வெள்ளி, 31 டிசம்பர், 2021

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை விரைந்து வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.- DR.S.ராமதாஸ்



 மழை, வெள்ளத்தால் திணறும் சென்னை:

நிரந்தர தீர்வு காண நடவடிக்கை தேவை!.- DR.S.ராமதாஸ்

சென்னை மாநகரம் இப்போது மீண்டும் ஒரு பேரிடரை கடந்து கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் அனுபவிக்காத அவதிகளையும், துயரங்களையும் சென்னை மற்றும் புறநகர் மாவட்ட மக்கள் நேற்று அனுபவித்திருக்கிறார்கள். பல இடங்களில் மக்களின் சிரமங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கொடுமைகள் அனைத்திற்கும் மழை மீது பழி போட்டு அரசு நிர்வாகம் தப்பிக்க முடியாது.

வியாழன், 30 டிசம்பர், 2021

அதிகரிக்கும் கொரோனா: பள்ளிகளில் நேரடி வகுப்புகளை கைவிட்டு, ஆன்லைன் வகுப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்!. - DR.S.ராமதாஸ்

 அதிகரிக்கும் கொரோனா: பள்ளிகளில் நேரடி வகுப்புகளை கைவிட்டு, ஆன்லைன் வகுப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்!. - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.  குறிப்பாக சென்னையின் தினசரி கொரோனாத் தொற்று நேற்று ஒரு நாளில் மட்டும் 51% அதிகரித்திருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு அதனால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதே நேரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் அவசியம்.

செவ்வாய், 28 டிசம்பர், 2021

நீட் பயிற்சி: அரசு பள்ளி மாணவர்களுக்கு உடனே வகுப்புகளை தொடங்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்



நீட்  பயிற்சி: அரசு பள்ளி மாணவர்களுக்கு
உடனே வகுப்புகளை தொடங்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் 2022&23 ஆம் ஆண்டுக்கான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறப்படுமா? என்பது இன்னும் தெளிவாகாத நிலையில், நீட் தேர்வு நடைபெற்றால்  அதை அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் இதுவரை தொடங்கப்பட வில்லை. மற்றொருபுறம் இதுகுறித்து தெரிவிக்கப்படும் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் மருத்துவக் கல்வி கனவில் இருக்கும் மாணவர்களின் குழப்பத்தையும், மன உளைச்சலையும் அதிகரித்துள்ளன.

சனி, 25 டிசம்பர், 2021

காங்கிரஸ் கட்சியின் வலிமையை முன்னிலைப்படுத்தவும், காங்கிரஸ் தலைவர்களின் பெருமையை வெளிப்படுத்தவும் நமக்கு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. - கே.எஸ். அழகிரி


 இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உதயமாகி 136-வது ஆண்டை நிறைவு செய்து, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி 137-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. காங்கிரஸ் கட்சியின் வலிமையை முன்னிலைப்படுத்தவும், காங்கிரஸ் தலைவர்களின் பெருமையை வெளிப்படுத்தவும் நமக்கு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. இந்த சந்தர்ப்பத்தில், இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், திட்டங்களையும் மக்களிடையே பரப்புகிற வகையில் இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவன நாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட வேண்டும். 

கிணற்றில் போட்ட கல்லாக நீட் விலக்கு சட்டம்: அடுத்தக் கட்டம் பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் வேண்டும்! - DR.S.ராமதாஸ்

 கிணற்றில் போட்ட கல்லாக நீட் விலக்கு சட்டம்: அடுத்தக் கட்டம் பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில், ஒரு புறம் நீட் தேர்வு அடுத்தடுத்து மாணவர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது; மற்றொருபுறம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் கண்ணுக்கெட்டிய  தொலைவு வரை தென்படவில்லை. நீட் விலக்கு நடவடிக்கை தமிழக மாணவர்களை பிணையாக வைத்து நடத்தப்படும் பகடை ஆட்டமாக மாறிவிடக்கூடாது. ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு சிதையக்கூடாது.

வெள்ளி, 24 டிசம்பர், 2021

உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) உயிரி – எரிசக்தி ஆராய்ச்சி ஆய்வுக் கூடத்தை (DIBER) பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் திரு அஜய் பட் பார்வையிட்டார்.


 உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) உயிரி – எரிசக்தி ஆராய்ச்சி ஆய்வுக் கூடத்தை (DIBER) பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் திரு அஜய் பட் பார்வையிட்டார். மின்தொகுப்பால் அடிக்கடி மின் விநியோகம் பாதிப்பு ஏற்படக் கூடிய தொலைதூரப்  பகுதிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யும் நோக்கில், பைன் மரக்காடு கழிவுகளிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்ய திபேர் ஆய்வகம் முயற்சி மேற்கொண்டுள்ளது. பைன் மரக்காடு கழிவுகள் ஆயிரக்கணக்கான காட்டுத்தீ சம்பவங்களுக்கு காரணமாவதால்,  அந்தக் கழிவுகளை மின்சார உற்பத்திக்கு பயன்படுத்துவது இரட்டை வெற்றியை அளிப்பதாக இருக்கும்.

32 ஆண்டுகால தேச சேவைக்குப் பிறகு விடைபெற்ற ஐஎன்எஸ் குக்ரி கப்பல்


 உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது ஏவுகணை தாங்கி கப்பலான ஐஎன்எஸ் குக்ரி, நாட்டிற்கு 32 ஆண்டுகாலம் ஆற்றிய சிறப்புமிகு சேவைக்குப் பிறகு வியாழக்கிழமை 23 டிசம்பர் 2021 அன்று பணியிலிருந்து விடைபெற்றது. இதையொட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல், பிஸ்வஜித் தாஸ் குப்தா சிறப்பு விருந்தினராக கொண்டார். இந்தக் கப்பலின் இன்னாள், முன்னாள் கமாண்டிங் அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

வியாழன், 23 டிசம்பர், 2021

மோடி அரசின் தேர்தல் சீர்திருத்த சட்ட திருத்த மசோதா வெகுஜன வாக்குரிமை பறிக்கப்படுவதற்கும் மாநிலங்களின் அதிகாரத்தை ஆக்கிரமிப்பதற்கும் வழிவகுக்கும். - கே.எஸ். அழகிரி


 மோடி அரசின் தேர்தல் சீர்திருத்த சட்ட திருத்த மசோதா வெகுஜன வாக்குரிமை பறிக்கப்படுவதற்கும் மாநிலங்களின் அதிகாரத்தை ஆக்கிரமிப்பதற்கும் வழிவகுக்கும்.  பணபலத்தில் தேர்தல் நடத்துவதைத் தடுப்பதை உள்ளடக்கியதாக இருப்பதே உண்மையான தேர்தல் சீர்திருத்தம்.   

தேர்தல் சட்ட திருத்த மசோதாவில் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டு வந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

புதன், 22 டிசம்பர், 2021

வன்னியர் இட ஒதுக்கீட்டில் செய்யப்பட்ட மாணவர் சேர்க்கை, நியமனங்களுக்கு தடை இல்லை: விரைவில் முழு வெற்றி!

வன்னியர் இட ஒதுக்கீட்டில் செய்யப்பட்ட மாணவர் சேர்க்கை, நியமனங்களுக்கு தடை இல்லை: விரைவில் முழு வெற்றி! 

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின்படி இதுவரை மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கை மற்றும் அரசு பணி நியமனங்களை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்க்கும் மேல்முறையீடுகளை விரைவாக விசாரித்து நீதி வழங்கவும் உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் சீனத் தூதர்: ஈழத்தமிழரை வளைக்கும் சீனா- இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து! - DR.S.ராமதாஸ்



 யாழ்ப்பாணத்தில் சீனத் தூதர்: ஈழத்தமிழரை வளைக்கும் சீனா -

இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து! - DR.S.ராமதாஸ்

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இலங்கைக்கான சீனத் தூதர் கி சென்ஹாங் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு வாழும் ஈழத் தமிழர்களுக்கும், தமிழர் அமைப்புகளுக்கும் அவர் ஏராளமான உதவிகளை வாரி வழங்கியிருக்கிறார். ஈழத்தமிழர்களை படுகொலை செய்ய உதவிய சீனா, ஈழத்தமிழர்களுக்கு உதவுவது இயல்பானது அல்ல.

திங்கள், 20 டிசம்பர், 2021

கோவா விடுதலை தின வைரவிழாக் கொண்டாட்டத்தில் இணைந்த இந்திய கடற்படை


 கோவா மாநிலம் அதன் விடுதலை தினத்தை ஆண்டுதோறும் டிசம்பர் 19 ஆம் தேதி கொண்டாடி வருகிறது. கோவா விடுதலைப் பெற்றதன் 60 ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக, வைரவிழாக் கொண்டாட்டங்கள் பனாஜியில், 19 டிசம்பர் 2021 அன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியை குறிக்கும் விதமாக பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸாத் மைதானத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  இந்த நிகழ்ச்சியின் போது முப்படைகளையும் சேர்ந்த 100 வீரர்கள் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதுடன், பக்லர் இசைக் கலைஞர்களின் ‘தி லாஸ்ட் போஸ்ட்‘ பாடலும் இசைக்கப்பட்டது.

வெள்ளி, 17 டிசம்பர், 2021

பெண்ணின் திருமண வயது 18-லிருந்து 21 ஆக உயர்த்த ஒன்றிய அமைச்சரவை முடிவு! வரவேற்கிறோம் ! - விரைந்து நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றுவது காலத்தின் கட்டாயம்!.- கி.வீரமணி

 தெற்கே தந்தை பெரியார் - வடக்கே டாக்டர் அம்பேத்கர் செய்த பிரச்சாரம் காலத்தை வென்று அமைதிப் புரட்சியை உருவாக்கி வருகிறது!

பெண்ணின் திருமண வயது 18-லிருந்து 21 ஆக உயர்த்த ஒன்றிய அமைச்சரவை முடிவு!

பாராட்டுகிறோம் - வரவேற்கிறோம் - விரைந்து நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றுவது காலத்தின் கட்டாயம்!.- கி.வீரமணி

பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத் திருத்தம் செய்ய ஒன்றிய அமைச்சரவை நேற்று (16.12.2021) முடிவு எடுத்துள்ளது. விரைவில் அதற்கேற்ப திருமண வயதை பெண்ணுக்கு 21 ஆக (தற்போது 18 வயது) உயர்த்தும் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படும் என்பது மிகவும் வரவேற்கத்தக்க மாற்றமாகும்!

வெங்காய விலையை கட்டுப்படுத்த, 2.08 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. - திரு அஸ்வினி குமார் சவுபே

 நாடாளுமன்றத்தின் மக்களவையில், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

பல காரணங்களால் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன. தேவைக்கும், விநியோகத்துக்கும் சமநிலையற்ற தன்மை ஏற்படும்போது, விநியோக  சங்கிலியில் பாதிப்பு ஏற்படும்போது, விளைச்சல் பருவ மாறுபாடுகள், கள்ளச் சந்தையில் பதுக்குவதன்  மூலம் செயற்கையாக ஏற்படுத்தப்படும் தட்டுப்பாடு, சர்வதேச சந்தையில் விலை உயர்வு ,போன்றவை காரணமாக உணவுப் பொருட்கள் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன.

ராம்னா காளி கோயில், இந்தியா மற்றும் பங்களாதேஷ் மக்களிடையே ஆன்மீக, கலாச்சார பிணைப்பின் அடையாளமாக இருக்கிறது : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்


 பங்களாதேஷ் பயணத்தின் நிறைவு நாளில் (டிசம்பர் 17, 2021)  குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் டாக்காவில் இந்திய சமூகத்தினர் மற்றும் 

இந்தியாவின் நண்பர்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்கு பங்களாதேஷுக்கான ஹை கமிஷனர் திரு விக்ரம் கே துரைசாமி ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னால் டாக்காவில் புதுப்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ராம்னா காளி கோயில் தொடக்க நிகழ்வில் பங்கேற்ற பெருமையைத் தாம்  கொண்டிருந்ததாக அங்கு கூடியிருந்தோரிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர்  தெரிவித்தார். விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் படைகளால் அழிக்கப்பட்ட இந்தக் கோயிலைப் புனரமைக்க பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் அரசுகளும், மக்களும் உதவி செய்தனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.  இந்தியா மற்றும் பங்களாதேஷ் மக்களிடையே ஆன்மீகம் மற்றும் கலாச்சார பிணைப்பின் அடையாளமாக இந்தக் கோயில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

வியாழன், 16 டிசம்பர், 2021

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தலா 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்கும் பணி முறையே மார்ச் 2023 மற்றும் நவம்பர் 2023-ல் முடிக்கப்படும்.- டாக்டர் ஜிதேந்திர சிங்


 கடந்த 7 ஆண்டுகளில் நிறுவப்பட்ட அணு மின்சார உற்பத்தித் திறன், 40% -க்கு மேல் அதிகரித்து 4780 மெகாவாட்டிலிருந்து 6780 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது என பிரதமர் அலுவலகம் மற்றும் அணு சக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மின்னணு சாதனங்கள் உற்பத்திக்கான குவி மையமாக இந்தியாவை நிலைநிறுத்த ரூ.2,30,000 கோடி நிதியுதவி வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.- பிரதமர் திரு நரேந்திர மோடி


 தற்சார்பு இந்தியா தொலைநோக்குத் திட்டத்தை மேலும், தீவிரப்படுத்தவும், மின்னணு சாதனங்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான உலகளாவிய குவிமையமாக இந்தியாவை  நிலை நிறுத்தவும் நீடித்து உழைக்கவல்ல செமி கண்டக்டர் மற்றும் காட்சிப்படுத்தும் மின்னணு சாதனங்கள் உற்பத்திச் சூழலை மேம்படுத்த விரிவானத் திட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

செமி கண்டக்டர் மற்றும் காட்சிப்படுத்தும் மின்னணு சாதனங்களை  உற்பத்தி செய்யும் மற்றும் வடிவமைக்கும் நிறுவனங்களுக்கு உலகளாவிய போட்டித் தன்மையுடன் ஊக்கத்தொகையை இந்தத் திட்டம் வழங்கும். உத்திகள் வகுத்தலில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பொருளாதாரத்தில் தற்சார்பான இந்தியாவின் தொழில்நுட்ப தலைமைத்துவத்திற்கு  இது வழிவகுக்கும்.

திராவிடர் கழகத்தின்மீது தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் திரு.அண்ணாமலை டுவிட்டரில் அவதூறுப் பிரச்சாரம்! காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். - கி.வீரமணி



திராவிடர் கழகத்தின்மீது தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் திரு.அண்ணாமலை டுவிட்டரில் அவதூறுப் பிரச்சாரம்!
காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். - கி.வீரமணி

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் திரு.அண்ணாமலை டுவிட்டரில் - கட்சியின் அதிகாரப்பூர்வமான முறையில் நேற்று (13.12.2021) பிற்பகல் 12.48 மணிக்கு திராவிடர் கழகம் பற்றி பொய்யான தகவலைப் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் விபத்தில் மரணித்தது குறித்து. திராவிடர் கழகத்தின் சார்பில் இரங்கலையும், வீர வணக்கத்தையும் ‘விடுதலை’ நாளேட்டில் 8.12.2021 அன்று வெளியிட்டுள்ளோம்.

உண்மைத் தகவல் அடிப்படையிலான ஆராய்ச்சியின் மூலம் இந்திய வரலாற்றை மறுமதிப்பீடு செய்ய குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்


 உண்மைத் தகவல் அடிப்படையிலான ஆராய்ச்சியின் மூலம் இந்திய வரலாற்றை மறுமதிப்பீடு செய்ய குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். காலனிய கண்ணோட்டம் இந்தியாவின் கடந்தகால தகவல்களை சீரழித்துவிட்டதால், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்  மற்றும் தலைவர்கள் குறித்த கூடுதல் நூல்களைக் கொண்டு இந்திய வரலாற்றுக்குப் புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது என்று அவர் கூறினார்.

புதுதில்லியில் உள்ள குடியரசு துணைத்தலைவர் மாளிகையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆந்திரப்பிரதேசத்தின் ஆட்சி மொழி ஆணையத் தலைவர் திரு யர்லகட லட்சுமி பிரசாத் எழுதிய நூலினை வெளியிட்டு உரையாற்றிய திரு நாயுடு, இந்தியாவின் விடுதலைப் போராட்டம் பற்றிய பல்வேறு தகவல்களை இளைஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கைப் பாடங்களை மனதில் பதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

புதன், 15 டிசம்பர், 2021

‘சப்காபிரயாஸ்’ என்னும் கருத்துக்கு சரியான உதாரணமாகத் திகழும் இந்த புனிதமான திட்டம் அனைவரது முயற்சியாலும் முடிக்கப்படும். - பிரதமர் திரு. நரேந்திர மோடி


 குஜராத்தில் உமியா மாதா கோயில் வளாகத்தை உள்ளடக்கிய மா உமியா ‘தாம்’ வளர்ச்சித் திட்டத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.

‘சப்காபிரயாஸ்’ என்னும் கருத்துக்கு சரியான உதாரணமாகத் திகழும் இந்த புனிதமான திட்டம் அனைவரது முயற்சியாலும் முடிக்கப்படும் என்று பிரதமர் கூறினார். பக்தர்கள் இந்தத் திட்டத்தில் ஆன்மீக உணர்வுடன் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், மக்களுக்கான சமூக சேவை என்பது மிகப் பெரிய வழிபாடாகும் என்று கூறினார்.

திங்கள், 13 டிசம்பர், 2021

10 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டும் வரும் சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும்.- DR. அன்புமணி ராமதாஸ்



 அம்பலமான சுங்கக்கட்டண சுரண்டல்: விசாரணை நடத்த வேண்டும் - சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்!. - DR. அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் கடந்த 7 மாதங்களில் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணமாக ரூ.3421 கோடி வசூலிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இது கடந்த சில ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட சுங்கக்கட்டணத்தை விட மிக அதிகம் என்பதைக் கடந்து, கடந்த காலங்களில் சுங்கக் கட்டண வசூல் கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தை உறுதி செய்துள்ளது. 

இந்தியாவில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோரை பீடித்துள்ள விட்டமின் டி குறைபாட்டை போக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.- DR. S.ராமதாஸ்

 அச்சுறுத்தும் விட்டமின் ‘டி’ குறைபாடு:

விளையாட்டை கட்டாயமாக்க வேண்டும்!.- DR. S.ராமதாஸ்

தமிழ்நாடு உட்பட ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய உடல்நலக் குறைபாடு குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் ஆய்வில் வெளியாகியுள்ளன. விட்டமின் டி குறைபாடு தான் இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய் ஆகும். இந்தியாவில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோரை பீடித்துள்ள விட்டமின் டி குறைபாட்டை போக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நின்ற தந்தை பெரியார் எங்கே? தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திராத சங்கராச்சாரியார் எங்கே?. - கி.வீரமணி

 கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நின்ற தந்தை பெரியார் எங்கே?

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திராத சங்கராச்சாரியார் எங்கே?. -  கி.வீரமணி

இந்தப் பொது ஒழுக்கத்துக்கு ஊறுவிளைவித்த சங்கராச்சாரியாருக்கு வக்காலத்து வாங்கி நீதிபதி தீர்ப்பு சொல்லலாமா?

சென்னை மியூசிக் அகாடமியில் 24.1.2018 இல் நடந்த நிகழ்ச்சியில், தமிழ் - சமஸ்கிருத அகராதியை அன்றைய ஆளுநர் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டது.

அதுபோது, அந்த நிகழ்ச்சியில் காஞ்சி சங்கராச் சாரியார் விஜயேந்திரர் கலந்துகொண்டார். தமிழ்த் தாய் வாழ்த்தின்போது, ஆளுநர் உள்பட அவையினர் அனைவரும் எழுந்து நின்றனர்.

விஜயேந்திரர் மட்டும் எழாமலே கண்ணை மூடிக் கொண்டு மேடையில் அமர்ந்திருந்தார். நாட்டுப்பண் பாடும்போது மட்டும் எழுந்து நின்றார்!

நாட்டில் இப்போதுள்ள சவால்களையும், நவீன கால அச்சுறுத்தல்களையும் சமாளிக்க இளம் வீரர்களின் உடல் நலமும், மன வளமும் உறுதியாக இருக்க வேண்டும்.- திரு ராம்நாத் கோவிந்த்


 ஜெனரல் பிபின் ராவத் ஒரு அசாதரணமான ராணுவ தலைவர்: அவரது மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப இயலாது என்று குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார். டேராடூனில் நடைபெற்ற இந்திய ராணுவ அகாடமி யின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். 

முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் அகால மறைவால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியிலிருந்து நாடு இன்னும் மீளாத நிலையில் நாம் இங்கு கூடியுள்ளோம் என்று குடியரசு தலைவர் கூறினார். உத்தரகாண்ட் அவரது சொந்த மாநிலம். இந்திய ராணுவ அகாடமியில் அவர் பயிற்சி பெற்றார். அவரது திறமைக்காக அவருக்கு இங்கு ஸ்வோர்ட் ஆப் ஆனர் எனப்படும் விருது வாள்  வழங்கப்பட்டது. இந்த சோகமான சம்பவம்  நடக்காமல் இருந்திருந்தால், இன்று நம்மிடையே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பார் என்று அவர் கூறினார்.

புதன், 8 டிசம்பர், 2021

இந்தியக் கடற்படையின் 22 ஆவது ஏவுகணை வாகன அணிக்குக் கொடி விருதினை குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வழங்கினார்


 மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று (டிசம்பர் 8, 2021)  இந்தியக் கடற்படையின் 22-ஆவது ஏவுகணை வாகன அணிக்கு குடியரசுத் தலைவரின் கொடி விருதினைக் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் இந்த சாதனையை அடைந்ததற்காக 22 ஆவது ஏவுகணை வாகன அணியோடு இணைந்துள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.  இந்த அணி நமது நாட்டிற்குக் கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் இதன் அதிகாரிகளாலும், மாலுமிகளாலும் செய்யப்பட்ட மிகச்சிறந்த சேவைக்கான சான்றாக இந்த விருதளிப்பு இருப்பதாக அவர் கூறினார்.

செவ்வாய், 7 டிசம்பர், 2021

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.


 உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர்  திரு நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். 

கோரக்பூரில் எய்ம்ஸ், உரத்தொழிற்சாலை மற்றும் ஐசிஎம்ஆர் மண்டல மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பதிய கட்டடங்கள் திறக்கப்பட்டதை முன்னிட்டு  உத்தரப்பிரதேச மக்களுக்கு பிரதமர்  பாராட்டுத் தெரிவித்தார். எய்ம்ஸ் மற்றும் உரத்தொழிற்சாலைக்கு  5 ஆண்டுகளுக்கு முன்பு தாமே அடிக்கல் நாட்டியதுடன் இன்று அவற்றை தொடங்கி வைப்பதை நினைவுகூர்ந்த அவர், ஒரு திட்டத்தைத் தொடங்கினால் அதை முடிக்க அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பள்ளிகளில் வகுப்பறையிலோ அல்லது வழக்கமான நடைமுறையிலோ முகக்கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் இறைவணக்க நடைமுறை தொடர அனுமதி வழங்க வேண்டும்.- ஜி.கே.வாசன்


 தமிழக அரசு, கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கு அதிக அக்கறையோடு செயல்பட வேண்டும் மற்றும் பள்ளிகளில் வகுப்பறையிலோ அல்லது வழக்கமான நடைமுறையிலோ  முகக்கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் இறைவணக்க நடைமுறை தொடர அனுமதி வழங்க வேண்டும்.

ஒமிக்ரான் வைரஸ் விழிப்புணர்வு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை பள்ளிகளில் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது. 

அதே சமயம் பள்ளிகளில் நடைபெறும் இறைவணக்கக் கூட்டம், கூட்ட நெரிசல் காரணத்தால் தவிர்க்கப்பட வேண்டும் என்றால் அதற்காக வகுப்பறையில் தனி மனித இடைவெளியில் இறைவணக்கம் நடைபெற உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். 

பலி வாங்கும் மின் கம்பங்களின் தரமற்ற தன்மை பற்றி விசாரணை நடத்த வேண்டும்! - DR.அன்புமணி ராமதாஸ்

 பலி வாங்கும் மின் கம்பங்களின் தரமற்ற

 தன்மை பற்றி விசாரணை நடத்த வேண்டும்! - DR.அன்புமணி ராமதாஸ்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் புதிதாக நடப்பட்ட மின்சாரக் கம்பம் உடைந்து விழுந்ததில், அதில் பணியாற்றிக் கொண்டிருந்த காளிராஜ் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கும் நிகழ்வாகும். இந்த விபத்தின் பின்னணி குறித்து விசாரித்ததில் கிடைத்துள்ள தகவல்கள், மின்சார வாரியத் தொழிலாளர்கள் எந்த அளவுக்கு உயிருக்கு ஆபத்தான சூழலில் பணியாற்றுகின்றனர் என்பதை அம்பலப்படுத்தியுள்ளன.

‘‘இராணுவத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அளவுக்குமீறிய அதிகாரச் சட்டம் உடனடியாக ரத்து செய்யப்படவேண்டும்!’’ உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு தேவை! - கி.வீரமணி

 நாகாலாந்தில் இராணுவத்தால் அப்பாவி தொழிலாளர்கள் - பொதுமக்கள் 21 பேர் சுடப்பட்ட கொடுமை!

‘‘இராணுவத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அளவுக்குமீறிய 

அதிகாரச் சட்டம் உடனடியாக ரத்து செய்யப்படவேண்டும்!’’

உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு தேவை! - கி.வீரமணி

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தின் மான் மாவட்டத்தில் உள்ளது ‘ஓட்டிங்’ என்ற கிராமம்.

இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் கோர மரணம்

இந்தக் கிராமம் கோன்யாக் நாகர் சமூகத்தினர் பெரிதும் வாழும் கிராமம் ஆகும். சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் பணி முடித்து ஒரு வேனில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அந்த வேனை நோக்கி இராணுவத்தினர் தொடர்ந்த துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அந்த ஊர் கிராமத் தொழிலாளிகள் - அப்பாவி பொதுமக்கள் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியும், அதைத் தொடர்ந்து  அவர்களது ஆத்திரத்தின் வடிகாலாக உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தியபோது, அவர்கள்மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.  கூட்டத்தைக் கலைப்பதாகக் கூறி, பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் மேலும் ஏழு பேர் உயிரிழந்து, பலியானோர் எண்ணிக்கையை 21 ஆக உயர்த்திவிட்டது நெஞ்சங்களில் இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்கிறது!

தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று

அப்பாவிகளான சுரங்கத் தொழிலாளர்களும், ஊர்ப் பொதுமக்களும் இப்படி சொந்த மண்ணிலேயே, இராணுவத்தின் அலட்சியப் போக்காலோ - கவனக் குறைவான அவசரப்பட்ட நடவடிக்கைகளாலோ உயிரிழந்துள்ள கொடூரம் நாகாலாந்தில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு எதிரான ஒரு மனப்போக்கை அந்த மக்களிடையே உருவாக்கியிருப்பது - அதிர்ச்சிக்குரியது மட்டுமல்ல; பெரிதும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்றும் ஆகும்.

திருப்தி அளிக்காத உள்துறை அமைச்சரின் விளக்கம்

நாடாளுமன்றத்தில் தி.மு.க. மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் அவையில் இதுபற்றி முழுமையாக விவாதிக்கவேண்டும் என்று குரல் எழுப்பினார். அதன்பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுபற்றி விளக்கம்கூறி, நடந்த சோக சம்பவத்திற்காக அவையில் வருத்தம் தெரிவித்ததோடு, இந்த நிகழ்வுக்கு இராணுவம் மன்னிப்புக் கோரியிருக்கிறது என்றெல்லாம் கூறினாலும்கூட, அவரது விளக்கம், வருத்தத்தைவிட, நடந்துள்ள கொடூரத்தை நியாயப்படுத்துவதே பிரதானமாக உள்ளது என்ற எண்ணத்தை கேட்போருக்கு ஏற்படுத்துவதாக அமைந்தது. SIT என்ற அமைப்பின்மூலம் பொது விசாரணைக்கும் ஏற்பாடாகியுள்ளது.

அதிகாரமும், இராணுவமும் மக்களின் மனப்புண்ணை ஆற்றாது

இராணுவத்தின் மன்னிப்போ, அதன்மீது அத்துமீறியதற்கான வழக்கோ வடகிழக்கில் உள்ள மாநில மக்களின் இது மாதிரியான பிரச்சினைக்குச் சரியான நிரந்தரத் தீர்வாகாது; அமைதியை ஏற்படுத்தி, மக்களின் அன்பையும், நல்லெண்ணத்தையும் பெற முயற்சிக்க வேண்டுமே தவிர, இராணுவ நடவடிக்கைகளால் - வெறும் அதிகாரம், சட்டங்களைக் காட்டினாலும் அம்மக்களின் மனப்புண்களை ஆற்ற அவை ஒருபோதும் பெரிதும் உதவாது.

இந்த நிகழ்வு வெந்த புண்ணில் வேலைச் சொருகும் வேதனையான துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதைவிட, அதைக் கிளறிவிடக் கூடிய விளைவையே ஏற்படுத்தக் கூடும்.

நாகாலாந்தின் முதலமைச்சர் நெப்போரியோ அவர்களும், மேகாலாயாவின் முதலமைச்சர் கான்ராட் சங்கமா அவர்களும் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோளை ஏற்பதே நிரந்தர பரிகாரத்திற்கும், அமைதி திரும்பி மக்களாட்சியின் மாண்புகளை அப்பகுதி மக்கள் அனுபவிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தும்.

இராணுவத்திற்கு வழங்கப்பட்ட அதிக அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்படவேண்டும்

வடகிழக்கு மாநிலங்களில் தற்போது அமலில் உள்ள இராணுவத்தின் எல்லையற்ற அதிகாரத்தைக் கொண்ட சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற அவ்விருவரது கோரிக்கையை அலட்சியப்படுத்தாமல் ஏற்பதே சிறப்பான முழு அமைதி திரும்பி, வடகிழக்கின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெரிதும் உதவிடக் கூடும்.

‘’Armed Forces (Special Powers) Act - AFSA’’ - இராணுவத்திற்கு அதிகாரம் தந்துள்ள இந்த சட்டம், தொடர்ந்து அங்கே அமலில் இருப்பது. ஏற்கெனவே அசாம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப்பிரதேசத்தின் மூன்று மாவட்டங்கள் அசாம் மாநிலத்தின் எல்லையோரத்தில் உள்ள எட்டு போலீஸ் ஸ்டேஷன்கள் - ஆகியவைகளில், சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது என்ற பெயரில் பாதுகாப்பைத் தர, இராணுவம், துப்பாக்கிச் சூடு உள்பட நடத்திக் கொள்ளும் அதிகாரத்தை தருகின்ற சட்டமாக உலவுவதுபற்றி இணக்கமாகச் சிந்தித்து, சரியான முடிவை எடுத்தால், அது அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்புக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் பெரிதும் துணை புரிவதாக அமையக்கூடும்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடுகளை வழங்குவது அவசர அவசியமாகும்.


கடற்பாசி பயிரிடுதல் மற்றும் பதப்படுத்துதல் மூலம் ராமேஸ்வரத்தின் ஊரகப்பகுதி மக்கள் பயனடைந்துள்ளனர்


 கடற்பாசி பயிரிடுதல் கடற்பாசியின் சந்தை தேவைகளை வெளிப்படுத்துதலில் பயிற்சி பெற்றதன் மூலம் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த திருமதி முத்தா முத்துவேல் சாம்பையின் வாழ்க்கை மாற்றம் அடைந்துள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல் தொழில்முனைவோருக்கு இப்போது அவரே நேரடியாக விற்பனை செய்வதால் அவரது வருவாய் 50 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

கடந்த 17 ஆண்டுகளாகக் கடற்பாசி பயிரிட்டு வரும் கடற்பாசி சாகுபடிக்கான காந்தாரி அம்மன் சங்கம் மற்றும் கடற்பாசி உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றின் உறுப்பினரான திருமதி முத்தா முத்துவேல் தமிழ்நாட்டின் மண்டபம் என்ற இடத்தில் அமைந்துள்ள சிஎஸ்ஐஆர்-சிஎஸ்எம்சிஆர்ஐ அமைப்பின் கடல் சார் ஆராய்ச்சி அலகில் பயிற்சி பெற்ற 2000 பேரில் ஒருவராவார்.

1971-ம் ஆண்டு போரின் சிறந்த வீரருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கிரெனேடியர் படைப்பிரிவின் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.


 பரம் வீர் சக்ரா விருது பெற்ற சுபேதார் மேஜர் (கௌரவ கேப்டன்) யோகேந்திர சிங் யாதவ், திருமதி ஹோஷியார் சிங் மற்றும் ராணுவ செயலாளரும் கிரெனேடியர்ஸில் கர்னலுமான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சிரோஹி ஆகியோருடன் இணைந்து பரம் வீர் சக்ரா விருதாளர் கர்னல் ஹோஷியார் சிங்கின் 23-வது நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில் ஜெய்ப்பூரில் உள்ள ஷஹீத் ஸ்மாரக் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது உண்மையில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க புனிதமான தருணம் ஆகும்.

புகழ்பெற்ற போர் வீரரும், அதிகளவில் வீர விருதுகள் வென்றவருமான கர்னல் ஹோஷியார் சிங், 1971 போரில் படைப்பிரிவு தளபதியாக பணியாற்றினார். தனது துணிச்சலான வீரர்கள் குழுவுக்கு தலைமை தாங்கி ஷகர்கர் செக்டார் பகுதியில் பசந்தர் ஆற்றின் குறுக்கே ஜர்பால் என்ற பாகிஸ்தான் ராணுவ இடத்தை கைப்பற்றினார்.

"தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில் வழித்தடங்கள்" திமுக MP திரு பி வில்சனின் கேள்விக்கு பாதுகாப்பு இணை அமைச்சர் திரு அஜய் பட் பதில் அளித்தார்.


 நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர் திரு பி வில்சனின் கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு இணை அமைச்சர் திரு அஜய் பட் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, தமிழ்நாடு பாதுகாப்புத்  தொழில்துறை வழித்தடம் தொடர்பாக இந்திய அரசுக்கு மூன்று பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த முன்மொழிவுகளின் விவரங்கள் மற்றும் நிலவரம்  பின்வருமாறு:

(i) பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்புச்  சோதனை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் சோதனை வசதிகளை நிறுவுதல். ஒப்பந்த செயல்பாட்டில் பங்கேற்கவும், இது தொடர்பான நடைமுறை/திட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிராவில் உள்ள ராய்கட் கோட்டைக்கு சென்ற குடியரசு தலைவர், சிவாஜி சமாதியில் மரியாதை செலுத்தினார்


 மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்கட் கோட்டைக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று சென்றார்.  சத்ரபதி சிவாஜி மகராஜுக்கு அவரது சமாதியில் மரியாதை செலுத்தினார்.

சிவாஜிக்கு மரியாதை செலுத்தும் வாய்ப்பை பெற்றதை தாம் பாக்கியமாக கருதுவதாக குடியரசுத் தலைவர் கூறினார். இந்தப் பயணம் தனக்கு ஒரு புனிதப் பயணம் என்றும் அவர் கூறினார்.

சிவாஜி தலைமையின் கீழ், இந்த ஒட்டு மொத்த பிராந்தியத்தின் பெருமை அதிகரித்ததாகவும், தேசபக்தி உணர்வு மீண்டும் ஏற்பட்டதாகவும் குடியரசுத் தலைவர் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் கண்டன அறிக்கை போன்று மற்ற மாநிலங்களும் மவுனம் சாதிக்காமல் குரல் கொடுக்கவேண்டும்! - கி.வீரமணி



எதேச்சதிகார மனப்போக்குடன் அணைப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றிய ஒன்றிய அரசு!

அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல் - ஒன்றிய ஆட்சி காலில் போட்டு மிதிக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சரின் கண்டன அறிக்கை போன்று மற்ற மாநிலங்களும் மவுனம் சாதிக்காமல் குரல் கொடுக்கவேண்டும்!

தற்போது பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியான, பா.ஜ.க. ஆட்சி - ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்கேற்றவாறு இந்தியாவின் கூட்டாட்சி (Federal) யை படிப்படியாக மாற்றி, ஒற்றை ஆட்சி(Unitary)யாக ஆக்கி, அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள மாநிலங்களின் அத்துணை அதிகாரங்களையும் நாளும் பறிக்கும் ஆக்கிரமிப்பினைச் செய்து வருகிறது!

மாநிலங்களின் அதிகாரங்களை விழுங்கி ஏப்பம் விடும் பணி.

ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது: அனைத்து மாநில அரசுகளின் அலுவல் மொழிகளையும், ஒன்றிய அரசு அலுவல் மொழிகளாக ஆக்குங்கள்!


ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது: அனைத்து மாநில அரசுகளின் அலுவல் மொழிகளையும், ஒன்றிய அரசு அலுவல் மொழிகளாக ஆக்குங்கள்!  நாடாளுமன்றத்தில் வைகோ கோரிக்கை

நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் அன்று (03.12.2021) சுழிய நேரத்தின்போது, (Zero Hour) வைகோ ஆற்றிய உரை.

இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் விரும்புகின்ற வரையிலும், இந்தியாவின் ஆட்சிமொழியாக, இந்தியுடன் ஆங்கிலமும் நீடிக்கும்; இந்தியைத் திணிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை, மறைந்த பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் வழங்கினார்.