திங்கள், 30 டிசம்பர், 2019

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகக் கோலம் போட்ட பெண்கள் கைது! - வைகோ கண்டனம்

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகக் கோலம் போட்ட பெண்கள் கைது! - வைகோ கண்டனம்

மத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், மேலும் கொண்டுவர இருக்கின்ற தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்தை எதிர்த்தும் நாடு முழுவதும் தன்னெழுச்சியான பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழ்நாட்டிலும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அரசியல் கட்சி எல்லைகளைத் தாண்டி மோடி அரசின் ஜனநாயக விரோத சட்டங்களை எதிர்த்து வீதிக்கு வந்து போராடி வருகின்றனர்.

மக்களை மிரட்டும் பைக் பந்தயங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை! - DR.S. ராமதாஸ்

மக்களை மிரட்டும் பைக் பந்தயங்களைத்
தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை!
- DR.S. ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக.)

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் நடைபெறும் இரு சக்கர வாகன பந்தயங்களின் எண்ணிக்கை வாரத்துக்கு வாரம் அதிகரித்து வருகிறது. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்தும் பந்தயங்களைக் கட்டுப்படுத்த முடியாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

சனி, 28 டிசம்பர், 2019

ஜனவரி 16 பெங்கல் நாளில் பிரதமர் மோடி உரை; மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர உத்தரவு! - வைகோ

ஜனவரி 16 பெங்கல் நாளில் பிரதமர் மோடி உரை;
மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர உத்தரவு! - வைகோ கண்டனம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சாதி, மத வேறுபாடு இன்றி தமிழ்நாட்டு மக்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம்.

புதன், 25 டிசம்பர், 2019

சசிகலா ரூ.1674.50 கோடி மதிப்புள்ள சொத்துகள் வாங்கிய பட்டியலுக்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 22 செப்டம்பர் 2016 இல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 8 நவம்பர் 2016 இல் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை பா.ஜ.க. அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த காலக்கட்டங்களில் கணக்கில் காட்டப்படாத ஏறத்தாழ இரண்டாயிரம் கோடி ரூபாயை புதிய நோட்டுகளாக மாற்றுவதற்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா எடுத்துக் கொண்ட முயற்சிகள் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளன. கடந்த 2017 நவம்பர் 9 ஆம் தேதி வருமான வரித்துறை சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலாவின் உறவினர் கிருஷ்ணபிரியா வீட்டில் சோதனை நடத்தியது. அதில் சிக்கிய இரண்டு தாள்களில் சசிகலாவின் நெருங்கிய உறவினர் சிவகுமார் கைப்பட எழுதிய விவரங்களில் ரூ.1674.50 கோடி மதிப்புள்ள சொத்துகள் வாங்கிய பட்டியலுக்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. இதையொட்டி சம்மந்தப்பட்டவர்களிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

இக்காலக்கட்டங்களில் ஜெயலலிதாவின் வீட்டிலும், கொடநாடு பங்களாவிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் வெளிக் கொணரப்பட்டு பல இடங்களில் பாதுகாப்பதற்காக சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மூலம் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தைக் கொண்டு சென்னையில் பல இடங்களில் வணிக வளாகங்கள், புதுச்சேரியில் உல்லாச விடுதி, கோவையில் காகித ஆலை, காஞ்சிபுரத்திற்கு அருகில் சர்க்கரை ஆலை, பழைய மகாபலிபுரம் சாலையில் மென்பொருள் நிறுவனம், கோவையில் 50 காற்றாலைகள் என தமிழகம் முழுவதும் பல இடங்களில் சட்டவிரோதமாக பணமதிப்பு இழந்த தொகையின் மூலம் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான பேரங்கள் நடைபெற்றதையும் வருமான வரித்துறை ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளது.

மேலும், தமிழக அரசின் மதிய உணவு திட்டத்திற்காக முட்டை, பருப்பு மற்றும் சத்துமாவு விற்பனை செய்கிற  திருச்செங்கோட்டைச் சேர்ந்த டி.எஸ். குமாரசாமிக்கு சொந்தமான கிறிஸ்டி நிறுவனத்திடம் ரூபாய் 240 கோடி செல்லாத நோட்டுகள் கொடுக்கப்பட்டு, ஓராண்டு கழித்து அதே தொகையுடன் 6 சதவீத வட்டியுடன் ரூபாய் 2 ஆயிரம் மதிப்பு கொண்ட புதிய நோட்டுகளாக மாற்றித் தர வேண்டுமென்று வாய்மொழி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த தொகையை சென்னை தியாகராயநகர் வன்னியர் தெருவில் உள்ள சசிகலாவின் நெருங்கிய உறவினரான சிவகுமாருக்கு சொந்தமான நிறுவனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தில் இருந்து பல அட்டை பெட்டிகள் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. எந்தெந்த தேதியில் எவ்வளவு தொகை யார் யாருக்கு வழங்கப்பட்டது என்பதை வருமான வரித்துறையிடம் சிவகுமார் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த வகையில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் செல்லாத தொகையான ரூபாய் 1911.50 கோடி வழங்கப்பட்டுள்ளதை வருமான வரித்துறை ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளது. 

மேலும், இத்தொகையின் மூலம் தேனியில் ரூபாய் 100 கோடிக்கு 1897 ஏக்கர் எஸ்டேட் வாங்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு அருகில் நவீன் பாலாஜி என்பவருக்கு சொந்தமான உல்லாச விடுதி ரூபாய் 168 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. இத்தகைய சொத்துக்கள் அனைத்தும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பிறகும், செல்லாத நோட்டுக்களை வங்கியில் திரும்ப செலுத்தி, புதிய நோட்டுகளாக மாற்றுவதற்காக குறிப்பிடப்பட்ட இறுதி நாளான 2017 ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள்ளும்  பண பரிவர்த்தனை செய்யப்பட்டு, சட்டவிரோதமாக சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வருமான வரித்துறை மூலம் நீதிமன்றத்தின் ஆய்வில் உள்ளன. 

1991 இல் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது சொத்து மதிப்பு 2.01 கோடியாக இருந்தது, 1996 இல் ரூபாய் 66.44 கோடியாக உயர்ந்து, வருமானத்திற்கு அதிகமாக  சொத்து சேர்த்த வழக்கில் உச்சநீதிமன்றத்தால் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார். இதற்கு சசிகலா உடந்தையாக இருந்த குற்றத்தை செய்ததால், அவரும் தண்டிக்கப்பட்டார். ஆனால், அந்த வழக்கில் சம்மந்தப்படாத வகையில் ஏறத்தாழ 2000 கோடி ரூபாய் வருமான வரித்துறையின் சோதனையின் மூலம் தற்போது சிக்கியுள்ளது. இவ்வளவு பெரிய தொகை சசிகலாவின் கைக்கு எப்படி வந்தது ? அன்றைய அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களில் மிகப்பெரிய பயனாளியாக சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் விளங்கினார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்திருந்தாலும் அவரது ஆட்சியில் நடைபெற்ற ஊழலின் காரணமாக சசிகலாவிடம் சிக்கிக் கொண்ட பல ஆயிரம் கோடி ரூபாயில் ஒருபகுதி தான் வருமான வரித்துறையிடம் இன்றைக்கு சிக்கியிருக்கிறது. பணமதிப்பு நீக்கத்தினால் பாதிக்கப்பட்ட போது, அதை முதலீடாக மாற்றி சட்டவிரோதமாக சொத்துக்கள் வாங்குவதற்கு யார், யார் உதவியாக இருந்தார்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இது ஒரு மிகப்பெரிய கிரிமினல் ஊழல் குற்றமாகும். இத்தகைய நடவடிக்கைகளில் இன்றைய அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு என்பதையும் எவரும் மறுக்க முடியாது. இதுகுறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.

இன்றைய அ.தி.மு.க.வோடு சசிகலாவுக்கு சம்மந்தமில்லாமல் இருக்கலாம். ஆனால், அம்மாவின் பேரில் ஆட்சி நடத்துகிற அ.தி.மு.க.வுக்கும், அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் சம்மந்தம் இல்லை என்று எவரும் கூற முடியாது. எனவே, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா சம்மந்தப்பட்டுள்ள இத்தகைய சட்டவிரோத பண பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் மத்திய புலனாய்வுத்துறையின் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம் கடந்தகால அ.தி.மு.க. ஆட்சிகளில் நடந்துள்ள பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் அம்பலமாவதற்கும், அதில் பயனடைந்தவர்கள் தண்டனைக்கு உட்படுவதற்கும் உரிய வாய்ப்பாக இந்த விசாரணை அமைய வேண்டும்.

திங்கள், 23 டிசம்பர், 2019

தமிழகமீனவர்களின் மீன்பிடித் தொழிலைக் காப்பாற்றவும், மீனவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும் - ஜி.கே.வாசன்

மத்திய அரசு தமிழகமீனவர்களின் மீன்பிடித் தொழிலைக் காப்பாற்றவும், மீனவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் 
- ஜி.கே.வாசன்
(தலைவர், தமிழ்_மாநில_காங்கிரஸ்)

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமாக இருக்கின்ற மீன்பிடித் தொழிலை காப்பாற்ற வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 600 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 3,500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னை - வாலாஜா சாலை சீரமைப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்! - DR.S. ராமதாஸ்

சென்னை - வாலாஜா சாலை சீரமைப்பை
உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்!
-DR.S. ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர்.பாமக.)

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், மதுரவாயலுக்கும், வாலாஜாபேட்டைக்கும் இடைப்பட்ட பகுதி சரி செய்யப்பட்டிருப்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக மூத்த வழக்கறிஞர் ஒருவர் வ்ழக்கறிஞர் ஆணையராக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. இந்தியாவின் மிக நீண்ட சாலையை சீரமைக்கும் நோக்குடன் உயர்நீதிமன்றம் எடுத்துள்ள இம்முடிவு வரவேற்கத்தக்கது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய பாஜக அரசு திரும்பப் பெறும் வரை தொடரும் - மு.க.ஸ்டாலின்

"ஓரணியில் நின்று பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி"
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 


குடியுரிமைச் சட்டம் என்ற பெயரால், மக்களின் குடியுரிமை பறித்து, அவர்களுக்குக் குழிபறிக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்த மத்திய பாஜக அரசையும் அதற்கு, தலையில் பாதங்களைத் தாங்கி அனுதினமும் அடிமைச் சேவகம் செய்யும் மாநில அதிமுக அரசையும், கண்டித்து இன்றைய தினம் ( 23.12.2019 ), சென்னையில் நடத்தப்பட்ட பேரணியானது, அனைவரும் ஓரணியில் நின்ற பேரணியாக மட்டுமல்ல, போரணியாகவே நடந்திருக்கிறது.

சனி, 21 டிசம்பர், 2019

பல்வேறு இடங்களில் இணைய சேவை முடக்கம்! பாஜக அரசின் ஃபாசிசப் போக்கைக் கண்டிக்கிறோம்!

கர்நாடகாவில் துப்பாக்கி சூடு!
பல்வேறு இடங்களில் இணைய சேவை முடக்கம்!
பாஜக அரசின் ஃபாசிசப் போக்கைக் கண்டிக்கிறோம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எழுந்துள்ள போராட்டங்களை வன்முறை மூலமாக ஒடுக்குவதற்கு பாஜக அரசு முனைந்திருக்கிறது.

பா.ஜ.க. அரசுக்கு உரிய பாடத்தை புகட்டுகிற வகையில் கண்டனப் பேரணி அமைய வேண்டும். - கே.எஸ். அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை.

இந்தியா விடுதலை பெற்று 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து வேற்றுமையில் ஒற்றுமை கண்டு உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கி வருகிறது. இதுவரை 16 முறை நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டு சுமூகமான முறையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

மாநில பல்கலைக்கழகங்களை ஆக்கிரமிப்பதை பாஜக அரசு கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

“அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து கொல்லைப்புறமாக மத்திய அரசிடம் ஒப்படைக்கவும் - அண்ணா பெயரை அகற்றவும் குழு அமைக்கப்பட்டுள்ளதா? மாநில பல்கலைக்கழகங்களை ஆக்கிரமிப்பதை பாஜக அரசு கைவிட வேண்டும்”

- மு.க.ஸ்டாலின் அறிக்கை.
( தலைவர், திமுக)

புகழ்பெற்ற ‘அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட குழுவினை’ முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அமைத்திருப்பது, உடனடியாக வெளி உலகத்திற்குத் தெரியாத உள்நோக்கம் கொண்ட ஒரு அறிவிப்பாகத் தெரிகிறது. தி.மு.க.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி நாட்டைக் காக்க கரம் கோர்த்து எழுவோம்!- வைகோ

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி
நாட்டைக் காக்க கரம் கோர்த்து எழுவோம்!- வைகோ அழைப்பு

பாரதிய ஜனதா கட்சி அரசு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு, ‘இந்து ராஷ்டிரா கனவை’ நனவாக்கிட நாட்டின் பன்முகத்தன்மையை சீரழித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்! - ராமதாஸ் கடிதம்

"சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்!" - தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு
 DR.S. ராமதாஸ் கடிதம்

தமிழ்நாட்டில் புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக "சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை" (Clean Air Action Plan) உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்


அன்புள்ள தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு,

வியாழன், 19 டிசம்பர், 2019

எண்ணூர் அனல்மின் நிலைய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - ஜி.கே.வாசன்

எண்ணூர் அனல்மின் நிலைய ஊழியர்களுக்கு பணப்பயன்கள் தொடர்ந்து கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஜி.கே.வாசன் 

எண்ணூர் அனல்மின் நிலைய ஊழியர்களின் கோரிக்கைகளை அனல்மின் நிலைய அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். எண்ணூர் அனல்மின் நிலையம் 1970ம் ஆண்டு மின் உற்பத்தி தேவைகளை நிறைவேற்ற கட்டமைக்கப்பட்டது. 

வெள்ளி, 13 டிசம்பர், 2019

'ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட்' பயன்படுத்தியதில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் - மு.க.ஸ்டாலின்.

'ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட்' பயன்படுத்தியதில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் 

சென்னை மாநகராட்சியில் ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட்-ஐப் பயன்படுத்தியதன் மூலம் 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து, உடனடியாக உரிய விசாரணை நடத்தி - மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் அ.தி.மு.க. அரசில், உள்ளாட்சித் துறையின் ஊழல்கள், மக்கள் மன்றம் மூலம் நீதிமன்றம் வரை அணிவகுத்து நிற்கின்ற இந்த நேரத்தில், சென்னை மாநகராட்சியில், 'ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட்' பயன்படுத்தியதில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

வியாழன், 12 டிசம்பர், 2019

கிரிக்கெட் போட்டிகளில் புகையிலைப் பொருள் விளம்பரங்களை ஒழிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

"கிரிக்கெட் போட்டிகளில் புகையிலைப் பொருள் விளம்பரங்களை ஒழிக்க வேண்டும்" - இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு 
அன்புமணி ராமதாஸ் கடிதம்

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி 20 சர்வதேச கிரிக்கெட் போட்டி வரும் 15-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் நிலையில், கிரிக்கெட் போட்டிகளில் புகையிலைப் பொருட்கள் விளம்பரங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.

தமிழ் இனத்திற்குக் கேடு தர வந்த 'கோடரிக்காம்பு' என்றுதான் சரித்திரம் பதிவு செய்யும்! -மு.க.ஸ்டாலின்

குடியுரிமை சட்டத்தை எதிர்க்க முதுகெலும்பு இல்லாமல்
பயந்து போய், பணிந்து கிடக்கும் அ.தி.மு.க. அரசை, அடிமை
அரசு - தமிழ் இனத்திற்குக் கேடு தர வந்த 'கோடரிக்காம்பு'
என்றுதான் சரித்திரம் பதிவு செய்யும்!
- மு.க.ஸ்டாலின்
(தலைவர்,திமுக.)

"பா.ஜ.க.,வின் கொள்கைதான் அ.தி.மு.க.,வின் கொள்கை என்றால், அதில் பேரறிஞர் அண்ணாவின் பெயர் எதற்கு ? மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றி - இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது” என்று பிரதமர் நரேந்திர மோடி சொல்கிறார் என்றால், நாடு எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது?

புதன், 11 டிசம்பர், 2019

பாஜக கொள்கை திவாலாகிவிட்டதையே காட்டுகிறது.- திருமதி பிரியங்கா காந்தி

உங்கள் கொள்கை திவாலாகிவிட்டதையே காட்டுகிறது.- திருமதி பிரியங்கா காந்தி
நிர்மலா சீதாராமன் வெங்காயம், பூண்டு சாப்பிடமாட்டார் என்பது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால், நீங்கள் உங்களுக்கு மட்டும் நிதியமைச்சர் அல்ல, நாட்டுக்கு நிதியமைச்சர். அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலையால், சாமானிய மக்கள் நாள்தோறும் கொள்ளையடிக்கப்படுகிறார்கள். விரைவில் இதற்கு நீங்கள் தீர்வு காணுங்கள்.

கீழடி அகழாய்வு: முதல் 3 கட்ட ஆய்வு அறிக்கைகள் வெளியீடு எப்போது ? -DR.S. ராமதாஸ்

கீழடி அகழாய்வு: முதல் 3 கட்ட ஆய்வு அறிக்கைகள் வெளியீடு எப்போது ? -DR.S. ராமதாஸ்
தமிழர்களின் தொல்லியல் பெருமிதமான கீழடியில் நடத்தப்பட்ட முதல் மூன்று கட்ட அகழாய்வின்  முடிவுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை. இவற்றை வெளியிட உயர்நீதிமன்றம் இருமுறை விதித்த கெடுவும் முடிந்து விட்ட நிலையில், அகழாராய்ச்சி முடிவுகள் வெளியிடப்படாதது வருத்தமளிக்கிறது.

குடிஉரிமை திருத்தச் சட்ட முன்வரைவை, வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்! -வைகோ

குடிஉரிமை திருத்தச் சட்ட முன்வரைவை, வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்! -வைகோ
குடி உரிமைத் திருத்தச் சட்ட முன்வரைவின் மீதான விவாதத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று 11.12.2019 ஆற்றிய உரை வருமாறு:-

செவ்வாய், 10 டிசம்பர், 2019

தமிழக அரசு பணியாளர் நியமனத்துக்கு பொதுத் தகுதித் தேர்வு நடத்துவதா? வைகோ கண்டனம்

தமிழக அரசு பணியாளர் நியமனத்துக்கு பொதுத் தகுதித் தேர்வு நடத்துவதா? மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு பணியாளர் தேர்வாணையம் (Staff Sellection Commission-SSC), வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personel Selection -IBPS), ரயில்வே தேர்வு வாரியம் (Railway Recuirtment Board -RRBS) போன்ற அமைப்புகள் மூலம் தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பள்ளிக்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை எக்காரணத்திற்காகவும் குறைக்கக்கூடாது! - DR. S. ராமதாஸ்

பள்ளிக்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை
எக்காரணத்திற்காகவும் குறைக்கக்கூடாது!
- DR. S. ராமதாஸ் 
(நிறுவனர், பாமக.)

நிதி நெருக்கடியை காரணம் காட்டி, 2019-20ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், ரூ.3,000 கோடியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதல்ல என அனைத்துத் தரப்பினரும் கூறிவரும் நிலையில், இந்த நிதிக் குறைப்பு மிகவும் கவலையளிக்கிறது.

மத்திய மாநில அரசுகள் பதக்கம் பெற்றிருக்கின்ற வீரர் வீராங்கனைகளை கவுரவப்படுத்தி பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும்.- ஜி.கே.வாசன்

நேபாளில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை 138 தங்கம், 80 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் என்று மொத்தம் 260 பதக்கங்களை பெற்றிருப்பது பாராட்டுக்குரியது.
- ஜி.கே.வாசன்
(தலைவர், த.மா.கா)

நேபாள் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் 13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதகங்களை குவித்து வருவது இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறது.

முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமிக்கு கடும் கண்டனம் - ஆர்.எஸ்.பாரதி எம்.பி

"எங்கள் தலைவர் மீது முதலமைச்சர் வீண்பழி சுமத்துவது 'கொள்ளையடித்துக் கொண்டு ஓடுவோரின்' கூச்சலாக மட்டுமே இருக்க முடியும்"
- ஆர்.எஸ்.பாரதி எம்.பி.
(அமைப்புச் செயலாளர், திமுக.)

“தி.மு.க. தேர்தலைக் கண்டு பயப்படுகிறது” என்றும், “மக்களைக் குழப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் எங்கள் கழகத் தலைவர்” என்றும் நா கூசாமல் பேட்டி ஒன்றே அளித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

திங்கள், 9 டிசம்பர், 2019

தமிழக வீரர் - வீராங்கனையரின் பங்கு மகத்தானது. - மு.க.ஸ்டாலின் பெருமிதம்

இந்திய விளையாட்டுத் துறையின் மகுடத்தில் புதுப்புது வைரங்களைப் பதித்து மின்னிடச் செய்வதில் தமிழக வீரர் - வீராங்கனையரின் பங்கு மகத்தானது.
- மு.க.ஸ்டாலின்
(தலைவர்,திமுக)

நேபாளத்தில் நடைபெற்ற 13-வது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில், வாலிபால் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடிய இறுதிப் போட்டியில், இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

சனி, 7 டிசம்பர், 2019

இந்திய அளவில் பாடத் திட்டங்களை மாற்றுகின்றீர்களா? நாடாளுமன்றத்தில் வைகோ கேள்வி

பாடத் திட்டங்களை மாற்றுகின்றீர்களா? வைகோ கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் பதில்


கீழ்காணும் கேள்விகளுக்கு, மனிதவள ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?

சுங்கச் சாவடிகளில் சுங்கக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என நிதின் கட்கரிக்கு ராமதாஸ் கடிதம்

முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் சுங்கக்கட்டணத்தை
ரத்து செய்ய வேண்டும்.மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு
மருத்துவர் ராமதாஸ் கடிதம் 

தமிழ்நாட்டில் சாலை அமைப்பதற்காக செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படாமலேயே அதிக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அதன் நகல்கள் மத்திய நெடுஞ்சாலைத்துறை செயலாளர் திரு. சஞ்சீவ் ரஞ்சன், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் மருத்துவர். சுக்பீர்சிங் சாந்து ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்.அதன் விவரம் வருமாறு:

மத்திய பா.ஜ.க. அரசின் மீது வழக்குத் தொடர்ந்தாவது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

“ஜி.எஸ்.டி சட்டத்தைச் செயல்படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகை குறித்த தனது வாக்குறுதியையும், சட்டத்தையும் மீறியுள்ள மத்திய பா.ஜ.க. அரசின் மீது வழக்குத் தொடர்ந்தாவது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட வேண்டும்”
- மு.க.ஸ்டாலின் அறிக்கை.
தலைவர் , திமுக.

“சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தைச் செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை போதிய ஜி.எஸ்.டி. வருவாய் இல்லாததால் வழங்க முடியாது” என்று மத்திய பா.ஜ.க. அரசு கைவிரித்துள்ளதை, அ.தி.மு.க. அரசும், முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியும், நிதியமைச்சராகவும் - துணை முதலமைச்சராகவும் இருக்கும் திரு. ஓ. பன்னீர்செல்வமும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்பெண்ணை ஆற்று நீர் சிக்கலைத் தீர்க்க தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தென்பெண்ணை ஆற்று நீர் சிக்கலைத்
தீர்க்க தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்!
- DR.S.ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர், பாமக.)

தென்பெண்ணையாற்றின் துணைநதிகளில் ஒன்றான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. அதைப் பயன்படுத்தி மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணைகளை கட்டும் பணிகளை கர்நாடகம் எந்த நேரமும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வியாழன், 5 டிசம்பர், 2019

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில், கழகப் பணிகளை தொடர்ந்து ஆற்றிடுவோம். - அதிமுகவினர் உறுதிமொழி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின்,
மூன்றாம் ஆண்டு நினைவு நாளில், அஞ்சலி செலுத்தும் நாம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில், கழகப் பணிகளை நிறைவேற்றிடவும், கழகத்தை வெற்றிப் பாதையில் வழிநடத்தவும், பின்வரும் உறுதிமொழிகளை உளப்பூர்வமாய் ஏற்போமாக !

இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள், தமிழ் நாட்டு அரசியலில் புதிய சரித்திரங்களைப் படைத்த சாதனை செம்மல். சமூக நீதியில் உறுதியான நம்பிக்கை, பெண் விடுதலையில் அசைக்க முடியாத பற்றுறுதி, மதச்சார்பற்ற உறுதியான இறை நம்பிக்கை, எளியோருக்கு சமூகப், பொருளாதார பாதுகாப்பு அளிப்பதில், அர்ப்பணிப்பு உணர்வோடு, தனது அரசியல் பாதையை புதுமையும், புரட்சியும் நிறைந்த போர்ப் பாதையாக மாற்றி வாழ்ந்தவர், நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். புரட்சித் தலைவி அம்மா அவர்களால், தமிழ் நாடு அடைந்திட்ட வளர்ச்சிகளை, மக்களுக்கு எந்நாளும் எடுத்துக் கூறிட, உறுதி ஏற்கிறேன்.

நிர்பயா நிதியில் வெறும் 6 கோடி ரூபாயை மட்டுமே அ.தி.மு.க. அரசு செலவு செய்திருக்கிறது - மு.க.ஸ்டாலின்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
நிர்பயா நிதியில் வெறும் 6 கோடி ரூபாயை மட்டுமே அ.தி.மு.க. அரசு செலவு செய்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது 
- மு.க.ஸ்டாலின்
(தலைவர், திமுக.)

வன்புணர்வுக் கொடுமைகளில் ஈடுபடும் கடைந்தெடுத்த கயவர்களிடமிருந்து பெண்கள் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட 'நிர்பயா நிதியில் தமிழ்நாட்டிற்கென அனுமதிக்கப்பட்ட 190 கோடி ரூபாய்த் திட்டங்களில், வெறும் 6 கோடி ரூபாயை மட்டுமே அ.தி.மு.க. அரசு செலவு செய்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பிற்கு உயர் முக்கியத்துவம் தராமல், அதிலேயும் கூட புரையோடிப் போயிருக்கும் அ.தி.மு.க. அரசின் அலட்சிய மனப்பான்மைக்குக்கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று அறிவிக்க வேண்டும் - வைகோ

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று அறிவிக்க வேண்டும் வைகோ கோரிக்கை.

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று அறிவிக்கக் கோரி அன்று 04.12.2019 மாநிலங்கள் அவையில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கோரிக்கை விடுத்து உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு:

இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு அநீதி: கல்விக்கடன் தருவதில் பாகுபாடு கூடாது! - DR.S. ராமதாஸ்

இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு அநீதி:
கல்விக்கடன் தருவதில் பாகுபாடு கூடாது!
-DR.S. ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர், பாமக.)

உயர்கல்வி பயில்வதற்காக உத்தரவாதமின்றி வழங்கப்படும் கல்விக்கடனில் 67% கடன் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கிடைத்திருப்பதாகவும், மீதமுள்ள 33% மட்டும் தான் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரம் மிகவும் வருத்தமளிக்கிறது. கல்விக்கடனாக வழங்கப்படும் தொகையிலும் வங்கிகள் பாகுபாடு காட்டுவது கண்டிக்கத்தக்கதாகும்.

பாஸ்டேக் திட்டத்தின்படி குறியீட்டு அட்டையைப் பெறுவதற்கான காலத்தை நீட்டிக்கவும் - ஜி.கே.வாசன்

மத்தியஅரசு சுங்கச்சாவடி களில் 'பாஸ்டேக்' எனப்படும் மின்னனு முறையில் கட்டணம் வசூலிக்கும் முறையை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதி முதல் அமல்படுத்த த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
-ஜி.கே.வாசன்
(தலைவர், த.மா.கா)

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்த 'பாஸ்டேக்' திட்டத்தில் பதிவு செய்வதற்கான காலத்தை இன்னும் நீட்டித்து அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்த மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்.

செவ்வாய், 3 டிசம்பர், 2019

மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பான வாழ்வு மேம்பட வேண்டும் - ஜி.கே.வாசன்

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், பாதுகாப்பு, வாழ்வாதாரம் ஆகியவற்றைஉறுதி செய்துகொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
ஜி.கே.வாசன்
(தலைவர், த.மா.கா)

உலகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பான வாழ்வு மேம்பட வேண்டும் என்பது தான் த.மா.கா வின் எதிர்பார்ப்பாகும்.

வெள்ளி, 29 நவம்பர், 2019

ஈழத்தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். - ஜி.கே.வாசன்

ஈழத்தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். - ஜி.கே.வாசன்


இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள இலங்கை அதிபரிடம் இந்திய பிரதமர் அவர்கள் இலங்கையில் வாழும் சிங்களர்களுக்கு உரிய உரிமைகள், பாதுகாப்புகள் உள்ளிட்ட அனைத்தும் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் அனைவருக்கும் பாகுபாடில்லாமல், தடையில்லாமல் முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கூற வேண்டும்.

திமுக மீது திட்டமிட்டு பொய்யாக குற்றம்சாட்டி வருகின்றனர் - மு.க.ஸ்டாலின் பேட்டி

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த பல சதி திட்டங்களை தீட்டி, குழப்பங்களை ஏற்படுத்தி வரும் முதல்வர் எடப்பாடி முதல் கடைக்குட்டி அமைச்சர் வரை அனைவரும், திமுக மீது திட்டமிட்டு பொய்யாக குற்றம்சாட்டி வருகின்றனர்
- மு.க.ஸ்டாலின் பேட்டி.
(தலைவர், திமுக )

உள்ளாட்சி மன்றத் தேர்தலை அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து 3 ஆண்டுகளாக நடத்தாமல், 'ஏதாவது சில காரணங்களைச் சொல்லி யாராவது நீதிமன்றத்திற்கு சென்று தடை பெறுவார்களா? - தடை பெற்று அதை எப்படியாவது நிறுத்திவிடவேண்டும்', என்கிற ஒரே நோக்கத்தோடு அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பயணிக்க தகுதியற்ற சுங்கச் சாலைகள்: கட்டணத்தை முழுமையாக ரத்து செய்க! - DR.S. ராமதாஸ்

பயணிக்க தகுதியற்ற சுங்கச் சாலைகள்:
கட்டணத்தை முழுமையாக ரத்து செய்க!
-DR.S. ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர், பாமக.)

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜாபேட்டை வரையிலான பகுதி சரியாக பராமரிக்கப்படாததற்காக கடும் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், அந்தச் சாலை சீரமைக்கப்படும் வரை 50% சுங்கக்கட்டணம் மட்டும் தான் வசூலிக்க வேண்டும் என்று ஏன் ஆணையிடக் கூடாது? என வினா எழுப்பியுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இந்த ஆதங்கம் மிகவும் நியாயமானது; இதன் மூலம் அச்சாலையை பயன்படுத்துவோரின் உள்ளக் குமுறல்களை நீதிபதிகள் எதிரொலித்துள்ளனர்.

வியாழன், 28 நவம்பர், 2019

தமிழக நதிகள் இணைப்பு திட்டங்கள் குறித்து மக்களவையில் திரு. டி. ஆர். பாலு வலியுறுத்தல்

தமிழக நதிகள் இணைப்பு திட்டங்கள் குறித்து
மக்களவையில் திரு. டி. ஆர். பாலு வலியுறுத்தல்


முன்னாள் மத்திய அமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக நாடளுமன்ற குழுத்தலைவரும், திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான திரு. டி. ஆர். பாலு, தமிழகத்தின் நதிகள் இணைப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு மாண்புமிகு மத்திய நீர் வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் செகாவத் விரிவான பதிலை மக்களவையில் இன்று 28 நவம்பர் 2019 அளித்துள்ளார்.

பதவி சுகத்துக்காக ஒன்று சேர்ந்து மகாராஸ்டிராவில் ஆட்சியை அமைத்திருக்கிறார்கள் - ஜி.கே.வாசன்

பதவி சுகத்திற்காக ஒரு கூட்டணி ஆட்சி அமர்ந்திருக்கிறது. இதன் சிரத்தன்மை கேள்விக்குறியதாகவே இருக்கிறது. - ஜி.கே.வாசன்


மகாராஸ்டிர மாநில மக்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் கொள்கைகளை தாரை வார்த்து கொடுத்து பதவி சுகத்துக்காக ஒன்று சேர்ந்து இன்றைக்கு மகாராஸ்டிராவில் பயனற்ற ஆட்சியை அமைத்திருக்கிறார்கள்.

கூடங்குளம் போராளிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் - டி. ஆர். பாலு

கூடங்குளம் போராளிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் - மக்களவையில் டி. ஆர். பாலு வலியுறுத்தல்


முன்னாள் மத்திய அமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக நாடளுமன்ற குழுத் தலைவரும், திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான திரு. டி. ஆர். பாலு, மக்களவையில் கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு குறித்து போராடிய மீனவர்களையும் பொதுமக்களையும் விடுதலை செய்ய வேண்டும் என குரல் எழுப்பினார்.

தமிழில் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகள்: பாமக முயற்சிக்கு கிடைத்த வெற்றி! - DR.S. ராமதாஸ்

தமிழில் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகள்:
பாமக முயற்சிக்கு கிடைத்த வெற்றி!
-DR.S. ராமதாஸ் அறிக்கை 
(நிறுவனர்,பாமக)

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.டி), தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (என்.ஐ.டி) உள்ளிட்ட அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக ஐ.ஐ.டி கூட்டு நுழைவுத் தேர்வுகளின் முதன்மைத் தேர்வை இனி தமிழ் உள்ளிட்ட 10 மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. 2021-ஆம் ஜனவரி தேர்தல் முதல் தமிழ்வழித் தேர்வு நடைமுறைக்கு வருகிறது.

எதற்காக இந்தக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்? - வைகோ விளக்கம்

எதற்காக இந்தக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்? - வைகோ விளக்கம்


இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்சே, முன்பு பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி ஆவார். அப்போது அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே குடியரசுத் தலைவராக இருந்தார். அவர்தான் இனப்படுகொலைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

மீத்தேன் திட்டம் ரத்து: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

பாறை மீத்தேன் திட்டம் ரத்து: பாதுகாக்கப்பட்ட
வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்!
-DR.S.ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக.)

காவிரி பாசன மாவட்டங்களின் 9 பகுதிகளில் பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அறிவித்திருக்கிறது. தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களிலும் பூமிக்கு அடியில் பாறைகளை பிளந்து மீத்தேன் உள்ளிட்ட எரிவாயுக்களை எடுப்பதற்கான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. இது தமிழக உழவர்கள் கொண்டாடப்பட வேண்டிய திருப்பம் ஆகும்.

பழனிசாமி அரசு மக்களின் உயிரோடு விளையாடக்கூடாது! - டி.டி.வி. தினகரன்

பாதுகாப்பற்ற உணவுப்பொருட்கள் விநியோகத்தில் தமிழகம் முன்னணி:
பழனிசாமி அரசு மக்களின் உயிரோடு விளையாடக்கூடாது!
- டிடிவி. தினகரன் 
(

தமிழ்நாட்டில் பால் போன்று மற்ற உணவுப் பொருட்களும் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் விநியோகிப்படுவதாக மத்திய நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

புதன், 27 நவம்பர், 2019

கண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை ; இறக்குமதியை விரைவுபடுத்த வேண்டும்!

கண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை:
இறக்குமதியை விரைவுபடுத்த வேண்டும்!
-DR.S. ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர், பாமக)

சென்னை கோயம்பேடு சந்தையிலும், தமிழகத்திலுள்ள அனைத்து சில்லறை விலைக் கடைகளிலும் பெரிய வெங்காயம் மற்றும் சிறிய வெங்காயத்தின் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன. விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும், அவற்றையும் தாண்டி வெங்காய விலை உச்சத்தை நெருங்குவது மிகவும் கவலையளி

உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவிடுக! - வைகோ கோரிக்கை

உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவிடுக! மாநிலங்கள் அவையில் வைகோ கோரிக்கை


உயர்நீதிமன்றங்கள் அளிக்கின்ற தீர்ப்பில், வழக்குத் தொடுத்தவர்கள் நிறைவு அடையவில்லை என்றால், தீர்ப்பு தவறானது எனக் கருதினால், அவர் உச்சநீதிமன்றத்தை நாடலாம்.

ஞாயிறு, 24 நவம்பர், 2019

பாஜகவுக்கு 'காவடி' தூக்கும் அமைச்சர் திரு.ஜெயக்குமார் 'சூப்பர் சீஃப் மினிஸ்டர் ' ஆக முயற்சிக்க வேண்டாம்!

பாஜகவுக்கு 'காவடி' தூக்கும் அமைச்சர் திரு.ஜெயக்குமார் அனைத்துத்துறைகளின் பிரச்சினைகளிலும் மூக்கை நுழைத்து 'சூப்பர் சீஃப் மினிஸ்டர் ' ஆக முயற்சிக்க வேண்டாம்! 
- திரு. டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி
(செய்தித்தொடர்பு,திமுக)

'மீன்வளத்துறை மற்றும் பணியாளர் துறை' பற்றியே இன்னும் முழுமையாகத் தெரிந்திராத மாண்புமிகு அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், தன்னை ஏதோ 'ஆக்டிங் சீஃப் மினிஸ்டர்' போல் நினைத்துக் கொண்டு, அனைத்துத் துறைகள் சார்ந்த கேள்விகளுக்கும் பதில் சொல்வது, அதிகப்பிரசங்கித்தனம் என்பதை விட, அவசரமாக அரிதாரம் பூசிய மோகத்தில் போடும் போலி நாடகம் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணத்தை மாநில அரசுகளே நிர்ணயிக்க வேண்டும்! - DR.S. ராமதாஸ்

தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணத்தை
மாநில அரசுகளே நிர்ணயிக்க வேண்டும்!
-DR.S. ராமதாஸ் 
(நிறுவனர், பாமக.)

இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணங்களை இந்திய மருத்துவக் குழுவின் ஆட்சிக்குழு நிர்ணயித்துள்ளது. இது மிகவும் குறைவான கட்டணம் என்று ஊடகங்கள் மூலம் செய்திகள் செய்திகள் பரப்பப்படும் நிலையில், உண்மையில் இந்திய மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ள கட்டணம் மிகவும் அதிகமாகும். இது ஏழை, நடுத்தர மாணவர்களை சுரண்டுவதற்கே வழி வகுக்கும்.

கொடியவன் கோத்தபயாவே, இந்தியாவுக்குள் நுழையாதே!!! - வைகோ

கொடியவன் கோத்தபயாவே,
இந்தியாவுக்குள் நுழையாதே!!! 
நவம்பர் 28 தலைநகர் தில்லியில் 
வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

இலங்கைத் தீவில், மனிதகுலம் சந்தித்திராத பேரழிவுக்கு ஆளான ஈழத்தமிழர்கள், நாதி அற்றுப் போனோமா நாம் என்று பதறிக் கதறி, அவலத்தில் கூக்குரல் இடும் நிலை, தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.

ஐ.ஐ.டி.க்களில் இட ஒதுக்கீடு: பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்! -DR.S.ராமதாஸ்

ஐ.ஐ.டி.க்களில் இட ஒதுக்கீடு: பின்னடைவு
பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்!
-DR.S.ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக.)

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(ஐ.ஐ.டி), இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.எம்) ஆகியவற்றில் பேராசிரியர்களை நியமிக்கும் போது இனி கண்டிப்பாக இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் என்று அவற்றின் நிர்வாகங்களுக்கு மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. சமூக நீதீயைக் காக்கும் நோக்குடன் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.