார்பின்மையைக் காப்பதே என்பதை வலியுறுத்திய, தருமபுரி தி.மு.க. எம்.பி. டாக்டர் செந்தில்குமார் அவர்களைப் பாராட்டுகிறோம்!

கடந்த ஓராண்டு ‘திராவிட மாடல்’ ஆட்சியில், செயற்கரிய செய்யும் அதன் முதலமைச்சர், சமூகநீதிக்கான சரித்திர நாயகரின் சாதனைகளை பிற மாநிலங்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் வியந்தும், விரும்பியும் பார்க்கின்ற நிலையில், அதன் தனித்தன்மையே மதச்சார்பின்மை என்னும் சிறப்புடையதாகும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முதலமைச்சரது தலைமையில் கடந்த 8 ஆண்டுகளாகவே - பதவிக்கு வருமுன்னரே அக்கூட்டணி மிகுந்த ஒற்றுமையுடனும், ஒருங்கிணைப்புடனும் செயல்பட்டு, தற்போதும் அவ்வாறே நடைபெற்று வருகிறது என்பது எடுத்துக்காட்டானதாகும்.

இந்த நிலையில், இதற்கு எதிராக சில அரசு நிகழ்வுகளை - பழைய (அ.தி.மு.க.) ஆட்சியின் தொடர்ச்சிபோல, நடத்துவது எவ்வகையிலும் விரும்பத்தக்கது அல்ல.

மதச்சார்பின்மை தத்துவத்திற்கும், பகுத்தறிவுக்கும் முரணானவையே!

அரசு கட்டடங்களுக்கு கால்கோள் விழா நடத்தும்போது ‘பூமி பூஜை’ என்ற சடங்கு, அதற்குப் பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து வந்து, வடமொழி மந்திரம் ஓதச் சொல்வது, அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட அதற்கு வழிபாடு நடத்துவதுபோன்ற தோற்றம் - இவையெல்லாம் அரசமைப்புச் சட்டத்தின் ‘செக்யூலர்’ (Secular) என்ற மதச்சார்பின்மை தத்துவத்திற்கும், பகுத்தறிவுக்கும் முரணானவையே!

அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் காலத்தில், தி.மு.க. ஆட்சியில் இப்படி ஏதும் நடக்க அவர்கள் அனுமதித்தது கிடையாது.

‘மதச்சார்பற்ற’ என்றால், ‘‘அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லுதல்’’ என்ற ஒரு தவறான வியாக்கியானம் நமது அரசியல்வாதிகளிடையே புழக்கத்திற்கு விடப்பட்டதே - அடிப்படையில் அது நியாயமல்ல - திரிபுவாத விளக்கம் ஆகும்!

தருமபுரி டாக்டர் எஸ்.செந்தில்குமார் எம்.பி.,  அவர்களின் கேள்வி நியாயமானதே!

இதன்படி பார்த்தால்கூட, அரசு அடிக்கல் நாட்டுவிழாவில், அனைத்து மதத்தினர், மற்றவர் அனைவரையும்தானே அழைத்திருக்கவேண்டும்; வெறும் ஒரு மத (ஹிந்து சனாதன)ச் சடங்கு - அதுவும் நடத்தப்படவேண்டிய அவசியம் என்ன என்று தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் அவர்கள் கேள்வி எழுப்பியது மிகவும் சரியானது மட்டுமல்ல; நியாயமும், தேவையானதும் சட்டப்படியானதுமாகும்.

காரணம், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிரமாணம் எடுத்துள்ள நிலையில், அதனடிப்படையே ‘‘மதச்சார்பற்ற சமதர்ம ஜனநாயகக் குடியரசு’’ என்பதாலும், அதனைக் காப்பாற்றுவதற்கே அப்பதவி என்பதுதானே உறுதிமொழியின் தத்துவம்?

அதுமட்டுமா?

அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ(எச்) என்ற பிரிவு வலியுத்துவது என்ன?

நமது அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ(எச்) என்ற பிரிவு அடிப்படைக் கடமைகளை வலியுறுத்துவதில் ‘‘அறிவியல் மனப்பாங்கு, கேள்வி கேட்டுச் சிந்திக்கும் ஆற்றல், சீர்திருத்தம், மனிதாபிமானம் - இவற்றைப் பரப்புதல் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை’’ என்று வலியுறுத்துகிறது.

எனவே, அவர் எழுப்பிய கேள்வி நியாயமானது - தேவையானதும்கூட.

தி.மு.க. ஒரு தனித்தன்மையான அரசியல் கட்சி - அதன் சட்ட திட்டங்களில் முதன்மையாக பகுத்தறிவைப் பரப்புவது என்பதற்காக உள்ள அரசியல் கட்சி என்பது விளக்கமாகும்!

காங்கிரஸ் எம்.பி., ஒருவர், ‘‘அது அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை; கார் வாங்கினால்கூட எலுமிச்சம் பழத்தை கார் டயருக்கடியில் வைத்து, புது காரை எடுப்பார்கள்’’ என்று கூறியிருப்பது பொருத்தமற்ற வாதம் ஆகும்.

தனிப்பட்ட நபர்களின் விருப்பு, நம்பிக்கைக்கு எதிரானதல்ல இந்தக் கோரிக்கை.

அரசு சார்பான பொது நிகழ்ச்சியை, மதச்சார்பின்மை என்ற கொள்கை உடைய ஆட்சியில் இப்படி நடத்தலாமா என்பதுதான் கேள்வி.

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்த நிலையில், உடனடியாக அரசு அலுவலகங்களில் எந்த மத சம்பந்தமான கடவுள் படங்களும், அடையாளங்களும் இருக்கக் கூடாது என்று சுற்றறிக்கையை அனுப்பியதையும் இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்.

முதலமைச்சருக்கு  ஓர் அன்பான வேண்டுகோள்

நமது முதலமைச்சருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:

அருள்கூர்ந்து அரசு சார்பான நிகழ்ச்சியில், இதுபோன்ற மதச் சடங்குகள், புரோகிதர்கள் வடமொழி மந்திரம் ஓதி நடத்தப்படுவது தவிர்க்கப்பட உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றிய நடவடிக்கை

காரணம், அரசு அனைவருக்கும் உரியது; அனைத்து மதம், மதம் சாராதவர்கள் அனைவருக்கும் உரியது. அத்துணை பேரையும் அழைக்கும் முறையும்கூட நடைமுறை சாத்தியம் அல்ல; பொது நிகழ்ச்சிகளில் சடங்கு சம்பிரதாயங்களைத் தவிர்ப்பது, சனாதனத்திற்கு விடை கொடுத்து, அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றிய நடவடிக்கையாகவே இருக்கும்.

மதவெறியை, மதக் கலவரங்களை திருவிழாக்களில் அதிகம் பரப்பிடும் ஆர்.எஸ்.எஸ். போன்ற ஆபத்தான அமைப்புகள் அதில் கொடிகட்டி ஊடுருவுவதும் வேகமாக நடைபெறும் நிலையில், அரசு நிகழ்வுகளில் மதச்சடங்குகளைத் தவிர்ப்பது இன்றியமையாததாகும்.

இதுகுறித்து துணிவுடனும், கொள்கைத் தெளிவுடனும் ‘திராவிட மாடல்’ என்பது உண்மையான மதச்சார்பின்மையைக் காப்பதே என்பதை வலியுறுத்திய, தருமபுரி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் அவர்களைப் பாராட்டுவதுடன், அவரது உணர்வுகள் தனிப்பட்ட உணர்வல்ல - தி.மு.க.வில்  அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிக்காத்த உணர்வுக்கான அடையாளமே!

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தனித்தன்மையைப் பாதுகாக்க வேண்டும்!

அவர்கள் வழியிலும் பிறழாத நமது முதலமைச்சர் அவர்கள், இதிலும் முன்வந்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தனித்தன்மையைப் பாதுகாக்கக் கேட்டுக் கொள்கிறோம் - உரிமையுடன்!

புதுமை கண்டுபிடிப்புகள் முக்கியமானதாக உள்ள நிலையில், அது உள்நாட்டில் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.-பிரதமர் திரு நரேந்திர மோடி


 பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் நடைபெற்ற  கடற்படை புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தற்சார்பு அமைப்பின் ‘ஸ்வாவ்லம்பன்’ கருத்தரங்கில்  உரையாற்றினார்.

இந்திய கடற்படையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ‘ஸ்பிரிண்ட் சேலஞ்சஸ்’ திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.  அப்போது பேசிய அவர், 21-ம் நூற்றாண்டில் இந்திய பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு கொள்கை  மிக முக்கியமானது என்று கூறினார்.

புதுமை கண்டுபிடிப்புகள் முக்கியமானதாக உள்ள நிலையில், அது உள்நாட்டில் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான ஆதாரங்களாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் புதிய தீர்மானத்தை இந்திய அரசே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.- DR.S.ராமதாஸ்


 இலங்கைக்கு உதவி: இனச் சிக்கலைத்

தீர்க்க நிபந்தனை விதிக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்தும், அந்த நாட்டிற்கு உதவுவது குறித்தும் தீர்மானிப்பதற்காக  தில்லியில் நாளை நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் நிபந்தனைகள் இல்லாமல் செய்யப்படும் உதவிகள் அங்கு நிலவும் இனப்பாகுபாட்டை அதிகரிக்கவே வகை செய்யும் என்பதால், அதை உணர்ந்து மத்திய அரசு உத்திகளை வகுக்க வேண்டும்.

வெள்ளி, 15 ஜூலை, 2022

ரத்த சோகை போன்ற மரபணு சார்ந்த நோய்களைக் கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை வழிமுறைகளின் முக்கியத்துவத்தை குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

 


தலசீமியா மற்றும் அரிவாள் வடிவம் பெற்ற சிவப்பணுவால் உருவாகும் ரத்த சோகை போன்ற மரபணு சார்ந்த நோய்களைக் கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை வழிமுறைகளின் முக்கியத்துவத்தை குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். மரபணு சார்ந்த நோய்களை துவக்கத்திலேயே கண்டறிந்து, அவற்றைக் குணப்படுத்துவதற்கு, குழந்தைகளிடையே மிகப்பெரிய அளவில் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களை அவர் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற வைப்பதற்கு பல்வேறு அதிரடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.- கே.எஸ்.அழகிரி

 தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற வைப்பதற்கு பல்வேறு அதிரடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. எட்டு ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிற நிலையிலும், பொருளாதார பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிற சூழலிலும் பா.ஜ.க. மீது மக்கள் கடும் சினத்துடன் உள்ளனர். இதனால், தமிழக மக்களிடம் பா.ஜ.க. செல்கிற போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு வித்திடுகின்றன. 

ஞாயிறு, 10 ஜூலை, 2022

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் வசூலிக்கும் சேவைக் கட்டண வழிகாட்டுதல்களை உடனடியாக அமல்படுத்துவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

 ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூலம் சேவை கட்டணம் வசூலிக்கப்படுவது  தொடர்பாக வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான புகார்கள் பெறப்பட்டால், மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதல் மீறல் தொடர்பாக விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்திய உலகக் கண்ணோட்டத்தை அறிந்துகொள்ள, அவர் சமஸ்கிருதத்தை கற்பது அவசியம்.- திரு.எம்.வெங்கையா நாயுடு


 சமஸ்கிருத மொழியை கற்பதற்கு புத்துயிரூட்ட, மக்கள் இயக்கம் தொடங்கப்படுவதுடன்,  இந்தியாவின் மிகவும் பழமையான செம்மொழி இலக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மீள் உருவாக்கம் செய்ய, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பாடுபட வேண்டுமென, குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.   “அரசியல் சட்ட விதிமுறைகளாலோ அல்லது அரசாங்க உதவி அல்லது பாதுகாப்பு மூலம் மட்டும், ஒரு மொழியை பாதுகாத்துவிட முடியாது“  என்றும் அவர் கூறியுள்ளார்.  

சனி, 9 ஜூலை, 2022

நாட்டில் பெண்களின் விடுதலைக்கு இடையூறாக உள்ள தடைகளை நீக்க வேண்டும் - குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு


 நாட்டில் பெண்களின் விடுதலைக்கு இடையூறாக உள்ள தடைகளை நீக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். நமது நாகரிக நெறிமுறைகள் பல்வேறு துறைகளில் பெண்களின் சம பங்களிப்பை ஊக்குவித்தாலும், பல துறைகளில் பெண்கள் தங்கள் முழுத் திறனையும் இன்னும் உணரவில்லை என்று அவர் கூறினார்.

இன்று பெங்களூருவில் உள்ள மவுண்ட் கார்மல் கல்லூரியின் வைரவிழா கொண்டாட்டங்களைத் தொடக்கிவைத்து உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், அரசுகளின் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் பெண்களின் கல்விக்கு அதிக ஊக்குவிப்பு தேவை என்று கூறினார். வாய்ப்பு கிடைக்கும்போது, பெண்கள் எல்லா துறைகளிலும் வென்று நிரூபித்துள்ளனர் என்றார் அவர்.

பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலத் திட்டங்களின் அவசியத் தூதுவர்கள். - மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

 பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள் பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களின் அத்தியாவசியத் தூதர்கள் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.  கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய ஏழைகள் மற்றும் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றின் பலனையும், கடைசி வரிசையில் உள்ள கடைசி மனிதர் வரை, அடிமட்டத்தில் கொண்டு சேர்ப்பதில் பஞ்சாயத்து அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு தனிப் பங்கு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

கொசு ஒழிப்பு நடவடிக்கையை மக்கள் இயக்கமாகத் தொடங்குவதற்கு மக்கள் பங்களிப்பு முக்கியமானது.- டாக்டர் மன்சுக் மாண்டவியா

 வீடுகள், வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய மக்களையும், சமுதாயங்களையும்  ஈடுபடுத்தும் வகையில், அவர்களது பங்கேற்புடன் மக்கள் இயக்கங்களைத் தொடங்குமாறு 13 மாநிலங்களுக்கு (உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், திரிபுரா, டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு) டாக்டர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.  கொசு ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற மக்களின் பங்கேற்பு முக்கியமானது. சுற்றுப்புறங்களில் கொசு  இனப்பெருக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்த, நமது சொந்த வீடுகள் மற்றும் சமூகங்களுடன் தொடங்குவோம் என கொசு மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தயார்நிலையை ஆய்வு செய்தபோது மத்திய சுகாதார அமைச்சர் கூறினார். மழைக்காலம் தொடங்கவுள்ளதை அடுத்து இன்று காணொலி மூலம் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் , தில்லி துணை முதலமைச்சர் திரு மணீஷ் சிசோடியா, பீகார் சுகாதார அமைச்சர் திரு மங்கள் பாண்டே, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  திரு மா. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்,  ஜார்கண்ட் மாநில சுகாதார அமைச்சர் திரு பன்னா குப்தா ஆகியோர் மெய்நிகர் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

வெள்ளி, 8 ஜூலை, 2022

“மின்சாரம்” மற்றும் “எடுத்துச்செல்லுதல்” “நடவடிக்கைகள் நாட்டின் எரிசக்தி வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.

 கட்டமைப்பு வளர்ச்சிக்கான தேசிய பெருந்திட்டம்- பிரதமரின் கதி சக்தியை, அக்டோபர் 2021ல் பிரதமர் தொடங்கி வைத்தார். நெடுஞ்சாலை, ரயில்வே, விமானப்போக்குவரத்து, எரிவாயு, மின்சாரம் எடுத்துச்செல்லுதல், புதுபிக்கத்தக்க எரிசக்தி போன்ற அனைத்து  பல்வேறு அமைச்சகங்கள்/ கட்டமைப்பு திட்டமிடலை ஒருங்கிணைந்த ஒற்றை தொலைநோக்கின் கீழ் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்.  இதுவரை இல்லாத இதுபோன்ற முன்முயற்சிகள் நாடு முழுவதும் கட்டமைப்பு வளர்ச்சியை,  குறிப்பாக, “மின்சாரம்” மற்றும் “எடுத்துச்செல்லுதல்” “நடவடிக்கைகள் நாட்டின் எரிசக்தி வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.

“தற்சார்பு இந்தியா” இந்தியா குறிக்கோளை பூர்த்தி்செய்யும் விதமாக, குஜராத்தின் பைசாக்-என் உருவாக்கிய உள்நாட்டு இஸ்ரோ படத்தொகுப்புடன் நிலப்பரப்பு திட்டமிடல் சாதனங்கள் உட்பட தொழில்நுட்பத்தை விரைவாக பயன்படுத்தும் பல்வேறு பொருளாதார மண்டலங்களுக்கு பல்வகை இணைப்பு வசதியை வழங்குவதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

சாத்தியமான ஸ்டார்ட்-அப்களை அணுகிஅவர்களுக்கு ஆதரவளிக்குமாறு மத்தியஅமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தல்


 சாதிக்கும் ஆற்றல் கொண்ட ஸ்டார்ட்-அப்களை அணுகி அவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் மற்றும் BIRAC உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் ஆதரவளிக்க வேண்டும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ( தனிப்பொறுப்பு), புவி அறிவியல் ( தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுக் குறை தீர்வு , ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  கேட்டுக் கொண்டார்

பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஒன்பதரை ஆண்டு கால ஆட்சியில் தான் கல்வியில் புரட்சி நடந்தது.- கே.எஸ்.அழகிரி


 பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஒன்பதரை ஆண்டு கால ஆட்சியில் தான் கல்வியில் புரட்சி நடந்தது. மதிய உணவுத் திட்டம், தொழில் வளர்ச்சி, மின்துறையில் சாதனைகள், பாசனத் திட்டங்கள், நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள், மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் பஞ்சாயத்து ராஜ் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அவரது ஆட்சிக் காலத்தில் தான் நிறைவேற்றப்பட்டது. அதனால் தான் காமராஜர் ஆட்சிக் காலத்தை தமிழகத்தின் பொற்காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்து பாராட்டுகிறார்கள். 

டெல்லி-மும்பை விரைவுச்சாலை மற்றும் பல புதிய சாலைத்திட்டங்கள் மகாராஷ்டிராவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் - நிதின் கட்கரி


 அமைக்கப்பட்டு வரும் தில்லி-மும்பை விரைவுச்சாலை, நாக்பூர்-மும்பை சம்ரித்தி மஹாமார்க் மற்றும் பல புதிய சாலைத் திட்டங்கள் மகாராஷ்டிராவில் மேலும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறினார். மும்பையில் இன்று சிஐஐ ஏற்பாடு செய்திருந்த இரண்டாவது 'சங்கல்ப் சே சித்தி - புதிய இந்தியா, புதிய தீர்வு மாநாட்டில்' பேசிய திரு கட்கரி, மும்பையை தில்லி, புனே மற்றும் பெங்களூருவுடன் இணைக்கும் சிறந்த உள்கட்டமைப்பு திட்டங்கள் தயாராகி வருவதாகக் கூறினார்.

ஏழை விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டைகள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருமதி நிர்மலா சீதாராமன் ஆய்வு


 கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத் துறையிலிருந்து ஏழை விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்குவதில் உள்ள முன்னேற்றம் குறித்து, ஆய்வு செய்ய வங்கிகள் மற்றும் மண்டல கிராமப்புற வங்கிகளுடன் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா கலந்து கொண்டார்.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில், இந்த விஷயத்தில் வங்கிகள் இணக்கமாக நடந்து கொள்ள சில நடவடிக்கைகளை திரு பர்ஷோத்தம் ரூபாலா பரிந்துரைத்தார். நிராகரிப்பதற்கான காரணங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டால், கள அலுவலர்கள் படிவங்களைச் சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்க முடியும் என்று அவர் கூறினார். மல்தாரி (குமந்து) சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உழவர் கடன் அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் பரிந்துரைத்தார். மேலும் ஜாமீன் எதுவும் கொடுக்க முடியாத ஏழை மீனவர்களுக்கு கடன் அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

வியாழன், 7 ஜூலை, 2022

இளைஞர்களின் மனதில் பிரிவினைவாத சிந்தனையை விதைப்பதே திமுகவின் நோக்கம் - வானதி சீனிவாசன்


 இளைஞர்களின் மனதில் பிரிவினைவாத சிந்தனையை விதைப்பதே திமுகவின் நோக்கம்

ஜூன் 3-ம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற, திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசிய, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான திரு. ஆ.ராசா, “ 'பிரிவினை வேண்டும். தனித் தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன்வாருங்கள். சுதந்திர தமிழ்நாடு தான் நம்முடைய கடைசித் தீர்வு' என்ற பெரியார் சொன்னார். ஆனாலும், இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்றோம். முதல்வர் ஸ்டாலின் அண்ணா வழியில் பயணம் செய்கிறார். எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனி நாடு கேட்க வைத்து விடாதீர்கள்" என பேசியுள்ளார்.

கொரோனா காலத்திலும், இந்தியாவில் இருந்து 3.75 லட்சம் கோடி விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.- நரேந்திரசிங் தோமர்


 மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திரசிங் தோமர், சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய சபை மற்றும் தேசிய பங்குச் சந்தையின் கூட்டு கூட்டத்தை, குவாலியரில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு.தோமர், விவசாய சகோதார, சகோதரிகளின் கடின உழைப்பு மற்றும் விவசாயிகளின் நலன் சார்ந்த அரசின் கொள்கைகள் காரணமாக, உலகில், அதிக விவசாய விளைபபொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் முதல் இரண்டு இடங்களில் இந்தியா உள்ளது என்றார். இந்தியாவின் இயற்கை வேளாண் பொருட்களுக்கு உலக அளவில் அதிகதேவை இருக்கிறது. கொரோனா காலத்திலும், இந்தியாவில் இருந்து 3.75 லட்சம் கோடி விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது நல்ல அறிகுறி. இந்நிலையில், நமது விவசாயப் பொருட்களின் தரத்தை நிலைநிறுத்தி, அது உலகத்தரத்தை எட்டுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

பங்காளி யார்? பகையாளி யார்? என்று புரிந்துகொள்ளாமல் பகையாளியிடம் அடமானம் போகலாமா அ.தி.மு.க.? - கி.வீரமணி

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!

தி.மு.க. - அ.தி.மு.க. இணைப்புப்பற்றி கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் என்னென்ன?

ஜெயலலிதா மறைவிற்குப் பின் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவுகளை (கூவத்தூர்) பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற தி.மு.க. தலைவர் முயற்சிக்காதது அவரின் கண்ணியமான அரசியல் அணுகுமுறை

பங்காளி யார்? பகையாளி யார்? என்று புரிந்துகொள்ளாமல் பகையாளியிடம் அடமானம் போகலாமா அ.தி.மு.க.?

எந்தத் தந்திரம் செய்தாலும் தி.மு.க. என்ற எஃகு கோட்டையை பி.ஜே.பி. அசைத்துப் பார்க்க முடியாது என்பது நினைவிருக்கட்டும்!

தி.மு.க.வின் பாசறைக் கூட்டம் பயனுள்ளது - தொடரட்டும்!

திராவிட இயக்க வரலாற்றுப் பூர்வமான அறிக்கை

அ.தி.மு.க. அதன் பொன்விழாவைக் கொண்டாடி மகிழவேண்டிய தருணத்தில், ‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையிலும்‘, பச்சையான நிர்வாணத் தன்மையில் பளிச்சிடும் தலைமைப் பதவி வெறிக்காக ‘சர்வபரித் தியாகத்தை’ நடத்தி, கொள்கைகளைக் காவு கொடுத்தும், டில்லி சரணம் பாடி, அடகு வைத்த பொருள்பற்றிக் கவலைப்படாமல், அந்தப் பொருளை யாரோ ஒருவர் எடுத்துக்கொள்வதாக ஒரு பொய்யழுகை அழுவதும், போலித்தனத்தின் போக்கிடமாவதும் எவ்வகையிலும் பொது நிலையாளர்களால், அக்கட்சியின் கொள்கை உள்ளத்தோடு மிஞ்சியுள்ள ஒரு சில  உண்மைத் தொண்டர்களான சகோதரர்கள், ‘ரத்தத்தின் ரத்தங்களால்’ ஒருபோதும் ஜீரணிக்க  முடியாத ஒன்றாகும்.

மத்திய அரசு விரைந்து முடிவெடுத்து ஓபிசி தொகுப்பு முறை உள் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 ஓபிசி உள்ஒதுக்கீடு: ரோகிணி ஆணைய

அறிக்கை பெறுவதில் தாமதம் கூடாது! - DR.S.ராமதாஸ்

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டை பல்வேறு தொகுப்புகளாக பிரித்து வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக  அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் 13-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. 2017-ஆம் ஆண்டில் 3 மாத பதவிக்காலத்துடன் அமைக்கப்பட்ட ஆணையம், நான்கரை  ஆண்டுகளுக்கு மேலாகியும் அதன் அறிக்கையை தாக்கல் செய்யாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

புதன், 6 ஜூலை, 2022

இந்திய - மியான்மர் எல்லையில் இரண்டு தமிழர்கள் சுடப்பட்டு கொலை! - வைகோ கண்டனம்

 இந்திய - மியான்மர் எல்லையில்

இரண்டு தமிழர்கள் சுடப்பட்டு கொலை! - வைகோ கண்டனம்

இந்திய - மியான்மர் எல்லையில் உள்ள மணிப்பூரின் மோரே எனும் பகுதியில் வசித்து வந்த தமிழ்நாட்டின் ஆட்டோ ஓட்டுநரான பி.மோகன், வியாபாரியான எம்.அய்யனார் ஆகியோர் தங்கள் நண்பரைப் பார்ப்பதற்காக தாமு நகரை அடைந்தபோது, என்.எம்.ஆர். என்ற பகுதியில் பர்மிய தீவிரவாத அமைப்பினரால் வழிமறிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர்.

மின்வாரிய ஆள்தேர்வு அறிவிக்கை ரத்தால் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்பு: உடனடியாக தேர்வு நடத்த வேண்டும்! - DR. அன்புமணி ராமதாஸ்


மின்வாரிய ஆள்தேர்வு அறிவிக்கை ரத்தால் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்பு: உடனடியாக தேர்வு நடத்த வேண்டும்!

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பல்வேறு நிலைகளில் 5,318 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை  தேர்ந்தெடுப்பதற்காக இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளை மின்சார வாரியம்  ரத்து செய்திருக்கிறது. மின்வாரியத்தின் இந்த நடவடிக்கையால், ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் எப்பாடுபட்டாவது பா.ஜ.க.வை வளர்க்க வேண்டுமென்று அண்ணாமலை அதிரடி போராட்டங்களை அடிக்கடி நடத்தி வருகிறார். - கே.எஸ். அழகிரி


 தமிழகத்தில் எப்பாடுபட்டாவது பா.ஜ.க.வை வளர்க்க வேண்டுமென்று அண்ணாமலை அதிரடி போராட்டங்களை அடிக்கடி நடத்தி வருகிறார். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுவதால் தொடர்ந்து 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், அதைத் தொடர்ந்து ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக்கு அமோக ஆதரவை வழங்கி வெற்றி மேல் வெற்றியை மக்கள் வழங்கி வருகிறார்கள். தமிழக பா.ஜ.க.வை அனைத்து தேர்தல்களிலும் முற்றிலும் நிராகரித்து வருகிறார்கள். இதன்மூலம் தமிழக பா.ஜ.க.வின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறிவிட்டது.

செவ்வாய், 5 ஜூலை, 2022

பிரெஞ்ச் விமான என்ஜின் உற்பத்தியாளரான (SAFRAN) குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி புதுதில்லியில் பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் சந்திப்பு.

 


பிரெஞ்ச் நிறுவனமான சாஃப்ரான் குழுமத்தின் உயர்மட்ட குழுவினர், புதுதில்லியில் ஜூலை 5, 2022 அன்று பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர்.  பயணியர்  மற்றும் போர் விமானங்களுக்கான அதிநவீன என்ஜின் அசல் பாகங்கள்  உற்பத்தியாளர்களில்,சாஃப்ரான் குழுமம் முன்னோடி நிறுவனமாக திகழ்கிறது.

பசிபிக் வளைய போர்ப்பயிற்சி ஒத்திகையான ரிம்பாக்கில் (RIMPAC) இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சாத்புரா மற்றும் பி-81 பங்கேற்பு.


 பசிபிக் வளைய போர்ப்பயிற்சி ஒத்திகையான ரிம்பாக்கில் (RIMPAC) உலகின் மிகப் பெரிய பன்னாட்டு கடற்படை ஒத்திகையில் பங்கேற்பதற்காக, இந்திய கடற்படையின்  முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் சாத்புரா போர்க்கப்பலும், பி-81 எல்ஆர்எம்ஆர்ஏஎஸ்டபிள்யூ விமானமும், ஹவாய் தீவின் பேர்ல்  ஹார்பர் துறைமுகத்திற்கு சென்றுள்ளன. இதில் சாத்புரா கப்பல் 27 ஜூன் 2022 அன்று ஹவாயை சென்றடைந்த நிலையில், பி-81 விமானம்  2 ஜூலை 2022 அன்று சென்றடைந்தது.   துறைமுக வளாகத்தில் நடைபெறும் இந்த ஒத்திகையின் ஒரு பகுதியாக, கருத்தரங்குகள், திட்டமிடல், விவாதங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஒத்திகையில் பங்கேற்றுள்ள கடற்படை வீரர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க அருங்காட்சியக கப்பலான யுஎஸ்எஸ் மிசோரியை பார்வையிட்டதுடன் இரண்டாம் உலகப் போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு, யுஎஸ்எஸ் அரிசோனா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக, காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.- DR.அன்புமணி ராமதாஸ்

 மீண்டும் தொடங்கிய மீனவர்கள் கைது:

நிரந்தர தீர்வு காண நடவடிக்கை தேவை! - DR.அன்புமணி ராமதாஸ்

வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். இரு மாத மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இரண்டாவது வாரத்திலேயே கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக மீனவர்களை இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து கைது செய்து, இலங்கை சிறையில் அடைக்கும் சிங்கள அரசின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவது எப்போது? - வைகோ

 இலங்கைக் கடற்படை அட்டூழியத்திற்கு

முற்றுப்புள்ளி எப்போது? - வைகோ கேள்வி

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோரைக் கொண்ட அமர்வில், கடந்த மார்ச் கடைசி வாரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது.

சனி, 2 ஜூலை, 2022

இந்தியா நீடித்த தூய்மையான எரிசக்தி ஒத்துழைப்பின் இலக்குகளை அடைவதற்கான முன்னேற்றத்தை விரைவுபடுத்தவும் சூரியசக்தி டெகத்லான் இந்தியா உதவிகரமாக உள்ளது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.


 பருவநிலை மாற்றம் தொடர்பான  COP26 உச்சிமாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திரமோடி அளித்த வாக்குறுதிப்படி,   2030-க்குள் புதைபடிம எரிபொருள் பயன்பாடு அல்லாத 500ஜிகாவாட் மின் உற்பத்தித் திறனை இந்தியா அடைவதற்கு,    “கார்பன் சமநிலை“ கட்டட கட்டுமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதோடு, அவற்றை தொழில்துறையுடன் இணைக்க வேண்டுமென, மத்திய அறிவியல்- தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திரசிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

வெள்ளி, 1 ஜூலை, 2022

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் 1606 மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி மற்றும் உபகரணங்கள் வழங்கும் முகாம்.

 மத்திய சமூகநீதி மற்றும்  அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகம் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறையில், மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி மற்றும், செயற்கை கை,கால்கள் வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது.  மத்திய சமூகநீதி மற்றும்  அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ஏ. நாராயணசாமி, காணொலி வாயிலாக இந்த முகாமை தொடங்கிவைத்தார்.

மத அடிப்படை வாதம் என்பது இருபுறமும் கூர்மையுள்ள கத்தி போன்றது என்பதை மதவெறியர்கள் யாராக இருந்தாலும் உணர வேண்டும்.- வைகோ

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் முகமது நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திப் பேசிய பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் நுபூர் சர்மாவைக் கண்டித்து உலகின் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கொதித்து எழுந்தன. இந்தியா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரின. பன்னாட்டு அளவில் கடும் கண்டனங்கள் எழுந்ததால் பா.ஜ.க. விலிருந்து நுபூர் சர்மா நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்தது. ஆனால் அவரை கைது செய்யவோ, சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளவோ பா.ஜ.க. அரசு முன்வரவில்லை.

ஆனால் நுபூர் சர்மா இறைதூதர் நபிகள் பற்றி பேசிய கருத்தையும், அதனை ட்விட்டரில் ஆதரித்து பதிவு செய்த டெல்லி பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நவீன்குமார் ஜிண்டால் பற்றியும் இணையதள செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த முகமது ஜூபைர், ட்விட்டரில் பதிவு செய்து வெளிப்படுத்தியதால், அவர் மீது வழக்குத் தொடர்ந்து கைது செய்துள்ளது டெல்லி காவல்துறை.

தானியங்கி பறக்கும் பிரிவு தொழில்நுட்ப செயல்விளக்க விமானத்தை டிஆர்டிஓ(DRDO) முதல்முறையாக வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.


 தானியங்கி பறக்கும் பிரிவு தொழில்நுட்ப செயல்விளக்க விமானத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள வான்சோதனை தளத்தில் ஜூலை 1,2022 அன்று  முதல்முறையாக வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கக்கூடிய இந்த விமானத்தின், புறப்பாடு, பறக்கும் வழி, தரையிறங்குதல் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் துல்லியமாக அமைந்தது. வருங்காலத்தில் தயாரிக்கப்படும் ஆளில்லா விமானங்களுக்கான முக்கிய தொழில்நுட்பத்தை  பயன்படுத்துவதில் இந்த சோதனை ஓட்டம் மாபெரும் சாதனை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  நீடித்த பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் தற்சார்பு அடைவதற்கும் இது முக்கியம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.