வியாழன், 2 ஜூலை, 2020

நம் நாட்டை ‘சுய சார்பு இந்தியா’ –வாக (ஆத்மா நிர்பர் பாரத்) உருவாக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை, ராமகுண்டம் திட்டம் நிறைவு பெற்றதும் உணரும். - சதானந்த கவுடா


ராமகுண்டம் உரங்கள் மற்றும் ரசாயனங்கள் நிறுவனத்தின் (ஆர்.எஃப்.சி.எல்) ராமகுண்டம் திட்ட முனேற்றம் குறித்து திரு. கவுடா ஆய்வு செய்தார்

மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு. சதானந்த கவுடா, ராமகுண்டம் உரங்கள் மற்றும் ரசாயனங்கள் நிறுவனத்தின் (ஆர்.எஃப்.சி.எல்) தலைமை செயல் அதிகாரியுடனான கூட்டத்தை புதுதில்லியில் இன்று நடத்தினார்.. ராமகுண்டம் திட்டத்தின் கட்டுமானப் பணிகளில் நடைபெற்று வரும்  முன்னேற்றம் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், இந்தத் திட்டம் நிறைவடையும் தருவாயில் இருப்பதாகவும், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் வணிக உற்பத்திக்கு இது தயாராகி விடும்  என்றும் நம்பிக்கை தெரிவித்தார். கோவிட்-19 நோய்த்தொற்று பரவலால் எழுந்துள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள (ஆர்.எஃப்.சி.எல்)  எடுத்துள்ள நடவடிக்கைகளை அவர் வெகுவாக பாராட்டினார். நம் நாட்டை ‘சுய சார்பு இந்தியா’ –வாக (ஆத்மா நிர்பர் பாரத்) உருவாக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை, இந்தத் திட்டம் நிறைவு பெற்றதும் உணரும். ராமகுண்டம் திட்டம், புத்துயிர் பெரும் கோரக்பூர் பாராவுனி, சிந்திரி மற்றும் தல்ச்சேர் ஆகிய இடங்களில் உள்ள திட்டங்களுடன் செயல்பாட்டுக்கு வந்ததும், யூரியா உர இறக்குமதியின் தேவை ஆண்டுக்கு 63.5 லட்சம் மெட்ரிக் டன்னாக (எல்எம்டி) குறையும் என்றும் மத்திய அமைச்சர் திரு. சதானந்த கவுடா குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக