சனி, 15 ஆகஸ்ட், 2020

பரிபூரண சுதந்திரமும், உண்மையான சமத்துவமும், சகோதரத்துவமும் செயலளவில் மலர சபதமேற்போம்! - டாக்டர் K. கிருஷ்ணசாமி


பரிபூரண சுதந்திரமும், உண்மையான சமத்துவமும், சகோதரத்துவமும் செயலளவில் மலர சபதமேற்போம்! - DR.K. கிருஷ்ணசாமி

74-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியத் திருநாட்டின் கோடான கோடி மக்களுக்கு எனது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

600 ஆண்டுகாலம் முகலாயர்களின் பிடியிலும், 200 ஆண்டுகாலம் ஆங்கிலேயர்களின் பிடியிலும் இந்திய தேசம் அடிமைத்தனத்தில் கட்டுண்டு கிடந்தது. 1947-ஆகஸ்ட்-14 அன்று நள்ளிரவில் (ஆகஸ்ட்-15) ஆங்கிலேயர்கள் ஆட்சி அதிகாரத்தை இந்தியர்களிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினார்கள். ஆனால், அந்த அதிகாரம் இன்னும் அனைவருக்கும் வந்து சேரவில்லை. 800 ஆண்டு காலத்திற்கு மேலாக ஆண்டு கொண்டிருந்தவர்களின் தாக்கங்களில் இருந்து நாம் முற்றாக இன்னும் விடுதலையாகவில்லை. 

இல்லாமையும், கல்லாமையும் இந்திய மக்களைத் துரத்துகிறது. ஊழலும், ஒடுக்குமுறைகளும், சுரண்டலும், அடாவடித்தனங்களும், ஆதிக்கங்களும் பல்வேறு வழிகளில் இந்திய சமுதாயத்தை இன்னும் அழுத்திக் கொண்டிருக்கின்றன. உள்ளும், புறமும் பல அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் வென்று சுதந்திரத்தின்  உண்மையான நோக்கங்களான பரிபூரண சுதந்திரம், உண்மையான சமத்துவமும், சகோதரத்துவமும் செயலளவில் மலர இந்த மகத்தான சுதந்திர தின நன்னாளில் சபதமேற்போம். 

 ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் இந்திய சிறைகளிலும், 2500 மைல்களுக்கு அப்பால் உள்ள அந்தமான் சிறையிலும் அடைக்கப்பட்டு தங்களுடைய வாழ்வை அர்ப்பணித்தோர், தூக்குக் கயிற்றை முத்தமிட்டோர், துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானோர், தங்களது சொத்து, சுகங்களை முற்றாக இழந்து தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஆயிரமாயிரம் சுதந்திர போராட்ட தியாக தீபங்களுக்கும் என்றென்றும் நன்றிக்கடனாக இருப்போம், அவர்களை நினைவு கூறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக