சனி, 31 ஆகஸ்ட், 2019

பிக்பாஸிடம் மொக்கை வாங்கிய லாஸ்லியா

பிக்பாஸிடம் மொக்கை வாங்கிய லாஸ்லியா 



இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி காலையில் கவின் உடல்நிலை சரியில்லாததால் மாத்திரை கொண்டு வந்து கொடுத்த லாஸ்லியாவிற்கு கவின் நன்றி கூறினார். இதற்கு எதற்கு நன்றியெல்லாம் என்று லாஸ்லியா கேட்டார். மேலும் லாஸ்லியா கவினிடம் எதையும் கண்டு கொள்ளாமல் இருக்குறீங்க. பார்த்தும் பார்க்காத மாதிரி போறீங்க, நீங்கள் எப்போதும் போல் இருக்க வேண்டும். கேம் விளையாடுங்கள், சிரித்துக் கொண்டே இருங்கள் என்று அறிவுரை வழங்கினார். பின்னர் வருத்தத்துடன் நான் இனிமேல் உங்களிடம் பேச மாட்டேன் என்று லோஸ்லியா தெரிவித்தார். நீண்ட நேரம் வெயிலில் உட்க்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

பின்னர் லாஸ்லியா தர்ஷன் பேசிக் கொண்டிருந்தனர். இதில் தர்ஷனை வாடா போடா என்று கூறினார். ஆனால் கவினை மட்டும் அவர் இவர் என்று கூறியதைக் கேட்டு சேரன் மற்றும் தர்ஷன் கிண்டல் செய்து சிரித்தனர். 

லாஸ்லியா மற்ற போட்டியாளர்களிடம் பேசினார், நான் மட்டும் தான் இந்த வீட்டில் ரூல்ஸ் எல்லாவற்றையும் ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கிறேன். மைக்கை சரியாக மாற்றவில்லை என்றால் கூட பிக் பாஸ் என்னிடம் எதுவும் கூறியதில்லை என்று கூறியதைக் கேட்டு தர்ஷன் வீட்டில் ரூல்ஸ் பின்பற்றாமல் இரண்டு தடவை ஜெயிலுக்கு போனீங்க என்று கேட்டார். அதற்கு லாஸ்லியா மற்றவர்களை ஜெயிலுக்கு அனுப்பி அதன் மூலம் சந்தோஷப்படும் ஆள் நான் இல்லை என்று லோஸ்லியா கூறிக்கொண்டே இருக்கும் போது பிக் பாஸ் லோஸ்லியா மைக்கை சரியாக மாட்டுங்கள் என்று கூறியதைக் கேட்டு மற்ற போட்டியாளர்கள் நக்கலாக சிரித்தனர். 


லாஸ்லியா தொடர்ந்து மைக்கை பயன்படுத்தாமல் இருந்த லோஸ்லியாவை, மைக் பயன்படுத்தும்படி பிக் பாஸ் கூறினார். இதில், தர்ஷன் என்னது நீங்க தான் ரூல்ஸ் பாலோ பண்ணுறேன் என்று சொன்னீங்கள் இப்போ எதுக்கு பிக் பாஸ் உங்களை சொல்கிறார் என்று கேள்வி கேட்க, பிக் பாஸ்க்கு எனது பெயரை சொல்ல வேண்டும் என்று ஆசை இருப்பதால், அவர் எனது பெயரை கூறுகிறார் என்று லோஸ்லியா சமாளித்தார். லாஸ்லியாவை தொடர்ந்து பிக்பாஸ் காலாய்த்து வந்தார்.



வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

தமிழகத்திற்கு 10 மருத்துவ கல்லூரிகள், எய்ம்சுக்கு நிதி ஒதுக்கீடு வேண்டும்! - Dr. ராமதாஸ்

தமிழகத்திற்கு 10 மருத்துவ கல்லூரிகள், 
எய்ம்சுக்கு நிதி ஒதுக்கீடு வேண்டும்! 
Dr. ராமதாஸ் அறிக்கை
( நிறுவனர், பாமக )


இந்தியா முழுவதும் மத்திய அரசு நிதியில் 75 மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 82 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது மேலும் 75 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்

ரிசர்வ் வங்கியின் உபரி நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ள ரூ.1.76 லட்சம் கோடியை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்

- மு.க.ஸ்டாலின் உரை.
(தலைவர், திமுக)


அன்று (28-08-2019)  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கில் பங்கேற்று, தீர்மானங்களை நிறைவேற்றி பேசினார். 

அவர் பேசிய விவரம் பின்வருமாறு:

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம் - மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையும் நிலையில், என்னைப் பாராட்டி – ஊக்கப்படுத்தி – உற்சாகப்படுத்தி, விமர்சனங்களையும் முன்வைத்துள்ள ஊடகத்தினருக்கு நன்றி

- மு.க.ஸ்டாலின் பேட்டி.
(தலைவர் , திமுக)



திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் , பொருளாளராக அண்ணன் துரைமுருகன் அவர்களும் பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்து.

அவர்கள்  பேசிய விவரம் பின்வருமாறு : இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். இந்த ஓராண்டில், ஊடகத்துறையைச் சார்ந்த நீங்கள், எங்களைப் பாராட்டி, ஊக்கப்படுத்தி,உற்சாகப்படுத்தி, விமர்சிக்க வேண்டிய செய்திகளையும் தெளிவோடு எடுத்துச் சொல்லி, என்னை ஊக்கப்படுத்தியிருப்பதற்காக முதலில் உங்களுக்கெல்லாம் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை, வணக்கத்தை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்று (29-08-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். இந்தக் கூட்டத்தில், இதுவரையில் நாடாளுமன்றத்தில் அவர்கள் ஆற்றியிருக்கும் பணிகள், தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விவாதித்திருக்கிறோம்.

மேலும், மக்கள் பணியில் உங்கள் கடமையை தொடர்ந்து ஆற்றிட வேண்டும். வாக்களித்திருக்கும் மக்களுக்கு நன்றி சொல்லும் பணியையும் விரைவாக முடித்திட வேண்டும். தொடர்ந்து மக்களை சந்திப்பது மட்டுமல்ல, அவர்கள் கோரிக்கைகளை, மனுக்களை, ஒரு அலுவலகத்தில் அமர்ந்து அவற்றையெல்லாம் நீங்கள் பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் அதுகுறித்து எடுத்துச் சொல்லி, அதை நிவர்த்தி செய்யும் பணிகளிலும் முழுமையாக ஈடுபடவேண்டும்' என்று முடிவெடுத்திருக்கிறோம். என்று கூறினார்.

கேள்வி: தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் ஏதாவது சிறப்புச் செய்தி இருக்கிறதா?

மு.க.ஸ்டாலின் : திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுபேற்று ஓராண்டு முடிவுற்றது குறித்து பல ஊடகங்கள் - பத்திரிகைகள் பாராட்டி எழுதி இருக்கின்றனர். சிலர் விமர்சித்தும் எழுதி இருக்கின்றார்கள். சிலர் அறிவுப்பூர்வமான கருத்துகளையும் யோசனைகளையும் எனக்கு சொல்லி இருக்கிறார்கள். எனவே, அவற்றையெல்லாம் நான் உள்வாங்கிக்கொண்டு, நிச்சயமாக என்னுடைய கடமையை நான் ஆற்றுவேன்.

கேள்வி :  வரும் ஆண்டுகளில் தலைவராக உங்களின் முக்கிய நோக்கம் என்ன? அதேபோல் கடந்த ஒரு வருடத்தில் நீங்கள் சந்தித்த சோதனை என்று ஏதாவது இருக்கிறதா?

மு.க.ஸ்டாலின் : நான் சோதனைகளை – சாதனைகளையெல்லாம் எடை போட்டுப் பார்ப்பதில்லை. எப்படி எங்களை தலைவர் கலைஞர் அவர்கள் வழி நடத்திக் காட்டி இருக்கின்றாரோ, அந்த வழிநின்று நாங்கள் அவற்றையெல்லாம் துணிவோடு சந்திக்க காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

32 லட்சம் பண மோசடி ; கவினின் தாயார் ராஜலட்சுமிக்கு 5 ஆண்டுகள் சிறை

32 லட்சம் பண மோசடி : கவினின் தாயார் ராஜலட்சுமிக்கு 5 ஆண்டுகள் சிறை 


(கவின்) கவின் ராஜ் , கனா காணும் காலங்கள் என்ற தொடரில் மாணவர் கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு சரவணன் மீனாட்சி தொடரின் 2ம் பாகத்தில் வேட்டையன் என்ற ரோலிலும் நடித்துள்ளார். சின்னத்திரையைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும், கால்பதித்துதார். நட்புன்னா என்னான்னு தெரியுமா ? திரைபடத்தில் காதநாயகனாக நடித்துள்ளார்.

தற்போது பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காதல் மன்னன் ஆக வலம் வரும் நடிகர் கவின் (கவின் ராஜ் ) திருச்சி கே.கே நகர் பகுதியை சேர்ந்தவர். கவின் தாத்தாவும் அருணகிரி, தமயந்தி தம்பதிகள் இவருடைய  மகன் சொர்ண ராஜன், மகள் ராஜலட்சுமி மற்றும் மருமகள் ராணி. ஆகியோர் இணைந்து அந்தப் பகுதியில் சீட்டு கம்பெனி ஒன்றை அனுமதி இல்லாமல் 1998 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நடத்தி வந்ததாக தெரிகிறது. ராஜலட்சுமி என்பவர் நடிகரும் பிக்பாஸ் சீசன் போட்டியாளருமான கவினின் தாயார் ஆவார்.

சீட்டு கம்பெனியில்  பலர் சீட்டு கட்டி வந்துள்ளனர். இதில் 34 நபர்கள் கட்டிய பணம் 32,28,000 ஆயிரம் திருப்பி தரவில்லை. எனவும் கடந்த 2007 ஆம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில் மேற்படி வழக்கு விசாரணையில், கடந்த வாரம் சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.  இதுதொடர்பான குறுக்கு விசாரணையில் இருதரப்பு வாதங்கள் முடிந்தநிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் நடிகர் கவின் ராஜின் பாட்டி, மற்றும் தாய் ராஜலட்சுமி உள்ளிட குற்றவாளிகள் அனைவருக்கும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவாளிகள் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கவும், அந்தத் தொகையை வழக்கு தொடர்ந்த 2007ஆம் ஆண்டு முதல் 5 சதவிகித வட்டி விகிம் கணக்கிட்டு ரூ.55.10 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்.கவின் குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்து பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கவினுக்கு தெரிய வந்த பிறகு அவர் உடனடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவாரா என்பது தெரியவில்லை

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

7 தமிழர்கள் விடுதலை ஓராண்டாக பரிசீலனையா? - டாக்டர்.ராமதாஸ்

ஓராண்டாக பரிசீலனையா? 7 தமிழர்கள் 
விடுதலையை இனியும் தாமதிக்கக் கூடாது!
-டாக்டர்.ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர்,பாமக. )

இராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அவர்களில் ஒருவரான நளினி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. மிகவும் முக்கியமான இந்த வழக்கில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இத்தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது.

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

ஐ.நா கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா ?

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா கூட்டத்தில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


ஜெனீவாவில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்க உள்ளது.

இனப்பகையை எதிர்கொள்ள ஆயத்தம் ஆவோம்! - வைகோ அழைப்பு

ஆகஸ்ட் 27: சேலத்தில் அணி திரள்வோம்;
இனப்பகையை எதிர்கொள்ள ஆயத்தம் ஆவோம்!
வைகோ அழைப்பு
(பொதுச் செயலாளர், மதிமுக.)

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் திராவிடர் கழகமாக வீறு கொண்டு எழுந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்ற அதே சேலம் மாநகரில், ஆகஸ்ட் திங்கள் 27 ஆம் நாளில், தமிழர் உரிமைப் பாசறையாம் திராவிடர் கழகத்தின் பவள விழா மாநாடு எழுச்சியுடன் நடைபெறுவதை அறிந்து, நெஞ்சமெலாம் இனிக்கின்றது!

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

வனிதாவின் வஞ்சகத்தில் மதுமிதா பலியானது எப்படி ?

வனிதாவின் வஞ்சகத்தில்  மதுமிதா பலியானது எப்படி ?



வனிதாவின் காழ்ப்புணர்ச்சிக்கு காரணம்

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதல் வனிதா சின்ன பிரச்சனை கூட பெரித்தாக்குவார், முதல் வாரமே தலைவர் ஆனார், அப்போது முதல் பிக்பாஸ் வீட்டில் கத்தி கொண்டிருக்கும் வனிதா, மற்ற போட்டியாளர்களிடம் கடுமையான வாக்குவாதம் செய்வார். மற்றவர் போட்டியாளர்களும் ஒரு கட்டத்தில் விலகி செல்வர், இதனை சாதமாக பயன்படுத்தி வந்தார். கேப்டன் தேர்ந்து எடுக்கப்படும் போட்டியில் எற்பட்ட பிரச்சனையில் வனிதாவிடம் தர்ஷன் முதல் முறையாக கேள்வி கேட்டு பிக்பாஸ் வீட்டிலும் மற்றும் வெளியிலும் பிரபலமானார். வனிதா அப்போதும் கூட மைக்கை கழட்டி வைத்து பிக்பாஸ் தன்னிடம் பேச வேண்டும் என்று முறையிட்டார், ஆனால் பிகபாஸ் கண்டுக்கவே இல்லை. மாறாக சாக்க்ஷி தலைவராக அறிவித்தார். பிறகு வனிதாவும் தர்ஷனுடன் சமரசம் செய்தார். பின்னர் வரும் வாரத்தில் ஏலிமினேட் ஆனார். இவருடைய எலிமினேஷனுக்கு பிறகு நிகழ்ச்சியின் டி.ஆர்.பி அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. 

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த வனிதா தன்னை எதிர்த்தால் தான் மக்களிடம் தர்ஷன் பெரும் வரவேற்பு பெற்றார், என்பதை அறிந்து கொண்டார். லாஸ்லியா மற்றும் முகின்ராவ் மக்களிடம் வரவேற்பு இருப்பதை அறிந்து மேலும் காழ்ப்புணர்ச்சி ஆகி இருகிறார். 

வனிதாவின் மறுபிரவேசம்

இந்நிலையில் தான் நிகழ்ச்சியில் அதிரடியாக மறுபிரவேசம் செய்தார் வனிதா. ஹவுஸ்மேட்ஸுகளின் வெறுப்புக்கும், விமர்சனங்களுக்கு ஆளான வனிதா மீண்டும் நிகழ்ச்சிக்குள் வந்தது ஹவுஸ்மேட்ஸுக்கு பேரதிர்ச்சி தான். ஆனால் அதை யாரும் காட்டி கொள்ளவில்லை நிகழ்ச்சியில் தொடக்கத்தில் இருந்ததை விட மிகவும் மோசமாக வனிதா மாறியிருந்தார். நேற்று அனைவரிடமும் மிகவும் நல்லவர் போல பேசினார். முகின், தர்ஷன், மற்றும் லோஸ்லியா அவர்களை குறிவைத்து வனிதா செயல்பட்டார். மூவர் குறித்தும் சிண்டு முடியும் வேலையில் ஈடுபட்டார். லோஸ்லியாவை கஸ்தூரியிடம் கோர்த்து விட்டார். அபிராமிக்கும் முகினுக்கும் சண்டை மூட்டி விட்டார். சேரன், மது, மற்றும் ஷெரீனிடம் லோஸ்லியா, தர்ஷன் குறித்தும், கோள்மூட்டி பிளவுபடுத்தி வந்தார். அதை தொடர்ந்து காய்களை நகர்த்தி வந்தார்.

ஆணதிக்கம்

ஆண்களுக்கு எதிராக மதுவை நன்றாக தூண்டிவிட்டார் வனிதா. பிக்பாஸ் வீட்டுக்குள் ஆணதிக்கம் தழைத்தோங்குவதாக அவருடைய கருத்தை மதுமிதாவுக்குள் திணித்தார். பிறகு தர்ஷன் மேல் விமர்சனங்களை உருவாக்க வைத்தார். தர்ஷனை ஆதரித்த  சாண்டி, கவின், லோஸ்லியாவை குறிவைத்து மதுமிதா எப்போதும் சண்டையை உருவாக்க இதை வனிதா  நன்றாக தூண்டி கொண்டே இருந்தார். ஆனால் ஆண்களிடம் அவர் மட்டும் சகஜமாக பேசி வந்தார். 

உணராத மதுமிதா

இதனை உணராத மதுமிதா மனதிற்கு தோன்றியதை படபடவென பேசிய வண்ணம் இருந்தார். இந்த நிலையில் வனிதாவின் வரவிற்கு பின் மதுமிதாவிடம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. வனிதாவின் தூண்டுதலினால் கவின் உள்பட ஐவர் குழுவினர்களிடம் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்த மதுமிதா, நான்கு பெண்கள் விஷயத்தில் சம்பந்தப்பட்ட பெண்களே அமைதியாக இருந்த நிலையில் மதுமிதா மீண்டும் கவினுடன் விவாதம் செய்தார். இதனால் சேரன், கஸ்தூரி தவிர மற்ற பிக்பாஸ் போட்டியாளர்களின் வெறுப்பையும் மதுமிதா சம்பாதித்தார்.

தற்கொலைக்கு முயன்ற மதுமிதா

இந்த நிலையில் ஹலோ செயலி டாஸ்க்கில் மதுமிதா தெரிவித்த ஒரு கருத்து தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குறித்து சர்ச்சைக்குரிய இருந்ததாகவும் இதன் காரணமாக மதுமிதாவிற்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்ததாகவும், இதனையடுத்து மதுமிதா தான் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறையை மீறி செயல்பட்டதாக கூறி இந்நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். 

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

பிக்பாஸ் வீட்டில் தொடரும் வனிதாவின் ஆட்டம்

பிக்பாஸ் வீட்டில் தொடரும் வனிதாவின் ஆட்டம்


பிக்பாஸ் வீட்டில் வனிதா வழக்கம் போல காலை முதலே ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் சிண்டு முடியும் வேலையில் ஈடுபட்டார். சேரன், மது, மற்றும் ஷெரீனிடம் லோஸ்லியா, தர்ஷன் குறித்தும், கோள்மூட்டி பிளவுபடுத்தி வருகிறார். முகின், தர்ஷன், மற்றும் லோஸ்லியா அவர்களை குறிவைத்து வனிதா செயல்படுவதாக தோன்றுகிறது. அதை தொடர்ந்தே காய்களை நகர்த்துகிறார் வனிதா.

ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் அபிராமி உடல் நலிவடைந்து காணப்பட்டார். இதை கண்ட லோஸ்லியா வீட்டின் தலைவரான சாண்டி மாஸ்டரிடம் முறையிட்டார். சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் அறிவிப்பதற்குள் சாவியை எடுத்து வந்து அபிராமியை வெளியே வரும்படி அழைத்தார். ஆனால் அபிராமி வர மறுத்தார். அப்போது சாண்டிக்கும், கஸ்தூரிக்கும் சின்ன வாக்குவாதம் நடந்தது. சேரனும் அனைவரும் சேர்ந்து பிக்பாஸிடம் கோரிக்கை வைக்கலாம் சாண்டி ஆலோசனை கூறினார். அதை தொடர்ந்து அபிராமியை விடுக்குவிக்குமாறு பிக்பாஸ் உத்தரவிட்டார். 

சேரன் இதற்கிடையில் தர்ஷன், கவின், சாண்டி, முகின் ஆகியோரை வாங்க, போங்க, சார் என்று குறிப்பிட்டு அழைக்கத் தொடங்கினார். இதை கவனித்த நான்கு பேரும் தங்களுக்குள் பேசி கொண்டனர். உடனே கவின் சேரனை குறை கூற ஆரம்பித்தார். ஆனால் ஆண்கள் யாரும் சேரனிடம் சென்று பேசவில்லை. 

ஆண்கள் பெண்களும் பிரிந்திருப்பதை உணர்ந்த பிக்பாஸ் அதற்கு ஏற்றார் போல ’சபாஷ் சரியான போட்டி’ டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த விவாத டாஸ்க்கில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக பிரிந்தனர். இது மேலும் பிரச்னையை கூட்டியது.

வனிதாவும் முகின், தர்ஷனை குறிவைத்து காத்து கொண்டு இருந்தார்.  ஆண்கள், பெண்களில் சிறந்த தோழமை எண்ணம் கொண்டவர்களில் யார் என்ற விவாதத்தில் பேசும் போது அபிராமி, முகின் வாதத்தில்  தர்ஷன் முகின் ஆதரவாக கருத்து தெரிவித்தார். இதற்க்காக காத்திருந்த வனிதா தர்ஷனை சீண்டினார். உனக்கு ஏன் கோபம் வரவேண்டும், வாதத்தில் ஈடுபட்டார், இது மேலும் பிரச்னையை கூட்டியது.

ஒருவழியாக விவாதம் டாஸ்க் முடிவடைந்தது.  சிறந்த தலைவர்களாக இருந்தவர்கள் யார் ? சமைக்க தெரிந்தவர்கள் யார் ? தொடர்பான விவாதங்களில் பெண்கள் அணியினர் வெற்றி பெற்றனர். சிறந்த தோழமை எண்ணம் கொண்டவர்களில் யார் ?  ஆண்கள் அணியினர் வெற்றி பெற்றனர்.

பிறகு வனிதா, கஸ்தூரிக்கும் சிறு சலசலப்பு ஏற்பட்டது.  உடனே வனிதா ஆண்களிடம் வந்து  கஸ்தூரியை கேலி செய்தார். அப்போது அங்கே வந்த கஸ்தூரியை நையாண்டி செய்து பாடல் பாடினார்கள். இதனால் கஸ்தூரி எரிச்சலுடன் காணப்பட்டார். கவின் மற்றும் சாண்டி கஸ்தூரிக்கு காக்கா என்று பட்ட பெயர் வைத்து அவ்வப்போது காகம் போல் கரைந்து கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் வனிதாவின் போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த முகின், அவரை கன்னத்தில் அறைந்து விட்டதாகவும்,  முகின் தன்னை கன்னத்தில் அறைந்ததால் உடனே பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. அதனால் முகின் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

தமிழ் ராக்கர்ஸ் தடை ; டில்லி ஐகோர்ட் உத்தரவு

தமிழ் ராக்கர்ஸ் தடை ;  டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டது

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு மிகவும் தலைவலியாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ் வலைதளம். இந்த தளம்  புத்தம் புதிய படங்களை மறுநாளே பதிவேற்றம் செய்யப்பட்டு விடுகிறது. இதனை லட்சக் கணக்கான இளைஞர்கள் அதனை பதிவிறக்கம் செய்து பார்க்கிறார்கள். இதனால்  சினிமா தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் என பலரும் 50 சதவிகித வருமானத்தை இழந்து வருகிறது. 

இந்த நிலையில் ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ், தமிழ் ராக்கர்ஸ் வலைதளத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. அதில் தங்களின் படங்களை அனுமதி இன்றி தமிழ் ராக்கர்ஸ் வலைதளம் வெளியிடுவதால் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகிறது. அதனால் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சட்ட விரோதமாக புதிய திரைபடங்களை வெளியிட்டு வரும் இணையதளங்களை அனைத்தையும் நீக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது. 

இந்த மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட்  தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சட்டவிரோத இணைய தளங்களை நீக்க உத்தரவிட்டதுடன், அத்துடன் காப்புரிமையை மீறும் வலைதளம் மற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைக்கு கோர்ட் உத்தரவிட்டது.

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

அஞ்சாமை என்பதும் மடமையடா! - சுப வீரபாண்டியன்

அஞ்சாமை என்பதும் மடமையடா! 



இரண்டு நாள்களுக்கு முன் எனக்கு ஏற்பட்ட அனுபவம், என்னைக் கவலையோடு சிந்திக்கத் தூண்டியது. ஒரு நிகழ்ச்சியில், நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் தன் மகனை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பொருளியலில் முதுகலைப் பட்டமும், அதற்கு மேல் எம்.பி.ஏ பட்டமும் பெற்றிருந்த அந்த இளைஞர், ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல பணியில் உள்ளார். என் நண்பர் சொன்னார்,

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

தீதும் நன்றும் பிறர்தர வாரா; முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். - கமல் கூறியதன் காரணம்

தீதும் நன்றும் பிறர்தர வாரா
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். கமல் கூறியதன் காரணம் இப்போது தான் புரிந்தது.
சரவணனுக்கு அநீதி இழைத்த பிக்பாஸ்.


கடந்த வாரங்களில் மீரா மிதுன் மற்றும் சேரனின் நாட்டாமை டாஸ்க்கில்  சேரன் தன்னை தவறாக பிடித்து இழுத்ததாக மீரா தெரிவித்த புகாரை அவர் விசாரித்தார். ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அப்போது பேசிய கமல், மீரா போல பேசிக்கொண்டிருந்தால் எந்த பெண்ணும் அரசு பேருந்தில் செல்ல முடியாது. பெண்களை உரச வேண்டும் என்று சிலர் வருபவர்களும் உண்டு என்று கமல் சொன்ன போது, அதை கையை உயர்த்தி ஆமோதித்தார் சரவணன்.

HALL TICKET FOR TNPSC (CESE) DIRECT DOWNLOAD LINK

நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட பல துறைகளில் பொறியியல் பணிகளுக்கான இடங்களை நிரப்ப TNPSC (CESE) தேர்வு நடத்தப்படுகிறது. 



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பல்வேறு பொறியியல் சார்ந்த பணிகளுக்கான சி.இ.எஸ்.இ. தேர்வை நடத்துகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி இத்தேர்வு நடக்க உள்ளது. 

இதனை முன்னிட்டு இத்தேர்வுக்கான அட்மிட் கார்டு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி சிஇஎஸ்இ தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ் இணையதளத்தில் அட்மிட் கார்டை டவுன்லோட் செய்துகொள்ளலாம். 

Direct link to download TNPSC Combined Engineering Services Examination admit card 2019 


திங்கள், 5 ஆகஸ்ட், 2019

இந்த நாள் காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திய நாள் - வைகோ

இந்த நாள் காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திய நாள்
காஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல; உலகப் பிரச்சினை
- வைகோ MP
(மறுமலர்ச்சி தி.மு.க.)

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனி மாநில அந்தஸ்தை பறித்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்றும், லடாக் யூனியன் பிரதேசம் என்றும் பிரித்து, மாநில அந்தஸ்தையே பறித்துவிட்ட மசோதாவை எதிர்த்து மாநிலங்கள் அவையில் காங்கிரஸ் உறுப்பினர்களும், எதிர்க் கட்சி உறுப்பினர்களும் கடும் அமளியில் ஈடுட்டனர்.

வைகோ எதிர்க்கட்சியினரோடு சேர்ந்து மசோதாவை எதிர்த்து முழக்கம் எழுப்பிவிட்டு, தன்னுடைய இருக்கைக்குச் சென்று, நான் இப்பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியோடு மாறுபடுகிறேன். நான் பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார். தொடர்ந்து பலமுறை கேட்டபோது, உள்துறை அமைச்சர் அமித்ஷா எழுந்து, வைகோவை பேச அனுமதியுங்கள். அவர் கருத்தை நாங்களும் கேட்க விரும்புகிறோம் என்றார்.

வைகோவின் உரை பின்வருமாறு:-

“இந்திய அரசியல் நிர்ணய சபையில், அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவு நிறைவேற்றப்பட்டபோது, தலைசிறந்த பாராளுமன்றவாதியான எச்.வி.காமத் அவர்கள் எழுந்து, “இந்த நாள் வெட்கத்துக்கும், வேதனைக்கும் உரிய நாள்” என்றார். அதேபோலத்தான் இந்திய ஜனநாயக வரலாற்றில் 2019 ஆகஸ்ட் 5 ஆம் நாள் இரத்தக் கண்ணீரை வடிக்கச் செய்த நாள். ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட நாள். காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திய நாள்.

1947 நாட்டுப் பிரிவினைக்குப் பின்னர், பாகிஸ்தான் ஆதரவோடு, பக்டூனிஸ்தான் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்த நேரத்தில், காஷ்மீர் மன்னர் ஹரிசிங் அவர்கள், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். அந்த ஒப்பந்தத்தின்படி, எதிர்காலத்தில் காஷ்மீர் தனி அரசமைப்போடு விளங்கும். தனி அரசியல் நிர்ணய சபை, அரசியல் சட்டத்தை உருவாக்கும். அந்த மாநிலத்திற்கு என்று தனி கொடி, தனி பிரதமர் இருப்பார்.

இந்த ஒப்பந்தத்துக்கு காஷ்மீர் மக்களின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த ஷேக் அப்துல்லா முழு ஆதரவு தந்தார். காஷ்மீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று பண்டித ஜவஹர்லால் நேரு உறுதிமொழி அளித்தார்.

1948 லும், 1949 லும், 1950 களிலும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறி வந்தார்.

நான் ஜவஹர்லால் நேரு மீது மிகுந்த மரியாதை கொண்டவன். அவர் எழுதிய நான் கண்ட இந்தியா, உலக சரித்திரத்தின் ஒளிக் கதிர்கள் என்ற இரு நூல்களும் ஈடு இணையற்றவை. அதற்கு நிகரான ஒரு வரலாற்று நூல் உலகிலேயே இல்லை. ஆனால், காஷ்மீர் மக்களின் தலைவரான ஷேக் அப்துல்லாவை 1950 களில் கைது செய்து, தமிழ்நாட்டின் கொடைக்கானலில் சிறை வைத்தது வரலாற்றுப் பிழை ஆகும்.

1980 ஆம் ஆண்டு, என் இனிய நண்பர் டாக்டர் பரூக் அப்துல்லா, காஷ்மீரத்துச் சிங்கம் ஷேக் அப்துல்லாவை நான் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தார். அப்பொழுது ஷேக் அப்துல்லா அவர்கள் என்னிடம் கூறிய சொற்கள் மறக்க முடியாதவை.

“என் தமிழ்நாட்டு இளைய நண்பனே! காங்கிரஸ் கட்சியின் அரசியல் அகராதியில் நட்பு, நன்றி என்ற இரண்டு சொற்களுக்கும் இடம் இல்லை” என்றார்.

காங்கிரஸ் கட்சியோடு பரூக் அப்துல்லா கூட்டணி வைத்தபோது, அவர் தந்தையாரின் வார்த்தைகளை நினைவுபடுத்தினேன். அதன் விளைவாக ஒரு நாள் காலை முதலமைச்சர் பரூக் அப்துல்லா தேநீர் அருந்திக்கொண்டு இருந்தபோது, அவரது ஆட்சியை மத்திய காங்கிரஸ் அரசு கவிழ்த்தது என்ற செய்தி வந்தது.

காங்கிரஸ் கட்சிதான் காஷ்மீர் மக்களின் தலைவிதியோடு மோசடி நாடகம் நடத்தியது. காஷ்மீர் பிரச்சினை இப்படி வெடிப்பதற்கே காங்கிரஸ் கட்சிதான் காரணம். பண்டித நேரு தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

1960 களின் தொடக்கத்தில், ஐ.நா.வின் இந்தியத் தூதராக இருந்த எம்.சி.சாக்லா, ஐ.நா. சபையில் கூறினார், “காஷ்மீரில் மூன்று பொதுத்தேர்தல் நடத்திவிட்டோம். அதுதான் பொது வாக்கெடுப்பு” என்றார்.

இதைவிட ஒரு பெரிய மோசடி உலகில் எங்கும் நடக்கவில்லை.

கார்கில் யுத்தம் வந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் சரவணன் உள்ளிட்ட இளைஞர்கள் உயிரைத் துச்சமாக மதித்து வீரத்துடன் போராடி, இரத்தம் சிந்தி மடிந்தனர்.

அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் தலைமை அமைச்சராக இருந்தார். என் உயிர் நண்பர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் இராணுவ அமைச்சராக இருந்தார்.

இன்றைக்கு உள்ள நிலைமை என்ன?

பாரதிய ஜனதா அரசு இன்று கொண்டுவந்துள்ள மசோதா, காஷ்மீர் மக்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டிவிட்டது. இங்கே சற்று நேரத்துக்கு முன் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் நாசீர் அகமது லவாய், அரசியல் சட்டத்தைக் கிழித்து எறிந்தார். பா.ஜ.க. உறுப்பினர் அவரைத் தாக்கினர். நாசீர் அகமதுவை மாநிலங்கள் அவை காவலர்கள் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியே கொண்டு சென்றனர். இந்தப் பிரச்சனையில் அவர் இந்திய அரசியல் சட்டத்தை இங்கே தீ வைத்துக் கொளுத்தியிருந்தாலும் முதல் ஆளாக வரவேற்றிருப்பேன். நான் இந்திய அரசியல் சட்டத்தின் இந்தி மொழிப் பிரிவை தீயிட்டுக் கொளுத்தியவன்.

நண்பர் சிதம்பரம் காங்கிரஸ் உள்துறை அமைச்சராக இருந்தபோது, “தி.மு.க.வினர் கோழைகள், அரசியல் சட்ட வாசகத்தை தாளில் எழுதித்தான் கொளுத்தினோம் என்று நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தந்தவர்கள்” என்றார்.

நான் குறுக்கிட்டுப் பேசினேன், “இல்லை. நான் அரசியல் சட்டத்தைத் தீ வைத்துக் கொளுத்தினேன் என்று நீதிமன்றத்திலேயே பிரமாண வாக்குமூலம் தந்தேன். அதனையே இதே மன்றத்திலும் சொன்னேன். என் எம்.பி. பதவி பறிக்கப்பட்டாலும் கவலை இல்லை” என்று சொன்னேன்.

இன்றைக்கு நாசீர் அகமதுவை தூக்கி எறிந்தீர்களே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இலட்சக்கணக்கான இசுலாமிய இளைஞர்கள் எரிமலையின் சீற்றமாகக் கிளம்பிவிட்டார்கள். அவர்களை எங்கே தூக்கி எறிவீர்கள். இரண்டு இலட்சம் படையினரைக் காஷ்மீர் பள்ளத்தாக்கில் குவித்தபோதே நான் மனம் பதறினேன்.

ஒரு பக்கம் ஆப்கானிஸ்தானத்தில் தலிபான்கள், மறுபக்கம் பாகிஸ்தனில் அல்கொய்தா அமைப்பினர், ஒரு பக்கம் நம் மீது வெறுப்பு கொண்டிருக்கும் செஞ்சீனா தருணம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. இனிமேல் காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாக இருக்காது, அனைத்துலக நாடுகளின் பிரச்சினையாகிவிடும். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒரு திறமையான குள்ளநரி. கொசாவோ பிரச்சினைபோல் காஷ்மீர் பிரச்சினை ஆகும். சூடான் பிரச்சினைபோல் காஷ்மீர் பிரச்சினை ஆகும். கிழக்கு தைமூர் பிரச்சினை போல் பிரச்சினை ஆகும். ஐ.நா.மன்றமும், மனித உரிமைக் கவுன்சிலும் தலையிடும்.

தலைசிறந்த நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர், மேக்பத் துன்பியல் நாடகத்தில் பின்வருமாறு சொல்வான்:- “ஆயிரம் ஆயிரம் அரேபியாவின் வாசனாதி திரவியங்களாலும், மேக்பத் சீமாட்டியின் கையைச் சுத்தப்படுத்த முடியாது.”

அதேபோலத்தான் இந்த மசோதாவைக் கொண்டுவந்தவர்களை வரலாறு மன்னிக்காது.

காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் முதல் துரோகம் செய்தது. பாரதிய ஜனதா இனி தீர்வு காணவே முடியாத கொடுமையான தவறைச் செய்துவிட்டது.

இந்த மசோதாவை அடி முதல் நுனி வரை தூக்கி எறிய வேண்டும் என்று எதிர்ப்பவன் நான். இதனால் ஏற்படப்போகும் விபரீதங்களை எண்ணி என் இதயத்தில் இரத்தக் கண்ணீர் வடிக்கிறேன். இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன்.”

வைகோ அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.



குடியரசுத் தலைவர் அவர்களின் அறிவிப்பை நிறுத்தி வைக்கவேண்டும் - மு.க.ஸ்டாலின்

"காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து - லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என்று பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றம்: ஜம்மு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு அமையும்வரை குடியரசுத் தலைவர் அவர்களின் அறிவிப்பை நிறுத்தி வைக்கவேண்டும்"

-  மு.க.ஸ்டாலின் அறிக்கை.
(தலைவர், திமுக )


காஷ்மீருக்கு, அறிஞர்களின் ஆழ்ந்த ஆலோசனைக்குப் பின்னர் இந்திய அரசமைப்புச் சட்ட ரீதியாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களின் அறிவிப்பு மூலம் ரத்து செய்திருப்பதும், “லடாக்” மற்றும் “ஜம்மு காஷ்மீர்” என்ற பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றியமைத்திருப்பதும் கண்டு,

சனி, 3 ஆகஸ்ட், 2019

அன்புள்ள சேரன் அவர்களுக்கு உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள்

அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம்!




இயக்குநர் வசந்த பாலன் தனது பெஸ்புகில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் :

உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும்.காற்றின் ரகசியப் பக்கங்களில்  இந்த செய்தி ஊடேறி  உங்களைத்தொடும் என்றே நம்புகிறேன். உங்களின் படங்களின் ரசிகனாய் சொல்கிறேன்.வித்யாகர்வத்துடன் நீங்கள் இருந்த இடம் மிக கம்பீரமானது. பருந்து பறக்கும் வானத்தின் உயரத்தில் சஞ்சரிப்பவர் நீங்கள். பாரதிகண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப் என அற்புதமான இலக்கியப்படைப்புகள்.

திரையில் இலக்கியம் செய்ய ஆசைப்பட்டு அதில் வென்று காட்டியவர் நீங்கள்.
காலத்தின் கரையான் உங்களையும் உங்கள் படங்களையும் அழித்துவிட முடியாது.இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் பாலுகேந்திராவுடன் 
ஒப்பிடக்கூடிய திரை ஆளுமை நீங்கள். பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு 
உங்களின் உயரம் தெரியாது. நீங்களும் நடிகர் சரவணனும் ஒன்று என்று தான் நினைப்பார்கள். அறியாமை என்ன செய்ய..


உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள். இயக்குனர் சங்கப் பதவியில் கௌரவக்குறைவு ஏற்பட்ட போது  உடனே அதை விட்டு வெளியேறினீர்கள். ஆகவே கலைஞன் எந்த நிலையிலும் அவனின் மேன்மையை  எந்த கீழ்மைக்கும் உட்படவிடுதல் வேண்டாம்.

ALSO READ  THIS : 
கவின், லாஸ்லியா, சாக்‌ஷியை காதல் படுத்தும் பாடு ? - ஒரு ஷைக்காலஜி ரிப்போர்ட்
ALSO READ THIS : 
கவின், லாஸ்லியா, சாக்‌ஷியை காதல் படுத்தும் பாடு ? - ஒரு ஷைக்காலஜி ரிப்போர்ட். 
ஒரு ஆணின் நினைவை பெண்களின் மனதிலிருந்து போராடிப் பிய்த்து எறிவது என்பது நடவாத காரியம். 


ALSO READ THIS: 
சாண்டி வெளியே வரும் போது அவருக்கு கண்டிப்பாக ஜெயில் காத்திருக்கிறது.



வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

கவினின் விளையாட்டு ; யாருக்கு வினையானது ?

கவினின் விளையாட்டு; யாருக்கு வினையானது ?




கவின் - சாக்‌ஷி - லாஸ்லியா ஆகியோரது முக்கோண காதல் விவகாரம் பிக்பாஸ் வீட்டில் இப்போது விஸ்வருபம் எடுத்துள்ளது. கவின் ஆரம்பித்த விளையாட்டை சாக்‌ஷி முடிக்க விடாமல் தொடர்கிறார். இது மற்ற ஹவுஸ்மேட்ஸுக்கும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் மீது தவறு ?

யாரை ஆதரிப்பது யாரை எதிர்ப்பது ? யார் மீது தவறு என்று புரியாமல் ஹவுஸ்மேட் திணறி வருகிறார்கள். தொடர்ந்து இந்த விவகாரத்தில் எழுந்து வரும் பிரச்னையால் பிக்பாஸ் வீட்டில் புயல் வீசி வருகிறது. மேலும், கடந்த வாரம் நடந்த பிரச்னைகளை மீண்டும் தட்டி எழுப்பும் வகையில் மொட்டை கடுதாசி டாஸ்க்கை வடிவமைத்தார் பிக்பாஸ். 

ஹவுஸ்மேட் பொருத்தவரை கவின் சாக்‌ஷியிடம் நெருக்கம் காட்டினார். அதை கவின் நட்பு என்ற பெயரில் காதலுக்கான அச்சாணியை அமைத்தார். அப்போது லாஸ்லியா மீது ஈர்ப்பு ஏற்பட கவின் அவர் பக்கம் சாய்ந்தார். இது சாக்‌ஷிக்கு பொறுக்கவில்லை. இவ்வாறு இருபெண்களுக்கான உணர்வுகளில் கவின் விளையாடியது உறுதியானது.

மொட்டை கடுதாசி டாஸ்க்

நேற்று வழங்கப்பட்ட மொட்டை கடுதாசி டாஸ்க்கில் கவின் மீதான கோபத்தை வெளிப்படையாகவே காட்டினார் சாக்‌ஷி. லோஸ்லியாவிடம் கவின் நெருங்கி பழகியதை மறைமுகமாக பேசினார். இதனால் கோபமடைந்த லோஸ்லியா சாக்‌ஷிக்கு எதிராக பேசினார். கவினுக்கும் தனக்கும் இருந்தது நட்பு தான். அதை தாண்டி எங்கள் இருவருக்கும் எதுவுமில்லை. இதற்கு மேல் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார் லோஸ்லியா.

இதே பிரச்னை இன்றைய நிகழ்ச்சியிலும் தொடர்கிறது. அதன்படி, சாக்‌ஷிக்கு ஆதரவாக ஹவுஸ்மேட் கவினிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதற்கு கவின், சாக்‌ஷி தன்னை வைத்து நாடகம் ஆடுகிறார். எல்லாம் முடிந்துவிட்டதாகவே பேசுகிறார். 

கவினுக்கு எதிராக ஹவுஸ்மேட் 

சாக்‌ஷிக்கு ஆதரவாக பேசிய ரேஷ்மா கவின் மற்றும் லாஸ்லியாவின் நட்பு சாக்‌ஷியின் மனம் புண்படுவதற்கு காரணம் அமைகிறது என்றார். அப்போது பேசிய சரவணன் ஒருவர் மீது அன்பாக இருந்து விட்டு பின்பு விலகி, மற்றொருவர் மீது கவனம் செல்லுத்தினால். அது சாக்‌ஷி மனம் காயபடுவது இயல்பானது தான். இது மனிதர்களுக்கு மட்டுமில்லாமல், மிருகங்களுக்கும் இந்த நிலை ஏற்படத்தான் செய்கிறது என்றார். 

இதற்கிடையில் பேசும் தர்ஷன், கமல் பேசியதை சுட்டி காட்டி ஒன்றுமில்லாமல் லோஸ்லியாவின் கையை பிடித்துக் கொண்டு தற்காக நள்ளிரவு 2 மணி வரை பேச வேண்டும் என்று கவினை பார்த்து கேட்கிறார். இதை ஆமோதிக்கும் மது, லோஸ்லியாவிடம் நள்ளிரவு 2 மணி வரை பேசும் வகையில் அப்படியென்ன நட்பு என்று ஆவேசமாக கேட்கிறார். 


லாஸ்லியாவின் மனநிலை

இப்படி ஒட்டுமொத்த பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸும் கவினுக்கு எதிராக திரும்பினர், இதுவரை கவினுடன் இருந்த சாண்டி மாஸ்டர், சரவணன் ஆகியோர் சாக்‌ஷி ஆதரித்தனர். என்பது உணர்ந்து கொள்ள முடிகிறது. லாஸ்லியாவும் சாக்‌ஷியின் நடவடிக்கையால் மிகவும் வருந்தி நிற்கிறார். பின்பு சாக்‌ஷிக்கு ஏற்பட்ட அநீதிக்கு காரணம் நான் தான். எல்லோரும் தர்மத்தின் பக்கம் நில்லுங்கள். அதனால் அபிராமியை தவிர மற்றவர் யாரும் தயவு செய்து என்னிடம் யாரும் பேசாதீர்கள், என்று கூறி வெளியேறினார்.

அர்த்தமற்ற விளையாட்டு

கடைசியாக் பேசும் கவின், நடப்பு வாரத்தில் தான் எலிமினேட் இல்லை என்றாலும், வரும் வாரத்தில் அனைவரும் தன்னை நாமினேட் செய்ய வேண்டும் 7 வாரங்கள் இருக்க வேண்டும் என்ற முடிவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன். அதன்படி இருந்துவிட்டேன். இதனால் என் கடன்கள் அனைத்தும் அடைந்துவிடும். அதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற எனக்கு உதவுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.



அர்த்தமற்ற விளையாட்டால் காயபட்டது மூன்று மனங்கள் மட்டுமல்ல, அவர்கள் குடும்பங்களும் தான். காதலுக்கும் நட்புக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கம் சொல்லி விளங்க வைப்பது எளிதல்ல.கவின் விளையாட்டாக ஆரம்பித்து யாருக்கு வினையாகும் என்பது வரும் நாட்களில் தெரியும்.


ALSO READ THIS



ALSO READ THIS: 
கவின், லாஸ்லியா, சாக்‌ஷியை காதல் படுத்தும் பாடு ? - ஒரு ஷைக்காலஜி ரிப்போர்ட்



மதுவுக்கும் , சேரனுக்கும் அநீதி இழைத்த கமல்ஹாசன்


வியாழன், 1 ஆகஸ்ட், 2019

புவியியல் பாகம் 1

புவியியல் பாகம் 1

  • எல்லாக் கோள்களும் சூரியனை எந்த பாதையில் சுற்றி வருகின்றன ? - நீள்வட்டப்பாதை
  • குறுங்கோள்களின் பாதை - செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே
  • தொலைநோக்கியில் மட்டுமே புலப்படும் கோள் ? - யுரேனஸ்
  • பூமியின் அச்சு எத்தனை டிகிரி சாய்ந்துள்ளது - 23 ½
  • பூமி தன்னைத் தானே சுற்றிவதால் ஏற்படும் விளைவு - இரவு பகல் மாற்றம்

கவின், லாஸ்லியா, சாக்‌ஷியை காதல் படுத்தும் பாடு ? - ஒரு ஷைக்காலஜி ரிப்போர்ட்

கவின், லாஸ்லியா, சாக்‌ஷியை காதல் படுத்தும் பாடு ?
ஒரு ஷைக்காலஜி ரிப்போர்ட்


ஒரு ஆண் என்னை ஒரு வாரமாக தினமும் பின் தொடர்கிறான் .


பஸ்ஸில் ஒரு ஆண் என்னை தினமும் பின் தொடர்கிறான். அவன் முகம் என் மனதில் அப்படியே ஒட்டிக்கொண்டுவிட்டது. கல்லூரி தேர்வு நேரம் இது. படிப்பதற்காகப் புத்தகங்களைத் திறந்தால், அந்தப் அவனின் முகமே வந்துவந்து என்னைத் தொந்தரவு செய்கிறது. அவன் முகம் தரும் சந்தோஷம் ஒருபுறம், அவன் என்னை பின் தொடர்வதால் வரும் கோபம் மறுபுறம். இரண்டும் சேர்ந்து வறுத்தெடுக்கின்றன. நான் அவனை காதலிக்கிறேனா ? 

ஒரு வாரத்தில் யாரோ ஒருத்தன் நினைவு பெண்னின் மனதிற்கு சந்தோஷம் தர முடியும். துக்கத்தை தர முடியும். என்றால் சாக்‌ஷியும், லாஸ்லியாவும் அப்படி தான் கவினால் பாதித்து உள்ளனர். காதல் எப்போதும் உங்களுக்குள்தான் இருக்கிறது. அதைத்  தூண்டி உயிர்ப்பிக்கும் சக்தியை வெளியில் ஆணின் கையிலோ ஒப்படைத்துவிட்டீர்கள். அதனால், அவனின் செயல் உங்களை சந்தோஷம் அல்லது காயப்படுத்தும்.

ஒரு ஆணின் நினைவை பெண்களின் மனதிலிருந்து போராடிப் பிய்த்து எறிவது என்பது நடவாத காரியம். அப்படி முயற்சி செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால், அதுவே உங்கள் முழுநேர வேலையாக ஆகிவிடும்.


சாக்‌ஷியின்  நிலைமை இப்ப அப்படி தான் இருக்கும். கவினுடன் பேசும் போதும், காதலாக உறவாடும் போதும், கோபமாக பேசும் போதும். தான் மனம் போன பொக்கில் நடந்து வருகிறார். சாக்‌ஷி இவ்வாறு நடந்து கொள்வதை கவினும் அறிந்து வைத்துள்ளார். அதனால் தான் அவரிடம் வெளிப்படையாகவே விலகுவது போல இருந்து வருகிறார் கவின். இதை உணர்ந்து கொண்டே சாக்‌ஷி, தற்போது லாஸ்லியா பக்கம் திரும்பியுள்ளார்.

கவின் தன்னை புறக்கணிக்க லாஸ்லியா தான் காரணம் என்று சாக்‌ஷி  நினைகிறார். கவின் மற்றும் லாஸ்லியா பேசும் போது சாக்‌ஷி  தன்னை அறியாமல் கோபம், வருத்தம் அடைகிறார். பின்பு கவினுடன் சமாதானம் அடைந்தாலும் அதனை தக்க வைத்து கொள்ள முடியவில்லை.



காதலிக்கும் ஆண்களுக்கு தெரியும். தன் காதலி காலையில் “ நீ தான் எனக்கு எல்லாம் “ என்பார்கள் ஆனால் மாலையில் “ நீ எனக்கு எதுவும் இல்லை ” என்னிடம் பேசதே என்பார்கள், மறுநாள் வந்து இரவு ஏன் பேசவில்லை என்பாள். இந்த உளவியல் ஏமாற்று தனத்தில். உடல் தொடர்பில் நடக்கும் அத்தனை வேதியல் மாற்றங்களும்  மூளையில் நடக்கும்  நாடகத்தில்  எந்தவிதமான விளக்கமும் கூற தேவையில்லை.

ALSO READ













விஜய் சேதுபதி கூறியதால், நான் இங்கே நிகழ்ச்சிக்கு வந்தேன். மனம் திறந்த சேரன்

விஜய் சேதுபதி கூறியதால், நான் இங்கே நிகழ்ச்சிக்கு வந்தேன். மனம் திறந்த சேரன்

பிக்பாஸ் நேற்றுபோட்டியாளர்களுக்கு மொட்டை கடுதாசி டாஸ்க்கை வழங்குகிறார்.  ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸுக்கும் மொட்டைக் கடுதாசி கிடைக்கிறது. அதில் சேரன் தனக்கான கடிதத்தை பிரித்து படித்தார்.

அதை தொடர்ந்து சேரனிடம் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கான காரணம் அடங்கிய கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர்,  நான் பெயர், புகழ், விருதுகள் பல வாங்கியிருந்தாலும், இறுதியாக நான் சுவைத்த வெற்றி என்பது ஆட்டோகிராஃப் தான். அதன் பிறகு ஒவ்வொன்றும் போராடி நான் சினிமா பயணத்தை ஓட்டினேன். தொடர்ந்து எல்லாம் தோல்வி படம் தான். இதனால் 4 வருடங்களாக சினிமாவில் நான் இல்லை சினிமவை தவிற வேறு எதுவும் எனக்கு தெரியாது. 

விஜய் சேதுபதி கூறியதால், நான் இங்கே நிகழ்ச்சிக்கு வந்தேன்.

நடிகர் விஜய் சேதுபதி தான் என்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகும்படி சொன்னார். ‘பட்டி தொட்டி முதல் வெளிநாடுகள் வரை பல கோடி மக்கள் பார்க்கும் இந்நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மக்களுடனான தொடர்பை நெருக்கப்படுத்திக் கொள்ள முடியும் என்று ஆலோசனை கூறினார்.

மேலும் சேரன் கூறியதாவது என் வாழ்க்கையில் ஆரம்பக்கட்டம் முதல், சினிமா எடுத்தது, சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள், கடன், என பல்வேறு அனுபவங்களை வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. அந்த அனுபவத்தை மக்கள் முன்னிலையில் கூறும் போது அது அவர்களுக்கு பாடமாக அமையும் எனக் கூறி விஜய் சேதுபதி தான் இந்நிகழ்ச்சி போகச் சொன்னார்.

விஜய் சேதுபதி, சேரன் கூட்டணி 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் கையில் ஏகப்பட்ட படங்கள் உள்ளன. விஜய் சேதுபதி , சேரன் இருவரும் இணைந்து நிச்சயம் படம் திரைப்படம் ஒன்றை உருவாக்குவோம் என்று கூறியிருந்தார்கள். என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க