வியாழன், 16 ஜூலை, 2020

கைகழுவும் கிருமி நாசினி மீது 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஆல்கஹால் கலந்த கைகழுவும் கிருமி நாசினி மீதான சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் குறித்த விளக்கம்

ஆல்கஹால் கலந்த கைகழுவும் கிருமி நாசினி மீதான சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் குறித்த பிரச்சினையைப் பற்றி சில ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. 

கைகழுவும் கிருமி நாசினி மீது 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சோப்புகள், நுண்ணுயிரிகளுக்கு எதிரான திரவங்கள், டெட்டால் உள்ளிட்டவை போன்றது தான் கிருமி நாசினியும். இவை அனைத்துக்கும் நிலையான விகிதமான 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது. மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகள் ஒன்று கூடி விவாதித்த பின் முடிவுகள் எடுக்கப்பட்டு,  சரக்கு மற்றும் சேவை வரிகள் வாரியத்தால் இந்த சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

ரசாயன பொதி பொருள், உள்ளீட்டுச் சேவைகள் ஆகிய கைகழுவும் கிருமி நாசினியின் தயாரிப்புக்குத் தேவைப்படும் உள்ளீடுகளுக்கும் 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுவதாக மேலும் தெளிவுப்படுத்தப்படுகிறது. கைகழுவும் கிருமி நாசினி மற்றும் ஒத்தப் பொருள்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியைக் குறைப்பதென்பது தலைகீழ் வரிவிகிதத்துக்கு வித்திட்டு, இறக்குமதியாளர்களைக் காட்டிலும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை அசவுகரியமான நிலையில் வைத்து விடும். இது தற்சார்பு இந்தியாவுக்கான தேசியக் கொள்கைக்கு எதிரானதாகும். தலைகீழ் வரி விகிதத்தின் காரணமாக உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டால், குறைக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தினால் நுகர்வோர்களும் பலனடைய மாட்டார்கள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக