ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

பயிர் நஷ்டத்தால் ஏற்படும் விவசாயிகளின் துயரை துடைப்பதற்காக பிரதமரின் பசல் பீமா காப்பீட்டு திட்டம். தமிழகத்தில் ரூ 1258 கோடி காப்பீட்டை இந்த திட்டம் வழங்குகிறது.


 பயிர் நஷ்டத்தால் ஏற்படும் விவசாயிகளின் துயரை துடைப்பதற்காக பிரதமரின் பசல் பீமா காப்பீட்டு திட்டம். தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பயிர்களுக்கு ரூ 1258 கோடி காப்பீட்டை இந்த திட்டம் வழங்குகிறது.

பெருந்தொற்று காலத்திலும் கடுமையாக உழைத்து பெருமளவு அறுவடையை உறுதி செய்திருக்கும் விவசாயிகளின் கைகளில் நாட்டின் உணவுப் பாதுகாப்பு பத்திரமாக இருக்கிறது. பயிர் நஷ்டத்தால் ஏற்படும் நிதிச்சுமையால் விவசாயிகள் அவதியுறாத வகையில் பிரதமரின் பசல் பீமா காப்பீட்டு திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சராசரி விளைச்சலை கருத்தில் கொண்டு நிதியின் அளவை மாவட்ட அளவில் முடிவு செய்து கொள்ளும் வாய்ப்பு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

தேர்வுகளை நடத்துவதில் நடந்த குழப்பங்களுக்கு தீர்வு காண அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகத்தில் மட்டும் 10,000 மாணவர்களின் உயர்கல்வி கனவு கருகிவிடும்.- DR.அன்புமணி ராமதாஸ்


 
கேள்விக்குறியாகும் வெளிநாட்டு உயர்கல்வி? 

பட்டச் சான்றிதழ்களை விரைந்து வழங்குக! - DR.அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பட்டப்படிப்பு இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்துவதில் நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாக, வெளிநாடுகளில் உயர்கல்வி கற்க வாய்ப்பு கிடைத்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தேர்வுகளை நடத்துவதில் நடந்த குழப்பங்களுக்கு தீர்வு காண அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகத்தில் மட்டும் 10,000 மாணவர்களின் உயர்கல்வி கனவு கருகிவிடும்.

உழவர்களுக்கு மட்டும் தான் இத்தகைய அநீதி இழைக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்தத் தவறை தமிழக அரசு தான் சரி செய்ய வேண்டும்.- DR.S.ராமதாஸ்


 
நெல் கொள்முதல் விலை ஏமாற்றம்:  குவிண்டாலுக்கு ரூ.3000 வேண்டும்!

- DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் 2020-21 ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலைகளை அரசு அறிவித்திருக்கிறது.  சாதாரண வகை நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.1918 ஆகவும் சன்னரக நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.1958 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை உழவர்களின் கவலைகளைப் போக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில்,   அரசு அறிவித்துள்ள நெல் கொள்முதல் விலை விவசாயிகளின் கவலைகளை அதிகரித்திருக்கிறது.

மியான்மர் நாட்டில் சிக்கி இருக்கின்ற தமிழக மீனவர்களை மீட்க அயல் உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு வைகோ கோரிக்கை


 மியான்மர் நாட்டில் சிக்கி இருக்கின்ற தமிழக மீனவர்களை மீட்க 

வைகோ கோரிக்கை

அயல் உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அன்று (25.09.2020) மின்னஞ்சலில் எழுதிய கடிதம்:

“சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த ஜூலை 23 ஆம் நாள் 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களுடைய படகு எண் ஐசூனு-கூசூ-02 ஆஆ 2029.

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

உடல்தகுதி மிக்க இந்தியா இயக்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவை ஒட்டி உடல் தகுதி ஆர்வலர்கள் பலருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடல்



உடல்தகுதி மிக்க இந்தியா இயக்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவை ஒட்டி இன்று காணொலிக் காட்சி மூலம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி, வயதுக்கு உகந்த உடல்தகுதி பயிற்சிகள் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

வியாழன், 24 செப்டம்பர், 2020

மனிதகுலத்துக்கும், நாட்டுக்கும் சேவை புரிவது நமது பாரம்பரியமாகும் என்று நாட்டு நலப்பணித் திட்ட விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் உரை


 

மனிதகுலத்துக்கும் தேசத்துக்கும் சேவை செய்வது நமது மதிப்பு முறையின் ஒரு பாரம்பரியமாகும். சேவை நோக்கங்களை புரிந்துகொள்வதும் மதிப்பிடுவதும் கடினம் என்று கூறப்பட்டிருக்கும் அதன் வேர்கள் நமது பாரம்பரியத்தில் புதைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் இன்று (செப்டம்பர் 24, 2020) புதுதில்லியில் தேசிய சேவைத் திட்டம் வழங்கப்படும் நிகழ்வில் தனது உரையில் கூறினார்.

பாரம்பரிய பெருமை பெற்ற அண்ணா பல்கலைக் கழகப் பெயர் மாற்றத்தை மறுபரிசீலனை செய்க!, கல்வி உதவித் தொகை நிறுத்தத்தால் மாணவர்கள் வேதனை! - கி. வீரமணி

 பாரம்பரிய பெருமை பெற்ற அண்ணா பல்கலைக் கழகப் பெயர் மாற்றத்தை மறுபரிசீலனை செய்க! பெயர் மாற்ற மசோதாவை மறுமுறை பரிசீலிக்க தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்புவது சாலச் சிறந்தது!

கல்வி உதவித் தொகை நிறுத்தத்தால் மாணவர்கள் வேதனை!

 - கி. வீரமணி

தமிழ்நாட்டின் பிரபல பல்கலைக் கழகங்களில் ஒன்றாக சென்னை அண்ணா பல்கலைக் கழகம் திகழுகிறது.

பாரம்பரியப் பெருமை பெற்றது!

கடந்த 42 ஆண்டுகளாக இது மிகவும் சிறப்பாக உலக அளவில் சிறந்த பல்கலைக் கழகமாக, கிண்டி என்ஜினியரிங் கல்லூரி என்ற நிலையிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற பாரம்பரியப் பெருமையும் பெற்றது.

தருமபுரி மாவட்டத்தை செழிப்பாக்குவதற்கான காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை உடனடியாக அறிவித்து, அதற்கான நிதியையும் முதலமைச்சர் பழனிச்சாமி ஒதுக்கீடு செய்ய வேண்டும். - DR.அன்புமணி ராமதாஸ்

 தருமபுரி  மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டம்: மக்களுக்கு முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை  நிறைவேற்ற வேண்டும்!

 - DR.அன்புமணி ராமதாஸ்

இராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற அம்மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், காவிரி - குண்டாறு  இணைப்புத் திட்டம் ரூ.14,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும்; அத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த நடப்பு நிதியாண்டில் ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்று அறிவித்திருக்கிறார்.  இராமநாதபுரம் மாவட்டத்தை வளப்படுத்தும் இத்திட்டம் குறித்த முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமைகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது? - DR.S.ராமதாஸ்


தமிழ்நாட்டில் தனியார் வேலைவாய்ப்புகளில் 80% தமிழர்களுக்கு வழங்க தனிச்சட்டம்! - DR.S.ராமதாஸ்

கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு வேலைவாய்ப்புகள் முழுக்க முழுக்க கன்னடர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. சொந்த மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமைகளை பாதுகாக்கும் விஷயத்தில் கர்நாடக  அரசின் இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது மட்டுமின்றி, பிற மாநிலங்களால் பின்பற்றப்பட வேண்டியதும் ஆகும்.

வேளாண் மசோதாக்களை வரவேற்று - ஆதரித்த முதலமைச்சர் திரு. பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பிரதமர் மோடி அவர்கள் பாராட்டுரை வாசித்திருப்பதில் ஆச்சரியமில்லை - மு.க.ஸ்டாலின்

 ”வேளாண் மசோதாக்களை வரவேற்று - ஆதரித்த முதலமைச்சர் திரு. பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பிரதமர் மோடி அவர்கள் பாராட்டுரை வாசித்திருப்பதில் ஆச்சரியமில்லை” -  மு.க.ஸ்டாலின்.

“கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதிலும், தினமும் நோய்த் தொற்றுக்கு உள்ளாவோரைக் குறைப்பதிலும் தமிழக அரசு சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று, கொரோனாவில் தோற்று விட்ட அ.தி.மு.க. அரசுக்கு; மத்திய பா.ஜ.க. அரசின் பிரதமர் பாராட்டுரை வாசித்திருப்பது ஆச்சர்யமளிக்கவும் இல்லை; அதிர்ச்சியளிக்கவும் இல்லை; ஏதோ அவருக்கு அரசியல் ரீதியான கட்டாயம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க முடியாமல் - மூச்சுத் திணறி - “எப்போது கொரோனா குறையும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்” என்று கடவுளின் மேல் பாரத்தைப் போட்டு, முதலமைச்சரே கைவிரித்து விட்ட பிறகு - அவர் தலைமையிலான அரசு “சிறப்பாக நடவடிக்கை” எடுத்திருக்கிறது என்று பாராட்டும் நிலையும், நிர்ப்பந்தமும் பிரதமருக்கே ஏன் ஏற்பட்டிருக்கிறது என்பது விந்தையாகவும்,  வேதனையாகவும் இருக்கிறது. 

ஒரு குடும்பமாக பார்க்கும் இந்தியாவின் சொந்த தத்துவமான 'வசுதேவ குடும்பகத்தை' அது பிரதிபலித்தது.- பிரதமர் நரேந்திர மோடி

 


எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன், போரின் பயங்கரங்களில் இருந்து ஒரு புதிய நம்பிக்கை எழுந்தது. மனிதகுல வரலாற்றில் முதல் முறையாக, ஒட்டுமொத்த உலகத்துக்கான ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நிறுவன கையொப்பமிட்ட நாடுகளில் ஒன்றான இந்தியா, அந்த நல்ல நோக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அனைவரையும் ஒரு குடும்பமாக பார்க்கும் இந்தியாவின் சொந்த தத்துவமான 'வசுதேவ குடும்பகத்தை' அது பிரதிபலித்தது.

இந்தியாவின் தென்முனையில் கிளம்பும் அறவழிப் போராட்ட உணர்வுத் தீ, நாடு முழுவதும் பரவட்டும்! நன்மை தராத சட்டங்களைப் பொசுக்கட்டும்! - மு.க.ஸ்டாலின்



“விவசாயிகள் வாழ்வில் வெந்நீரைப் பாய்ச்சும் பாஜக - அதிமுக அரசுகள்!”
-  மு.க.ஸ்டாலின் அவர்களின் கடிதம்.

நாடாளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை உள்ளது என்ற அரிய நிலைமையைப் பயன்படுத்தி, மக்கள் நலனிலும் அவர்தம் நல்வாழ்விலும் அக்கறை செலுத்தாமல்; ஊரடங்கு காலத்தில், ஏழை - எளிய தொழிலாளர்களை வேலையின்றி - பட்டினியால் வாடச் செய்து, ஊர் ஊராக அலையவைத்து, நூற்றுக் கணக்கானவர்களின் உயிரிழப்புக்குக் காரணமான மத்திய பா.ஜ.க. அரசு, தற்போது விவசாயிகளின் வாழ்க்கையுடன் விபரீத விளையாட்டு நடத்தும்  வினோதமான  மசோதாக்களை நிறைவேற்றிச் சட்டமாக்கியுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளைப் புறந்தள்ளி; மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாக்கள் நிறைவேற்றம் குறித்து முறையான வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என வலியுறுத்தியபோதும்; அதனைப் பரிசீலிக்காமல் நிராகரித்து, குரல் வாக்கெடுப்பு என்ற பெயரில், ஆளுங்கட்சிக்குச் சாதகமாக, அவையின் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது, அனைத்துத் தரப்பிலும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. நாடு முழுவதும் விவசாயிகள் கொந்தளித்துப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

புதன், 23 செப்டம்பர், 2020

தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலின பிரிவிலிருந்து நீக்க வலியுறுத்தி - 2020 அக்டோபர் 06-ல் 10,000 இடங்களில் உண்ணாவிரதம்..! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

 தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலின பிரிவிலிருந்து நீக்க வலியுறுத்தி - 2020 அக்டோபர் 06-ல் 10,000 இடங்களில் உண்ணாவிரதம்..!  - டாக்டர் K. கிருஷ்ணசாமி

            தொல்காப்பியத்தில் மருதநில மக்களாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள். தாமிரபரணி, வைகை, அமராவதி, பவானி, காவிரி, பாலாறு உள்ளிட்ட ஆற்றுப்படுகைகளில் வேளாண்மையை மட்டுமே பிரதான வாழ்வியல் ஆதாரமாகக் கொண்டு வாழக்கூடிய மக்கள் ஆவர். தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் தென் மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் மிக அடர்த்தியாகவும், பிற பகுதிகளில் பரவலாகவும் உள்ளனர். டில்லி, மும்பை, கல்கத்தா போன்ற பெருநகரங்களிலும் அதிக அளவில் வாழ்கிறார்கள். அண்டை நாடான இலங்கையில் மலையகம் என்று அழைக்கப்படக்கூடிய பகுதியில் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தேயிலைத்தோட்ட தொழிலாளர்களாகவும், அந்நாட்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் திரளாக உள்ளனர். அதே போன்று மலேசியா, பர்மா, ஃபிஜி தீவுகள், ஆப்பிரிக்க, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். 

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

கொரோனா பாதிப்பிலிருந்து தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.- E.R ஈஸ்வரன்


 கொரோனா பாதிப்பிலிருந்து தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.- E.R ஈஸ்வரன்

பொருளாதார நடவடிக்கைகளை மேலும் முடக்கினால் மக்களின் வாழ்வாதாரம் மீளமுடியாத பள்ளத்தில் தள்ளப்படும் என்கின்ற காரணத்தினால் கொரோனாவுக்காக போடப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருக்கிறது. கொரோனா பரவல் கொஞ்சம் கூட குறையாமல் அதே வீரியத்தோடு இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தினுடைய அனைத்து பகுதிகளிலுமே கொரோனாவின் தாக்கம் இருந்து கொண்டிருக்கிறது. கொரோனாவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.

விவசாயத்தின் வாழ்வாதாரங்களை மத்திய அரசு பறிப்பதா? விவசாயிகளை கார்ப்பரேட்டுகளிடம் கொத்தடிமை ஆக்குவதா? தாளம் போடும் தமிழக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கதே! - கி.வீரமணி


 விவசாயத்தின் வாழ்வாதாரங்களை மத்திய அரசு பறிப்பதா?விவசாயிகளை கார்ப்பரேட்டுகளிடம் கொத்தடிமை ஆக்குவதா? 

தாளம் போடும் தமிழக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கதே! 

தி.மு.க. அனைத்துக்கட்சிக் கூட்டம் காலங்கருதி எடுக்கப்பட்ட முடிவே! - கி.வீரமணி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள, அவசரக் கோலம் அள்ளித் தெளித்த கதை என்பதுபோல, மக்களவையில் நிறைவேற்றியுள்ள விவசாயம் சார்ந்த மூன்று முக்கிய மசோதாக்களும் நாட்டின் விவசாயிகளால் பெரிதும் எதிர்க்கப்பட்டு, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் போராட்டங்களில் இறங்கி, வீதிகளுக்கு வந்தும் போராடுகின்றனர்!

இந்தியாவில் இன்றைய நிலையில் சபிக்கப்பட்ட சமுதாயம் என்றால், அது உழவர்கள் தான். அவர்கள் பயிரை சாகுபடி செய்யும் போது இயற்கைச் சீற்றங்களின் தாக்குதல்களால் பாதிக்கப்படுகின்றனர். - DR.S.ராமதாஸ்


வேளாண் விளைபொருட்கள் கொள்முதல், 
லாபத்துடன் கூடிய விலையை அரசு 
சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும்! - DR.S.ராமதாஸ்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட உழவர்களின் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (மேம்பாடு மற்றும் வசதிகள்) மசோதா,  உழவர்களுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா ஆகியவையும், அவற்றால் ஏற்படக்கூடிய  விளைவுகள் குறித்த உழவர்களின் அச்சமும் தான் நாட்டின்  முக்கிய விவாதமாக மாறியுள்ளன. எந்த சட்டத்தாலும் உழவர்களின் நலன்கள் இம்மியளவும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக இணையவழி செமஸ்டர் தேர்வில் மாணவர்கள் ஐயப்பாடும், குழப்பமுமின்றி தேர்வுகளை எழுத நடவடிக்கை எடுத்திடுக" - மு.க.ஸ்டாலின்

 “அண்ணா பல்கலைக்கழக இணையவழி செமஸ்டர் தேர்வில் - மாதிரி தேர்வில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளைக் களைந்து - மாணவர்கள் ஐயப்பாடும், குழப்பமுமின்றி தேர்வுகளை எழுத நடவடிக்கை எடுத்திடுக" - மு.க.ஸ்டாலின்.

சென்னை - அண்ணா பல்கலைக்கழகத்தின் இளநிலை மற்றும் முதுநிலைப் பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகளை, மாணவர்கள் ‘ஆன்லைன்’ மூலமாக எழுதுவதற்குப் பல்கலைக்கழகம் திட்டமிட்டிருக்கிறது.

திங்கள், 21 செப்டம்பர், 2020

புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கும். - E.R.ஈஸ்வரன்



புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கும். - E.R.ஈஸ்வரன்

விவசாய விளைபொருட்கள் மூலம் பெரிய வியாபாரிகள் பயனடைய வேண்டுமென்ற நோக்கத்தில் மூன்று விவசாய சட்டங்கள் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கிறது. கீழ்கண்ட சட்டங்கள்தான் அந்த மூன்றும்.

1. விளைவிப்பதற்கு உண்டான சட்டம்.

2. கொள்முதல் செய்வதற்கான சட்டம்.

3. கொள்முதல் செய்ததை இருப்பு வைப்பதற்கான சட்டம்.

சனி, 19 செப்டம்பர், 2020

"தேசிய கல்விக் கொள்கை" சமநிலையான, துடிப்பான, அறிவுசார் சமூகத்தை உருவாக்குவதற்கான பாதையை வகுத்துள்ளது.- ராம்நாத் கோவிந்த்


 சமநிலையான, துடிப்பான, அறிவுசார் சமூகத்தை உருவாக்குவதற்கான பாதையை வகுத்துள்ளது தேசிய கல்விக் கொள்கை: 
குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த்

21வது நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கல்வி நடைமுறையில் மறுசீர்திருத்தம் செய்வதை நோக்கமாகக் கொண்டு தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. பங்கேற்பு மற்றும் செம்மையாக்கல் மூலம் இந்த நிலையை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் தரமான கல்வி அளிப்பதன் மூலம்,  சமநிலையிலான, துடிப்பு மிக்க சமுதாயத்தை உருவாக்குவதற்கான லட்சியப் பாதையை இது வகுக்கிறது என்று குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். `உயர் கல்வியில் தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துதல்' என்ற தலைப்பில் இன்று நடந்த பார்வயாளர்கள் மாநாட்டின் தொடக்க உரையில் அவர் இவ்வாறு கூறினார்.

காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தரக் கூடாது! - DR. அன்புமணி ராமதாஸ்



 காவிரியில் மேகதாது அணை கட்ட  கர்நாடகத்துக்கு அனுமதி  தரக் கூடாது! - DR அன்புமணி ராமதாஸ்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு அனைத்து அனுமதிகளும் அளிக்க வேண்டும் என்று  பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா  கோரிக்கை விடுத்திருக்கிறார். இரு மாநில உறவுகளை சிதைக்கும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

வெளிநாடுகளில் தவிக்கும் 69,000 தமிழரை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்! - DR.S.ராமதாஸ்


வெளிநாடுகளில் தவிக்கும் 69,000 தமிழரை 
மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்! - DR.S.ராமதாஸ்

கொரோனா அச்சம் காரணமாக தாயகம் திரும்ப விண்ணப்பித்த வெளிநாடு வாழ் தமிழர்களில் பாதி பேர் மட்டும் தான் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும், இன்னும் 68,000 பேர் அழைத்து வரப்படவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு திரும்ப விண்ணப்பித்து நான்கு மாதங்களாகியும் அவர்களை அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது வேதனையளிக்கிறது.

மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் - வைகோ கோரிக்கை

 மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் - வைகோ கோரிக்கை

திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்த பெரிய நகரம் மணப்பாறை.

மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் மணப்பாறை நகராட்சி, மணப்பாறை ஒன்றியம், வையம்பட்டி ஒன்றியம், மருங்காபுரி ஒன்றியம், துவரங்குறிச்சியை உள்ளடக்கிய பொன்னம்பட்டி பேரூராட்சியும் உள்ளது.

புதன், 16 செப்டம்பர், 2020

ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய மசோதா 2020 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

 

ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய மசோதா 2020, மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் கடந்த மார்ச்  19ம் தேதி நிறைவேற்றப்பட்டது.   இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியதன் மூலம், குஜராத் ஜாம் நகரில் நவீன ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்(ITRA) அமையவும், அதற்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்(INI) அந்தஸ்து கிடைக்கவும் வழி ஏற்பட்டுள்ளது.

விவசாய மின் இணைப்புகள் நடைமுறையில் தேவையான மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம்.- E.R.ஈஸ்வரன்,



விவசாய மின் இணைப்புகள் நடைமுறையில் தேவையான மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம்.

தமிழகத்தில் விவசாய மின் இணைப்பு பெற வேண்டுமென்றால் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இல்லையெனில் பணம் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட நடைமுறை தான் பல ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து வந்தது. அதேபோல இலவச மின் இணைப்புக்கான சட்டத்திட்டங்களும், நடைமுறை சிக்கல்களும் ஏராளம். இதற்கெல்லாம் விடிவே இல்லையா என்று ஏங்காத விவசாயிகள் கிடையாது. இப்போது அதற்கெல்லாம் விடிவுகாலம் பிறந்திருக்கிறது. 

சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழர்களின் தாய்மொழிக்கு ஒரு நாளைக்கு ஒரு பாடவேளை கூட இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.- DR.S.ராமதாஸ்



சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் 
பாடவேளைகளை குறைக்கக் கூடாது! - DR.S.ராமதாஸ்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளுக்கான தமிழ் மொழி பாடவேளைகளின் எண்ணிக்கை வாரத்திற்கு 6 என்ற எண்ணிக்கையிலிருந்து 4 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழர்களின் தாய்மொழிக்கு ஒரு நாளைக்கு ஒரு பாடவேளை கூட இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்வால் மாணவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்; மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறையை மாநிலங்கள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.- திரு. பி.வில்சன் MP


"நீட் தேர்வால் மாணவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்; மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறையை மாநிலங்கள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்" - திரு. பி.வில்சன் MP 

மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்காகத் தயாராகும் மாணவர்கள் நீட் தேர்வின் மூலமாகச் சந்திக்கும் சில சொல்லப்படாத துயரங்களை, இந்த அவையின் மூலமாக மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

பாஜக அரசின் 'தேசிய புதிய கல்விக் கொள்கை-2020' திட்டத்தை எதிர்த்து, அனைத்து கட்சி கூட்டம் நடத்தவும் - சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும்.- மு.க.ஸ்டாலின்


மு.க.ஸ்டாலின் அவர்கள், பாஜக அரசின் 'தேசிய புதிய கல்விக் கொள்கை-2020' திட்டத்தை எதிர்த்து, அனைத்து கட்சி கூட்டம் நடத்தவும் - சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் வலியுறுத்தி, சட்டப்பேரவையில் ஆற்றிய உரை விவரம்:

தேசிய கல்விக் கொள்கை-2020, மாநிலங்களின் கல்வி உரிமைக்கு எதிரானது.

திங்கள், 14 செப்டம்பர், 2020

பிரதமர் திரு. நரேந்திர மோடி பிகாரில் பெட்ரோலியத்துறை தொடர்பான மூன்று முக்கியத் திட்டங்களை இன்று காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.


 பிரதமர்  திரு. நரேந்திர மோடி பிகாரில் பெட்ரோலியத்துறை தொடர்பான மூன்று முக்கியத் திட்டங்களை இன்று காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். துர்காபூர் –பங்கா பிரிவில், பாரதிப் –ஹால்தியா- துர்காபூர் பைப்லைன் விரிவாக்கத் திட்டம் மற்றும் இரண்டு எல்பிஜி நிரப்பும் நிலையங்கள் இத்திட்டங்களில் அடங்கும். மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய எண்ணெய் நிறுவனம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவை இவற்றை நிர்மாணித்துள்ளன.

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று 56 சி.என்.ஜி நிலையங்களை தேசத்திற்காக அர்ப்பணித்தனர்.

 மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று 56 சி.என்.ஜி நிலையங்களை தேசத்திற்காக அர்ப்பணித்தனர். இந்த சிஎன்ஜி நிலையங்கள் பீகார், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரா ஆகிய 13 மாநிலங்களிலும், சண்டிகரின் ஒரு யூனியன் பிரதேசத்திலும் அமைந்துள்ளது.

வியாழன், 10 செப்டம்பர், 2020

‘நீட்’ அச்சத்தால் மாணவர் தற்கொலை: நீட் தேர்வை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்!


அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த எலந்தங்குழியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வு குறித்த மன உளைச்சலால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. காலமான மாணவர் விக்னேஷின் குடும்பத்திற்கு  பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்விலிருந்து மாணவர்களைக் காப்பாற்ற அதிக MP-களை வைத்திருக்கும் திமுக-வும், அதிகாரத்தில் உள்ள பழனிசாமி அரசும் உண்மையாக முயற்சிக்க வேண்டும். - டிடிவி.தினகரன்



நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் மாணவச்செல்வங்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்வது பெரும் துயரத்தையும் மனவேதனையையும் ஏற்படுத்துகிறது.

அரியர் மாணவர்களின் தேர்ச்சி தொடர்பான விஷயத்தில் ஏ.ஐ.சி.டி.இ எதிர்ப்பைக் கைவிட வேண்டும். - DR.S.ராமதாஸ்

அரியர் மாணவர்கள் தேர்ச்சி: ஏஐசிடிஇ 
வீண் எதிர்ப்பை கைவிட வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் கலை-அறிவியல், பொறியியல் படிப்புகளில் கடந்த காலங்களில்  தோல்வியடைந்த மாணவர்கள், அத்தாள்களை கடந்த மே மாதம் நடைபெறவிருந்த பருவத்தேர்வுகளில் எழுத விண்ணப்பித்திருந்தால், அவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது  தவறானது என்று அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ) கூறியிருக்கிறது. இந்த அறிவிப்பால் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

கொரோனா பேரிடர் காலத்தில் - விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிதியை, இடைமறித்துக் கொள்ளையடித்துள்ளார்கள்.- மு.க.ஸ்டாலின்


 "விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் ரூ.110 கோடி அளவில் ஊழல் - உண்மைக் குற்றவாளிகளைக் கைதுசெய்ய முதலமைச்சர்  திரு. பழனிசாமி உடனடியாக சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்யவேண்டும்"- மு.க.ஸ்டாலின் 

“விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் 'பிரதம மந்திரி கிசான்' திட்டத்தின் கீழ், தாமாகவே பதிவு செய்து கொள்ளும் முறையால்தான், முறைகேடு நடைபெற்று விட்டது” எனக் கூறி- விவசாயிகளுக்குப் போக வேண்டிய 110 கோடியை 'போலி நபர்கள்' கொள்ளையடிக்கத் துணை போன தனது ஆட்சியின் முறைகேட்டைத் திசை திருப்பி - மறைக்க முயற்சிக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதன், 9 செப்டம்பர், 2020

மத்திய பா.ஜ.க. அரசு அனைத்துத் துறைகளிலும் மூர்க்கத்தனமாக இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.- வைகோ

 மத்திய அரசின் மூர்க்கத்தனமான இந்தித் திணிப்பு - வைகோ கண்டனம்

மத்திய பா.ஜ.க. அரசு அனைத்துத் துறைகளிலும் மூர்க்கத்தனமாக இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தியை அலுவல் மொழியாக வலுக்கட்டாயமாக திணிக்கும் வகையில் அதற்கென்று தனியாக இந்தி ஆட்சி மொழிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய அரசு அலுவலகக் கோப்புகள், கடிதத் தொடர்புகள் அனைத்தும் இந்தி மொழியில் இருப்பதை இந்தி மொழிப் பிரிவு கவனிக்க வேண்டும்.

மத்திய அரசின் இந்த உத்தரவுப்படி சென்னையில் உள்ள பொருட்கள் மற்றும் சேவை வரி ஆணையர் தலைமை அலுவலகத்தில் இந்திப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தப் பிரிவில் உதவி ஆணையராக தமிழ்நாட்டைச் சேர்ந்த, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பாலமுருகன் என்பவரும், கண்காணிப்பாளராக சுகுமார் என்பவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தி மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஆய்வாளர் ஒருவரும், வரி உதவியாளர் ஒருவரும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தி மொழி அறியாத ஆணையரும், கண்காணிப்பாளரும் ஆய்வாளர் உதவியுடன் இந்தி கோப்புகளில் உள்ளவற்றை அறிந்து கையொப்பமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்தி மொழி அறிந்த ஆய்வாளர் ரஞ்சன் தய்யா என்பவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தற்போது தமிழை தாய் மொழியாகக் கொண்ட விஜயகுமார் என்பவர் ஆய்வாளர் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

ஜி.எஸ்.டி ஆணையர் தலைமை அலுவலகத்தில் உள்ள இந்தி மொழிப் பிரிவில் பொறுப்பிலுள்ள மூவரும் இந்தி எழுதப்படிக்க தெரியாதவர்கள் ஆவர்.

இதே ஆணையர் அலுவலகத்தில் வட நாட்டைச் சேர்ந்த பலர் பணியில் இருக்கும் போது அவர்களை இந்தி பிரிவில் நியமனம் செய்யாமல், இந்தி தெரியாத தமிழர்களை நியமனம் செய்து இருப்பது பாஜக அரசின் திட்டமிட்ட இந்தி மொழித் திணிப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து உதவி ஆணையர் பாலமுருகன், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரியத்தின் தலைவருக்கு எழுதியுள்ள புகார் கடிதத்தின் மூலம், பாஜக அரசு தமிழர்கள் மீது இந்தி ஆதிக்கத்தை நிலைநாட்டும் வெறித்தனம் வெளிப்பட்டுள்ளது. இது மிகவும் கடும் கண்டனத்துக்கு உரியது.

தமிழரான உதவி ஆணையர் பாலமுருகன் புகார் தெரிவித்துள்ளதால், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து மிரட்ட முனையாமல், கோரிக்கையின் நியாயத்தை மத்திய அரசு உணர வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் ஆட்சி மொழி என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு கைவிட வேண்டும்.

தமிழ் தேசிய பேரியக்கத்  தலைவர் திரு மணியரசன் அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய நீர்வளத் துறை  அமைச்சகத்துக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி விளக்கம் கேட்டு எழுதிய மடலுக்கு இந்தி மொழியிலேயே பதில் அனுப்பியிருக்கிறார்கள்.

இந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழியைத் திணிக்கும் பாஜக அரசின் இத்தகைய மோசமான நடவடிக்கைகள் தமிழர்களை மேலும் மேலும் கொதிப்படையச் செய்கிறது என்பதை இந்தி ஆதிக்கவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் தமிழகம் பாஜக அரசுக்கு புரியவைக்கும்.

கவின்கலைக்கு சற்றும் தொடர்பில்லாதவர்களால் தவறான வரலாறு வலிந்து திணிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.- DR.S.ராமதாஸ்

 கவின்கலை மாணவர்களுக்கு தவறான வரலாறு 

கற்பிக்கப்படக் கூடாது: பாடத்திட்டத்தை மாற்றுக! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் உள்ள அரசு கவின்கலைக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புக்கான பாடத்திட்டங்களில் தேவையற்ற பாடங்கள் திணிக்கப்படுவதாகவும், ஓவியத்துறை வல்லுனர்கள் தொடர்பான பாடத்தில் தகுதியான  ஓவியர்கள் குறித்த வரலாறு புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கவின்கலைக்கு  சற்றும் தொடர்பில்லாதவர்களால் தவறான வரலாறு வலிந்து திணிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

பட்டாசுத் தொழிலாளர்களின் உடலும், உயிரும் கணிசமான தொகைக்கு காப்பீடு செய்யப்பட வேண்டும்.- டாக்டர் K. கிருஷ்ணசாமி

தொடர்கதையாகும் தீ விபத்துகள்..!

பட்டாசுத் தொழில் பாதுகாப்பு இல்லாமல் போவதா?

 - டாக்டர் K. கிருஷ்ணசாமி,

கடலூர் மாவட்டம், குறுங்குடி பகுதியில் பட்டாசு வெடி விபத்தில் தன்னுடைய இன்னுயிரை நீத்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பலத்த காயமுற்றோருக்கு உயர்தர நவீன சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

சனி, 5 செப்டம்பர், 2020

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயலை மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் கைவிடவேண்டும். - மு.க.ஸ்டாலின்.

 "NEP குறித்து  நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதற்கு முன்பு -  ஆளுநர்களிடம் கருத்து கேட்க முனையும் - நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயலை மாண்புமிகு  அவர்கள் கைவிடவேண்டும்"

- மு.க.ஸ்டாலின்.

நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ள நிலையில், அங்கே விவாதங்கள் இடம்பெறும் வரை பொறுத்திருக்காமல், அவசரம் அவசரமாக,  செப்டம்பர் 7-ம் தேதி அன்று ஆளுநர்கள் மாநாட்டைக் கூட்டி,  புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து குடியரசுத் தலைவரும், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களும், கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் அவர்களும், ஆளுநர்களிடம் கருத்துகள் கேட்க முனைவது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயல் என்பதால், அது ஏற்புடையதல்ல!

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

வடிகட்டப்பட்ட விஷயங்கள் உங்கள் மூளைக்கு சென்றால் தான், அவை உங்களுக்கு உதவும். குப்பையை புறம் தள்ளி உங்கள் இதயத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.- பிரதமர் நரேந்திர மோடி


 ஐபிஎஸ் பயிற்சி அலுவலர்களுடன் உரையாடிய பிரதமர்

'உங்கள் காக்கி சீருடையின் மரியாதையை என்றும் மனதில் கொள்ளுங்கள்' காவல் துறையின் மனித நேயம் கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் வெளிப்பட்டது

சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமியில் இன்று நடைபெற்ற திக்ஷந்த் அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்.

இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் தான் தொடர்ந்து உரையாடி வருவதாக பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகளிடம் பேசிய பிரதமர் குறிப்பிட்டார். "கொரோனா வைரஸ் காரணமாக உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. எனது ஆட்சிகாலத்துக்குள் உங்கள் அனைவரையும் ஏதாவது ஒரு சமயத்தில் சந்திப்பேன் என நான் உறுதியாக நம்புகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.

இந்தி வேண்டாம் என நூறாண்டு காலம் கூப்பாடு போட்டு தமிழகத்தை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்தி விட்டார்கள். - டாக்டர் K. கிருஷ்ணசாமி,


தேசிய புதிய கல்விக் கொள்கை குலக் கல்வியல்ல!

தமிழ் குல நலக் கல்வி!!

செப்டம்பர் 6 - புதிய தமிழகம் கட்சி விழிப்புணர்வு பிரச்சாரம்! - 

35 வருடங்களுக்கு மேலாக மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்த தேசியக் கல்விக் கொள்கையில் கஸ்தூரிரங்கன் அவர்களின் தலைமையிலான குழு மிகப்பெரிய மாற்றங்களை செய்துள்ளது. இப்புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டுவிட்டது. பல மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஆயத்தமாகி வருகின்றன. சில மாநிலங்கள் அதன் சாதக, பாதக அம்சங்களை ஆராய கமிட்டி அமைத்துள்ளன. தமிழ்நாடு மட்டும், இப்புதிய தேசியக் கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழித் திட்டத்தை ஏற்கமாட்டோம் என்றும், புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள பிற அம்சங்களை ஆராய கமிட்டி அமைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. இந்தியா முழுவதும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்ட போதும், தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அரசியல் கட்சிகள் முன்னெடுத்தன. தமிழகத்தை பொருத்தமட்டில் மத்திய அரசு எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும், அதை எதிர்ப்பது ஒன்றே குறிக்கோளாக வைத்து பல அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. இந்தியாவில் பிற மாநிலங்களில் மட்டுமல்ல, உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் கல்வியை அரசியல் களமாக்கியதில்லை.

சித்த மருத்துவ நிர்வாகம் இப்போதுள்ள நிலையில் நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் சித்த மருத்துவ முறைக்கு மூடுவிழா நடத்தப்படும் ஆபத்து உள்ளது.- DR.S.ராமதாஸ்

 சித்த மருத்துவத்துக்கு தனித்துறை அமைத்து 

சென்னையில் தலைமை அலுவலகம் தேவை! - DR.S.ராமதாஸ்

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த சித்த மருத்துவ இணை ஆலோசகர்  பதவியை கலைத்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் வினா எழுப்பியுள்ளது. தமிழர்களின் மருத்துவ முறையான சித்த மருத்துவ முறைக்கு உள்ள முக்கியத்துவத்தைக் குறைக்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் முயன்று வரும் நிலையில், உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள இந்த வினா எச்சரிக்கை மணியாகும்.

குருங்குடி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும். - DR. அன்புமணி ராமதாஸ்

 குருங்குடி பட்டாசு ஆலை விபத்தில்  9 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது - DR. அன்புமணி ராமதாஸ்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலை அடுத்த குருங்குடி என்ற இடத்தில் பட்டாசு ஆலையில்  ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பெண்கள் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்த எனது சகோதரிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வியாழன், 3 செப்டம்பர், 2020

அடித்தட்டு மக்களின் சிரமங்களை அரசு புரிந்து கொள்ள வேண்டும். மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும்.- E.R.ஈஸ்வரன்


 

அடித்தட்டு மக்களின் சிரமங்களை அரசு புரிந்து கொள்ள வேண்டும். மாவட்டங்களுக்கு  இடையேயான பொது போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும்.

இன்றிலிருந்து பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கின்ற மாநில அரசு மாவட்டங்களுக்குள்ளே பொது போக்குவரத்தை அனுமதித்திருக்கிறது. ஆனால் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது.

புதன், 2 செப்டம்பர், 2020

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்க கண்டன உயர்வை ரத்து செய்ய வேண்டும்.- ஜி.கே.வாசன்


 

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்க கண்டன உயர்வை ரத்து செய்ய வேண்டும்.- ஜி.கே.வாசன்

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் , தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் , சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது . 

தமிழ்நாட்டில் அரசுத்துறை பதவி உயர்வில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். - DR.S.ராமதாஸ்

பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு 
இட ஒதுக்கீடு வழங்க சட்டத் திருத்தம்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் அரசுத்துறை பதவி உயர்வில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் விதத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. இதனால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பதவி உயர்வுக்கு ஏற்பட்டுள்ள பெரும் தடையை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்ற தீர்ப்பு புதிய சமூகநீதி வரலாறு படைக்கும்! - DR.அன்புமணி ராமதாஸ்



மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு  இட ஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்ற  தீர்ப்பு புதிய சமூகநீதி வரலாறு படைக்கும்!
 - DR. அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு உரிமை உண்டு என்றும், இது தொடர்பான இந்திய மருத்துவக் குழுவின் விதிகள் செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தைப் பாதுகாப்போம்! - வைகோ அறிக்கை



இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தைப் பாதுகாப்போம்!
 - வைகோ அறிக்கை

இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் கோடான கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள எல்.ஐ.சி. நிறுவனம் செப்டம்பர் 1 ஆம் நாள், 65 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

வெறும் 5 கோடி ரூபாய் முதலீட்டில் 1956 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள், எல்.ஐ.சி நிறுவனம் தொடங்கப்பட்டது.

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தில் 'ரேட் பேசி தகுதிகள் விற்கப்பட்டதா' என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்திட வேண்டும்.- திரு. துரைமுருகன் MLA

 "பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தில் 'ரேட் பேசி தகுதிகள் விற்கப்பட்டதா' என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்திட வேண்டும்" - திரு. துரைமுருகன் MLA 

பழம்பெரும் பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் வரும் ஆறு கல்லூரிகளில் தகுதியில்லாதவர்கள் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை தருகிறது. 

மறைந்த பேராசிரியர் பெருந்தகை, என்.வி.என். சோமு, முரசொலி மாறன், நான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்களும், நீதிபதிகளும் படித்த புகழ்பெற்ற இந்தக் கல்லூரிகளில்;