வியாழன், 28 ஜனவரி, 2021

விவசாயிகளை அழைத்துப் பேசாத பிரதமர் - அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாத முதலமைச்சர்; அரசு ஊழியர்கள் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் நடத்தும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு.- மு.க.ஸ்டாலின்

 "விவசாயிகளை அழைத்துப் பேசாத பிரதமர் - அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாத முதலமைச்சர்;

அரசு ஊழியர்கள் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் நடத்தும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு" -   மு.க.ஸ்டாலின் உரை.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மையத்தின் சார்பில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்று சில கருத்துகளைச் சொல்வதற்கு வாய்ப்பளித்த அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வழக்கமான மாநாடாக இல்லாமல், போராட்டத்துக்கான ஆயத்த மாநாடாக இதனைக் கூட்டி இருக்கிறீர்கள்.

புதன், 27 ஜனவரி, 2021

மத்தியில் நடைபெறும் மோடி ஆட்சிக்கு எதிராகவும், தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராகவும் தமிழக மக்கள் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள்.- கே.எஸ்.அழகிரி


தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தை அ.தி.மு.க. அரசு ரூபாய் 50 கோடி செலவில் அமைத்து, வருகிற ஜனவரி 27 அன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்க இருக்கிறார் என்று செய்தி வெளிவந்துள்ளது. பிரதமர் மோடியை பலமுறை வலியுறுத்தியும், திறப்பு விழாவிற்கு வருகைதர அவர் தயாராக இல்லை. கூட்டணி பேரம் படியாத நிலையில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி மறுத்து விட்டார். 

திங்கள், 25 ஜனவரி, 2021

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அரசாணை வெளியிட்டு இருப்பது சமூக நீதிக்கு எதிரானது.- தி.வேல்முருகன்


 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அரசாணை வெளியிட்டு இருப்பது சமூக நீதிக்கு எதிரானது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. 

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மாநில அரசு நடத்தும் 'செட் தேர்வு, தேசிய தேர்வு முகமை நடத்தும் 'நெட் தேர்வு ஆகியவற்றில் தகுதி பெற்றவர்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. 

குடியரசு தினத்தில் நடைபெற வேண்டிய கிராமசபை கூட்டங்களை ரத்துசெய்து - உள்ளாட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டும் நெறித்திருக்கும் அதிமுக அரசு.- மு.க.ஸ்டாலின்


 "குடியரசு தினத்தில் நடைபெற வேண்டிய கிராமசபை கூட்டங்களை ரத்துசெய்து - உள்ளாட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டும் நெறித்திருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம்" -  மு.க.ஸ்டாலின்.

குடியரசு தினத்தன்று நடைபெற வேண்டிய கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்து உள்ளாட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டுமொருமுறை நெறித்திருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கும் - தமிழ்நாட்டில் விவசாயிகள் நடத்தும் பேரணி மற்றும் ஒன்று கூடல்களுக்கும் திமுக முழு ஆதரவு


 "குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கும் - தமிழ்நாட்டில் விவசாயிகள் நடத்தும் பேரணி மற்றும் ஒன்று கூடல்களுக்கும் திமுக முழு ஆதரவு" -  மு.க.ஸ்டாலின்.

இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ஏறத்தாழ இரண்டு மாதங்களாகத் தலைநகர் டெல்லியில் முகாமிட்டு உறுதியுடன் போராடி வருகிறார்கள் விவசாயப் பெருங்குடி மக்கள். நாட்டின் திறன் காட்டும் வகையிலான அணிவகுப்பு நடைபெறும் குடியரசு நன்னாளில், நாட்டின் உயிர்நாடியான விவசாயிகள், தங்கள் வாழ்வுரிமைக்காக நடத்தும் டிராக்டர் அணிவகுப்பு அமைதியான முறையிலும் வெற்றிகரமாகவும் நடைபெற்றிட திராவிட முன்னேற்றக் கழகம் முழுமையான ஆதரவினை வழங்குகிறது.

தெற்காசியாவில் வலிமை வாய்ந்த நாடாகவும், ஈழத்தமிழர்களுக்கு தந்தை நாடாகவும் திகழும் இந்தியா இந்த விஷயத்தில் அமைதி காக்கக் கூடாது.- DR.S.ராமதாஸ்


இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக பன்னாட்டு பொறிமுறை : ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தக் கோரி பேரவையில் தீர்மானம்! DR.S.ராமதாஸ்

இலங்கையில் நடத்தப்பட்ட ஈழத்தமிழர் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு காரணமான குற்றவாளிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டிக்கப்படாத நிலையில், அவர்களை பன்னாட்டு சட்டங்களின் முன் நிறுத்த மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கான முன்னெடுப்புகளை  மேற்கொள்ள வேண்டிய இந்திய அரசு அதற்கான தார்மீகக் கடமையிலிருந்து தவறிவிடக் கூடாது.

சனி, 23 ஜனவரி, 2021

கொரோனா எதிர்ப்பு பணியில் மக்களை பாதுகாத்த தூய்மைப் பணியாளர்களை சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்வதா? - கே.பாலகிருஷ்ணன்


 கொரோனா எதிர்ப்பு பணியில் மக்களை பாதுகாத்த தூய்மைப் பணியாளர்களை சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்வதா? உடனடியாக அனைவருக்கும் வேலை வழங்க - சிபிஐ (எம்) வலியுறுத்தல்

சென்னை, மாநகராட்சி கடந்த 11 ம் தேதி பத்தாண்டுகளுக்கும் மேலாக வேலை செய்துவந்த NULM ஒப்பந்த தொழிலாளர்கள் 710 பேரை எந்தவித முன்னறிவிப்புமின்றி சட்ட விரோதமாக வேலையை விட்டு நீக்கியுள்ளது. கொரோனா நோய்த் தொற்று எதிர்ப்பு பணியில் தங்களின் உயிரை பணயம் வைத்து மக்களை பாதுகாத்த இவர்களை சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்துள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் மோசமான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மத்திய பா.ஜ.க அரசின் இத்தகைய சமூகநீதிக்கு எதிரான போக்கைத் தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது. - கே.எஸ்.அழகிரி


 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 10 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்தான் மத்திய அரசு இத்தகைய மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது. 

இனியும் காலம் தாழ்த்தாமல் தேர்தலைக் கருதியேனும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்குமாறு குடியரசுத் தலைவருக்கு மத்திய உள்துறை விரைந்து பரிந்துரை வழங்கிட வேண்டும்.- தி.வேல்முருகன்


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில்  வலியுறுத்துகிறேன். விடுதலை செய்யும் அதிகாரம்  குடியரசுத்தலைவருக்கே இருப்பதாகக் கூறி காலம் கடத்துவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். 

தொடர்மழையால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 நிவாரணம் வழங்குக! - DR.K.கிருஷ்ணசாமி

தொடர்மழையால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 நிவாரணம் வழங்குக!
தமிழக அரசுக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் – தலைவர்
டாக்டர்.K.கிருஷ்ணசாமி அவர்கள் வேண்டுகோள்!!

தமிழகத்தில் அண்மையில் பெய்த தொடர்மழையின் காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட உளுந்து, பாசிப்பயிறு, கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட மானாவாரித் தானியப் பயிர்களும், தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற காய்கறிகள், பருத்தி நெல், வாழை உள்ளிட்ட நன்செய் நிலப் பயிர்களும் முற்றாக நிலத்திலேயே  அழுகிப்போய், விவசாயிகளுக்கு மிகப்பெரிய அளவில் நட்டம் ஏற்பட்டிருக்கிறது. மானாவாரிப் பயிர்களானாலும், நன்செய் நிலப் பயிர்களானாலும் ஏக்கருக்கு குறைந்தது ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை செலவு செய்தே பயிரிடப்பட்டுள்ளன. அறுவடைக்குத் தயாரான நிலையில், தானியங்கள் கழனியிலேயே முளைத்துப் போய்விட்டன. ஓரிரு சதவீத தானியம் கூட வீடு வந்து சேராத நிலை. ஆடுகள், மாடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடை உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. பல பகுதிகளில் ஏழை, எளிய மக்களின் வீடுகள் தகர்ந்து போயுள்ளன. விவசாயத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் பாதிப்படைந்துள்ளனர். 

குஜராத்தைப் பார்... மராட்டியத்தைப் பார்! பாட்டாளி இளைஞனே.... இட ஒதுக்கீட்டுக்காக நீ என்ன செய்யப்போகிறாய்? - DR.S.ராமதாஸ்



குஜராத்தைப் பார்... மராட்டியத்தைப் பார்!
பாட்டாளி இளைஞனே....
இட ஒதுக்கீட்டுக்காக நீ என்ன செய்யப்போகிறாய்?

சமூகத்தின் அடித்தட்டில் கிடக்கும் ஒரு சமுதாயத்தை முன்னேற்றுவதற்கான கருவிகள் கல்வியும், வேலைவாய்ப்பும் தான். கல்வியும், வேலைவாய்ப்பும் கிடைக்காததால் தான் பெரும்பான்மையான சாதிகள் சமூகத்தில் பின்தங்கிக் கிடக்கின்றன. அவற்றை எட்டிப் பிடிப்பதற்கான ஏணி தான் இட ஒதுக்கீடு ஆகும். இட ஒதுக்கீட்டின் மூலமாகத் தான் சமூகங்களுக்கு நீதி வழங்க முடியும்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க., தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை பெறுவதற்காக நாட்டின் பாதுகாப்பு சம்மந்தமான ரகசியங்களை ஒரு தனியார் தொலைக்காட்சியின் சுயலாபத்திற்காக சமரசம் செய்து கொண்டது.- கே.எஸ்.அழகிரி

 கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி ரிபப்ளிக் தொலைக்காட்சி ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது. அதில், 'இன்னும் 3 நாட்களில் பாகிஸ்தான் மீது மிகப்பெரிய தாக்குதலை இந்திய ராணுவம் நிகழ்த்த இருப்பதாக கூறப்பட்டிருந்தது'. இந்த செய்தியை ரிபப்ளிக் தொலைக்காட்சி   தொடர்ந்து ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தி டி.ஆர்.பி. ரேட்டிங்கை பலமடங்கு கூட்டி உச்சத்திற்கு கொண்டு சென்றது. இதன்மூலம் விளம்பர வருவாயை அள்ளிக் குவித்தது. அந்த தொலைக்காட்சி வெளியிட்ட அறிவிப்பின்படி உண்மையாகவே தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள பாலக்கோட்டில் அமைந்திருந்த பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை தாக்கி, தகர்த்தது. அப்போது இந்த தாக்குதல் குறித்து மிகப்பெரிய வெற்றியாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. கொண்டாடி மகிழ்ந்தது. 

புதன், 20 ஜனவரி, 2021

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரிய ஓ. பன்னீர்செல்வம் - நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் 8 முறை விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகாதது ஏன்? - மு.க.ஸ்டாலின்


“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரிய ஓ. பன்னீர்செல்வம் - நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் 8 முறை விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகாதது ஏன்?”

 -  மு.க.ஸ்டாலின் கேள்வி.

தி.மு.க.வைப் பொறுத்தவரைக்கும் ஆட்சியில் இல்லை. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நேரத்தில், ஆட்சியில் இருப்பது போல மக்களுக்கு பணியாற்றி கொண்டிருக்கிறோம்; தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு உதாரணத்தை சொல்ல விரும்புகிறேன். கொரோனா என்ற கொடிய நோய் வந்தது. இன்னும் போகவில்லை. உயிரையே பலிவாங்க கூடிய நோய் என்பது உங்களுக்கு தெரியும். அதனால் பலரை நாம் இழந்திருக்கிறோம். நம்முடைய தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இறந்திருக்கிறார்கள்.

சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்களை இந்தியா இனியும் அனுமதிக்கக்கூடாது. இதை இந்தியாவின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகப் பார்க்க வேண்டும்.- DR.அன்புமணி ராமதாஸ்

 படகு மூழ்கி 4 மீனவர் மாயம்: சிங்களப் படை தாக்குதலுக்கு முடிவு கட்டுங்கள்! - DR.அன்புமணி ராமதாஸ்

வங்கக்கடலில் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர். சிங்களப்படையினரின் தாக்குதலில் தமிழக மீனவர்களின் படகு கவிழ்ந்து, அதிலிருந்த 4 மீனவர்கள் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலும், தாக்குதலும் கண்டிக்கத்தக்கவையாகும்.

சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் BC மற்றும் MBC மாணவர்களுக்கு உதவித்தொகை தேவை! - DR.S.ராமதாஸ்

 பாலிடெக்னிக் கல்வி: பிற்படுத்தப்பட்ட 

மாணவர்களுக்கு உதவித்தொகை தேவை! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளிலும், ஐடிஐ எனப்படும் தொழிற்பயிற்சி நிறுவனங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் நிலையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மட்டும் இந்த உதவித் தொகை வழங்கப்படவில்லை. தொழில்நுட்பக் கல்வியில் ஒரு பிரிவினருக்கு  வழங்கப்படும் உதவித் தொகை இன்னொரு பிரிவினருக்கு மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமல்ல.

செவ்வாய், 19 ஜனவரி, 2021

புதிய உச்சத்தை எட்டியுள்ள பெட்ரோல் - டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தி.வேல்முருகன்


 வரலாறு காணாத வகையில்  விண்ணை நோக்கி உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ள பெட்ரோல் - டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனை வலியுறுத்த தமிழக அரசு நெஞ்சுரத்தோடு முன்வர வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

“வெளிப்படையாக கொள்ளையடிப்பவர் வேலுமணி - வெளியில் தெரியாமல் கொள்ளையடிப்பவர் தங்கமணி” - மு.க.ஸ்டாலின் உரை


 “வெளிப்படையாக கொள்ளையடிப்பவர் வேலுமணி -  வெளியில் தெரியாமல் கொள்ளையடிப்பவர் தங்கமணி” -   மு.க.ஸ்டாலின் உரை.

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாதரை இப்போது மக்கள் கிராம சபை கூட்டத்தை நாம் நடத்தப் போகிறோம்.  கிராம சபை கூட்டத்தை நடத்த கூடாது என்று எடப்பாடி அரசு உத்தரவு போட்டது. அந்த உத்தரவு போட்டவுடன், ‘கிராம சபைக் கூட்டம்’ என்ற பெயரை நாம் மாற்றி, ‘மக்கள் கிராம சபைக் கூட்டம்’ என்று அறிவித்து அதை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இலங்கையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் உடைப்பு: இராணுவ உதவியுடன் நடவடிக்கை! - வைகோ கண்டனம்

 இலங்கையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் உடைப்பு:

இராணுவ உதவியுடன் நடவடிக்கை! - வைகோ கண்டனம்

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற குமுளமுளை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில், தமிழ் மக்கள் வழிபட்டு வந்த கிராமிய ஆதிசிவன் ஐயனார் ஆலயம்,  சூலம் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் உடைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த ஆலய சின்னங்கள் அனைத்தும் காணாமல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை இனப்படுகொலை: பன்னாட்டு பொறிமுறை கோரி ஐ.நா ஆணையத்தில் இந்தியா தீர்மானம் கொணர வேண்டும்! - DR.S.ராமதாஸ்

 இலங்கை இனப்படுகொலை: பன்னாட்டு பொறிமுறை கோரி ஐ.நா ஆணையத்தில் இந்தியா தீர்மானம் கொணர வேண்டும்! - DR.S.ராமதாஸ்

இலங்கை இறுதிப் போரின் போது தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், குற்றவாளிகளை சிங்கள அரசு தண்டிக்க வாய்ப்பே இல்லை என்பதால், அது குறித்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டும் - பன்னாட்டு பொறிமுறை அமைக்க வேண்டும் என்று ஈழத்தமிழர் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐ.நா. மனித உரிமை ஆணைய உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இக்கோரிக்கை பெரும் திருப்பமாகும்.

சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் 19-வது இடம் பிடித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி தனது தோல்விகளை மறைக்க அரசாங்க நிதியில் விளம்பரம் செய்கிறார்.- மு.க.ஸ்டாலின்


“சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் 19-வது இடம் பிடித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி தனது தோல்விகளை மறைக்க அரசாங்க நிதியில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்கிறார்” -  மு.க.ஸ்டாலின் உரை.

 விரைவில் தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி நாம் காத்திருக்கிறோம். இன்னும் நான்கு மாதங்கள்தான். தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். அந்தத் தேர்தலை நாம் எதிர்பார்ப்பதை விட, இந்த மேடையில் இருக்கக்கூடிய நாங்கள் எதிர்பார்ப்பதை விட, நீங்கள் எதிர்பார்ப்பதை விட, ஒட்டுமொத்தத் தமிழ்நாடே எதிர்பார்த்துக் காத்திருப்பது எதற்காக என்றால், தி.மு.க. உடனடியாக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக!

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

வன்னியர் இட ஒதுக்கீடு: மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் 29-ஆம் தேதி மாபெரும் மக்கள்திரள் போராட்டம்! - DR.S.ராமதாஸ்


 
வன்னியர் இட ஒதுக்கீடு: மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் 29-ஆம் தேதி மாபெரும் மக்கள்திரள் போராட்டம்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட தொடர் போராட்டங்களில் இதுவரை  5 கட்ட போராட்டங்கள் 8 நாட்களுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. சென்னையில் தொடங்கி சிறு கிராமங்கள் வரை நடத்தப்பட்ட போராட்டங்களின் வாயிலாக வன்னியர்களின் எழுச்சி அரசுக்கு துல்லியமாக தெரிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இட ஒதுக்கீடு இன்னும் அறிவிக்கப்படாதது பெரும் அநீதியாகும்.

ரயில்வே துறையை சரியான பாதையில் செலுத்துவதற்காக 20 மாநிலங்களைச் சேர்ந்த திறமையான இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.- பிரதமர் திரு நரேந்திர மோடி


 நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குஜராத் மாநிலத்தின் கெவாடியாவிற்கு எட்டு ரயில்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரயில்கள் ஒற்றுமை சிலைக்கு சீரான இணைப்பை வழங்கும்.  தபோய் – சந்தோத் அகல ரயில் பாதை, சந்தோத்- கெவாடியா புதிய அகல ரயில் பாதை, பிரதாப் நகர் – கெவாடியா மின்மயமாக்கப்பட்ட புதிய வழித்தடம், தபோய், சந்தோத், கெவாடியா பகுதிகளில் புதிய ரயில் நிலைய கட்டிடங்கள் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கிவைத்தார். குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர், மத்திய ரயில்வே அமைச்சர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படுகிற நிலையை ஆயிரம் குருமூர்த்திகள் வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.- கே.எஸ். அழகிரி


 துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் உரையாற்றிய எஸ். குருமூர்த்தி பா.ஜ.க.வுக்கு வரம்பு மீறி வக்காலத்து வாங்கிப் பேசியிருக்கிறார். பா.ஜ.க. இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் வளரும் என்று ஆருடம் கூறியிருக்கிறார். சிறையிலிருந்து வெளிவரும் சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டு தி.மு.க. கூட்டணியை வீழ்த்த வேண்டுமென்று ஆலோசனை கூறியிருக்கிறார். இதற்கு உடனே தமிழக அமைச்சர் டி. ஜெயக்குமார் கடுமையாகக் குருமூர்த்தியை விமர்சனம் செய்திருக்கிறார். அதில், 'தினகரனிடம் காசு வாங்கிக் கொண்டு பேசி வருகிறார். நாரதர் வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். அவர் தன்னை ஒரு கிங் மேக்கர் என்று பில்டப் செய்து வருகிறார்' என்று  கடுமையான தாக்குதலைத் தொடுத்திருக்கிறார். இத்தாக்குதலைத் தொடர்ந்து தமது டிவிட்டர் பக்கத்தில் குருமூர்த்தி திடீர் பல்டி அடித்து அ.ம.மு.க.வை இன்னமும் மன்னார்குடி மாபியாவாகத் தான் கருதுகிறேன் என்று கூறி தமது ஆலோசனையைத் திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறார். 

கொரோனா முன்கள போராளிகளுக்கு இந்தியா நன்றி செலுத்தும் வகையில் தடுப்பூசி வழங்குவதில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.- பிரதமர் திரு நரேந்திர மோடி


 கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டக்காலம் முழுவதும் நாட்டில் நிலவிய தன்னலமற்ற, வலிமையான மனநிலையை பிரதமர் திரு நரேந்திர மோடி வெகுவாக பாராட்டினார். தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தைக் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்த பிறகு பேசிய திரு மோடி, கடந்த வருடத்தில் இந்தியர்கள் தனி நபர்களாகவும், குடும்பமாகவும், தேசமாகவும் பல்வேறு விஷயங்களைக் கற்றறிந்து, பொறுத்துக்கொண்டதாகத் தெரிவித்தார். தலைசிறந்த தெலுங்கு கவிஞரான திரு குரஜதா வெங்கட அப்பாராவின் வரிகளை அடிக்கோடிட்ட திரு மோடி, நாம் எப்பொழுதும் பிறருக்காக தன்னலமறியாமல் செயல்பட வேண்டும் என்று கூறினார். ஒரு தேசம் என்பது வெறும் மணல், தண்ணீர் மற்றும் கற்கள் அல்ல, “மக்களாகிய நாம்” என்பதற்கு உதாரணமாக செயல்படுவதே தேசமாகும். இந்த மனநிலையுடனே இந்தியா கொரோனாவுக்கு எதிராக போராடியதாக பிரதமர் குறிப்பிட்டார்.

சனி, 16 ஜனவரி, 2021

‘Of the Youth, By the Youth, For the Youth’ என்னும் தாரக மந்திரத்தின் அடிப்படையிலான startup சூழலுக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது.- பிரதமர் திரு நரேந்திர மோடி


 பிராரம்ப் ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச உச்சிமாநாட்டில் இன்று காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்டார்ட்அப்களுடன் கலந்துரையாடினார். பிம்ஸ்டெக் நாடுகளின் அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் திரு பிரகாஷ் ஜவடேகர், திரு பியூஷ் கோயல், திரு சோம் பிரகாஷ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

கோவாவில் உள்ள ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான இல்லத்தை குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு பார்வையிட்டார்


 குடியரசு துணைத் தலைவர் ஸ்ரீ எம்.வெங்கையா நாயுடு மற்றும் அவரது மனைவி திருமதி உஷா நாயுடு ஆகியோர் போன்டாவில் உள்ள மாத்ருச்சாயா ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான அனாதை இல்லத்தை இன்று பார்வையிட்டனர். இது கோவாவின் பனாஜியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இருவரும் இங்கு வசிக்கும் பெண்கள் மற்றும் ஊழியர்களுடன் உரையாடினர். துணை ஜனாதிபதி தனது மகள் ஸ்ரீமதி தீபா வெங்கட் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் இங்கு வந்தார். திருமதி வெங்கட் ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆவார்.

ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நஷ்டஈடு வழங்கிடவும், விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும் தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்!! - கே. பாலகிருஷ்ணன்

டெல்டா மற்றும் பெரும்பகுதி மாவட்டங்களில் கனமழை

விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்!

ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நஷ்டஈடு வழங்கிடவும்,

விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும்

தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்!! - கே. பாலகிருஷ்ணன்

கடந்த ஒரு வார காலமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களான நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பெரும்பகுதியான மாவட்டங்களில் இடைவிடாமல் கொட்டித் தீர்க்கும் கனமழையினால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கிவிட்டன. மற்றும் வாழை, உளுந்து, பாசிப்பயிறு, வேர்க்கடலை உள்ளிட்ட பல வகையான பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அறுவடை இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு வழியில்லாமல் மொத்தத்தில் சுமார் 8 லட்சம் ஏக்கர் நிலங்களில் சாகுபடிகள் முழுமையாக அழிந்து விட்டன. இரண்டொரு தினங்களில் அறுவடை முடிந்து நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த விவசாயிகள் தலையில் இடி விழுந்தது போல கலங்கியுள்ளனர். அறுவடை திருநாளான பொங்கல் விழா கொண்டாட முடியாமல் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.

தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். அதற்கான செலவில் ஒரு பகுதியை மத்திய அரசிடமிருந்து பெற்று கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும்.-DR.S.ராமதாஸ்


அனைத்தையும் இழந்த விவசாயிகள்: 

பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்! - DR.S.ராமதாஸ்

பல நாட்களாக பட்டினியில் வாடிய ஒருவருக்கு கிடைத்த உணவை வாய்க்கு கொண்டு செல்லும் போது, அந்த உணவு தட்டிப் பறிக்கப்பட்டால், அவர் எந்த மனநிலையில் இருப்பாரோ, அதே மனநிலையில் தான் தமிழ்நாட்டு உழவர்கள் இன்று இருக்கிறார்கள். உழவர்களின் குறைகள் உடனடியாக களையப் படா விட்டால் அவர்கள் தங்களின் எதிர்காலத்தையே இழந்துவிடும் ஆபத்து இருப்பதை மறுக்க முடியாது.

விவசாயிகளின் விவசாயக் கடன்களை தமிழக அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.- வைகோ அறிக்கை

மழை வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நட்ட ஈடு வழங்கிட வேண்டும்! - வைகோ அறிக்கை

கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளச் சேதம் ஏற்பட்டு, விவசாய மக்களுக்கு பெரும் துயர் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு முக்கிய வேண்டுகோள்! இடைக்கால நிவாரண நிதியை விவசாயிகளுக்கு வழங்கிட போர்க்கால அடிப்படையில் செயல்படுக! - கி.வீரமணி



 தமிழ்நாடு அரசுக்கு முக்கிய வேண்டுகோள்!

தண்ணீர் வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கின - கண்ணீர் வெள்ளத்தில் விவசாயிகள் சாகின்றனர்!

இடைக்கால நிவாரண நிதியை விவசாயிகளுக்கு வழங்கிட

போர்க்கால அடிப்படையில் செயல்படுக! - கி.வீரமணி

உழவர் திருநாளான அறுவடைத் திருவிழாவாம் பொங்கல் விழா இவ்வாண்டு மகிழ்ச்சி பொங்க கொண்டாட வேண்டியதற்குப் பதிலாக, விவசாயிகள் துயரம் துடைக்கப்பட முடியாத துன்ப வெள்ளத்தில் மூழ்கி வெளியே வர முடியாமல் தவிப்பது வேதனையாக உள்ளது.

பயிர் அறுவடை செய்வதற்குத் தயாரான நிலையில், கடும் மழை எதிர்பாராமல் தொடர்ந்து பெய்த காரணத்தால், பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிட்ட விவசாயிகளின் வேதனை வார்த்தைகளால் வர்ணிக்கப்பட முடியாத மிகப்பெரிய அவலம் - பரிதாபம்!

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: கைதானோரை விடுவிக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: 
கைதானோரை விடுவிக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

வங்கக்கடலில் கச்சத்தீவை ஒட்டிய பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்களப்படையினர் கற்களை வீசித் தாக்கியதுடன், 9 மீனவர்களையும் கைது செய்திருப்பதாக வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. பன்னாட்டு விதிகளுக்கு எதிராக தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், படகுகளை சிறைப்பிடிப்பதும் கண்டிக்கத்தக்கவை.

கேரள அரசின் முன்னுதாரணத்தை பின்பற்றி மின்கட்டணம், கேளிக்கை வரி, சொத்து வரி ஆகியவற்றில் தமிழக அரசு சலுகைகள் மற்றும் கால அவகாசம் வழங்க வேண்டும்.-மு.க.ஸ்டாலின்



"கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் - கேரள அரசின் முன்னுதாரணத்தை பின்பற்றி மின்கட்டணம், கேளிக்கை வரி, சொத்து வரி ஆகியவற்றில் தமிழக அரசு சலுகைகள் மற்றும் கால அவகாசம் வழங்க வேண்டும்" -   மு.க.ஸ்டாலின் 

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு, கொரோனா பரவலின் தொடக்கத்திலிருந்தே எல்லா வகையிலும் முழு முனைப்புடன் மக்கள் நலனைக் காத்து வருவதில் தேவையான அக்கறை செலுத்தி வருகிறது. பேரிடர் காலத்தில், அனைத்துத் துறைகளும் - அனைத்துத் தொழில்களும் வருமான இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களுக்கான வரிச் சலுகைகளையும் கால அவகாசத்தையும் கேரள அரசு வழங்கி வருகிறது.

நாடு முழுதும் கொவிட்-19 தடுப்பு மருந்தை விநியோகிக்கும் பணிகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மாநில/ யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

நாடு முழுதும் கொவிட்-19 தடுப்பு மருந்தை விநியோகிக்கும் பணிகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மாநில/ யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தியது. தடுப்பு மருந்துகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் கோ-வின் (Co-WIN) மெய்ப்பொருள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

நீதியை நிலை நாட்ட தி.மு.க. சட்டத்துறை சகோதரர்கள் தங்களது பங்களிப்பை தொய்வில்லாமல், தொடர்ந்து செய்ய வேண்டும்.- மு.க.ஸ்டாலின்



"சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது”

 -  மு.க.ஸ்டாலின் உரை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை அமைப்புகளில் ஒன்றான சட்டத்துறை சார்பில் நடைபெறும் சட்டக் கருத்தரங்கம் மற்றும் அரசியல் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சட்டக் கருத்தரங்கம் - அரசியல் கருத்தரங்கம் என்று எதற்காக பிரித்துப் போட்டீர்கள் எனத் தெரியவில்லை. நீங்கள் சட்டம் பற்றி பேசினாலே - அது அரசியலைத் தவிர்த்து விட்டு இருக்க முடியாது. எனவே, அதனைப் பிரித்துச் சொல்ல வேண்டியது இல்லை.

'வக்கீலிடம் பேசும் போது ஜாக்கிரதையாக பேச வேண்டும்' என்பார்கள். ஒரு வக்கீல் அல்ல, ஆயிரக்கணக்கான வக்கீல்கள் இருக்கிறீர்கள். அதனால் மிக ஜாக்கிரதையாகப் பேச வேண்டும் என்பதை அறியாதவன் அல்ல நான்! நீங்கள் சட்ட நீதியைப் பேசுபவர்கள்! நான் சமூகநீதியைப் பேசுகிறேன்!

சனி, 9 ஜனவரி, 2021

மக்களுக்குக் கொடுக்கும் அந்த நலத்திட்ட உதவிகளைக் கூட ஆளுங்கட்சியினர் அரசியலுக்குப் பயன்படுத்தக்கூடிய நிலையில் தான் இன்றைக்கு அவர்கள் இருக்கிறார்கள்.- மு.க.ஸ்டாலின்

 "தைப்பிறந்தால் வழி பிறக்கும்; இன்னும் நான்கு மாதங்களில் வழிபிறக்கப் போகிறது" - மு.க.ஸ்டாலின் உரை.

தைத்திருநாள், அதுதான் தமிழர்களுடைய திருநாள். தமிழ்ப் புத்தாண்டாகப் பிறக்கின்ற நாள். எனவே, தலைவர் கலைஞர் அவர்கள், தை முதல்நாளைத் தமிழர் திருநாளாக, தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடிட வேண்டும் என்று நமக்கு ஆணையிட்டு, அந்த ஆணையை அரசு ஆணையாக வெளியிட்டு, அதை நாம் எழுச்சியோடு, ஏற்றத்தோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த நான்கு மாதங்களில் நமக்கு வழி பிறக்கப்போகிறது என்பதற்கு எத்தனையோ உதாரணங்களை, எத்தனையோ சான்றுகளை நம்மால் எடுத்துச் சொல்ல முடியும்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் உலக அளவில் நமது பிம்பமாக விளங்குவதுடன் சர்வதேச அரங்கில் இந்தியாவின் வளர்ச்சிக்குக் காரணமாகவும் விளங்குகிறார்கள்.- திரு ராம்நாத் கோவிந்த்


வெளிநாடுவாழ் இந்தியர்கள் உலக அளவில் நமது பிம்பமாக விளங்குவதுடன் சர்வதேச அரங்கில் இந்தியாவின் வளர்ச்சிக்குக் காரணமாகவும் விளங்குகிறார்கள். இந்தியா சம்பந்தப்பட்ட சர்வதேச விவகாரங்கள் ஆகட்டும், இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு மூலதனமோ பண பரிவர்த்தனையோ ஆகட்டும், அவர்கள் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டுகிறார்கள் என்று குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். 16-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டின் நிறைவு விழாவில் காணொலி வாயிலாக  இன்று கலந்துகொண்டு பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிப்பு! சிங்கள இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்! - தொல். திருமாவளவன்

 முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண்  இடிப்பு! 

சிங்கள இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்! 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை! - தொல். திருமாவளவன்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரும் விதமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் சிங்கள அரசால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு இருக்கிறது. சிங்கள அரசின் இந்த இனவெறித் தாக்குதலை- ஆணவப்போக்கை  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ITI படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் வேலையின்றி அவதிப்படும் நிலையில், அவர்களுக்கு வேலை வழங்க NLC நிர்வாகம் மறுப்பது கண்டிக்கத்தக்கது.- DR.S.ராமதாஸ்

என்.எல்.சியில் மண்ணின் மைந்தர்க்கு 
மட்டுமே வேலை வழங்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

ஐ.டி.ஐ. எனப்படும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் படித்து, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி) தொழில் பழகுநர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வேலை வழங்குவதை 26 ஆண்டுகளாக என்.எல்.சி நிர்வாகம் நிறுத்தி வைத்திருக்கிறது. ஐ.டி.ஐ. படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் வேலையின்றி அவதிப்படும் நிலையில், அவர்களுக்கு வேலை வழங்க என்.எல்.சி நிர்வாகம் மறுப்பது கண்டிக்கத்தக்கது.

வியாழன், 7 ஜனவரி, 2021

தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் SC பட்டியல் வெளியேற்ற கோரிக்கையில் எந்த சமரசமும் கிடையாது ! - டாக்டர் K. கிருஷ்ணசாமி



தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் SC பட்டியல் வெளியேற்ற கோரிக்கையில் எந்த சமரசமும் கிடையாது ! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

மதுரையில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை எஸ்சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பேரணி- ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அக்கட்சியின் தலைவர் டாக்டர் K. கிருஷ்ணசாமி பேசும்போது : 

புதன், 6 ஜனவரி, 2021

இறுதியான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமுன் இந்தியாவின் தடுப்பூசிகளான கோவி ஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி போடுவதுபற்றி மத்திய - மாநில அரசுகள் ஆழ்ந்து யோசிக்கவேண்டும்! - கி.வீரமணி



‘கரோனா'வுக்கு எதிரான தடுப்பூசி மருந்து - மக்கள் உயிர்க் காப்புப் பிரச்சினை!

இறுதியான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமுன் இந்தியாவின் தடுப்பூசிகளான கோவி ஷீல்டு, கோவேக்சின்  தடுப்பூசி  போடுவதுபற்றி மத்திய - மாநில அரசுகள் ஆழ்ந்து யோசிக்கவேண்டும்!

கரோனா (கோவிட்- 19) தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பு பற்றிய செய்திகள், கடந்த ஓராண்டு காலமாக அச்சத்தின் பிடியிலும், மரணத்தின் வாயிலிலும் இருந்த மனித குலத்திற்கு ஒரு புது நம்பிக்கையை அளித் திருக்கிறது.

பொள்ளாச்சி பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் வெகு சீக்கிரமாக தண்டனை பெற்றுத்தர சிபிஐ உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.-E.R.ஈஸ்வரன்


 பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டதன் மூலம் பாலியல் குற்றத்தின் பின்னணியில் அதிமுக நிர்வாகிகள் இருப்பது நிரூபணமாகியுள்ளது.

இன்னும் இதில் சம்பந்தப்பட்டுள்ள உயர் பொறுப்பில் உள்ள அதிமுக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் வெளியே தெரிந்த போதே இதன் பின்னணியில் அதிமுக நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்ற  குற்றச்சாட்டு பலராலும் முன் வைக்கப்பட்டது. ஆனால் அதிமுகவும், தமிழக அரசும்  உண்மையை வெளியுலகுக்கு தெரியாமல் மூடி மறைக்கவே முயற்சித்தது.

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தொடர்பிருக்கலாம் என அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. எனவே, இந்த விசாரணையை சிபிஐ மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.-தி.வேல்முருகன்


பொள்ளாச்சியில் இளம்பெண்களுக்கு அரங்கேறிய பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். 

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பத உச்சவரம்பின்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 மழையால் பாதிப்பு: ஈரப்பத உச்சவரம்பின்றி 

நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டின் வரலாற்றில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜனவரி மாதத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்திலும் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஏற்கனவே நிவர், புரெவி புயல்களால் வயல்களில் தேங்கிய நீர் வடியாத நிலையில் இந்த மழை உழவர்களின் துயரங்களை அதிகரித்திருக்கிறது.

திங்கள், 4 ஜனவரி, 2021

பினாமிகள் மூலம் மணலை கொள்ளையடிக்கும் அமைச்சர் காமராஜ் எனும் 'கமிஷன் ராஜை' டெல்டா மாவட்ட மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.- மு.க.ஸ்டாலின்


 இந்தியாவிலேயே முதன் முதலில் தமிழ்நாட்டில் தான், கலைஞருடைய ஆட்சிக்காலத்தில்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது என்பதை யாராலும் மறக்கவும், மறைக்கவும் முடியாது.

மறைந்த எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது, அன்றைக்கு விவசாய சங்கத் தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடு அவர்கள் தலைமையில், விவசாயிகளுக்குரிய மின்சார கட்டணத்தை ஒரு பைசா மட்டும் குறைக்க வேண்டும் என்று ஒரு போராட்டம் நடத்தினார்கள்.

முதல்வர் – அமைச்சர்கள் உள்ளிட்ட பொது ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்பாவு வழக்கு


 முதல்வர் – அமைச்சர்கள் உள்ளிட்ட பொது ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக, அரசு செயலாளரிடம் அனுமதி கேட்கும் அதிமுக அரசின் அரசாணையை எதிர்த்து, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்பாவு அவர்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு விவரம்:

உடும்பஞ்சோலை மலைப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல என மத்திய அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. - தி.வேல்முருகன்


மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா அமைந்துள்ள உடும்பஞ்சோலை மலைப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எனக் கடந்த 1987 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் தொழிற்சாலைகள் தொடங்குவதற்குத் தடை உள்ளது. 

இந்நிலையில், தமிழக எல்லையிலிருக்கும் இந்த வனப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல என்று மத்திய வனம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் புதிய அரசாணையை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.  

20% இடஒதுக்கீடு போராட்டம்: உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! நகரங்களும் நமது கோட்டை என்பதை நிரூபிப்போம்! -DR.S.ராமதாஸ்

 20% இடஒதுக்கீடு போராட்டம்: நகரங்களும் நமது கோட்டை என்பதை நிரூபிப்போம்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மடல்  என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி நாம் நடத்தி வரும் போராட்டம் முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன் திசம்பர் 1 முதல் 4-ஆம் தேதி  4 நாட்களுக்கு தொடர் போராட்டம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் திசம்பர் 14-ஆம் தேதி போராட்டம், திசம்பர் 23-ஆம் தேதி பேரூராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம், திசம்பர் 30-ஆம் தேதி ஒவ்வொரு ஒன்றியத்திலும் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகங்கள் முன் போராட்டம் என கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 கட்டங்களாக 7 நாட்கள் வன்னிய மக்களின் சமூகநீதிக்காக நாம் தீவிரமாக களமாடியிருக்கிறோம்.

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

எட்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டும் - அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் தொகுதி மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் எட்டாக்கனியாகவே உள்ளன - மு.க.ஸ்டாலின்


 “எட்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டும் - அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் தொகுதி மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் எட்டாக்கனியாகவே உள்ளன” -  மு.க.ஸ்டாலின் உரை.

இது கிராம சபைக் கூட்டம். கிராம சபைக் கூட்டம் என்றால் எடப்பாடிக்குக் கோபம் வந்துவிடும். அதனால் மக்கள் கிராம சபைக் கூட்டம் என்று இதற்கு நாம் பெயர் வைத்திருக்கிறோம். முதலில் வைத்தது கிராம சபைக் கூட்டம் தான். கடந்த 23ஆம் தேதி இந்த கிராம சபைக் கூட்டத்தைத் தொடங்கினோம். நான் காஞ்சிபுரம் பகுதியில் முதன் முதலில் தொடங்கி வைத்தேன். அடுத்ததாக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மரக்காணம் பகுதிக்குச் சென்றேன். அதற்குப் பிறகு ராணிப்பேட்டைக்குச் சென்றேன்.  இப்படி மூன்று பகுதிகளுக்குச் சென்று, இன்று காலையில் தொண்டாமுத்தூர் தொகுதிக்குச் சென்றேன்.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஊடகத்துறையினர் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது! - தி.வேல்முருகன்



 பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஊடகத்துறையினர் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது! - தி.வேல்முருகன்

உலகம் முழுவதும் 2020-ல் குறைந்தது 50 ஊடகத்துறையினர் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் ஒழுங்கமைந்த குற்றங்கள் , ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு குறித்து ஆய்வு செய்யும் போது கொலை செய்யப்பட்டதாக Reporters Without Borders என்ற செய்தி நிறுவனம் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. 

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்புகளை அம்பலப்படுத்த துணியும் ஊடகவியலாளர்கள் காட்டுமிராண்டித்தனமான கொலைகளின் இலக்குகளாகத் தொடர்கின்றனர் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

சீனத் தொடர்பா? ஐந்துக்கும் மேற்பட்டவர்களின் உயிரைப் பறித்த ஆன்லைன் கந்துவட்டி செயலிகளின் பின்னணி பற்றி விசாரணை வேண்டும்! - DR.S.ராமதாஸ்



 சீனத் தொடர்பா? கந்துவட்டி செயலிகளின் 

பின்னணி பற்றி விசாரணை வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்டவர்களின் உயிரைப் பறித்த ஆன்லைன் செயலி கந்து வட்டி நிறுவனங்களை நடத்திய சீனர்கள் இருவர் உள்ளிட்ட 4 பேரை சென்னை காவல்துறை கைது செய்திருக்கிறது. ஆன்லைன் செயலி கந்து வட்டி நிறுவனங்களின் பின்னணி தொடர்பாக வெளியாகியுள்ள முதல்கட்ட தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாகவும், அச்சமூட்டுபவையாகவும் உள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம் கருதியும், தமிழ்நாடு போராடிப் பெற்ற முல்லைப் பெரியாறு அணையின் மீதான உரிமை கருதியும் தமிழக அரசு இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது .- வைகோ

நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது

வைகோ வலியுறுத்தல்

தமிழக - கேரள எல்லையில் அமைந்திருக்கும் மதிகெட்டான் சோலை வனப்பகுதியை, கேரள அரசு  கடந்த 2003ஆம் ஆண்டுதேசியப் பூங்காவாக அறிவித்தது. சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேசியப் பூங்காவின் கிழக்கு எல்லையானது தமிழக கேரள எல்லையாகவும் உள்ளது.

தற்போது இந்தப் பூங்காவை மேலும் பாதுகாக்கும் நோக்கத்தில் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கக் கோரி கேரள அரசு அளித்த விண்ணப்பத்தை ஏற்று, மத்திய சுற்றுச்சூழல் துறை பூங்காவின் கிழக்கு எல்லையைத் தவிர்த்து 1 கிமீ தொலைவிற்கான மற்ற பகுதிகள் அனைத்தையும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவித்துள்ளது. 

வேளாண் துறையில் எதுவும் செய்யப்படவில்லை. எனவே, விவசாயிகளின் நலன் கருதி வேளாண் சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.


 

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் பொருளாதார தாராளமயமாக்கல் இருந்தபோதிலும், விவசாயத் துறை கைவிடப்பட்டது. எனவே, இந்த துறையை மேம்படுத்துவதற்கு உழவர் சார்பு சீர்திருத்தங்கள் அவசியம் என்பதை அரசாங்கம் உணர்ந்திருந்தது, அதாவது இந்தத் துறை பலத்திலிருந்து வலிமைக்குச் செல்வதைக் காணும் கொள்கைகள்.

2020 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

உள்நாட்டுப் பொருட்களை சர்வதேச அளவில் உயர்த்துவதில் மாணவர்களின் பங்கு, புதிய தசாப்தத்தில் இந்தியாவிற்கு உலகளவில் அங்கீகாரம் கிடைக்கச் செய்வது உங்களது பொறுப்பு.- நரேந்திர மோடி


 சம்பல்பூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் நிரந்தர வளாகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். ஒடிசா மாநிலத்தின் ஆளுநர் மற்றும் முதல்வர், மத்திய அமைச்சர்கள் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, திரு தர்மேந்திர பிரதான் மற்றும் திரு பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இட ஒதுக்கீட்டை சீர்குலைக்கும் இந்த சதிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பாமக இந்த நடவடிக்கையை வரவேற்கிறது. - DR.S.ராமதாஸ்



இட ஒதுக்கீட்டு முறையை சிதைக்க முயன்ற உயர்கல்வி செயலருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்: உடனடியாக மாற்ற வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டுக்கு மாறாக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு முறையை சிதைக்க முயன்றதற்காக உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா-வுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது. அபூர்வா புகுத்த முயன்ற இட ஒதுக்கீட்டு முறையை நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.  இட ஒதுக்கீட்டை சீர்குலைக்கும் இந்த சதிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பா.ம.க. இந்த நடவடிக்கையை வரவேற்கிறது.