வெள்ளி, 8 மே, 2020

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும் - எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா



இந்தியாவில் மே 17-ம் தேதி வரையிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,800 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மற்றும் தமிழகத்தில் மட்டும் கொரோனா பலி எண்ணிக்கை 41 உயர்ந்து உள்ளது

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் எச்சரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகத்தின் மாதிரியை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அதன்படி பார்த்தால் இந்தியாவில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும் எனத் தெரிகிறது.


அதேசமயம், கொரோனா பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பதை தற்போதே கணித்துக் கூற முடியாது. கொரோனா தொற்றின் வீரியம் இதே அளவு இருக்குமா அல்லது மாற்றம் இருக்குமா என்பதையும் இப்போதே கூற முடியாது” எனத் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக