திங்கள், 27 ஜூலை, 2020

கொரோனா நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏழை, எளிய, கிராம மக்களுக்கு விலையில்லா முக கவசங்களை வழங்கிய தமிழக அரசிற்கு பாராட்டுக்கள். - ஜி.கே.வாசன்


"கொரோனா நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏழை, எளிய, கிராம மக்களுக்கு விலையில்லா முக கவசங்களை வழங்கிய தமிழக அரசிற்கு பாராட்டுக்கள்" - ஜி.கே.வாசன்

தமிழக முதலமைச்சர் அவர்கள், மக்களை கொரோனா தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் விதமாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் தலா 2 விலையில்லா முக கவசங்களை “அரசு நியாய விலை கடையின்” மூலம் வழங்கும் திட்டத்தை துவங்கியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. ஏழை, எளிய மற்றும் கிராமபுற மக்களுக்கு அவசியமான, மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து பரவிக்கொண்டு இருக்கிறது. கொரோனா வைரஸ், வாய் மற்றும் மூக்கின் வழியாகத்தான் பரவுகிறது என்று மருத்துவ ஆராட்சியாளர்கள் கண்டறிந்து, நோய் பரவாமல் தடுப்பதற்கு, காக்கும் நடவடிக்கையின் முதல்கட்டமாக, முககவசங்களை அனைவரும் அவசியம் பயன் படுத்த வேண்டும் என்று நெறிமுறைகளை வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் 2.8 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில் 6.74 கோடி குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 2 முகவசம் என்று கணக்கிடப்பட்டு 13,48,31,769 பேர் காருக்கு துணியினால் ஆன விலையில்லா முக கவசங்களை, துவைத்து மறுமுறையும் பயன்படத்தும் வகையில், நியாயவிலை கடையின் மூலம் வழங்குகிறது. இது ஏழை, எளிய, மற்றும் கிராமபுற மக்களுக்கு மிகவும் உபயோகமாகவும், அவசியமானதாகவும் இருக்கும். அதோடு கொரோனா தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். 

தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு சரியான முடிவை எடுத்துள்ளது. மக்கள் அனைவரும் இதை தவறாது கடைபிடிக்க, மனதில் உறுதிப்பூண வேண்டும். இந்த நடவடிக்கையால் கொரோனா வைரம் பரவாமல் தடுக்க வழிவகுக்கும். முக கவசம் என்பது உயிர் கவசம் ஆகும். முக கவசம், கொரோனா நோயிடமிருந்து நம்மை காத்து, நோய் பாதித்தவரிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் காக்கும் கேடயம் ஆகும். ஆகவே கொரோனா ஒழிப்பின் முதல் பணியும், முக்கிய பணியும், முககவசம் அணிவதே ஆகும்.

கொரோனா வைரஸ் நோயிற்கு, உரிய மருந்து கண்டுப்பிடிக்காத இச்சூழலில், நோய் வராமல் தடுக்கும், காக்கும் பணியில், மக்கள் அனைவரும் அரசோடு இணைந்து செயல்டுவோம், கொரோனா நோய்பை முற்றிலுமாக ஒழிப்போம், மக்கள் நலமுடன் வாழ வழிவகுப்போம் என தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக
கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக