சனி, 29 ஆகஸ்ட், 2020

விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, அரசு சம்பா தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்



விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, அரசு சம்பா தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் த.மா.கா கோரிக்கை.

இயற்கையின் கருணையால் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்து மேட்டூர் நீர் மட்டம் குறிப்பிட்ட அளவில் உயந்துள்ளது,  டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இதனால் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது விவசாயிகள் அனைவரும் சம்பா சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். 

இந்த நடப்பாண்டில் காலதாமதம் இல்லாமல், நீண்ட கால ரகங்களை பயிரிட்டால் அவை வளர்ந்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழைக்கு தாக்குப்பிடித்து செழுமையாக வளர்ந்து நிற்கும். 

அறுவடையின் போது ஆதாயம் தரும். ஆதனால் வேளாண்துறையினர் சாகுபடிக்கு தேவையான, வேளாண் இடுபொருள்களையும், விதைகளையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். 

அதோடு விவசாயிகளுக்கு தேவையான பொருள்களை அரசு மானியம் விலையில் அளிக்க வேண்டும். சம்பா பயிர்கள் காலநேரத்தில் பயிரிடுவதால், முடிந்தவுடன், நெல்லை விட அதிக வருமானத்தை ஈட்டித்தரும் உளுந்து, பயறு, எள்ளு போன்றவைகளை பயிரிட முடியும். 

தற்பொழுது தமிழகத்தில் 10.5 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்ய வாய்ப்பு கனிந்துள்ளது.  ஆகவே உடனடியாக சம்பா சாகுபடிக்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக அரசு சம்பா தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். 

இந்த அறிவிப்பால் பல லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவர். விவசாயம் செழிக்கும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக