செவ்வாய், 31 மே, 2022

‘ஆபரேஷன் செம்மரக்கட்டை’-ன் மூலம் ரூ.11.70 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வு பிரிவு கைப்பற்றியுள்ளது


 அகமதாபாத்தின் சபர்மதியில் உள்ள உள்நாட்டு சரக்குப் பெட்டக முனையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு கடத்தப்படவிருந்த 14.63 மெட்ரிக்டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.11.70 கோடியாகும். நாட்டின் இயற்கை பாரம்பரியத்தை பேணி பாதுகாப்பது என்ற உறுதிப்பாட்டின்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2014 முதல் நமது நாடு அரசியல் உறுதியை காண்கிறது. சீர்திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. - பிரதமர் திரு.நரேந்திர மோடி


 ஐதராபாதில் உள்ள இந்திய வணிகவியல் பள்ளியின் 20 ஆண்டுகள் நிறைவு விழாவில் பங்கேற்ற பிரதமர் திரு.நரேந்திர மோடி, 2022-க்கான வணிகவியல் முதுநிலைக் கல்வி பயின்றோருக்கு பட்டமளிக்கும் விழாவில் உரையாற்றினார்.

இந்தக் கல்வி நிறுவனம் தற்போதைய புகழை அடைவதற்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் புகழாரம் சூட்டினார். 2021-ல் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இந்தக் கல்வி நிறுவனத்தை நாட்டுக்கு அர்ப்பணித்ததை அவர் நினைவுகூர்ந்தார். அதன் பிறகு 50,000-க்கும் அதிகமான அதிகாரிகள் இந்திய வணிகவியல் பள்ளியில் பட்டம் பெற்றுள்ளனர். இன்று இந்த நிறுவனம் ஆசியாவிலேயே முதன்மையான வணிகவியல் பள்ளியாக விளங்குகிறது. இங்கிருந்து பட்டம் பெற்றவர்கள் முதன்மையான நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள் என்றும்  நாட்டின் வணிகத்திற்கு ஊக்கமளித்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார். இங்கு பயின்ற மாணவர்கள் நூற்றுக்கணக்கான புதிய தொழில்களை தொடங்கி யுனிகார்ன்களை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். “இது ஐஎஸ்பி-ன் சாதனை என்றும், இது ஒட்டு மொத்த தேசத்திற்கு பெருமை சேர்ப்பதாகும்” என்றும் அவர் கூறினார்.

திங்கள், 30 மே, 2022

பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் கடந்த 8 ஆண்டுகாலத்தில் நிறைவேற்றவில்லை. ஆனால், மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருவதையே மோடி ஆட்சி உறுதி செய்கிறது. - கே.எஸ். அழகிரி


 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறி பொறுப்பேற்ற பிரதமர் மோடி, மே 30 ஆம் நாளன்று 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்று கூறினார்கள். கருப்புப் பணத்தை ஒழிக்க பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து ரூபாய் 5 லட்சம் கோடி கருப்புப் பணம் கைப்பற்றப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், 96 சதவிகித ரொக்க பணம் வங்கிகளுக்கே திரும்பவும் வந்துவிட்டது. இதனால் 140 பேர் உயிரிழந்தனர். 35 லட்சம் பேர் வேலையிழந்தனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதுதான் மோடியின் கருப்புப் பண ஒழிப்பினால் கிடைத்த பலனாகும்.

புதன், 25 மே, 2022

இந்தியா-பங்களாதேஷ் கடற்படை கூட்டுப்பயிற்சி போங்கோசாகர் தொடங்கியது

இந்தியா-பங்களாதேஷ் கடற்படை இடையேயான மூன்றாவது போங்கோசாகர் கூட்டுப்பயிற்சி பங்களாதேஷில் உள்ள மோங்கலா துறைமுகத்தில் மே 24, 2022-ல் துவங்கியது. துறைமுகப் பயிற்சி மே 24, 25 ஆகிய நாட்களிலும், அதைத் தொடர்ந்து கடற்பயிற்சி வங்கக்கடலின் வடக்குப் பகுதியில் மே 26, 27 ஆகிய நாட்களிலும் நடைபெறுகிறது.  இருநாட்டு கடற்படையின் திறனை மேம்படுத்தும் நோக்கில் போங்கோசாகர் கூட்டுகடற்படை பயிற்சி நடைபெறுகிறது.

செவ்வாய், 24 மே, 2022

விலை உயர்வை தாங்க முடியாது: சமையல் எரிவாயு மானியத்தை மீண்டும் வழங்குக! - DR.S.ராமதாஸ்



விலை உயர்வை தாங்க முடியாது: சமையல்
எரிவாயு மானியத்தை மீண்டும் வழங்குக! - DR.S.ராமதாஸ்

சமையல் எரிவாயுவுக்கான மானியம் நிறுத்தப்பட்டது, நிறுத்தப்பட்டது தான் என்றும், அதை மீண்டும்  வழங்க வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசின் உயரதிகாரிகள் கூறியுள்ள கருத்துகள் பேரதிர்ச்சி அளிக்கின்றன. சமையல் எரிவாயு விலை மாதாமாதம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், அதை சமாளிக்க மீண்டும் மானியம் வழங்கப்படாவிட்டால் அது ஏழை, நடுத்தர மக்களை பெருந்துயரத்தில் ஆழ்த்தி விடும்.

திங்கள், 23 மே, 2022

மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருப்பதுதான் ‘மாநில சுயாட்சியா’? மாடல் ஆட்சியா? - டாக்டர் K. கிருஷ்ணசாமி



மத்திய அரசு, ஒரு வருடத்தில்  இருமுறை பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!
’திராவிட ஸ்டாக்கிஸ்ட் அரசு’ விலையைக் குறைக்க மறுப்பது ஏன்?

மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருப்பதுதான் ‘மாநில சுயாட்சியா’? மாடல் ஆட்சியா? - டாக்டர் K. கிருஷ்ணசாமி
 
பெட்ரோல், டீசல், காஸ் ஆகியவற்றின் அபரிமிதமான விலை உயர்வின் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவது மட்டுமல்ல, அதனால் இந்தியப் பொருளாதாரமே முடங்கும் அபாய சூழல் உருவாகி உள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 9.50-ம், டீசலுக்கு ரூபாய் 7-ம் விலை குறைப்பு செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இவ்விலை குறைப்பு பெரும் பலன் எதையும் தந்துவிடாது எனினும், இது நல்லதொரு முன்னெடுப்பு என்ற அடிப்படையில் இதை வரவேற்கிறோம். அதே சமயத்தில், பெட்ரோல் விலையைக் குறைத்த மத்திய அரசு; காஸ் விலையைக் குறைக்காமல், ஏற்கனவே உள்ள மானியமே தொடரும் என அறிவித்து இருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

வெளிநாட்டினர் தங்கள் திரைப்படங்களை படமாக்க இந்தியாவிற்கு வர வேண்டும் என கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன் அழைப்புவிடுத்துள்ளார்.


 வெளிநாட்டினர் தங்கள் திரைப்படங்களை படமாக்க இந்தியாவிற்கு வர வேண்டும் என கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன் அழைப்புவிடுத்துள்ளார். 

மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா அரங்கில் (பெவிலியனில்) இன்று நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன என்றும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான திரைப்பட பார்வையாளர்களின் சந்தையாக இந்தியா திகழ்கிறது என்றும் முருகன் தெரிவித்தார்.

ஞாயிறு, 22 மே, 2022

காங்கிரஸ் கட்சியை மிகப்பெரிய அளவில் மாற்றி அமைக்கும் வேளை பிறந்துள்ளது. எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பாஜக.வை வீழ்த்துவோம்.- கே.எஸ்.அழகிரி


 இந்தியாவில் 2 விதமான வடிவமைப்புகள் உள்ளன. ஒன்று கூச்சலிடுவது, மக்களின் குரல்களை ஒடுக்குவது. அதை பாஜக செய்கிறது. மற்றொன்று மக்களின் கருத்துகளை கேட்டறிவது. அதை காங்கிரஸ் செய்கிறது.

இந்தியாவில் உள்ள ஜனநாயகம், சர்வதேச அளவில் மிகுந்த பயனை அளிக்கும் நல்ல விஷயமாக உள்ளது. இந்த உலகத்தின் மைய நங்கூரமாகவே உள்ளது. அது உடைந்தால் இந்த உலகத்துக்கே ஆபத்தாக முடியும். இந்தியா என்பது மக்களுடன் நேரடி தொடர்பு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். ஆனால், பாஜக.வும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் இந்தியாவை ஒரு நிலப்பரப்பாக மட்டுமே பார்க்கிறது. அதனால்தான் ஒரு சிலர் மட்டுமே பலனடையும் வகையில் உள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பலன் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

சனி, 21 மே, 2022

விலை உயர்வை தாங்க முடியாது: சமையல் எரிவாயு மானியத்தை மீண்டும் வழங்குக! - DR.S.ராமதாஸ்

 விலை உயர்வை தாங்க முடியாது: சமையல்

எரிவாயு மானியத்தை மீண்டும் வழங்குக! - DR.S.ராமதாஸ்

சமையல் எரிவாயுவுக்கான மானியம் நிறுத்தப்பட்டது, நிறுத்தப்பட்டது தான் என்றும், அதை மீண்டும்  வழங்க வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசின் உயரதிகாரிகள் கூறியுள்ள கருத்துகள் பேரதிர்ச்சி அளிக்கின்றன. சமையல் எரிவாயு விலை மாதாமாதம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், அதை சமாளிக்க மீண்டும் மானியம் வழங்கப்படாவிட்டால் அது ஏழை, நடுத்தர மக்களை பெருந்துயரத்தில் ஆழ்த்தி விடும்.

என்.எல்.சி நிலம் குறித்த விவகாரத்தில் தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் தான் நிற்க வேண்டுமே தவிர, நிலங்களை பறிக்க முயலும் என்.எல்.சி பக்கம் நிற்கக்கூடாது.- DR. அன்புமணி ராமதாஸ்

 வேலை வழங்காமல் என்.எல்.சிக்கு நிலம்

கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது! - DR. அன்புமணி ராமதாஸ்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கும் நோக்குடன் கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தை அடுத்த கரிவெட்டி என்ற இடத்தில் நில அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அவர்களின் நிலங்களை பறிக்க என்.எல்.சி முயல்வது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

வெள்ளி, 20 மே, 2022

மென்பொருளில் இருந்து விண்வெளியில், புதிய எதிர்காலத்திற்கு தயாராகும் நாடாக நாங்கள் உருவாகி வருகிறோம். - பிரதமர் திரு நரேந்திர மோடி


 வதோதராவின் கரேலிபாக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  இளைஞர் முகாமில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். குண்டால்தம் ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோயில், வதோதராவின் கரோலிபாக் ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோயில் ஆகியவை இந்த முகாமுக்கு  ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், ஒவ்வொரு தலைமுறையிலும் நிலையான குணநலன்களை உருவாக்குவதே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அடிப்படை என்பதை நமது வேதம் நமக்குக் கற்பித்துள்ளது என்றார். இன்று நடத்தப்படும் முகாம், இளைஞர்களிடையே நல்லெண்ணங்களை  உருவாக்குவதற்கான முயற்சி மட்டுமல்லாமல், சமூகம், அடையாளம், பெருமை மற்றும் தேசத்தின் மறுமலர்ச்சிக்கான ஒரு புனிதமான மற்றும் இயற்கையான பிரச்சாரமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

வியாழன், 19 மே, 2022

மகிழ்ச்சி மற்றும் சமநிலையான வாழ்க்கைக்கு மக்கள் அனைவரும் யோகா பயிற்சிகளை செய்ய வேண்டும் என ராஜ்நாத் சிங் வேண்டுகோள்


 சர்வதேச யோகா தினம் ஜுன் 21-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் தில்லியில் நடைபெற்ற முன்னோட்ட நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் மற்றும் நிதி ஆலோசகர் சஞ்சீவ் மிட்டல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினர்.

உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கை–2018க்கான திருத்தங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 


உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கை–2018க்கான  திருத்தங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உயிரி எரிபொருள் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க, தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்பு குழுவில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. நிலைக்குழுவின் பரிந்துரையின்படி, நாடுமுழுவதும் 01.04.2023 முதல் 20 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன

உலக நாடுகளி்ல் விஸ்வகுரு என்ற நிலையை இந்தியா மீண்டும் பெறுவதை உறுதி செய்ய நாம் அனைவரும் கூட்டாக பாடுபடவேண்டும். - திரு எம் வெங்கய்யா நாயுடு


 சமூகத்தில் நலிந்த பிரிவு மக்களுக்கும் தேவைப்படும் பிரிவினருக்கும் கல்வியைக் கொண்டு செல்லும் தேசத்தின் முயற்சியில் இணையுமாறு மாணவர்களைக் குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார் நீலகிரியின் லவ்டேலில் உள்ள லாரன்ஸ் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாற்றிய அவர் நாட்டின் கல்வி வரைப்படத்தை மாற்றவும் கூடுதல் சமத்துவம் உள்ளதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கும்  அரசு அனைத்து முயற்சிகளையும் செய்வதை சுட்டிக்காட்டினார்.

கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகப்படுத்துவதன் தேவையை குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.


 கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகப்படுத்துவதன் தேவையை குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள், ஆளுமைகளை ஈடுபடுத்தி உள்ளுர் மொழிகளில் ஊடக பிரச்சாரத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

திங்கள், 16 மே, 2022

மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு, மறுவாழ்வு மற்றும் அதிகாரமளித்தலுக்கு சிஆர்சி- ஷில்லாங் சேவைகளை 2022, மே 17 அன்று டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கிவைக்கிறார்


 மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு, மறுவாழ்வு மற்றும் அதிகாரமளித்தலுக்கு மேகாலயாவில் சிஆர்சி- ஷில்லாங் சேவைகளை நாளை 2022, மே 17 அன்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திரகுமார் தொடங்கிவைக்கவுள்ளார்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் செல்வி பிரதிமா பௌமிக், மேகாலயா அரசின் சமூக நலத்துறை அமைச்சர் திரு கிர்மென் ஷில்லா, மேகாலயா நாடாளுமன்ற உறுப்பினர் திரு வின்சென்ட் எச் பாலா, கிழக்கு காசி குன்றுகள் மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினர் திருமதி மாசெல் அம்பரீன் லிங்டோ ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ பங்களிப்பு செய்வதற்கு அரசு ஊழியர்கள் தாங்களாகவே திறனை வளர்த்துக் கொள்வது அவசியம்


 அரசு ஊழியர்களுக்குத் திறனைக் கட்டமைப்பது மற்றும் ஊழியர்களின் மனநிலையை, வழிமுறையை, திறனை நவீனமாக மாற்றுவது ஆகிய திசையில் முதல் முயற்சியாகப் பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியத் திட்டமான கர்மயோகி இயக்கத்தின் ஒரு பகுதியாக திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சக அலுவலர்களுக்குத் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் அண்மையில் இந்திய வணிகப் பள்ளி(ஐஎஸ்பி)யுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டத்தின் கீழ் 50 பெண் கலைஞர்களுக்கு 50 அகர்பத்தி தயாரிக்கும் இயந்திரங்களை திரு சக்சேனா வழங்கினார்.


காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் பல்வேறு சுய வேலைவாய்ப்பு செயல்பாடுகளில் அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 100 பெண்கள் உள்ளிட்ட 150 பயிற்சிபெற்ற கலைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அருணாச்சலப் பிரதேசத்தின் தாவாங்கில் உள்ள 50 கலைஞர்களுக்கு மர கைவினைப் பொருட்களுக்கான கருவிகளையும், அசாமின் குவஹாத்தியில் உள்ள கலைஞர்களுக்கு 50 அகர்பத்தி தயாரிக்கும் இயந்திரங்களையும், 50 ஊறுகாய் தயாரிக்கும் இயந்திரங்களையும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு வினய் குமார் சக்சேனா வழங்கினார்.

கோவில்பட்டி தொடரி நிலையப் பிரச்சினைகள். தெற்குத் தொடரி பொது மேலாளருக்கு வைகோ, எம்.பி., கோரிக்கை!


 கோவில்பட்டி தொடரி நிலையப் பிரச்சினைகள்.

தெற்குத் தொடரி பொது மேலாளருக்கு வைகோ, எம்.பி., கோரிக்கை!

தென் தமிழ்நாட்டில், கோவில்பட்டி நகரம் ஒரு முதன்மையான வணிக மையம் ஆகும். நூற்பு ஆலைகள், சிறு குறு தொழில்கள், பருத்தி, கடலை மிட்டாய், மிளகாய், வெள்ளரிக்காய் உட்பட எத்தனையோ பொருட்கள் இங்கிருந்து இந்தியா முழுமையும் செல்கின்றன. இந்தப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இந்தியப் படையிலும், துணைப் படைகளிலும் பணிபுரிகின்றார்கள். கோவில்பட்டி தவிர, விளாத்திகுளம், எட்டையபுரம், ஒட்டப்பிடாரம் பகுதி மக்களும் கோவில்பட்டிக்கு வந்துதான் தொடரிகளில் பயணிக்கின்றார்கள். 

சனி, 14 மே, 2022

ஜெர்மன் சுற்றுப்பயணத்தின் 3 வது நாளில் திரு பகவந்த் குபா பல்முனை சோலார் PV தளங்களை பார்வையிட்டார்


 மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணையமைச்சர், திரு பகவந்த் குபா, இன்டர்சோலார் ஐரோப்பா 2022-க்கான ஜெர்மனியின் மியூனிச் சுற்றுப்பயணத்தின் கடைசி நாளில், பல்முனை சோலார் பிவி தளங்களை பார்வையிட்டார்.

முன்னதாக, ஜெர்மனியின் மியூனிச் அருகே அல்தெஜென்பரில் உள்ள இண்டர்பேஸ் பிவி அக்ரி பண்ணை  தளத்தை திரு  பக்வந்த் குபா, இன்று பார்வையிட்டார். அக்ரி பிவி கருத்தியல் , விவசாயத்திற்காகவும் சூரிய மின் உற்பத்திக்காகவும் நிலத்தை இருமுறை பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. உயரமான சோலார் பேனல் கட்டமைப்புகள் வெப்பமான இந்திய காலநிலையில் பயிர்களுக்கு தேவையான நிழலை வழங்குகின்றன. மேலும் இருமுக செங்குத்து பேனல்கள் அக்ரோ பிவியில் பயன்படுத்தப்படலாம்.

பிரிக்ஸ் உயர்மட்டக் கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் பங்கேற்றார்.


 பிரிக்ஸ் உயர்மட்டக் கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் பங்கேற்றார்.

மே 13, 2022 அன்று நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த இக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், பருவநிலை மாற்றத்தை கூட்டாக எதிர்கொள்வதற்கும், பணிகளை விரைவுபடுத்துவதற்கான அணுகுமுறைகளை ஆராய்வதற்கும் வலியுறுத்தினார். 

கொவிட்-19 இடையே அரசு எடுத்த முழுமூச்சான முயற்சிகளின் காரணமாக இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது. - பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்


 உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் மே 14, 2022 அன்று இந்திய பட்டயக் கணக்காளர்களின் நிறுவனத்தின் (ஐசிஏஐ) மத்திய இந்திய பிராந்திய குழுவின் லக்னோ கிளை ஏற்பாடு செய்த நிதிச் சந்தை குறித்த பயிலரங்கில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.

பொருளாதாரம் தொடர்பான புதிய முன்னேற்றங்களைப் பற்றி பங்கேற்பாளர்களுக்கு தெரியப்படுத்தி இந்தத் துறையுடன் தொடர்புடைய எதிர்காலச் சவால்களைச் சமாளிக்க அவர்களைப் பயிற்றுவிப்பதும் ஊக்குவிப்பதும் பயிலரங்கின் நோக்கமாகும்.

மிஷன் சாகர் IX இன் கீழ், தென்மேற்கு இந்தியப் பெருங்கடலில் இந்தியக் கடற்படைக் கப்பலான கரியாலை அனுப்புவதன் ஒரு பகுதியாக, செஷல்ஸின் போர்ட் விக்டோரியாவுக்குச் சென்றிருக்கிறது.


மிஷன் சாகர் IX இன் கீழ், தென்மேற்கு இந்தியப் பெருங்கடலில் இந்தியக் கடற்படைக் கப்பலான கரியாலை அனுப்புவதன் ஒரு பகுதியாக, அந்தக் கப்பல் மே 11 முதல் 14 வரை செஷல்ஸின் போர்ட் விக்டோரியாவுக்குச் சென்றிருக்கிறது.

முன்னதாக செஷெல்ஸ் அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவைத் தொடர்ந்து, மூன்று சம்பிரதாய வணக்கத் துப்பாக்கிகள், வெடிமருந்துகளுடன், கப்பல் மூலம் செஷெல்ஸ் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டது. மே 13  அன்று ஐஎன்எஸ் கரியால் கப்பலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்,  பாதுகாப்புத் தலைவர்  பிரிகேடியர் மைக்கேல் ரோசெட்டிடம், செஷெல்ஸுக்கான இந்திய தூதர் ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் இவற்றை முறைப்படி வழங்கினார்.

கிராமப்புறங்களில் அகண்ட அலைவரிசை சேவைகளுக்கான உலகளாவிய மற்றும் சமமான அணுகல், பிரதமர் திரு நரேந்திர மோடியின் மிக முக்கியமான தொலைநோக்கு பார்வைகளில் ஒன்றாகும்.- அஷ்வினி வைஷ்ணவ்



நாடு முழுவதும், குறிப்பாக கிராமப்புறங்களில் அகண்ட அலைவரிசை சேவைகளுக்கான உலகளாவிய மற்றும் சமமான அணுகல், பிரதமர் திரு நரேந்திர மோடியின் மிக முக்கியமான தொலைநோக்கு பார்வைகளில் ஒன்றாகும். பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்திற்கு இணங்க, மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், இன்று மையப்படுத்தப்பட்ட வழி உரிமை அனுமதிகளுக்கான (www.sugamsanchar.gov.in) “விரைவு சக்தி சஞ்சார்” வலைதளத்தைத் தொடங்கியுள்ளார்.

மேம்பட்டத் திறன் கொண்ட மற்றும் உள்ளூர் கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான புதிய முனையத்தை ஜபல்பூர் விமான நிலையம் பெறவுள்ளது


சுற்றுலா வாய்ப்புகளைக் கொண்ட வளர்ந்துவரும் நகரமான ஜபல்பூரில் உள்ள விமான நிலையம் பயணிகள் போக்குவரத்தில் அதிகரிப்பைக் கண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, இப்பகுதியில் உள்ள பயணிகளுக்கு சிறப்பான சேவைகளை வழங்கும் வகையில் விமான நிலையத்திற்கு புத்தாக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

புதிய முனைய கட்டடம், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம், தொழில்நுட்ப வளாகம், தீயணைப்பு நிலையம், இதர கட்டிடங்கள் உள்ளிட்டவை விமான நிலைய மேம்பாட்டு பணிகளில் அடங்கும். இப்பணிகளுக்காக 483 ஏக்கர் நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையத்திடம் மத்திய பிரதேச அரசு ஒப்படைத்தது.

வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டியது அவசியம். - குடியரசு துணைத்தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு


 நீண்ட காலத்திற்கு விவசாய உற்பத்தியில் கணிசமான லாபத்தை அடைய, நாட்டில் விவசாய ஆராய்ச்சியின் தரம் மற்றும் திறனை மேம்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர்  திரு. எம். வெங்கையா நாயுடு  அழைப்பு விடுத்துள்ளார். விரிவாக்க நடவடிக்கைகள் இல்லாமல் எந்த ஒரு முன்னேறிய நாடும் விவசாய உற்பத்தியை மேம்படுத்த முடியாது என்று குறிப்பிட்ட, திரு நாயுடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவினத்தை அதிகரிக்க பரிந்துரைத்தார். இது நமது விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது என்று அவர் கூறினார்.

 ‘விவசாயத்தை காலநிலைக்கு ஏற்ற, லாபகரமானதாகவும், நிலையானதாகவும் மாற்ற வேண்டும் எனக் கூறிய திரு நாயுடு,  ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் விவசாய ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் விஞ்ஞானிகளின் ஒவ்வொரு முயற்சிக்கும் அழைப்பு விடுத்தார்.

திங்கள், 9 மே, 2022

பருத்தியை அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நூல்களை வெளிக்கொண்டு வருவது ஆகியவற்றை சாதிக்க முடியும்.- DR.அன்புமணி ராமதாஸ்


பருத்தி நூல் விலை உயர்வு வேலைவாய்ப்பு, வளர்ச்சியை பாதிக்கும்: பருத்தி இழை ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்! 

- DR.அன்புமணி ராமதாஸ்

கைத்தறி, விசைத்தறி, ஆயத்த ஆடை தயாரிப்பு உள்ளிட்ட துணி சார்ந்த அனைத்து தொழில்களையும்  பாதிக்கும் பருத்தி நூல் விலை உயர்வு தொடர்கதையாகி வருவது கவலையளிக்கிறது. பருத்தி நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு வரிக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வரும் போதிலும், இப்போக்கு தொடர்வது ஐயத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வாழ்வுரிமையை காக்க தீக்குளித்து இறந்த கண்ணையாவுக்கு வீரவணக்கம்: அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குக! - DR.S.ராமதாஸ்

 வாழ்வுரிமையை காக்க தீக்குளித்து இறந்த கண்ணையாவுக்கு வீரவணக்கம்: அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குக!

  - DR.S.ராமதாஸ்

சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகள் இடிக்கப்படுவதைக் கண்டித்து தீக்குளித்த பா.ம.க.  மாவட்ட துணை செயலாளர் கண்ணையா மருத்துவம் பயனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள்  மற்றும் பா.ம.க.வினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சனி, 7 மே, 2022

தமிழ்நாட்டில் மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் தலையாயப் பணியாகும். மது விலக்கை வலியுறுத்தி விரைவில் மாநிலம் தழுவிய போராட்டத்தை பா.ம.க. அறிவிக்க உள்ளது.- DR. அன்புமணி ராமதாஸ்


முழு மதுவிலக்கே பா.ம.க.வின் இலக்கு...

தீக்குளிப்பு போராட்டங்கள் தேவையில்லை! - DR.அன்புமணி ராமதாஸ்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மதுக்கடையை மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் ஆயிஷா தீக்குளிப்பு போராட்டம் நடத்த முயன்றதை அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். ஆயிஷா போன்றவர்களின் உணர்வு பாராட்டத்தக்கது; ஆனால், போராட்ட முறை ஏற்கத்தக்கது அல்ல.

வெள்ளி, 6 மே, 2022

மாமூல் தர மறுத்த வணிகர் அடித்துக் கொலை: மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலை காவல்துறை கட்டுப்படுத்துமா? - DR.S.ராமதாஸ்



மாமூல் தர மறுத்த வணிகர் அடித்துக் கொலை: மிரட்டிப் பணம் பறிக்கும்
கும்பலை காவல்துறை கட்டுப்படுத்துமா? - DR.S.ராமதாஸ்

பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தில் மாமூல் தருவதற்கு மறுத்த மருந்தக உரிமையாளரை ஒரு கும்பல் கொடூரமாக படுகொலை செய்திருக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் வணிகர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் சில கும்பல்கள் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், அத்தகைய கும்பல்களை கட்டுப்படுத்த காவல்துறை எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது கடுமையாக கண்டிக்கத்தக்கது. நாகராஜன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொருளாதாரம் மற்றும் தொழில்துறைக்கு ஊக்கமளிக்க அறிவுசார் சொத்துரிமையின் கீழ் கண்டுபிடிப்பு உரிமையை அமலாக்குவதில் பல்கலைக்கழகங்கள் அதி முக்கியத்துவம் அளிப்பது அவசியம்.


 பொருளாதாரம் மற்றும் தொழில்துறைக்கு ஊக்கமளிக்க அறிவுசார் சொத்துரிமையின் கீழ் கண்டுபிடிப்பு உரிமையை அமலாக்குவதில் பல்கலைக்கழகங்கள் அதி முக்கியத்துவம் அளிப்பது அவசியம் என்று குடியரசு துணைத்தலைவர் திரு எம். வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார். சிறந்த ஆராய்ச்சி முடிவுகளுக்கு தொழில்துறை – கல்வி நிறுவனங்கள் இடையேயான இணைப்புகளை வலுப்படுத்துவது அவசியம் என்று அவர் கூறினார்.

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் 69-வது பட்டமளிப்பு விழாவில் இன்று உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் சாதாரண விருப்பத்திலிருந்து வெளியேற வேண்டும் என்றும் நாம் சாதித்தவற்றிலிருந்து திருப்தி அடையக் கூடாது என்றும் கூறினார்.  உலக அளவில் உள்ள 10 சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று என்பதை நோக்கி பஞ்சாப் பல்கலைக்கழகம் முன்னேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

செவ்வாய், 3 மே, 2022

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கரீஃப் பருவத்திற்கான பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கான மானியத் தொகையாக ரூ. 60939.23 கோடி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.


 நாட்டில் இருப்பில் உள்ள உரங்களின் இருப்பு குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கரீஃப் பருவத்திற்கான பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கான மானியத் தொகையாக ரூ. 60939.23 கோடி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆய்வில் பேசிய மத்திய உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, அரசின் சிறப்பான நடவடிக்கை காரணமாக, இந்த கரீப் பருவத்திற்கு தேவையான உரங்கள் தேவைக்கு அதிகமாகவே உள்ளன என்றும், உரங்களின் இருப்பு குறித்து விவசாயிகளுக்கு தேவையான, சரியான விவரங்களை தெரிவிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு அறிவுறுத்தினார்.

‘கிசான் ட்ரோன்களை ஊக்குவித்தல்-பிரச்சனைகள், சவால்கள் மற்றும் முன்னெடுத்து செல்லுதல்’ குறித்த மாநாட்டை வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கிவைத்து உரையாற்றினார்.


 சுதந்திரப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட, ‘கிசான் ட்ரோன்களை ஊக்குவித்தல்-பிரச்சனைகள், சவால்கள் மற்றும் முன்னெடுத்து செல்லுதல்’ குறித்த மாநாட்டை வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கிவைத்து உரையாற்றினார். விவசாயிகளின் வசதிக்காகவும், செலவினத்தை குறைத்து வருமானத்தை அதிகரிப்பதற்காகவும் ட்ரோன் பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.  கிசான் ட்ரோன் பயன்பாட்டை ஊக்குவிக்க, எஸ்சி- எஸ்டி, சிறு மற்றும் நடுத்தர, பெண் விவசாயிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ட்ரோன் வாங்குவதற்காக, அரசு 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மான்ய உதவி வழங்கி வருகிறது. மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம்  அல்லது அதிகபட்சமாக ரூ. 4 லட்சம்  நிதியுதவி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஏழைகளுக்கு உயர் கல்வி: டி.பி. ஜெயின் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும்! - DR. அன்புமணி ராமதாஸ்

 ஏழைகளுக்கு உயர் கல்வி: டி.பி. ஜெயின்

கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும்! - DR.அன்புமணி ராமதாஸ்

சென்னை துரைப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் டி.பி.ஜெயின் அரசு உதவி பெறும் கலை - அறிவியல் கல்லூரியை சுயநிதி கல்லூரியாக மாற்ற கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகக்குறைந்த செலவில் உயர்கல்வி கிடைப்பதை தடுப்பதற்கான இந்த முயற்சியை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கவலை அளிக்கிறது.