திங்கள், 30 நவம்பர், 2020

பிறமொழி பேசுவோர் மீது இந்தியைப் போலவே சமஸ்கிருதத்தைத் திணிப்பது ஏன்? அரசாணையைத் திரும்பப் பெற மோடியின் சங்பரிவார் அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! - தொல்.திருமாவளவன்

 பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பு:

கேட்க ஆளே இல்லாத ஒரு மொழிக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? 

பிறமொழி பேசுவோர் மீது இந்தியைப் போலவே சமஸ்கிருதத்தைத் திணிப்பது ஏன்? 

அரசாணையைத் திரும்பப் பெற மோடியின் சங்பரிவார் அரசுக்கு  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! 

மத்திய அரசால் நடத்தப்படும் பொதிகை தொலைக்காட்சியில் ஒவ்வொரு நாளும் காலையில் 15 நிமிடங்கள் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்புக்கென நேரம் ஒதுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான இந்த சமஸ்கிருதத் திணிப்பு ஆணையை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

சிதம்பரம் ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தோடு இணைத்திடுக! - கே.பாலகிருஷ்ணன் கடிதம்


 தமிழக அரசு சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி பல்கலைக்கழகத்தின் முழு நிர்வாகத்தையும் 2013ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. அண்ணாமலைப் பல்கலைகழகத்தோடு இணைந்த ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரியும் இணைந்தே கையகப்படுத்தப்பட்டது.

விவசாயச் சட்டங்களைப் பிரதமர் நியாயப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கும் போது, போராடும் விவசாயிகளுடன் எந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துவார்? - கே.எஸ். அழகிரி


 மத்திய பா.ஜ.க. அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டுக்குழு கடந்த நான்கு நாட்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி, அரியானா மாநில எல்லைக்கு அருகில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை சோதனைகளின் மூலம் ரூபாய் 450 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத வருமானம் தெரியவந்துள்ளது.

 சென்னையில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வடிவமைப்பாளர், அதன் முன்னாள் இயக்குநர் மற்றும்  பிரபல எவர்சில்வர் வியாபாரி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் 27.11.2020 அன்று சோதனை நடத்தினர்.சென்னை மும்பை ஹைதராபாத் மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில உள்ள மொத்தம் 16 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 

முன்னாள் இயக்குநரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கடந்த மூன்று ஆண்டுகளில் சேர்த்திருந்த ரூபாய் 100 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன. தகவல் தொழில்நுட்பம் சிறப்பு பொருளாதார மண்டல வடிவமைப்பாளர், தற்போது பணி நடைபெற்று வரும் திட்டத்தில்  போலியாக கணக்கு காட்டி ரூபாய் 160 கோடி பெற்றிருப்பதும் கண்டறியப்பட்டது.

மனதின் குரலின் தொடக்கத்தில் நான் உங்கள் அனைவரோடும் ஒரு சந்தோஷமான விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.- நரேந்திர மோடி

 

 மனதின் குரலின் தொடக்கத்தில் நான் உங்கள் அனைவரோடும் ஒரு சந்தோஷமான விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  தேவி அன்னபூர்ணாவின் ஒரு மிகப் பழமையான விக்ரஹம், கனடாவிலிருந்து மீண்டும் இந்தியா வருகிறது என்பதை அறிந்து இந்தியர்கள் ஒவ்வொருவரும் பெருமிதம் அடைவார்கள்.  இந்த விக்ரஹம் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் முன்பாக, 1913ஆம் ஆண்டு வாக்கில், வாராணசியின் ஒரு ஆலயத்திலிருந்து களவாடப்பட்டு, நாட்டை விட்டுக் கடத்திச் செல்லப்பட்டது.  நான் கனடாவின் அரசு புரிந்திருக்கும் இந்தப் புண்ணியச் செயலுக்கும், இதைச் சாதிக்கக் காரணமாக இருந்த அனைவருக்கும் என் உள்ளார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.  அன்னை அன்னபூரணிக்கும், காசிக்கும் இடையே விசேஷமான சம்பந்தம் உண்டு. 

ஏரி நீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை வேண்டும்; செம்பரம்பாக்கம் ஏரி பராமரிப்பிலேயே அலட்சியம் காட்டும் அதிமுக அரசு மாநிலத்தின் பிற ஏரிகளை எப்படி பராமரிக்கும்? - திரு. துரைமுருகன் MLA.


 "ஏரி நீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை வேண்டும்; செம்பரம்பாக்கம் ஏரி பராமரிப்பிலேயே அலட்சியம் காட்டும் அதிமுக அரசு மாநிலத்தின் பிற ஏரிகளை எப்படி பராமரிக்கும்?"

 - திரு. துரைமுருகன் MLA.

'நிவர்' புயலை முன்னிட்டு - செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீரை வெளியேற்றத் திறந்துவிடப்பட்ட 2 மற்றும் 3 ஆவது மதகுகள்,  மூடமுடியாமல் இப்போது 400 கன அடி நீர் வீணாக வெளியே போய்க் கொண்டிருக்கிறது என்று வரும் செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது. 

விவசாயிகளின் ஜனநாயகரீதியான போராட்டத்தை மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் மதித்து - நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி - வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும் என அறிவிக்க வேண்டும்.- மு.க.ஸ்டாலின்


விவசாயிகளின் ஜனநாயகரீதியான போராட்டத்தை மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் மதித்து - நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி - வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும் என அறிவிக்க வேண்டும். 
- மு.க.ஸ்டாலின் 

இந்தியா முழுவதிலுமிருந்து ஐந்நூறுக்கும்  மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பிரமாண்டமாகத் திரண்டு, நாட்டின் அறுபத்து இரண்டு கோடி விவசாயிகளின் சார்பில், பல லட்சம்  விவசாயப் பெருமக்கள் கடந்த  நான்கு நாட்களாக டெல்லி மாநகரத்தை ஜனநாயக வழிமுறைகளையொட்டி முற்றுகையிட்டு, மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்துச் சளைக்காத தீரத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழி நிகழ்ச்சிகளின் உள்ளடக்கத்தை செறிவாக்கவும், செழுமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 தொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் 

திணிப்பை அரசு கைவிட வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் பொதிகைத் தொலைக்காட்சி உட்பட அனைத்து மாநிலத் தொலைக்காட்சிகளிலும் தினமும்  சமஸ்கிருத செய்திகளையும், வாராந்திர செய்தித் தொகுப்பையும் ஒளிபரப்ப வேண்டும் என்று மண்டல தொலைக்காட்சி (தூர்தர்ஷன்) நிலைய அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டிருக்கிறது. மக்களின் விருப்பத்திற்கு மாறாக செய்திகள் மூலம் சமஸ்கிருதத்தைத் திணிக்க மத்திய அரசு முயல்வது கண்டிக்கத்தக்கதாகும்.

விவசாயிகளை வீதியில் தள்ளிய மத்திய - மாநில அரசுகளுக்கு கண்டனம் தலைநகரை உலுக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்புவோம்! - கே.பாலகிருஷ்ணன்


விவசாயிகளை வீதியில் தள்ளிய மத்திய - மாநில அரசுகளுக்கு கண்டனம் தலைநகரை உலுக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்புவோம்!      - கே.பாலகிருஷ்ணன்

மத்திய மோடி அரசு கோடிக்கணக்கான விவசாயிகளது வாழ்வை நாசமாக்கும் வகையிலும், வேளாண்மையை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் வகையில் சட்டங்களை நாடாளுமன்றத்தில் அதிரடியாக நிறைவேற்றியது. இதேபோல போராடிப் பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் சட்டத் திருத்தங்களை அதிரடியாக நிறைவேற்றி நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளையும், தொழிலாளர்களையும் நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது.

நரியாக, புலியாக, சிறுத்தையாக, சிங்கமாக வாழாமல், மனிதர்களாக, தமிழர்களாக வாழ்வோம்! - சுப.உதயகுமாரன்.



நரியாக, புலியாக, சிறுத்தையாக, சிங்கமாக வாழாமல், மனிதர்களாக, தமிழர்களாக வாழ்வோம்! - சுப.உதயகுமாரன்.

நெல்லை மாவட்டம், இராதாபுரம் வட்டம், செட்டிகுளம் ஊர் இந்திரா நகர் பகுதியில் இரு தரப்பாரிடையே நேற்று (நவம்பர் 27, 2020) ஒரு மோதல் நடந்ததாகவும், பல வீடுகள் தாக்கப்பட்டதாகவும், ஏராளமான இருசக்கர வாகனங்கள் நொறுக்கப்பட்டதாகவும், குடிநீர்த் தொட்டி ஒன்று உடைக்கப்பட்டதாகவும், இன்று காலை எட்டு மணியளவில் தில்லி பத்திரிக்கையாளர் நண்பர் ஒருவர் எனக்கு தகவல் தெரிவித்து, வேறு ஏதாவது செய்திகள் தெரியுமா என்று கேட்டார்.  விசாரித்துவிட்டுச் சொல்கிறேன் என்றேன்.

சனி, 28 நவம்பர், 2020

டெல்லியை சுற்றி நடக்கின்ற விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் தீவிரம் அடைவதற்கு முன் தீர்வு காண வேண்டும். - E.R ஈஸ்வரன்


 டெல்லியை சுற்றி நடக்கின்ற விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் தீவிரம் அடைவதற்கு முன் தீர்வு காண வேண்டும். - E.R ஈஸ்வரன்

விவசாயிகள் தங்களுடைய பிரச்சினைகளை வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் நாடு முழுவதும் பல்வேறு வகையில் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். விவசாயிகளுடைய வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து ஓட்டுக்களை வாங்கி மத்தியிலே ஆட்சிக்கு வந்த பாஜக அரசு 6 ஆண்டுகளாகியும் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாதது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நிவர் புயலின் தாக்கத்தால் தமிழக மக்களின் பாதிப்புகளை ஈடுகட்டும் வகையில் தமிழக அரசு தொடர் நிவாரண உதவிகளை செய்திட வேண்டும்.- ஜி.கே.வாசன்.

 


நிவர் புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த தமிழக மக்களின் பாதிப்புகளை ஈடுகட்டும் வகையில் தமிழக அரசு தொடர் நிவாரண உதவிகளை செய்திட வேண்டும்.- ஜி.கே.வாசன்.

வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் அதி தீவிர புயலாக உருமாறி நேற்று நள்ளிரவு முதல் விடியற் காலை வரை தமிழகத்தில் சென்னை மற்றும் சுமார் 5 மாவட்டங்களில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

வன்னியர் 20% தனி இடஒதுக்கீட்டுப் போராட்டம்: சகோதர சமுதாயங்கள் அனைத்தும் மனதார ஆதரிக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ் கடிதம்


வன்னியர் 20% தனி இடஒதுக்கீட்டுப் போராட்டம்: சகோதர சமுதாயங்கள் அனைத்தும் மனதார ஆதரிக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ் கடிதம்

தமிழ்நாட்டில் எந்த சமுதாயத்திற்கு என்ன பிரச்சினை வந்தாலும் முதன்முதலில் ஓடோடி வந்து குரல் கொடுக்கும், போராட்டம் நடத்தும் பாட்டாளி மக்கள் கட்சி, இப்போது தமிழ்நாட்டில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வரும் திசம்பர் 1-ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களை அறிவித்திருக்கிறது. இதன் பின்னணியில் உள்ள நியாயங்களை அனைத்து சமூகத்தினரும் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

கல்விக் கட்டணத்தைக் குறைத்து – அரசுக் கல்லூரி மருத்துவ மாணவர்களின் நலனில் அக்கறை இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். செய்வாரா முதலமைச்சர்? - மு.க.ஸ்டாலின்

 “ஏழை – எளிய மற்றும் நடுத்தர மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேற போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமான வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி - கல்விக் கட்டணத்தை குறைத்திடுக” -  மு.க.ஸ்டாலின் 

அரசு மருத்துவக் கல்லூரிகளாகச் செயல்பட்டு வரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும்,  ஈரோடு ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல் கட்டணத்தை அ.தி.மு.க. அரசு உயர்த்தி- ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் கல்வி பெறுவதில் பேரின்னலை ஏற்படுத்தியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திங்கள், 23 நவம்பர், 2020

நாட்டு மக்கள் 130 கோடி பேரின் கனவுகளை நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிறைவேற்றுவோம், தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவோம்.- பிரதமர் நரேந்திர மோடி உரை

 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்குமாடி வீடுகள் வளாகத்தை காணொலி மூலம் திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை

மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா அவர்களே, என் அமைச்சரவை சகாக்கள் திரு. பிரகலாத் ஜோஷி அவர்களே, திரு. ஹர்தீப் பூரி அவர்களே, இந்தக் கமிட்டியின் தலைவர் திரு. சி.ஆர். பாட்டீல் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!! மக்கள் பிரதிநிதிகளுக்கு தில்லியில்  இந்தப் புதிய வீட்டுவசதி வளாகம் உருவாகியுள்ளதற்கு உங்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு மகிழ்ச்சிகரமான இன்னொரு நிகழ்வும் உள்ளது. இன்றைய நாள் மென்மையான பேச்சுக்கு சொந்தக்காரரான, கடமையில் உறுதியாக இருப்பவரான மக்களவைத் தலைவர் ஒம் பிர்லா அவர்களின் பிறந்த நாளும் கூட. அவருக்கு என் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்ந்து, நாட்டுக்கு சேவையைத் தொடர வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசுத் துறை பொறியாளர்களுக்கு ரூ.15,600 அடிப்படை ஊதியம் மற்றும் பதவி நிலைக்கு ஏற்றவாறு தர ஊதியமும் நிர்ணயிக்கப்படுவது தான் நியாயமானதாக இருக்கும்.- DR.S.ராமதாஸ்

 ஊதியத் திருத்தத்தில் முரண்பாடு: அரசு 

ஊழியர்கள் குறைகளை களைய வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் முருகேசன் குழுவின் பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறைகளை களைவதற்கு பதிலாக முரண்பாடுகளை அதிகரித்திருக்கிறது. இதுவரை இல்லாத நடைமுறையாக பல்வேறு துறை பணியாளர்களின் ஊதியம் குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், நடைபெற்ற திமுக உயர்நிலைச் செயல்திட்ட குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்



திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இன்று நடைபெற்ற திமுக உயர்நிலைச் செயல்திட்ட குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:

தீர்மானம் :

“திமுகவின் பரப்புரைப் பயணம் தடை கடந்து தொடரும்!”

மாநிலம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழக முன்னணியினர் இருபது பேர் பங்கேற்கும் “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற பரப்புரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அந்தப் பிரச்சாரப் பயணத்தை முதற்கட்டமாக 20.11.2020 அன்று தொடங்கிய கழக இளைஞரணிச் செயலாளர் திரு. உதயநிதி உள்ளிட்ட கழக நிர்வாகிகளைத் தொடர்ந்து நடத்த விடாமல் தடுப்பதற்கும், கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து கைது செய்து, நீண்ட நேரம், இரவு வரை காவல்துறைக் கட்டுப்பாட்டில் வைக்கும் அ.தி.மு.க. அரசின் ஜனநாயக விரோதப் போக்குக்கும் இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்தித்திணிப்பு - தமிழக வருவாய் பறிப்பு - மத துவேஷம் - இடஒதுக்கீட்டு உரிமைகளை பறித்தது - விவசாயிகளை சீரழித்தது போன்ற அநீதிகளை தவிர 6 ஆண்டுகளில் பாஜக செய்தது என்ன? - திரு. டி.ஆர்.பாலு MP


"இந்தித்திணிப்பு - தமிழக வருவாய் பறிப்பு - மத துவேஷம் - இடஒதுக்கீட்டு உரிமைகளை பறித்தது - விவசாயிகளை சீரழித்தது போன்ற அநீதிகளை தவிர 6 ஆண்டுகளில் பாஜக செய்தது என்ன?" - திரு. டி.ஆர்.பாலு MP அவர்கள், மத்திய அமைச்சர் அமித்ஷா-வுக்கு கேள்வி.

“மத்திய அரசில் இருந்த போது தி.மு.க. தமிழகத்திற்குக் கொண்டு வந்த திட்டங்கள் என்ன?” என்று நேற்றைய தினம் அ.தி.மு.க.வின் கூட்டணி அறிவிப்பைக் கேட்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள் கேட்டிருக்கிறார். அந்த சாதனைப் பட்டியலைச் சொல்ல வேண்டுமென்றால் - நேருக்கு நேர் மேடை அமைத்து - திரு. அமித்ஷா அவர்கள் கூறியிருப்பது போல் தெருதோறும் கூட்டம் போட்டுப் பேச திராவிட முன்னேற்றக் கழகத்தால் முடியும்.

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுடைய போராட்டத்தை மனிதாபிமானத்தோடு அணுகி கிலோவுக்கு 15 ரூபாய் கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- E.R ஈஸ்வரன்

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுடைய போராட்டத்தை மனிதாபிமானத்தோடு அணுகி கிலோவுக்கு  15 ரூபாய் கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- E.R ஈஸ்வரன்

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் வளர்ப்பு தொகை உயர்வுக்கான போராட்டத்தை தமிழக அரசு கண்டுக்கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பது வேதனையளிக்கிறது. 2013-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களுக்கும், கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கறிக்கோழி வளர்ப்பு தொகை கிலோ ஒன்றுக்கு ரூ.3 லிருந்து ரூ.3.50 க்கு உயர்த்தியும், வருடம் வருடம் வளர்ப்பு தொகையிலிருந்து 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு உற்பத்தி நிறுவனங்களால் வழங்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டு இருதரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் கடந்த 7 ஆண்டுகாலமாக கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு வருடம் வருடம் வளர்ப்பு தொகையிலிருந்து உயர்த்தி வழங்க வேண்டிய 20 சதவீத தொகையை கொடுக்கவே இல்லை. 

அரசியலுக்கு வருவதற்கு முன்னால் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படும் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் தலைமறைவாகும் காலம் வெகுதொலைவில் இல்லை.- மு.க.ஸ்டாலின்


“அரசியலுக்கு வருவதற்கு முன்னால் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படும் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் தலைமறைவாகும் காலம் வெகுதொலைவில் இல்லை;

திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது;  திமுக எனும் தேன்கூட்டில் கை வைக்க வேண்டாம்” -  மு.க.ஸ்டாலின்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தி.மு.க. ஏற்கும் என்று இன்று அறிவித்திருக்கிறேன். அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தால் அதற்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள், தங்களுக்குக் கிடைத்த இடத்தை வேண்டாம் என்று சொல்லும் நிலை ஏற்படுகிறது.

சனி, 21 நவம்பர், 2020

ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை: பாமக கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி! - Dr.S.ராமதாஸ்



ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை: 
பாமக கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி! - Dr.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட அனைத்து வகையான இணையவழி விளையாட்டுகளையும் தடை செய்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்திருக்கிறது. இளைஞர்களை தற்கொலைக்குத் தூண்டும் உயிர்க்கொல்லி விளையாட்டான ஆன்லைன் சூதாட்டங்கள் தடை செய்யப்பட்டிருப்பது மிகச் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள மிகச்சரியான நடவடிக்கை ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்கது.

வியாழன், 19 நவம்பர், 2020

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக விளைநிலங்களில் அனுமதித்தது மட்டுமின்றி 4,000 சதுர கிலோமீட்டருக்கும் மேற்பட்ட ஆழ்கடல் பகுதியிலும் புகுத்துகிறார்கள்.- மு.க.ஸ்டாலின்

 


”ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக விளைநிலங்களில் அனுமதித்தது மட்டுமின்றி – 4,000 சதுர கிலோமீட்டருக்கும் மேற்பட்ட ஆழ்கடல் பகுதியிலும் புகுத்துகிறார்கள்” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சி நடக்கிறது. அரசு டெண்டர்களை அமைச்சர்கள் “பினாமி” பெயரில் எடுக்கிறார்கள். இல்லையென்றால் அண்ணன், தம்பி, உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே தனது சம்பந்திக்கு, தனது துறையின் கான்டிராக்டுகளைக் கொடுக்கிறார். கேட்டால்; அமைச்சரின் அண்ணன் டெண்டர் எடுக்கக் கூடாதா? முதலமைச்சரின் சம்பந்தி டெண்டர் எடுப்பதில் என்ன தவறு என்று கேட்கிறார்கள்.

இன்னும் ஒரே ஒரு கேள்வியைத்தான் முதலமைச்சர் பழனிசாமி பத்திரிகையாளர்களைப் பார்த்தோ அல்லது எதிர்க்கட்சித் தலைவராகிய என்னைப் பார்த்தோ கேட்கவில்லை.

ஊதிய பாகுபாடு: அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை நீக்குக! - DR.S.ராமதாஸ்



ஊதிய பாகுபாடு: அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை நீக்குக! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு கொரோனா வைரஸ் நோயை முறியடிப்பதற்காக தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் ஆற்றிவரும் சேவை தான். ஆனால், அவர்களின் ஊதியப் பாகுபாடு தொடர்பான கோரிக்கையை 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் நிறைவேற்ற தமிழக அரசு தயங்கிக் கொண்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

புதன், 18 நவம்பர், 2020

உச்சநீதிமன்றம் கூறியும், தமிழக அமைச்சரவை தீர்மானித்தும் ராஜீவ் கொலை வழக்கு - ஏழு பேரை விடுவிக்க ஆளுநர் காலதாமதம் செய்வது ஏன்? - கி.வீரமணி

உச்சநீதிமன்றம் கூறியும், தமிழக அமைச்சரவை தீர்மானித்தும் ராஜீவ் கொலை வழக்கு - ஏழு பேரை விடுவிக்க ஆளுநர் காலதாமதம் செய்வது ஏன்?

தமிழக அரசு, ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கட்டும்; 

தாமதிக்கப்பட்ட நீதி - மறுக்கப்பட்ட நீதி என்பதை ஆளுநர் உணரட்டும்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்துவருகிறது.

உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

அந்த வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைமையிலான அமர்வு 18.2.2014 அன்று வழங்கிய தீர்ப்பில், அரசமைப்புச் சட்டம் 161 ஆவது பிரிவு - குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகள் 432, 433 ஆகியவற்றின்கீழ், மாநில அரசுக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்சொன்ன மூவரை விடுதலை செய்யலாம் என்றும் அறிவுறுத்தியது.

செவ்வாய், 17 நவம்பர், 2020

சென்னைக்கு வெள்ள ஆபத்து: தொடர் கண்காணிப்பு, விழிப்புணர்வு பரப்புரை தேவை! - Dr.S.ராமதாஸ்



சென்னைக்கு வெள்ள ஆபத்து: தொடர் 
கண்காணிப்பு, விழிப்புணர்வு பரப்புரை தேவை! - Dr.S.ராமதாஸ்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி வருவதால், சென்னையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுமோ? என்ற அச்சமும், பதற்றமும் சென்னை மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. சென்னைக்கு உடனடியாக வெள்ள ஆபத்து இல்லை என அதிகாரிகள் அறிவித்துள்ள போதிலும், இயற்கை எந்த நேரத்திலும் எத்தகைய விளைவை வேண்டுமானாலும் ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதை எதிர்கொள்ள அரசு எந்திரம் தயாராக இருக்க வேண்டியது அவசியமாகும்.

திங்கள், 16 நவம்பர், 2020

தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பறிமுதல் செய்யப்பட்ட 121 படகுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.- கே.எஸ். அழகிரி

 



இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு யாழ்பாணம் மற்றும் மன்னார் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான 121 மீன்பிடி படகுகளை பொது ஏலத்தில் விற்பனை செய்யலாம் அல்லது உடைத்து அப்புறப்படுத்தலாம் என்று யாழ்பாணம் நீதிமன்றம் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு தமிழக மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியையும், பதற்றமான சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

சரியும் மஞ்சள் விலை: இறக்குமதி தடையை நீக்க இலங்கையை வலியுறுத்த வேண்டும்! - DR.S.ராமதாஸ்

 சரியும் மஞ்சள் விலை: இறக்குமதி தடையை 

நீக்க இலங்கையை வலியுறுத்த வேண்டும்! - DR.S.ராமதாஸ்

கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்றுமதி வாய்ப்புகள் குறைந்ததையடுத்து, ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சள் விலை கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் மஞ்சள் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மஞ்சள் ஏற்றுமதிக்கு புத்துயிரூட்டி, உழவர்களின் கவலையைப் போக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

சூரப்பாவை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்து - ஊழல் புகார் தொடர்பான ஆவணங்களை விசாரணை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர எடப்பாடி கே.பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். - மு.க.ஸ்டாலின்


"அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் திரு. சூரப்பாவை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்து - ஊழல் புகார் தொடர்பான ஆவணங்களை விசாரணை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர எடப்பாடி கே.பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின் 

அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் திரு. சூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு. பி.கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் –  அந்தத் துணை வேந்தர், எந்தவித உறுத்தலும் இன்றி, பதவியில் தொடருவது கேலிக்கூத்தாக இருக்கிறது. ஒருவேளை, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு முறை அல்ல பல முறை ஆளான போதும், வழக்குகள் விசாரணைகள் நடைபெறும் போதும் முதலமைச்சரும், அமைச்சர்களும் பதவிகளில் தொடர்ந்து இருந்துவரும் போது, நமக்கு மட்டும் என்ன என்ற எண்ணம் காரணமாக இருக்குமோ என்று மாணவர்கள் மத்தியில் கருத்து ஒன்று சுற்றிக் கொண்டிருக்கிறது.  

சனி, 14 நவம்பர், 2020

வீரர்களுடன் இல்லாமல் எனது தீபாவளி நிறைவடையாது- லோங்கேவாலா எல்லை நிலையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரை

 பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஆயுதப்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் தமது வழக்கத்தை இந்த ஆண்டும் தொடர்ந்து மேற்கொண்டு, இந்திய எல்லையில் உள்ள லோங்கேவாலா நிலையில் வீரர்களுடன் கலந்துரையாடல் நடத்தி, அவர்கள் இடையே உரையாற்றியுள்ளார். பனி படர்ந்த மலையாக இருந்தாலும், பாலைவனமாக இருந்தாலும், தமது தீபாவளி வீரர்களுடன் இருந்தால் மட்டுமே நிறைவு பெறும் என்று அவர் கூறினார். எல்லையில் உள்ள வீரர்களுக்கு ஒவ்வொரு இந்தியரின் ஆசிகள், வாழ்த்துக்களை அவர் எடுத்து சென்றார். துணிச்சல் மிக்க தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை அவர்களது தியாகத்துக்காக அவர் வாழ்த்தினார். ஆயுதப்படை வீரர்களுக்கு 130 கோடி இந்தியர்களும் ஒற்றுமையுடன் நின்று நன்றி செலுத்துவதாக பிரதமர் தெரிவித்தார்.

புதியக் கல்விக் கொள்கை குறித்து சுதந்திரமாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு.- DR.S.ராமதாஸ்

 புதிய கல்விக்கொள்கை: தமிழக பல்கலை.களை 

பல்கலைக்கழக மானியக்குழு மிரட்டக்கூடாது! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசு பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் புதிய கல்விக் கொள்கையை  உடனடியாக செயல்படுத்தாவிட்டால் அவற்றுக்கு வழங்கப்படும் மானியம் நிறுத்தப்படும் என்று பல்கலைக் கழக மானியக்குழு எச்சரித்திருக்கிறது. புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்காத நிலையில், அதை செயல்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும், இல்லாவிட்டால்  மானியத்தை நிறுத்தப்போவதாக அச்சுறுத்துவதும் மாநில சுயாட்சிக்கு சவால் விடுக்கும் செயல்களாகும்.

வியாழன், 12 நவம்பர், 2020

அப்பாவிகள் 13 பேரை சுட்டுக்கொன்ற எடப்பாடி.கே.பழனிச்சாமி பழியிலிருந்து தப்பிக்க பச்சைப்பொய் சொல்வதற்கு கண்டனம்" - மு.க.ஸ்டாலின்.


 "ஸ்டெர்லைட் ஆலைக்கு எல்லா அனுமதிகளும் வழங்கப்பட்டு - அடிக்கல் நாட்டப்பட்டது அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில்; அப்பாவிகள் 13 பேரை சுட்டுக்கொன்ற எடப்பாடி.கே.பழனிச்சாமி பழியிலிருந்து தப்பிக்க பச்சைப்பொய் சொல்வதற்கு கண்டனம்" - மு.க.ஸ்டாலின்.

தூத்துக்குடியில் ஜனநாயக ரீதியில் அறப்போராட்டம் நடத்திய அப்பாவிப் பொதுமக்களை எந்தவிதக் காரணமுமின்றிச் சுட்டுவீழ்த்தி, 13 பேர் படுகொலைக்கு முழுக் காரணமாக இருந்து விட்டு, இப்போது தேர்தல் நெருங்குகின்றது என்றதும், “இந்தச் சம்பவம் நடப்பதற்கு நான் தான் நூற்றுக்கு நூறு சதவீதம் காரணம்” என்று என் மீது “பச்சைப் பொய்” கூறி, குற்றம் சாட்டி, நீலிக் கண்ணீர் வடித்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமிக்கு மிகக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

கல்வித்துறையை காவித்துறையாக்கும் RSS & பாஜகவின் அடாவடிப்போக்கு டெல்லியில் ஆரம்பித்து நெல்லை வரை வால் நீட்டியிருக்கிறது.- திரு. ஆ.ராசா MP

 “கல்வித்துறையை காவித்துறையாக்கும் RSS & பாஜகவின் அடாவடிப்போக்கு டெல்லியில் ஆரம்பித்து நெல்லை வரை வால் நீட்டியிருக்கிறது;

பல்கலைகளை மொத்தமாக பாஜக அரசிடம் அடமானம் வைத்துவிட்டதா அடிமை அதிமுக அரசு?” - திரு. ஆ.ராசா MP அறிக்கை.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு. கே.பிச்சுமணி அவர்கள் தலைமையில் நடந்த ஆலோசனையின்படி, 2017-ஆம் ஆண்டு முதல் முதுகலைப் படிப்புக்கான சமூகவியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களின் ‘Walking With The Comrades’ என்ற ஆங்கிலப் புத்தகம் நீக்கப்பட்டிருக்கிறது.

பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் எது இடம்பெறவேண்டும் என்பது அதன் துணைவேந்தர் - பேராசிரியர்கள் - கல்விப்புலம் சார்ந்த வல்லுநர்கள் ஆகியோரின் முடிவுக்குட்பட்டதே!

எடப்பாடி கே.பழனிசாமி & சகாக்களின் இடத்தை முடிவுசெய்துள்ள மக்களின் ‘Count Down’ மணியோசை செவிகளை எட்டவில்லையா?" - மு.க.ஸ்டாலின்.


"உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த வழக்கை காட்டி ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என விரக்தியில் பேசியுள்ள எடப்பாடி கே.பழனிசாமி & சகாக்களின் இடத்தை முடிவுசெய்துள்ள மக்களின் ‘Count Down’ மணியோசை செவிகளை எட்டவில்லையா?" - மு.க.ஸ்டாலின்.

அதிகார துஷ்பிரயோகம் செய்து, பெருமளவு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது தொடர்பான ஊழல் வழக்கிற்காக, உயர்நீதிமன்றத்தால் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்தியாவின் ஒரே முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி, “தேர்தல் வழக்கு வேறு விதமாக அமைந்தால் ஸ்டாலின் ஆறு வருடம் தேர்தலில் நிற்க முடியாது” என்று பேசி, எந்நாளும் நிறைவேறவே முடியாத தன்னுடைய அரசியல் பேராசையை வெளிப்படுத்தி இருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

உயர்நீதிமன்றம் பாராட்டு: அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் நியமனத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்குக! - DR.S.ராமதாஸ்

 உயர்நீதிமன்றம் பாராட்டு: அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் நியமனத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்குக!  

- DR.S.ராமதாஸ்

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தற்காலிகமாகவும் நியமிக்கப்படும் பேராசிரியர்களில் பெரும்பாலோர் திறமையற்றவர்களாகத் தான் இருப்பார்கள் என்ற மூடநம்பிக்கைக்கு முடிவு கட்டியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றத்தின் பாராட்டு. ஒப்பந்த ஆசிரியர்கள் மீதான பார்வை மாறுவதற்கு உயர்நீதிமன்றப் பாராட்டு வகை செய்தால், அது அவர்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக பாடத் திட்டத்திலிருந்து எழுத்தாளர் அருந்ததிராய் நூலை நீக்குவதா? - கி.வீரமணி

 பல்கலைக் கழக பாடத் திட்டத்திலிருந்து

எழுத்தாளர் அருந்ததிராய் நூலை நீக்குவதா?- கி.வீரமணி

கருத்துச் சுதந்திரம் என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உரிமைகளில் பறிக்கப்பட முடியாத அடிப்படை மனித உரிமை. அதிலும் பல்கலைக் கழகப் பாடத் திட்டங்கள் வாயிலாக பல்வேறு வகை கருத்தாக்கங்களை மாணவர்கள் அறிந்து கொள்வது அவசியம்.

புதன், 11 நவம்பர், 2020

OBC உள் ஒதுக்கீடு: ரோகிணி ஆணைய கடிதத்திற்கு அரசு பதிலளிக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

 ஓபிசி உள் ஒதுக்கீடு: ரோகிணி ஆணைய 

கடிதத்திற்கு அரசு பதிலளிக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும்  27% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவதில், பல்வேறு சாதிகளின் பெயர்கள் தொடர்பாக  நீதிபதி ரோகிணி ஆணையம் கோரிய விளக்கங்களுக்கு மாநில அரசுகள் பதிலளிக்கவில்லை என்று  செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விஷயத்தில் மாநில அரசுகள் காட்டும் தாமதம் சமூக அநீதியாகும்.

செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையின் மாதிரியை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ பவனில் திறந்து வைத்தார்.


 செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையின் மாதிரியை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ பவனில் திறந்து வைத்தார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சதீஷ் ரெட்டி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

திங்கள், 9 நவம்பர், 2020

திரு என் கே சிங் தலைமையிலான பதினைந்தாவது நிதி ஆணையம் தனது அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பு


 திரு என் கே சிங் தலைமையிலான பதினைந்தாவது நிதி ஆணையம், 2021-22-ஆம் ஆண்டு முதல் 2025-26-ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கான, தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்திடம் இன்று சமர்ப்பித்தது.

ஆணையத்தின் உறுப்பினர்கள் திரு அஜய் நாராயண் ஜா, பேராசிரியர் அனூப் சிங், டாக்டர் அசோக் லாஹிரி மற்றும் டாக்டர் ரமேஷ் சந்த், மற்றும் ஆணையத்தின் செயலாளர் திரு அர்விந்த் மேத்தா ஆகியோர் இநிகழ்வின் போது ஆணையத்தின் தலைவருடன் இருந்தனர்.

புதிய உள்கட்டமைப்புகள் மூலம், காசி மக்களும், சுற்றுலா பயணிகளும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி நேரத்தை வீண்டிக்க வேண்டியதில்லை.- பிரதமர் திரு.நரேந்திர மோடி


பிரதமர் திரு. நரேந்திர மோடி வாரணாசியில் இன்று காணொலி காட்சி மூலம் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், பணி முடிவடைந்த பல திட்டங்களைத் தொடங்கியும் வைத்தார். ரூ 220 கோடி மதிப்பிலான 16 திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர், வாரணாசியில் ரூ.400 கோடி மதிப்பிலான 14 திட்டங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டதாக தெரிவித்தார்.

தருமபுரி பாலக்கோடு சந்தையில் சரியான விலை கிடைக்காததால் ஒரு டன்னுக்கும் கூடுதலான தக்காளிகளை சாலையில் கொட்டி அழித்துள்ளனர்.- DR அன்புமணி ராமதாஸ்

 அழிக்கப்படும் காய்கனிகள்: விளைபொருள் 

கொள்முதல் வாரியம் அமைக்க வேண்டும்! - DR அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற தக்காளி சந்தைகளில் ஒன்றான தருமபுரி பாலக்கோடு சந்தையில் சரியான விலை கிடைக்காததால் ஒரு டன்னுக்கும் கூடுதலான தக்காளிகளை சாலையில் கொட்டி அழித்துள்ளனர் விவசாயிகள். உடலை வருத்தி, உயிரைக் கொடுத்து சாகுபடி செய்த விளைபொருட்களை உழவர்களே அவர்கள் கைகளால் அழிப்பதை விட பெரும் சோகம் எதுவுமில்லை. இது மிகவும் வேதனையளிக்கிறது.

தமிழக மீனவர்களின் 121 படகுகள் அழிக்கப் படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! - DR.S.ராமதாஸ்

 தமிழக மீனவர்களின் 121 படகுகள் அழிக்கப் 

படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள 121 படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் நோக்கம் கொண்ட இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

ஆசியாவில் இந்தியாவை ஒர் போர்முனைத் தளமாக மாற்றுவதற்குப் பதிலாக, பொருளாதார முன்னேற்றத் தளமாக மாற்ற வேண்டும்.- டாக்டர்.K.கிருஷ்ணசாமி

மாறாத அமெரிக்கா..!
மாற்ற வேண்டும் ஜோ பைடன்..!!
 
 கடந்த நான்கு தினங்களாக இழுபறியாக இருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு, பெரும்பாலான உலக நாடுகள் எதிர்பார்த்தது போன்றே இனிதே முடிவுற்று இருக்கிறது. பென்சில்வேனியா வெற்றியின் மூலம் ஜோ பைடன் அவர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. 538 ஆசனங்களுக்கான தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் 306 ஆசனங்களை தாண்டிவிடுவார் என்றே தெரிகிறது. அவர் மட்டுமல்ல தமிழகத்தை தாயிடமாக கொண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அவர்களும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் மிக்க மகிழ்ச்சியானதாகும். வெற்றி பெற்ற இருவருக்கும் புதிய தமிழகம் கட்சியின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

வெள்ளி, 6 நவம்பர், 2020

காடாம்புலியூர் வியாபாரி செல்வமுருகனை நெய்வேலி காவல் நிலையத்தில் அடித்துச் சித்திரவதை செய்து நிகழ்த்தப்பட்ட காவல் ஆணவப் படுகொலை! - தி.வேல்முருகன்


சாத்தான்குளம் பாணியில் காடாம்புலியூர் வியாபாரி செல்வமுருகனை நெய்வேலி காவல் நிலையத்தில் அடித்துச் சித்திரவதை செய்து நிகழ்த்தப்பட்ட காவல் ஆணவப் படுகொலை!

இந்தப் படுகொலைக்குக் காரணமான காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்கள் சட்டப்படி தண்டிக்கப்படவும், வியாபாரி செல்வமுருகன் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் வகை செய்யுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது                            தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

"தரணி போற்ற, தமிழகம் மீட்போம்!" திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள மடல்.


"தரணி போற்ற, தமிழகம் மீட்போம்!"  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள மடல்.

கொரோனா தொற்றைவிடவும் பன்மடங்கு கொடுமையான ஆட்சியை நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அடிமை அ.தி.மு.க அரசின் ஊழல் கொள்ளைப் பிடியிலிருந்து, இந்த மாநிலத்தை மீட்டு முன்னேற்றப் பாதையில் வளர்த்தெடுத்துக்  காப்பதற்கான ஜனநாயகத் திறவுகோல்தான், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல். ஜனநாயகக் களத்தில் எப்போதும் முன்னணியில் நிற்கும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம், இந்தக் கொரோனா பேரிடர் காலத்திலும், தொடக்கம் முதலே தமிழக மக்களுக்குத் துணையாக நிற்கிறது.

தமிழ்நாட்டின் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காட்டை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்க வகை செய்ய வேண்டும்.- DR.S.ராமதாஸ்

ஹரியானா காட்டும் வழி: தமிழகத்தில் தனியார் 

வேலைகளில் 80% இட ஒதுக்கீடு எப்போது? - DR.S.ராமதாஸ்

ஹரியானாவில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு உரிமையை பாதுகாக்கும் இச்சட்டம் வரவேற்கத்தக்கதும், போற்றத்தக்கதும் ஆகும்.

தேசிய ராணுவக் கல்லூரி தனது வைர விழாவைக் கொண்டாடுகிறது.வைர விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 'இந்தியாவின் தேசிய பாதுகாப்பு - முன்னிருக்கும் தசாப்தம்'


 தேசிய ராணுவக் கல்லூரி தனது வைர விழாவைக் கொண்டாடுகிறது.வைர விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 'இந்தியாவின் தேசிய பாதுகாப்பு - முன்னிருக்கும் தசாப்தம்' என்னும் தலைப்பில் இரண்டு நாள் இணையக் கருத்தரங்கை 2020 நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய தினங்களில் தேசிய ராணுவக் கல்லூரி நடத்துகிறது.

நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தொழிற்சாலைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி இருக்கின்ற தமிழக அரசின் செயல்பாட்டை வரவேற்கின்றோம்.- E.R.ஈஸ்வரன்


 நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தொழிற்சாலைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி இருக்கின்ற தமிழக அரசின் செயல்பாட்டை வரவேற்கின்றோம்.

நீண்ட காலமாக தொழிற்சாலைகள் தரப்பிலும், தொழில் சார்ந்த பல அமைப்புகள் தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்த ஒரு முக்கியமான தேவையை தமிழக அரசு நிறைவேற்றி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொழிற்சாலைகள் 120  ஏக்கர் வரை வைத்து கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு முன் 60 ஏக்கர் வைத்து  கொள்ளலாம் என்று இருந்ததை இரண்டு மடங்கு ஏற்றி 120 ஏக்கராக மாற்றியிருப்பது தொழிற்சாலைகளின் பல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. 

பா.ஜ.க.வின் இந்தி திணிப்பு முயற்சிகளை தமிழக மக்கள் என்றைக்கும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். - கே.எஸ்.அழகிரி

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிப்பதற்கு தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருவதும், அதை எதிர்த்து தமிழகத்தில் எதிர்ப்புக்குரல் ஒலிப்பதும் தொடர்கதையாகி வருகின்றன. சமீபத்தில் புதிய கல்விக் கொள்கையின் வாயிலாக மும்மொழி திட்டத்தின் மூலம் இந்தியை திணிப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அந்த முயற்சியிலிருந்து மத்திய பா.ஜ.க. அரசு பின்வாங்கியது. 

ஆள்வது அ.தி.மு.க.வா - பா.ஜ.க.வா? வேல் யாத்திரைக்குத் திடீர் அனுமதியா? கரோனா காரணம் என்னாயிற்று? - கி.வீரமணி

ஆள்வது அ.தி.மு.க.வா - பா.ஜ.க.வா?

வேல் யாத்திரைக்குத் திடீர் அனுமதியா?

கரோனா காரணம் என்னாயிற்று? - கி.வீரமணி

கரோனா தொற்றின் அடுத்த கட்டப் பரவலின் ஆபத்தைச் சுட்டிக்காட்டி, காரணம் காட்டி வேல் யாத்திரைக்கு நேற்று (5.11.2020) அனுமதி மறுத்த தமிழக அ.தி.மு.க. அரசு, இன்று (6.11.2020) திடீரென்று ‘யூ’ட்டர்ன் (U-Turn) அடித்து, தனது நிலையை தலைகீழாக மாற்றிக் கொண்டது ஏன்? தடையை மீறிய நிலையில், பூவிருந்தவல்லி அருகே பா.ஜ.க. தலைவரைக் கைது செய்யத் தயாராக இருந்த அந்தத் தருணத்தில், காவல்துறை - திடீரென்று மேலிடத்து உத்தரவால் பின்வாங்கிவிட்டது.

புதன், 4 நவம்பர், 2020

இன்றைய சூழலில் பள்ளிகளை திறப்பது ஆபத்தானது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களை பள்ளிக்கு வர யாரும் கட்டாயப்படுத்த கூடாது.- E.R.ஈஸ்வரன்

 


இன்றைய சூழலில் பள்ளிகளை திறப்பது ஆபத்தானது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களை பள்ளிக்கு வர யாரும் கட்டாயப்படுத்த கூடாது.- E.R.ஈஸ்வரன்

கொரோனா நோய் பரவல் இன்னும் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படவில்லை. தற்போது நாளுக்கு நாள் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கை அளித்தாலும் மீண்டும் நோய் தொற்று அதிகரிக்குமா என்ற அச்ச உணர்வு அனைவரது மனதிலும் இருக்கிறது. பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் தமிழக அரசின் உத்தரவுகளை மக்கள் பின்பற்றி வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளிகளை திறப்பதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. 

தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா, இங்கிலாந்துக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவின் தொலைத்தொடர்பு அமைச்சகம் மற்றும் இங்கிலாந்து அரசின் டிஜிட்டல், கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறைகள் ஆகியவற்றுக்கு இடையே தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.