வியாழன், 7 மே, 2020

மத்திய அரசிடம் நிதி கேட்க முதுகெலும்பு இல்லாமல், மதுக்கடைகளைத் திறப்பது சரியுமல்ல; முறையுமல்ல! - மு.க.ஸ்டாலின்


கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்து விட்ட 
அ.தி.மு.க. அரசைக் கண்டிக்கிறோம் 
தமிழக மக்கள் எழுப்பிய முழக்கங்களின் பேரொலி - மு.க.ஸ்டாலின் 

கொரோனா தடுப்பில் அலட்சியமும், மதுக்கடைகளைத் திறப்பதில் ஆர்வமும் கொண்ட அ.தி.மு.க. அரசைக் கண்டிக்கும் போராட்டம் சமூகப் எனக்கு போராட்டம் என்பதால் மக்களும் கருப்புச் சின்னம் அணிந்து எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள். 'கொரோனா தமிழகத்துக்குள் வராது', 'ஒருவருக்கு வந்தாலும் காப்பாற்றி விடுவோம் என்ற முதல்வர் 'பணக்கார வியாதி', 'மூன்றே நாட்களில் மாயமாகிவிடும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால்தான் பரவியது' என்று சொல்லிவிட்டு இப்போது, 'மக்கள் அதிகமாக இருக்கிறார்கள்' என்கிறார், நாடு, நகரம் என்று இருந்தால் மக்கள் வாழத்தான் செய்வார்கள்.அரசாங்கம்தானே அவர்களின் அரண்?

ஆக்கப்பூர்வமாக திட்டமிட்டிருந்தால் கோயம்பேடு சந்தையிலிருந்து பரவலைத் தடுத்திருக்கலாம். கையாலாகாத அரசு நித்தமும் ஒரு காரணம் கூறி தன்னை மட்டும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. தினமும் தொற்று, மரண எண்ணிக்கையை வெளியிடும்போது அரசாங்கத்துக்கு குற்றவுணர்ச்சி இருக்க வேண்டும். கிரிக்கெட்'ஸ்கோர்' சொல்வது போல பழக்கமாக மாறி விடக்கூடாது

ஊரடங்கு காலத்திலும் பெட்ரோல், டீசலுக்கு வரி உயர்வு; துறைரீதியான கொள்ளைகள்; ரேப்பிட் கிட் வாங்கியதிலும் ஊழல்; உச்சமாக, மதுபானக் கடைகளைத் திறப்பதில் ஆர்வம். யாரும் பட்டினியால் வரவில்லை' என்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அவருக்கு ஒரு சவால் - 'பசித்திருப்பவர்கள் தகவல் தாருங்கள்' என்று பொதுத் தொலைபேசி எண் ஒன்றை அறிவிக்க முடியுமா?ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ரூ.5000 வழங்குங்கள். இதற்கு ரூ.3850 கோடி மட்டுமே செலவாகும். முதல்வருக்கு நெருக்கமான செய்யாதுரைக்குத் தரப்பட்ட காண்ட்ராக்ட் தொகையைவிட குறைவுதான்!

எதைக் கேட்டாலும் நிதி நிலைமையைக் காரணம் காட்டும் அரசு, நிதி ஆதாரங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும், O பொருளாதாரத்தை மீட்க வழி தெரியாத அரசுக்கு ஒரே வழியாக மதுக்கடைகள் மட்டுமே தெரிவது அவமானம்!

மத்திய அரசிடம் நிதி கேட்க முதுகெலும்பு இல்லாமல், மதுக்கடைகளைத் திறப்பது சரியுமல்ல; முறையுமல்ல! இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி போராட்டம் நடத்தி உள்ளோம். இது எச்சரிக்கை போராட்டம். அரசின் மூடிய விழிகளை திறக்கும் போராட்டம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக