புதன், 26 ஆகஸ்ட், 2020

கொள்கை அளவில் நீட் தேர்வை ஏற்காத தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. பழனிசாமி மட்டும் மவுனம் சாதிப்பது ஏன்? - மு.க.ஸ்டாலின்



நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கக் கோரி, சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களின் கதி என்ன என்பது குறித்து இப்போதாவது தமிழக மக்களுக்கு முதலமைச்சர் திரு. பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும்!

நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், கொள்கை அளவில் நீட் தேர்வை ஏற்காத தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. பழனிசாமி மட்டும் மவுனம் சாதிப்பது ஏன்?

நீட்  தேர்வு விவகாரத் தோல்வியை மூடிமறைக்க, கடந்த ஜூலை மாதம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றிய  அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடவடிக்கை எடுக்காமல் குறட்டை விட்டது ஏன்?

பல்லாயிரம் கோடி டெண்டர், கொள்முதல் விவகாரங்களில் மாவட்டம் தோறும் ஓடோடிச் சென்று காட்டும் அக்கறையில் கோடியில் ஒரு பங்கையேனும் மாணவர்கள் நலனில் காண்பிக்க முதலமைச்சர் பழனிசாமி முன்வர வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக