புதன், 30 அக்டோபர், 2019

குழந்தை சுஜித் மரணத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு உரிய பதில் சொல்லாமல் முதலமைச்சர் பதுங்கிக் கொள்ள முடியாது

“குழந்தை சுஜித் மரணத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு உரிய பதில் சொல்லாமல் முதலமைச்சர் பதுங்கிக் கொள்ள முடியாது;
கோபத்தில் உள்ள மக்களின் கேள்விகளுக்கு மனசாட்சியுடன் பதில் சொல்லியே ஆக வேண்டும்”
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.

  “ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித்தை மீட்பதில் ஏன் அதிமுக அரசு மெத்தனம் காட்டியது” என பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் நான் கேள்வி கேட்டால், முதலமைச்சர் திரு. பழனிசாமி கோபப்படுகிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி.
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து நான்கு நாட்கள் கழித்தும் உயிரோடு மீட்கப்படாத நிலையில், நாட்டையே சோகத்திலும் குற்ற உணர்விலும் தள்ளிவிட்டுச் சென்றுள்ளான் சுஜித் வில்சன். இச்செய்தியைக் கேள்விப்பட்டதும், 'சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும், அவரது குடும்பம் துடிப்பதைப் போல நாமும் துடிக்கிறோம், அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும்' என்று அறிக்கை வெளியிட்டேன்.

செவ்வாய், 29 அக்டோபர், 2019

சிறப்பாசிரியர் நியமனத்தில் தமிழ்வழி கல்விக்கான ஒதுக்கீட்டை மறுப்பதா? -Dr.ராமதாஸ்

சிறப்பாசிரியர் நியமனத்தில் தமிழ்வழி 
கல்விக்கான ஒதுக்கீட்டை மறுப்பதா?
                 -Dr.ராமதாஸ் அறிக்கை

தமிழக அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட பாடங்களுக்கான பகுதி நேர சிறப்பாசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியலை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வானவர்களின் பட்டியலில் தமிழ் வழியில் படித்தவர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு உடற்கல்வி, இசை, தையல், ஓவியம் ஆகிய  கலைகளை கற்றுத்தருவதற்காக சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இப்பணியிடங்கள் உருவாக்கப்பட்ட நாள் முதல் 2014-ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், 2014-ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அரசாணைப்படி,  இந்த நடைமுறை மாற்றப்பட்டு சிறப்பாசிரியர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நியமிக்கப் பட்டு வருகின்றனர். இந்த நடைமுறை தான் பல்வேறு சிக்கல்களுக்கும், அநீதிக்கும் வழி வகுத்துள்ளது.

உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய நான்கு பாடங்களுக்கு  1,300 சிறப்பாசிரியர்களை  தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டன. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அத்தேர்வின் முடிவுகள் கடந்த ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், அதில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாகக் கூறி பல மாணவர்கள்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், புதிய பட்டியல் கடந்த 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இடம்  பெற்றிருந்தவர்களில் 38 ஓவிய ஆசிரியர்களின் பெயர் இப்போது நீக்கப்பட்டுள்ளது. அவர்களில் 33 பேர் தமிழ் வழியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மட்டுமின்றி, தமிழ் வழியில் படித்த 37 பேர் உள்ளிட்ட 76 ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

இதேபோல், இசை, தையல் உள்ளிட்ட மற்ற பாடங்களுக்கான சிறப்பாசிரியர்கள் நியமனத்திலும் குளறுபடிகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. ஓவியம் உள்ளிட்ட பாடங்களுக்கான சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் நிலவும் குளறுபடிகளுக்கு தெளிவான காரணம் தெரியவில்லை என்றாலும் கூட தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 20% இட ஒதுக்கீடு வழங்கப்படாதது தான் காரணம் என்று கூறப்படுகிறது. 
தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகத் தான் ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும்  அடிப்படைத் தகுதி என்னவோ, அந்த படிப்பை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகியப் படிப்புகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தான் நடத்துகிறது என்பதால், தேர்வுத்துறையின் இயக்குனர் தான் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு சான்றளிக்க வேண்டும். ஆனால், மாணவர்கள் தமிழில் படித்தார்களா? ஆங்கிலத்தில் படித்தார்களா? என்பது தமக்கு தெரியாது என்பதால் அவர்களுக்கு அதற்கான சான்று வழங்க முடியாது என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் திட்டவட்டமாக மறுத்து விட்டார். அதைக் காரணம் காட்டி தான் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாக போட்டித் தேர்வர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஓவியப் பாடத்திற்கான சிறப்பாசிரியர் நியமனத்தில் மட்டும் தமிழ் வழியில் படித்த 70 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய அநீதியாகும்.

தமிழை வளர்க்க வேண்டும்; தமிழ் வழியில் படிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று ஒருபுறம் கூறிக் கொண்டு, மறுபுறம் இதுபோன்று அநீதிகள் இழைக்கப்பட்டால் தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்க முடியாது; தமிழை வளர்க்கவும் முடியாது என்பதை உரியவர்கள் உணர வேண்டும். அரசுத் தேர்வுத்துறை,  ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய அமைப்புகளில் இயக்குனர் நிலையிலுள்ள அதிகாரிகள் மட்டத்தில் தான் குழப்பங்கள் நடந்திருப்பதாகத் தெரிகிறது. எனவே,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். அதில் தெரியவரும் உண்மைகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட தமிழ்வழி சிறப்பாசிரியர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ஓடி விளையாட வேண்டிய சிறுவன் சுஜித்தை மயானத்திற்கு கொண்டு போய் விட்டது அதிமுக அரசு;அந்தோ!

”ஓடி விளையாட வேண்டிய சிறுவன் சுஜித்தை மயானத்திற்கு கொண்டு போய் விட்டது அதிமுக அரசு;

அந்தோ! அரசின் அலட்சியத்தால் இனி ஓர் உயிர் பறிபோக வேண்டாம்”

- கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.

அனைவரையும் ஏக்கத்திலும், மீள முடியாத துக்கத்திலும் விட்டு விட்டு அந்தோ! - அந்த அரும்பு சுஜித் நம்மை விட்டு பிரிந்து விட்டதே என்று நினைக்கும் போது என் இதயம் கனக்கிறது. “எப்படியும் உயிருடன் மீட்டுவிடுவார்கள்” என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நேரத்தில் அந்தக் குழந்தை மாண்டு  விட்டதாக  நள்ளிரவிற்குப் பிறகு வெளிவந்த அறிவிப்பு,  இடி போல் இதயத்தைத் தாக்கி என்னை நிலை குலைய வைத்து விட்டது.     குழந்தையின்  பெற்றோருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே வழி தெரியாமல்  தவித்து நிற்கிறேன்.

தமிழக மக்களும் - அனைத்து தாய்மார்களும் - “சுஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும்” என்ற ஒரே குரலாக ஒலித்தனர். நல்ல செய்தி கிடைக்கும் என்று தங்கள் நிமிடங்களைக் கழித்துக் கொண்டிருந்த நேரத்தில்,  சுஜித்தை மீட்பதில் எவ்வித திட்டமிடலும் இல்லாமல் அதிமுக அரசு தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்தும் வேதனையடைந்தனர். எத்தனை தோல்விகள்? எத்தனை தடுமாற்றம்?- ஒன்றா இரண்டா பட்டியலிட! அக்டோபர் 25 ஆம் தேதி மாலையில்  இருந்து 28ஆம் தேதி நள்ளிரவு வரை எத்தனை எத்தனை திடுக்கிடும் செய்திகள்! 

தேசிய பேரிடர் மீட்பு பணியினர் தாமதமாகவே வந்தனர்.   தெளிந்த முடிவின்றி பரிட்சார்த்த நடவடிக்கைகளை ஒன்றன் பின் ஒன்றாக மேற்கொண்டனர்.  மீட்பு  நடவடிக்கை குறித்து அனுபவம் வாய்ந்தவர்களை அழைத்துப் பேசி ஒரு  வியூகம் வகுக்கப்படவில்லை. சில  அமைச்சர்கள் சம்பவ இடத்தில் நின்று கொண்டு  அவரவர்களுக்கு மனதில்  உதித்ததைக் கூறிக்கொண்டு,  மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள்  அதிலே முழுக் கவனம் செலுத்த இயலாது அவர்களது பணிகளில் குறுக்கிட்டுக் கொண்டிருந்ததையும் தொலைக்காட்சிகளின் நேரலை நிகழ்ச்சிகளில் காண முடிந்தது.   இவ்வாறு ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்  அந்தக் குழந்தையை உயிருடன் மீட்க  கிடைத்த நேரங்கள்  எல்லாம்  மொத்தமாக வீணடிக்கப்பட்டது  கண்கூடு!

ஆழ்துளை கிணறுகள் போடுவதில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் 13-க்கும் மேற்பட்ட கட்டளைகளை வழங்கியுள்ளது. அதில் மிக முக்கியமாக “பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை அடியிலிருந்து மேல் மட்டம் வரை மூடிட வேண்டும்” என்று தெளிவாக கூறியுள்ளது. இழப்பீடு கேட்டு சிவகாமி என்பவர் தொடர்ந்த ஒரு வழக்கில் “பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளை” மூடுவதற்கு ஏற்கனவே மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அதிமுக அரசு எழுத்து பூர்வமான வாக்குமூலத்தை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இது குறித்து பஞ்சாயத்து சட்டம் திருத்தப்பட்டு- தனியாக ஆழ்துளை கிணறுகளை மூடுவது குறித்து அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் இவை அத்தனையும் அதிமுக ஆட்சியில் கானல் நீராக மாறி - இன்றைக்கு  அறியா குழந்தை சுஜித் உயிரை காவு வாங்கி விட்டது.

பேரிடர் மேலாண்மையில் மாநில அளவில் “பேரிடர் மேலாண்மைக்கு” முதலமைச்சர் தலைவர் என்றாலும், மாவட்ட அளவில் அங்குள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் தலைவராக இருப்பார். அவருடன் உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகளில் ஒருவர் துணை தலைவராக இருப்பார் என்று தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 கூறுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அதிமுக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை திட்டமிட்டு நடத்தவில்லை. ஆகவே அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் தலைமையில் உள்ள “மாநில பேரிடர் ஆணையம்” மட்டுமல்ல- மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் உள்ள “மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையமும்” படு தோல்வியடைந்து இன்றைக்கு பச்சைக்குழுந்தை சுஜித்தை பறிகொடுத்து தவிக்கிறோம்.

“80 மணி நேரம் மீட்பு பணி” என்று அமைச்சர்கள் தங்களை சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தினார்கள். அது மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளின் சுதந்திரத்தை பறித்தது. தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மண் வகை பாறையா அல்லது கடினப்பாறையா என்றெல்லாம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் தனியாக வரை படம் இருக்கிறது. ஏன் முதலமைச்சரின் பொதுப்பணித்துறையின் கீழ் வரும் நிலத்தடி நீர் துறையின் கீழே கூட இது போன்ற தகவல்கள் நிச்சயம் இருக்கும். ஆனால் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி மண் வகை பாறையா அல்லது கடினப் பாறையா என்று தெரிந்து கொள்ளவே அதிமுக ஆட்சி மூன்று நாட்கள் போராடியிருக்கிறது. இதனால் முதல் ரிக், இரண்டாவது ரிக் என்று ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைந்த பிறகு புதிய முயற்சியில் இறங்கி- இறுதியில் ஓடி விளையாட வேண்டிய சின்னஞ்சிறு சுஜித்தை மயானத்திற்கு கொண்டு போய் விட்டது அதிமுக அரசு.

பேரிடரில் ஒரு குடிமகனைக் காப்பாற்ற வேண்டியது அரசின் முதல் கடமை. இந்த தோல்விக்கு என்ன காரணம்? தொழில் நுட்ப அணுகுமுறையில் தமிழகம் பின்தங்கியுள்ளதா? திட்டமிட்டு செயல்படுவதில்- மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் தமிழக அரசு இன்னும் முழுமையான அனுபவம் பெறவில்லையா? சுஜித்தை மீட்க ராணுவம் அல்லது துணை ராணுவத்தை ஏன் முன்கூட்டியே அழைக்கவில்லை? ஒரு சுஜித்தை காப்பாற்ற முடியாத அதிமுக ஆட்சியினர்  பேரிடர் நேரங்களில் எப்படி தமிழக மக்களை காப்பாற்றப் போகிறார்கள்? என்று கேட்க விரும்புகிறேன். இதுவரை மாநிலம் மற்றும் மாவட்ட ரீதியாக “பேரிடர் மேலாண்மை திட்டங்கள்” தயாரிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? பேரிடர் பணிகளை செய்வதற்கு நவீன தொழில் நுட்ப ரீதியாக உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளதா? இல்லையா? பேரிடர் நிதி எல்லாம் எதற்காக செலவிடப்படுகிறது?  என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

ஆகவே தாங்கமுடியாத - துயரமான சுஜித்தின் மரணம் தமிழகத்தில் முதலும் கடைசியுமாக இருக்கட்டும். இனியொரு நிகழ்வு இப்படி தமிழகத்தில் அறவே நடக்கக் கூடாது. இனியாவது - எஞ்சியிருக்கின்ற நாட்களில் அதிமுக அரசு விழித்தெழ வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியும், பஞ்சமி நில மீட்பு போராட்டமும்! - DR.ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியும்,
பஞ்சமி நில மீட்பு போராட்டமும்!
- DR.ராமதாஸ் 
(நிறுவனர், பாமக.)

தமிழ்நாட்டில் பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்த அரசியல் கட்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான் முதலிடம் உண்டு. இதற்காக ஒரே ஒரு எடுத்துக்காட்டை மட்டும் இப்போது கூறுகிறேன்.

வாய்வீரம் காதைக் கிழிக்கிறது! வாக்குகளோ தினமும் குறைகிறது! - சுப.வீரபாண்டியன்

வாய்வீரம் காதைக் கிழிக்கிறது! வாக்குகளோ தினமும் குறைகிறது!  
   -சுப.வீரபாண்டியன் 

கைபேசிகள் எல்லாம் இல்லாத அன்றைய காலகட்டத்தில், கட்சிக் கூட்டங்களின் பொதுமேடைகளில், தலைவர்களை எதிர்பார்த்து மணிக்கணக்காய்க் காத்திருக்கும் மக்களிடம், "வந்துகொண்டே இருக்கிறார், இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவார், இதோ வந்துவிட்டார்" என்று அறிவிப்பார்கள். அப்படித்தான் இப்போது,"வளர்கிறார், வளர்கிறார், வளர்ந்து கொண்டே இருக்கிறார், இதோ வளர்ந்துவிட்டார்" என்று ஒருவரைப் பற்றிய முற்றிலும் செயற்கையான அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த ஒருவர்  - சீமான்! 

வெள்ளி, 25 அக்டோபர், 2019

ஆட்சி மற்றும் பணபலம் வெற்றி பெற்றுள்ளது. - கே.பாலகிருஷ்ணன் (cpim)

நாடு தழுவிய தேர்தல் முடிவுகள் பாஜக கூட்டணி சரிவு தமிழகதத்தில் அதிகார பலம் வென்றுள்ளது திமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு சிபிஐ(எம்)நன்றி
- கே.பாலகிருஷ்ணன்.
( மாநிலச் செயலாளர் சிபிஐ(எம்). )


விக்கிரவாண்டி , நாங்குநேரி தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

மருத்துவர் ராமதாஸ் அவர்களிடம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் முத்தமிழ்ச் செல்வன் வாழ்த்து பெற்றார்

மருத்துவர் ராமதாஸ் அவர்களிடம் விக்கிரவாண்டி
சட்டப்பேரவை உறுப்பினர் முத்தமிழ்ச் செல்வன் வாழ்த்து பெற்றார்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி. சண்முகம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர் முத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் இன்று சந்தித்தனர். மருத்துவர் அய்யா அவர்களிடம் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வாகியுள்ள முத்தமிழ்ச் செல்வன் வாழ்த்து பெற்றார். அனைவருக்கும் மருத்துவர் அய்யா அவர்கள் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்.

விக்கிரவாண்டி மக்கள் புகட்டிய பாடமும், ஸ்டாலின் கற்க மறுக்கும் படிப்பினையும்! - Dr.ராமதாஸ்

விக்கிரவாண்டி மக்கள் புகட்டிய பாடமும்,  
ஸ்டாலின் கற்க மறுக்கும் படிப்பினையும்!
       - Dr.ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக.)

தோல்விகள் கொடுக்கும் படிப்பினைகளும், அனுபவங்களும் மகத்தானவை. அவை தான் அகங்காரம் கொண்டு தவறான பாதையில் செல்லும் மனிதர்களுக்கு, எதார்த்தத்தை புரிய வைத்து சரியான திசையில் பயணிக்க வழிகாட்டும். ஆனால், விக்கிரவாண்டி தேர்தல் படுதோல்வி குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ள கருத்துகள், அவர் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

வியாழன், 24 அக்டோபர், 2019

அள்ளி வீசப்பட்ட வெள்ளிக் காசுகள் வெற்றியைத் தீர்மானித்து இருக்கின்றது. - வைகோ

தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

- வைகோ MP.
(பொதுச்செயலாளர், மதிமுக.)


தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி - நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும், புதுவை மாநிலம் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முதுமை என்னை எவ்வளவுதான் வாட்டினாலும், மக்களுக்காகவும் போராடி உயிரை விடுவேன்! - DR. ராமதாஸ்

"முதுமை என்னை எவ்வளவுதான் வாட்டினாலும்,
கோல் ஊன்றி நடந்தாலும்
இந்த ஊமை ஜனங்களுக்காகவும்,
மக்களுக்காகவும் போராடி உயிரை விடுவேன்!"

அங்கீகாரம் தான் அதிகாரத்தை
வென்றெடுக்கும் ஆயுதம்!
-DR. ராமதாஸ் 
(நிறுவனர், பாமக.)

அகில இந்திய அரசியல் அரங்கில் அடிக்கடி செய்யப்படும் ஒப்பீடு பாட்டாளி மக்கள் கட்சி-

பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து திசைதிருப்பும் முயற்சி - வைகோ

முரசொலி அலுவலகம் இடம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து திசைதிருப்பும் முயற்சி

- வைகோ அறிக்கை
(பொதுச்செயலாளர்,மதிமுக.)

பா.ஜ.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று நான் கூறியதாக தெரிவித்திருக்கிறார்.

பொய் வணிகருக்கு படுதோல்வி: மக்கள் யார் பக்கம் என்பது நிரூபனமாகியுள்ளது! - DR. ராமதாஸ்

பொய் வணிகருக்கு படுதோல்வி: மக்கள்
யார் பக்கம் என்பது நிரூபனமாகியுள்ளது!
- DR. ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக.)

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியின் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில், அமோக வெற்றி பெற்றுள்ளனர். வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கும், வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சர்க்கரை ஆலைகளால் ஏமாற்றப்பட்ட உழவர்களுக்கு கடன் வழங்க வேண்டும்! - DR. ராமதாஸ்

சர்க்கரை ஆலைகளால் ஏமாற்றப்பட்ட
உழவர்களுக்கு கடன் வழங்க வேண்டும்!
- DR. ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக.)

காவிரி பாசன மாவட்டங்களில் செயல்பட்டு வந்த தனியார் சர்க்கரை ஆலைகள் திவாலாகி விட்டதால், அவற்றுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளில் இருந்து கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்காததால், மீள முடியாத கடன் வலையில் சிக்கிக் கொண்டு உழவர்கள் தவிப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

புதன், 23 அக்டோபர், 2019

முகவர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் -முதல்வர் ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் கோரிக்கை

அதிமுக வெற்றியை உறுதி செய்யும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும் கழக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் விழிப்புடன் பணியாற்றுமாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அன்போடு கேட்டுக்கொண்டுள்ளார்.

செவ்வாய், 22 அக்டோபர், 2019

பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு பிற்போக்கானது; ஏழைகளை பாதிக்கும்! - DR. ராமதாஸ்

பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு 
பிற்போக்கானது; ஏழைகளை பாதிக்கும்!
                   - DR. ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர்,பாமக.)

இந்தியா முழுவதும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்காக பொதுநுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்திருக்கிறார்.

திங்கள், 21 அக்டோபர், 2019

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை பலபேர்களுக்கு இன்னும் வந்தடையவில்லை. - ஜி.கே.வாசன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை பலபேர்களுக்கு இன்னும் வந்தடையவில்லை.
- ஜி.கே.வாசன்
(தலைவர், த.மா.கா)

கடந்த வருடம் கஜா புயலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த கடும் பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் முழுமையாக மீண்டு வரவில்லை.

மாமல்லபுரத்திற்கு பார்வையாளர் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க வேண்டும். - ஜி.கே.வாசன்

மாமல்லபுரத்திற்கு தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் ஏன் வெளிநாட்டில் இருந்தும் வருகின்ற சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் விதமாக பார்வையாளர் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க மத்தியஅரசு முன்வர வேண்டும்.
- ஜி.கே.வாசன்
(தலைவர், த.மா.கா)

தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க இடம் மாமல்லபுரம். மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்குகிறது.

தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்; தமிழக அரசு விரைந்து செயலாற்ற வேண்டும். - வைகோ

தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்;
அரசு மருத்துவர்கள் போராட்ட அறிவிப்பு; தமிழக அரசு விரைந்து செயலாற்ற வேண்டும்.
- வைகோ வலியுறுத்தல்
(பொதுச்செயலாளர், மதிமுக.)

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவது கவலை அளிக்கிறது. அசோக் நகரைச் சேர்ந்த 8 வயது சிறுமி திவ்ய தர்ஷினி, பெரியமேடு பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் அரவிந்த், புழலைச் சேர்ந்த 7 வயது சிறுமி அக்ஷிதா ஆகிய மூன்று குழந்தைகள் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் டெங்குக் காய்ச்சலுக்குப் பலி ஆகி உள்ள துயரச் செய்திகள் வெளிவந்துள்ளன.

மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பே, கைவிட வேண்டும்! - DR. ராமதாஸ்

மும்மொழிக் கொள்கை மறைமுகமான
சமஸ்கிருத திணிப்பே, கைவிட வேண்டும்!
- DR. ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக.)

புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதும்,

பொது இடங்களில் புகைத்தடை சட்டத்தை அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும்! - DR.ராமதாஸ்

பொது இடங்களில் புகைத்தடை சட்டத்தை
அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும்!
-DR.ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக.)

இந்தியாவில் பொது இடங்களில் புகைப் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு, 11 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும், அந்தத் தடை இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. பொதுமக்களை புகையிலை சார்ந்த நோய்களில் இருந்து காப்பாற்ற வேண்டும்

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

தமிழ்நாட்டில் மேலும் 3 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுவதில் மகிழ்ச்சி! - DR.ராமதாஸ்

தமிழ்நாட்டில் மேலும் 3 அரசு மருத்துவக்
கல்லூரிகள் அமைக்கப்படுவதில் மகிழ்ச்சி!
- DR.ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக.)
AMNEWSTAMIL.BLOGSPOT.COM

தமிழ்நாட்டில் இதுவரை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படாத மாவட்டங்களில் 3 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் மருத்துவக் கல்வியை பரவலாக்குவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்.

சனி, 19 அக்டோபர், 2019

டாக்டர் ராமதாஸ் முரசொலி நிலம் குறித்து டிவிட்டரில் கேள்வி

டாக்டர் ராமதாஸ் முரசொலி நிலம் குறித்து டிவிட்டரில் கேள்வி    
1. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். 

7 பேர் விடுதலைக்கு ஆளுநர் எதிர்ப்பு ! முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் - தொல்.திருமாவளவன்

7 பேர் விடுதலைக்கு ஆளுநர் எதிர்ப்பு!
 தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் - தொல்.திருமாவளவன், விசிக.
திரு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழர்கள் ஏழு பேரையும் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்துக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

பஞ்சமி நிலம் என நிரூபித்தால் நான் அரசியலைவிட்டு விலகத் தயார் - மு.க.ஸ்டாலின்

பஞ்சமி நிலம் என நிரூபித்தால் நான் அரசியலைவிட்டு விலகத் தயார் - மு.க.ஸ்டாலின் 

முரசொலி அலுவலகம் தற்போது இருக்குமிடம் பஞ்சமி நிலம் எனும் பச்சைப் பொய் ஒன்றை மருத்துவர் அய்யா ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 'அது பஞ்சமி நிலமல்ல; பட்டா நிலம்' என்பதை ஆதாரத்துடன் அவருக்கு பதிலாக பதிவு கொடுத்தேன்.

ராஜேந்திர பாலாஜி - அமைச்சர் பதவி வகிக்கத் தகுதியற்றவர் - டி.கே.எஸ். இளங்கோவன்

“சிறுபான்மையினரை பழித்துப்பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - அமைச்சர் பதவி வகிக்கத் தகுதியற்றவர்; திமுக வன்மையாக கண்டிக்கிறது”

- திரு. டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி.,  அறிக்கை.
நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் வாக்குச் சேகரிக்கச் சென்ற அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை சந்தித்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியத் தோழர், ஜமாத்தை சேர்ந்த சிலரை அழைத்துக் கொண்டு கோரிக்கை மனு வழங்கினார்.

சமூக நீதியைச் சாய்க்கும் மத்திய, மாநில அரசுகள் - வைகோ கண்டனம்

சமூக நீதியைச் சாய்க்கும்
மத்திய - மாநில அரசுகள்
 -வைகோ கண்டனம்


மத்திய பா.ஜ.க., அரசு, சமூக நீதியை ஆழக் குழிதோண்டிப் புதைக்கும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது. மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வைத் திணித்து, பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன இளைய சமூகத்தினரின் மருத்துவர் ஆகும் இலட்சியத்தைத் தகர்த்துத் தவிடுபொடி ஆக்கி விட்டது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் -Dr.ராமதாஸ்

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்! 


விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்!  

வெள்ளி, 18 அக்டோபர், 2019

5 மாதங்களில் ரூ.80,000 கோடி வீழ்ச்சி : மோடி ஆட்சியின் பொருளாதார சரிவு அம்பலம் - ப.சிதம்பரம் ட்வீட்

5 மாதங்களில் ரூ.80,000 கோடி வீழ்ச்சி : மோடி ஆட்சியின் பொருளாதார சரிவு அம்பலம்
- திரு ப.சிதம்பரம் ட்வீட்!

மோடி ஆட்சியில் நாட்டின் ஏற்றுமதி சுமார் 6.6 சதவிகிதமும், இறக்குமதியில் சுமார் 13.9 சதவிகிதமும் குறைந்துள்ளதாக ட்விட்டரில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பா.ஜ.க அரசு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அக்கட்சி தலைவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியுமல்ல, சட்டத்தின் ஆட்சியுமல்ல - தி.வேல்முருகன்

தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியுமல்ல, சட்டத்தின் ஆட்சியுமல்ல; மாறாக, பாஜக மோடியின் அரசமைப்புச் சட்டத்திற்கே விரோத ஆளுநர் ஆட்சியே!
- தி.வேல்முருகன்
(தமிழக வாழ்வுரிமைக் கட்சி)


7 தமிழர்களை விடுவிக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தில் கையெழுத்திடாமலும் திருப்பி அனுப்பாமலும் ஓராண்டுக்கும் மேலாய் காலங்கடத்தி, கடைசியில் நிராகரிப்பதாக, அதையும் வெறும் வாய்மொழியாகவே முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார்!

அ.தி.மு.க. அரசு கடன் சுமை காரணமாக திவாலான நிலையில் சென்றுக் கொண்டிருக்கிறது. - கே.எஸ். அழகிரி

அ.தி.மு.க. அரசு கடன் சுமை காரணமாக திவாலான நிலையில் சென்றுக் கொண்டிருக்கிறது.
கே.எஸ். அழகிரி 
(தலைவர், காங்கிரஸ்.)

தமிழகத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்படுவதற்கு தற்போது நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடுகிற காங்கிரஸ், தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். இப்படி வெற்றி பெறுவதன் மூலமே தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி அகற்றப்படுவதோடு, மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திட உரிய வாய்ப்பு கிடைக்கும். அ.தி.மு.க.வினரைப் பொறுத்தவரை பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து விட்டு, அவை எவற்றையும் நிறைவேற்றுவதில் அக்கறை காட்டுவதில்லை.

காங்கிரஸ் கட்சிக்கு பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும். - ஜி.கே.வாசன்.

நாங்குனேரி தொகுதியில் இடைத்தோ்தலை திணித்த காங்கிரஸ் கட்சிக்கு பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

- திரு.ஜி.கே.வாசன்.
 (தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்)


நாங்குனேரி தொகுதி அதிமுக வேட்பாளா் நாராயணனை ஆதரித்து களக்காட்டில் திரு.ஜி.கே.வாசன் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், வெல்லமண்டி நடராஜன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனர்.

ஜி.கே.வாசன் பேசியது :

நூற்றாண்டு காணும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திராவிடர் கழகம் வாழ்த்து! - கி.வீரமணி

நூற்றாண்டு காணும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு
திராவிடர் கழகம் வாழ்த்து! வாழ்க கம்யூனிஸ்ட் கட்சி!
வருக அது காண விரும்பிய புரட்சி சமூகம்!
- ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை 
(தலைவர்,திராவிடர் கழகம்)



அன்று (17.10.2019) கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா தொடங்குகிறது என்பது அறிய மகிழ்கிறோம்!

முதுநிலை மருத்துவப் படிப்பு ; அகில இந்திய இடங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்! - DR.ராமதாஸ்

முதுநிலை மருத்துவப் படிப்பு: அகில இந்திய
இடங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்!
- DR.ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக.)

அரசு மருத்துவக் கல்லூரிகளில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ள 50% முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களுக்கு இந்த ஆண்டும் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. தவறான புரிதலின்கீழ் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூகநீதிக்கு எதிரானதாகும்.

செவ்வாய், 15 அக்டோபர், 2019

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மக்களுக்கு அ.தி.மு.க. அரசு செய்த துரோகம் - கே.எஸ்.அழகிரி

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மக்களுக்கு அ.தி.மு.க. அரசு செய்த துரோகத்திற்கு உரிய பாடத்தை வாக்காளப் பெருமக்கள் வருகிற தேர்தல் நாள் அன்று நிச்சயம் தங்களது வாக்குகள் மூலம் வெளிப்படுத்துவார்கள்

- கே.எஸ்.அழகிரி
(தலைவர், காங்கிரஸ்.) 

தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள்; பணிகளை விரைவுபடுத்த வேண்டும்! - DR.ராமதாஸ்

தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள்:
பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!
- DR.ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக.)


தமிழ்நாட்டில் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் தமிழக அரசுடன் இணைந்து 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கனவு இலக்கை எட்டுவதற்கு உதவும் வகையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆகும்.

திங்கள், 14 அக்டோபர், 2019

தமிழர் விரோதி சீமானின் கீழ்த்தரமான அநாகரிக ஆணவ பேச்சு - கே.எஸ்.அழகிரி கண்டனம்

தமிழர் விரோதி சீமானின் கீழ்த்தரமான அநாகரிக ஆணவ பேச்சை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
- கே.எஸ்.அழகிரி

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைதேர்தல் பிரச்சார கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலையை நியாயப்படுத்தியும் அதை செய்தவர்களை வரலாறு நிச்சயம் போற்றி பாராட்டும் என்று பயங்கரவாத வன்முறை செயலை பகிரங்கமாக ஆதரித்து பேசியிருக்கிறார். இந்த பேச்சின் மூலம் இந்தியாவில் தடை செய்யபட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலை புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை ஆதரித்ததின் மூலம் தேசத்துரோக குற்றத்தை சீமான் செய்திருக்கிறார். இதன் மூலம் சமூக அமைதிக்கு கேடு விளைவித்திருக்கிறார். தமிழர் விரோதி சீமானின் கீழ்த்தரமான அநாகரிக ஆணவ பேச்சை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழக மீனவா்கள் ஏழு பேரை இலங்கை கடற்படையினர் சிறை - ஜி.கே.வாசன் கண்டனம்

தமிழக மீனவா்கள் ஏழு பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளதற்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த மூன்று மீனவா்கள் ஒரு படகிலும், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த நான்கு மீனவா்கள் ஒரு படகிலும் இரண்டு நாள்களுக்கு முன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். அவா்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் சிறைப்பிடித்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா். அவா்களின் இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக மீனவா்களை, இலங்கை கடற்படையினா் கைது செய்வது தொடா்ந்து வாடிக்கையாகிவிட்டது. இதனால் தமிழக மீனவா்களின் வாழ்வாதாரம் நிலையற்றதாக மாறியுள்ளது. தமிழக மீனவா்கள் அச்சத்தோடு மீன்பிடிக்கச் செல்வதும், கைது செய்யப்படுவதும், மீன்பிடிச் சாதனங்களை இழப்பதும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு நல்ல தீா்வு காணப்பட வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த மீனவா்களின் எதிர்பார்ப்பாகும்.

எனவே, மத்திய அரசு, தமிழக மீனவா்களின் கோரிக்கைகளை ஏற்று, இலங்கை அரசுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கை கடற்படையினா் தமிழக மீனவா்களின் மீன்பிடித் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

குடும்பத்திற்காகவும் பயன்படுத்திக் கொண்டவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை - திமுக அறிக்கை

மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பை இது நாள் வரை வன்னியர் சமுதாயத்தை தங்களின் சுயநலத்திற்காகவும் - குடும்பத்திற்காகவும் பயன்படுத்திக் கொண்டவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை
- திமுக அறிக்கை.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அவர்கள் விக்ரவாண்டி தொகுதி பிரச்சாரத்தில் ஆற்றிய உரையில், "வன்னியர் இனத்திற்காகக் குரல் கொடுத்து உயிர் நீத்த தியாகிகளுக்கு கழக ஆட்சி அமைந்தவுடன் மணி மண்டபம் அமைப்போம் என்ற அந்த உறுதிமொழியை நான் தந்திருக்கிறேன்" என்று கூறியது தெளிவாக இன்றைய (13.10.2019) முரசொலி பத்திரிக்கையில் பக்கம் 7ல் வெளிவந்துள்ளது.

மேலும் "அதே உணர்வோடுதான் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த "ஏ.ஜி" என்று அந்நாளில் எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட ஏ. கோவிந்தசாமி அவர்களுக்கு ஒரு மணி மண்டபம் அமைக்க வேண்டும். காரணம், ஏ.ஜி. அவர்களும் இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பாடுபட்டவர்- பணியாற்றயவர்" என்ற கழகத் தலைவரின் பேச்சும் முரசொலியில் தெளிவாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் முரசொலி பத்திரிக்கையில் வெளிவந்ததை மறைத்து விட்டு, பத்திரிக்கை செய்தியில் தவறுதலாக வெளி வந்துள்ள "Typographical Error"-ஐ வைத்துக் கொண்டு, கழகத் தலைவர் பிரச்சாரத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடாத, ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் என்பதைக் குறிப்பிட்டு, சிலர் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்வதிலிருந்தே "வன்னியர்களுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கும்", "ஏ.ஜி. என்று அன்போடு அழைக்கப்படும் திரு. ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கும்" மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற கழகத் தலைவரின் அறிவிப்பை- இதுநாள் வரை வன்னியர் சமுதாயத்தை தங்களின் சுயநலத்திற்காகவும், குடும்பத்திற்காகவும் பயன்படுத்திக் கொண்டவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பது புலனாகிறது.

பிளாஸ்டிக் தடையை தீவிரப்படுத்த வேண்டும்; கூடுதல் பொருட்களுக்கு விரிவாக்க வேண்டும்! - DR. ராமதாஸ்

பிளாஸ்டிக் தடையை தீவிரப்படுத்த வேண்டும்;
கூடுதல் பொருட்களுக்கு விரிவாக்க வேண்டும்!
- DR. ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக.)

சீன அதிபருடன் பேச்சு நடத்துவதற்காக கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், விடுதியின் பின்புறத்தில் உள்ள கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகள் கிடந்ததைக் கண்டு அவற்றை அப்புறப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை நடைமுறைக்கு வந்து 10 மாதங்களாகியும் அவை ஒழிக்கப்படவில்லை என்பதை இது உறுதி செய்கிறது.

புதன், 9 அக்டோபர், 2019

இந்தியா - சீனா இடையேயான நல்லுறவு பொருளாதார வளர்ச்சி தரும் நம்புவோம் - ஜி.கே.வாசன்

இரு நாட்டு மக்களுக்கும் பயன் தருவதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும், நல்லுறவுக்கும் முன்னேற்றம் தரும் என்று நம்புவோம்.

-ஜி.கே.வாசன்
(தலைவர், த.மா.கா.)


இந்தியா - சீனா இடையேயான நல்லுறவுக்கு நல்வழி ஏற்படுத்தும் விதமாக சென்னை மாமல்லபுரத்தில் சீன அதிபரும், பாரதப் பிரதமரும் நாளை மறுநாள் 11 ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த இருப்பது இரு நாட்டு மக்களுக்கும் பயன் தருவதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும், நல்லுறவுக்கும் முன்னேற்றம் தரும் என்று நம்புவோம்.

சீன அதிபர் ஷி ஜின்பிங் அரசு முறை பயணமாக நாளை மறுநாள் சென்னை வருவது தமிழர்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக சீன அதிபர் சென்னைக்கு அருகில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மாமல்லபுரத்திற்கு வந்து இந்தியப் பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்து இரு நாட்டிற்கும் இடையே நல்லுறவை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துவது பாராட்டுக்குரியது.

இந்திய மக்கள் அனைவரும் இந்த சந்திப்பை மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் நடைபெற இருக்கின்ற இந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வானது தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமையும்.

இந்தியா - சீனா இடையே அரசியல், வர்த்தகம், பொருளாதாரம், எல்லை, பிராந்திய அமைதி உள்ளிட்ட பலவற்றில் ஒத்த கருத்து ஏற்பட்டு இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்க வேண்டும், பயன் தர வேண்டும், பலன் அளிக்க வேண்டும் என்பது தான் இந்திய மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இப்பேச்சுவார்த்தையில் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் நமது நாட்டிற்கும் சீனாவிற்கும் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பது இரு நாடுகளுக்கும் பெரும் பயன் தரும்.

எனவே தமிழகத்திற்கு வருகை புரிந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள சீன அதிபருக்கும், மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கும் த.மா.கா சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உழவர்களுக்கு ரூ.6,000 நிதி: தகுதியுள்ள அனைவருக்கும் பெற்றுத் தர வேண்டும்! - DR.ராமதாஸ்

உழவர்களுக்கு ரூ.6,000 நிதி: தகுதியுள்ள
அனைவருக்கும் பெற்றுத் தர வேண்டும்!
- DR.ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக.)

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 மானியம் வழங்கும் திட்டத்தின்படி, மூன்றாவது தவணை நிதி வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு நிர்ணயித்த தகுதிகளின் அடிப்படையில் முதல் இரு தவணை நிதி பெற்ற கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மூன்றாவது தவணை நிதி மறுக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளை பாதிக்கும் இந்த நடவடிக்கை நியாயமற்றதாகும்.

புகழ் வாய்ந்த மாமல்லப்புரம் சர்வதேச சுற்றுலா நகரமாகத் திகழ - வைகோ

"புகழ் வாய்ந்த மாமல்லப்புரம் சர்வதேச சுற்றுலா நகரமாகத் திகழ" - வைகோ அறிக்கை

கி.மு. 100 ஆம் ஆண்டில், சீனாவின் கான்-டோ-ஓ- வில் இருந்து கப்பல் மூலம் இரண்டு மாதங்கள் பயணம் செய்தால், காஞ்சி நாட்டை அடையலாம்; காஞ்சி பரந்தும் மக்கள் மிகுந்தும் பலவிதமான பொருள்களோடு முத்தும் மணி வகைகளும் நிரம்பித் திகழும் நாடு; பேரரசர் வான் கி.மு. 140-86 காலம் முதல் அந்நாட்டுடன் வானிபம் செய்து வருகின்றார்கள் என்று காஞ்சியைப் பற்றி சீனப்பயணி பான்-கோ எழுதி இருக்கின்றார்.

சீனி சக்கரை சித்தப்பா... சீட்டில் எழுதி நக்கப்பா - DR. ராமதாஸ் கிண்டல்

தேர்தலின் போது திமுக கொண்டாடவும், தேர்தலுக்குப் பிறகு தூக்கி எறியவும்
வன்னியர்கள் என்ன கறிவேப்பிலையா?
- DR. ராமதாஸ் 
(நிறுவனர், பாமக.)


தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும், மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபமும் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வெற்று வாக்குறுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அள்ளி வீசியிருக்கிறார்.

வெள்ளி, 4 அக்டோபர், 2019

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை மற்றும் ஊக்கத் தொகையை உடனே வழங்குக! - வைகோ MP.

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை மற்றும்
ஊக்கத் தொகையை உடனே வழங்குக!
- வைகோ MP.
(பொதுச்செயலாளர், மதிமுக.)


தமிழ்நாட்டில் கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகள் இயற்கை இடர்பாடுகள், இடுபொருட்கள் விலை ஏற்றம், ஆட்கள் பற்றாக்குறை அனைத்தையும் எதிர்கொண்டு கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். கரும்பு கொள்முதல் விலையை, உற்பத்தி செலவுகளுடன் 50 விழுக்காடு அதிகரித்துத் தரவேண்டும். அதற்குக் கொள்முதல் விலையாக ஒரு டன்னுக்கு 4000 ரூபாய் தீர்மானிக்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருகின்றனர். ஆனால் தமிழக அரசு தீர்மானித்த கொள்முதல் விலையைக் கூட வழங்காமல், சர்க்கரை ஆலைகள் விவசாயிகளை அலைக்கழிக்கின்றன.

ஓ.என்.ஜி.சியின் 44 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு அனுமதி தரக் கூடாது! - DR. ராமதாஸ்

ஓ.என்.ஜி.சியின் 44 ஹைட்ரோ கார்பன்
கிணறுகளுக்கு  அனுமதி தரக் கூடாது!
- DR. ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக.)

காவிரிப் படுகையை எண்ணெய் வயல்களாக மாற்றும் நடவடிக்கைகளின் அடுத்தக்கட்டமாக காவிரி பாசன மாவட்டங்களில் மேலும் 44 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. காவிரி பாசன மாவட்டங்களை சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு காவிரி பாசன மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மீண்டும், மீண்டும் அத்தகைய திட்டங்களை ஓ.என்.ஜி.சி. திணிப்பது கண்டிக்கத்தக்கது.

வியாழன், 3 அக்டோபர், 2019

மதுக்கடைகளின் எண்ணிக்கை, வணிக நேரத்தை குறைக்க நடவடிக்கை தேவை! - DR. ராமதாஸ்

மதுக்கடைகளின் எண்ணிக்கை, வணிக
நேரத்தை குறைக்க நடவடிக்கை தேவை!
- DR. ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர், பாமக)

ஆந்திரத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அம்மாநிலத்தில் 880 மதுக்கடைகள், அதாவது 20% மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி மதுவிற்பனை நேரமும் 2 மணி நேரம் குறைக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும்.