வியாழன், 16 ஜூலை, 2020

ஓய்வு பெற்ற மருத்துவர்கள், பேராசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - ஜி.கே.வாசன்


ஓய்வு பெற்ற மருத்துவர்கள், பேராசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசிற்கு த.மா.கா. கோரிக்கை

இரவு, பகல் பாராமல், ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல், கருணை உள்ளத்தோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் பணியாற்றுபவர்கள் மருத்துவர்கள். அவர்கள் பணி போற்றுதலுக்குரியது, இந்த மகத்தான மருத்துவத் துறையில் பணிபுரியும் டாக்டர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் குறைவு. 

அதேபோல அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதிய விகிதமும் பிற பணிகளோடு ஒப்பிடும்போது குறைவு. இக்குறையை நீக்க வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது, அதனை ஏற்று, ஓர் ஆய்வுக் குழுவை 2007-ஆம் ஆண்டு அரசு நியமித்தது, ஆய்வுக்குழு நீண்ட ஆய்வுக்குப் பின்பு அளித்த அறிக்கையை ஏற்று தமிழக அரசு 12.07.2018 அன்று ஓர் ஆணை வெளியிட்டது. 

அந்த அணையின் படி, 2009-ஆம் ஆண்டிற்கு முன்பு ஓய்வு பெற்ற டாக்டர்கள், பேராசிரியர்களின் ஊதிய விகிதம் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது.  அதன் பயனாக 2009-ஆம் ஆண்டிற்கு முன்பு ஓய்வு பெற்றவர்களின் ஓய்வுதியம் உயர்த்தி வழங்க வழி பிறந்தது. அந்த ஆணையால் சிலர் பயன் அடைந்தனர். ஆனால் பலருக்கு அந்த ஆணையின்படி உயர் ஓய்வூதியம் வழங்கப்படாமலே உள்ளது. 

அதனால் பல டாக்டர்கள், பேராசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆணை பிறப்பித்தது அரசு அதனை செயல்படுத்த முனைந்ததும், அதனை இடையில் நிறுத்தி வைப்பது வருந்ததக்கது.  பயனடையப் போவது போவது 2009-ஆம் ஆண்டிற்கு முன்னால் ஓய்வு பெற்ற குறைந்த எண்ணிக்கையினரே, இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.118 கோடி கூடுதல் செலவாகும் என்று அரசு அறிக்கையே கூறுகிறது.

கொரோனா காலம் என்பதை காரணம் காட்டி அரசு எடுத்த முடிவைத் தள்ளிப் போடுவதும், செயல்படுத்துவதை நிறுத்துவதும் உசிதமானதல்ல. பயன் பெறப் போகிறவர்கள் ஓய்வு பெற்ற மருத்துவர்கள், மருத்துவப் பேராசிரியர்கள், கூடுதல் செலவும் கூடுதல் செலவும் குறைவானது என்பதைக் கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு ஏற்கனவே எடுத்த முடிவை செயல்படுத்தி, ஓய்வு பெற்ற மருத்துவர்கள், மருத்துவ பேராசிரியர்களின் கவலையைப் போக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக