புதன், 30 மார்ச், 2022

சுங்கச்சாவடிகளை சீரமைப்பதற்கு முன்பாக சுங்கக்கட்டணங்களை உயர்த்தக் கூடாது! - DR.அன்புமணி ராமதாஸ்

 சுங்கச்சாவடிகளை சீரமைப்பதற்கு முன்பாக

சுங்கக்கட்டணங்களை உயர்த்தக் கூடாது! - DR.அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு சொந்தமான 24 சுங்கச்சாவடிகளில் நாளை நள்ளிரவு (ஏப்ரல் 1) முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.  மக்களின் துயரங்களை உணராமல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது.

‘நீட்’ நுழைவுத் தேர்வுபற்றி ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் பார்ப்பன உயர்ஜாதியினர் வட்டாரங்களால் திட்டமிட்ட பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது! - கி.வீரமணி

 ‘நீட்’ நுழைவுத் தேர்வுபற்றி ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் பார்ப்பன உயர்ஜாதியினர் வட்டாரங்களால் திட்டமிட்ட பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது!

‘நீட்’  தேர்வு தோல்விபற்றி எதையும் கற்பனையாகக் கூறவில்லை - ஆங்கில  ஏடுகளில் வெளிவந்துள்ள ஆதாரத்தைப் பாரீர்! பாரீர்!!

வெளிநாட்டினருக்கு (என்.ஆர்.அய்.) என்ற பெயரால் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு இடங்கள்! - கி.வீரமணி

‘நீட்’ தேர்வு என்ற ‘கண்ணிவெடியை’ அகற்றவேண்டாமா?

ஏப்.3 முதல் ஏப்.25 ஆம் தேதிவரை மாநிலம் தழுவிய

எனது நீண்ட நெடிய பயணம் - தோழர்களே!

‘நீட்’ (Neet) மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு, முதல்  குரல் கொடுத்து, அனைத்திந்தியாவிற்கே, வழமைபோல் வழிகாட்டி வருகிறது.

‘நீட்’  தேர்வு, ஒன்றிய அரசின் சுகாதாரத் துறையாலும், அதன்கீழ் இயங்கும் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் என்ற அமைப்பின் ‘ஊழல்’ மன்னனாகத் திகழ்ந்தவர்மீது அமலாக்கத் துறை பாய்ந்து, அதன்பிறகு அவர்மீதான நடவடிக்கைகள் காணாமற்போய், மீண்டும் ‘‘ஹீரோவாகி’’விட்ட குஜராத்தின் கேதன் தேசாய் வழிகாட்டுதலில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

20 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட கொடுமையை நாடே அறியும்

இந்தத் திணிப்புத் தேர்வின்மூலம் ஏழை, எளிய, கிராமாந்திர, ஒடுக்கப்பட்ட சமூகங்களான எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., ஓ.பி.சி., சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டதோடு, இந்தக் கொடுமையினால் 12 ஆம் வகுப்பில் மிக அதிகமான மதிப்பெண் வாங்கியவர்கள்கூட இத்தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெற்று வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலையே நீடிக்கிறது!  பரவலான அச்சத்தின் காரணமாக செல்வி அனிதா தொடங்கி, சுமார் 20 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட கொடுமையை நாடே அறியும்.

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் பார்ப்பன உயர்ஜாதியினர் வட்டாரங்களால் திட்டமிட்ட பிரச்சாரம்

‘‘1. ‘நீட்’  தேர்வினால் மருத்துவர்களின் திறமை உயரும்

2. மருத்துவக் கல்வி எளிய முறையில் கிடைக்கும்

3. ஊழல் நடைபெறாமல் தடுக்கப்படும்.’’

- இவ்வாறெல்லாம் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் பார்ப்பன உயர்ஜாதியினர் வட்டாரங்களால் திட்டமிட்ட பிரச்சாரம் ‘‘அவாள்’’ மூலம் பரப்பப்பட்டு வருகிறது!

ஆனால், இப்பொழுது உண்மைகள் வெளிவரத் தொடங்கிவிட்டதே!

‘உண்மை ஒரு நாள் வெளியாகும் - அதில் பொய்யும் புரட்டும் பலியாகும்‘ என்று பட்டுக்கோட்டையார் பாடியது போன்று, யதார்த்தம் வெளிச்சம் போடுகிறது.

அரசமைப்புச் சட்ட விரோத, எதிர் நடவடிக்கை

கடந்த சில நாள்களாக, ஆங்கில நாளேடுகளில் வெளிவந்துள்ள செய்திகளை அறியும் எவரும் ‘நீட்’  தேர்வு எப்படி முழுத் தோல்வியில் முடிந்த மூர்க்கத்தனம்மிக்கது என்பதையும், அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை மாநிலங்களிடமிருந்தும், பல்கலைக் கழகங்களிடமிருந்து பறிக்கும் அரசமைப்புச் சட்ட விரோத, எதிர் நடவடிக்கை கொண்டதே என்பதையும் எவரும் எளிதில் புரிந்துகொள்வார்கள்.

திராவிடர் கழகமோ, தி.மு.க.வோ ‘நீட்’  தேர்வு தோல்விபற்றி எதையும் கற்பனையாகக் கூறவில்லை என்பதற்கு அனுபவங்களைப் பேசவிட்ட ஊடகங்களின் கருத்துகளை - அதே ஆங்கில  வாசகங்களை தமிழிலும் புரிந்துகொள்ளத் தந்துள்ளோம்.

அக்கிரகார தலைமைக் கட்சியின் வாதங்கள் எப்படிப்பட்ட புரட்டு என்பது புரியவில்லையா?

பா.ஜ.க. என்ற பார்ப்பனீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். என்ற அக்கிரகார தலைமைக் கட்சியின் வாதங்கள் எப்படிப்பட்ட புரட்டு என்பது இதன்மூலம் புரியவில்லையா?

நம் மக்களிடம்தான் இறையாண்மை உள்ளது; வாக்களித்து, மக்களாட்சியில் ஆட்சியாளர்களை அமர்த்துபவர்களில் பெரிதும் ஒடுக்கப்பட்ட கிராமங்களில் வாழும் ஏழை, எளிய, விவசாயத் தொழிலாளர்களே, பெண்களே - இவர்களின் பிள்ளைகள் டாக்டர்களாக ஆவதைத் தடுக்கும் இந்த ‘நீட்’  தேர்வு என்ற ‘‘கண்ணிவெடியை’’ அகற்றவேண்டாமா? அதற்குத்தான் தோழர்களே, எனது மாநிலம் தழுவிய தொடர் நெடிய பயணம் 25 நாள்களுக்கு.

‘நீட்’ தேர்வில் கடைசி இடம்பெற்ற மாணவனுக்கு- வெளிநாடுவாழ் இந்தியருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம்!

இதோ ஏடுகள் தரும் உண்மைகள்:

'டைம்ஸ் ஆப் இந்தியா', 27.3.2022

1. NEET tail-enders jump queue, grab med seats

1.  நீட் தேர்வில் வரிசையில் கடைசியாக இருக்கும் மாணவர்கள் மருத்துவ இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

2.At Pravara Institute of Medical Sciences, Loni (Maharashtra), the last management seat was filled by rank 83,817 while the last NRI seat went to rank 8,72,911. At Sri Devaraj Urs Medical College, Kolar, the last management seat was allotted to rank 86,416 and its last NRI seat to rank 8,76,357.

2. மகாராஷ்டிரா லோனி நகரில் உள்ள பிரவாரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ், மருத்துவக் கல்லூரியில், நிர்வாக ஒதுக்கீடு, நீட் தேர்வில் கடைசி ரேங்க் அதாவது 83,817 ரேங்க் பெற்ற மாணவருக்கு கிடைத்தது. இதே கல்லூரியில், வெளி நாடு வாழ் இந்தியருக்கான (என்.ஆர்.அய். கோட்டா) இடம், 8,72,911 ரேங்க் பெற்ற மாணவருக்கு தரப்பட்டுள்ளது.

கோலாரில் உள்ள சிறீ தேவராஜ் அர்ஸ் மருத்துவக் கல்லூரியில், நிர்வாக ஒதுக்கீடு 86,416 ஆவது இடத்திற்கும், என்.ஆர்.அய். கோட்டா 8,76,357 ஆவது இடத்திற்கும் ஒதுக்கப்பட்டது.

3.This scenario has played out in medical institutes across the country.

 3. இதே முறையில்தான் நாடு முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களில் நடைபெற்றுள்ளது.

4.“College agents have candidates on standby to beat the system. Those with low scores but high paying power could get seats,” Rued parents’ representative Sudha Shenoy.

4.குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலும் அதிக பணம் தருபவர்களுக்கு இடம் பெற்றுத் தர ஏஜெண்டுகள் நாடு முழுவதும் வேதனைக்குள்ளான பெற்றோர்களின் பிரதிநிதியாக சுதா ஷெனாய் கூறினார்.

'இண்டியன் எக்ஸ்பிரஸ்', 17.10.2021

NEET hasn’t created the equality of opportunity it had promised It is biased towards CBSE curriculum and gives unfair advantage to students from privileged backgrounds. Written by Sunny Jose, Satyam Sunkari

How can NEET promote parity of participation when aspiring first-generation students from marginalised and poor households participate from a highly unequal position in the first place?

நீட் தேர்வு குறித்து வாக்குறுதியளித்தபடி சமத்துவ வாய்ப்பை உருவாக்கவில்லை. இது சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திற்கு ஒரு சார்புடையது மற்றும் வசதி படைத்த பின்னணியில் உள்ள மாணவர்களுக்கு நியாயமற்ற நன்மைகளை அளிக்கிறது. சன்னி ஜோஸ், சத்யம் சுங்கரி எழுதியது!

தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்கள் முதலில் சமமற்ற நிலையில் இருந்து பங்கேற்கும்போது, நீட் எவ்வாறு சமநிலையை ஊக்குவிக்கும்?

'தி இந்து', 6.2.2022

ஆங்கில ‘இந்து’ பத்திரிக்கையில் (6.2.2022) அன்று வந்துள்ள நீட் தேர்வு குறித்த கட்டுரையிலும், பிளஸ் 2இல் 1137 மார்க் பெற்ற நட்சத்திரப்ரியா, 2017இல் நீட் எழுதத் தொடங்கி, 3 ஆண்டு கால முயற்சிக்குப் பின், 7.5% ஒதுக்கீட்டின் காரணமாக நெல்லை கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. 3 ஆண்டு காலம் வீண்.

'இண்டியா டுடே', 16, 2018

NEET: Zero marks in physics, chemistry could still get you a MBBS seat

Over 400 students with marks either in single digit or zero and negative in physics and chemistry were able to get admission into MBBS colleges in 2017.

டாக்டர் சுனில் சாண்டி, தலைமை மருத்துவ அதிகாரி, அய்டிசி சுகாதார நலம் பராமரிப்புத்துறை

(நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 29.3.2022இல் எழுதிய கட்டுரையில் இருந்து)

1.Has NEET served the purpose of its creation?

The Central government, the bureaucracy and the MCI proposed in 2012 what was considered to be the panacea to rid medical education of all its ills.

1.   நீட் அதன் உருவாக்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றியதா?

ஒன்றிய அரசு, அதிகார வர்க்கம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் ஆகியவை 2012 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்வியை அதன் அனைத்துத் தீமைகளிலிருந்தும் விடுவிப்பதற்கான ‘சஞ்சீவி' என்று முன்மொழிந்தன.

2.Tamil Nadu has taken the step of rejecting what it feels is a self-defeating formula as far as career opportunities of state aspirants are concerned. There is much truth in this assumption, confirmed also by the trends of manpower deficits in other parts of the nation.

2. மருத்துவப் படிப்பில் ஆர்வம் கொண்ட மாணவர்களின் கல்வி வாய்ப்பை பாதிக்கும் என்பதை உணர்ந்தே தமிழ்நாடு தொடர்ந்து நீட் தேர்வை நிராகரித்து வருகிறது. தமிழ்நாட்டின் அனுமானத்தில்  நிறைய உண்மை உள்ளது, இது நாட்டின் பிற பகுதிகளில் மனிதவள பற்றாக்குறையின் போக்குகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

3.What is more worrying and unfathomable for the health ministry is that NEET has tilted the results of medical education away from the public health needs of the country. In that regard, NEET has been self-defeating.

3.சுகாதார அமைச்சகத்திற்கு மிகவும் கவலையான மற்றும் புரிந்துகொள்ள முடியாத விஷயம் என்னவென்றால், மருத்துவக் கல்வியின் பயன்களை நாட்டின் பொது சுகாதாரத் தேவைகளிலிருந்து  நீட் தேர்வு சாய்த்து விட்டது. அந்த வகையில் நீட் தேர்வு தன்னைத்தானே தோற்கடித்துள்ளது.

மருத்துவத் துறைக்கு தகுதி எது?

4.That a student with 99% marks in an entrance examination without a reason-to-be is not necessarily suitable for medicine, but a rural student with 55% with a mission and motivation may be, is a fact that needs greater recognition.

4. எந்தக் காரணமும் இல்லாமல் நுழைவுத் தேர்வில் 99% மதிப்பெண்கள் பெற்ற மாணவர் மருத்துவத்துக்குத் தகுதியானவராக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் 55% மதிப்பெண் பெற்ற கிராமப்புற மாணவர் இலக்கும் ஊக்கமும் கொண்டவராக இருந்தால், மருத்துவத்துறைக்கு தகுதியானவராக முடியும் என்பது அதிக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

5.The hypothesis that merit determined by marks alone will produce the best doctors is erroneous. While a few may be, most eminent doctors in India today are not necessarily toppers

5. மதிப்பெண்களால் நிர்ணயிக்கப்படும் தகுதி மட்டுமே சிறந்த மருத்துவர்களை உருவாக்கும் என்ற கருதுகோள் தவறானது. ஒரு சிலர் இருக்கலாம் என்றாலும், இன்று இந்தியாவில் உள்ள பெரும்பாலான புகழ்பெற்ற மருத்துவர்கள் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இல்லை.

‘நீட்’: மறுஆய்வு தேவை

6.It is time to review NEET and its outcomes from the viewpoint of India’s primary health needs.

6. இந்தியாவின் முதன்மை சுகாதாரத் தேவைகளின் பார்வையில் இருந்து  நீட் மற்றும் அதன் விளைவுகளை மதிப்பாய்வு செய்ய வேண்டிய நேரம் இது.

7.Tamil Nadu has taken the step of rejecting what it feels is a self-defeating formula as far as career opportunities of state aspirants are concerned. There is much truth in this assumption, confirmed also by the trends of manpower deficits in other parts of the nation.

7. மருத்துவப் படிப்பில் ஆர்வம் கொண்ட மாணவர்களின் கல்வி வாய்ப்பை பாதிக்கும் என்பதை உணர்ந்தே தமிழ் நாடு தொடர்ந்து நீட் தேர்வை நிராகரித்து வருகிறது. தமிழ் நாட்டின் அனுமானத்தில்  நிறைய உண்மை உள்ளது, இது நாட்டின் பிற பகுதிகளில் மனிதவள பற்றாக்குறையின் போக்குகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

'தி டெலிகிராப்', 14.3.2022

1. நீட் தேர்வு தனியார் கல்லூர்களில் நடைபெறும் கட்டண கொள்ளையை தடுக்கும் எனும் மாயை

Blame on Modi govt for high fees at private medical colleges

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலித்ததற்கு மோடி அரசு தான் காரணம்.

2. Experts have also cited a change the Modi government has made to regulations for educational institutions that now allow profit-making entities to set up medical colleges that may be attached to profit-making hospitals.

இப்போது லாபம் ஈட்டும் நிறுவனங்களை லாபம் ஈட்டும் மருத்துவமனைகளுடன் இணைக்கக்கூடிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அனுமதிக்கும் கல்வி நிறுவனங்களுக்கான விதிமுறைகளில் மோடி அரசாங்கம் அனுமதி செய்துள்ளதையும் நிபுணர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.  

2. நீட் தேர்வு தகுதியை அதிகரிக்கும் எனும் மாயை:

'டெக்கான் கிரானிக்கல்', துஷார் கவுசிக்

Neet-PG cut-off lowered

மருத்துவப் படிப்பில் முது நிலைப் படிப்பில் இரண்டாவது சுற்றின் முடிவில் 8000 மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதால், கட்-ஆப் மதிப்பெண்ணை 50 என்பதில் இருந்து 35 ஆக குறைப்பு. அதாவது பொதுப் போட்டியில் 302 மதிப்பெண்ணுக்குப் பதிலாக 247 மதிப்பெண் இருந்தாலே போதும் என்கிறது தேசிய மருத்துவ போர்டு.

பேராசிரியர் திலீப் மண்டல்:

This year 158 aspirants, with ranks below 8 lakh, overnight became NRI and grabbed MBBS seats. They will be paying more than 1 crore to become a doc. NEET has in fact served it’s purpose of making medical education costly and exclusionary.

இந்த ஆண்டு 8 லட்சத்திற்கும் குறைவான ரேங்க் கொண்ட 158 பேர் ஒரே இரவில் என்ஆர்அய் ஆகி எம்பிபிஎஸ் இடங்களைப் பிடித்தனர். டாக்டராக ஆவதற்கு ஒரு கோடிக்கு மேல் கட்டணம் செலுத்துவார்கள். உண்மையில் மருத்துவக் கல்வியை விலை உயர்ந்த படிப்பாகவும், ஏழை மக்களை வெளியேற்றும் நோக்கத்தையும் நிறைவேற்றியுள்ளது.

Punjab should also scrap NEET exam, it violates federal structure: Mahila Kisan Union

In a statement issued here on Friday, State President of Mahila Kisan Union, Bibi Rajwinder Kaur Raju, appealed to all the regional parties to abolish this pro-rich central entrance exam NEET on the lines of Tamil Nadu state and adopt old practice to admit students in MBBS course on the basis of class XII marks only in the medical colleges of their states.

Modern Dental College case:

Five Judge SC Judgement dated 2nd May, 2016:

எந்த அடிப்படையிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் கட்டண ஒழுங்குபடுத்தும் அதிகாரம் ஆகியன மாநில அரசிடம் இருந்து நீர்த்துப் போகவில்லை.

மாநிலத்தின் சமமற்ற சூழலை மாநில அரசே நன்கு விளங்கிக் கொள்ள இயலும். மாணவர் சேர்க்கை நடைமுறையை மாநில அரசின் சட்டங்கள் தீர்மானிக்கும் போது மாணவர் நலன் பேணப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

Para:98: “In view of the above, While the expert committee report mentioned above is yet to be acted upon by the Government, we do not express any view on its contents. We direct the Central Government to consider and take further appropriate action in the matter at the earliest”

Once the notifications under the Central statutes for conducting the CET called ‘NEET’ become operative, it will be a matter between the States and the Union, which will have to be sorted out on the touchstone of Article 254 of the Constitution. We need not dilate on this aspect any further”

Para 29: “The scope of entry 66 must be construed limited to its actual sense of ‘determining the standards of higher education’ and not of laying down admission process. In no case is the State denuded of its power to legislate under Entry 25 of List III. More so, pertaining to the admission process in universities imparting higher education”.

Para 30:“Infact, the State Government should be the sole entity to lay down the procedure for admission and fee etc. governing the institutions running in that particular state except the centrally funded Institutions like IIT, NIT etc. because no one can be a better Judge of the requirements and inequalites-in-opportunity of the people of a particular state than that state itself. Only the State legislation can create equal level playing field for the students who are coming out from the State Board and other streams.”

- Five Judge SC Judgement (dated 2nd May, 2016)

பெற்றோரே, உங்கள் பிள்ளைகளது எதிர்காலத்தைக் கருதி, ‘நீட்’  தேர்வை ஒழிக்கக் களம் காண வாருங்கள்; களத்திற்கு வர முடியாதவர்கள் ஆதரவுக்கரம் நீட்டுங்கள்!

மக்கள் சக்திக்கு முன் மகுடங்கள் வளைந்துதான் ஆகவேண்டும்!

நாங்கள் போராடுவது எங்களுக்காக அல்ல - உங்களுக்காக; உங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்விற்காக! மறவாதீர்!

மக்கள் சக்திக்கு முன் மகுடங்கள் வளைந்துதான் ஆகவேண்டும்; இது வரலாறு சொல்லும் பாடம் - அது உறுதி! உறுதி!!


"தலைநகர் டெல்லியில் தலைநிமிரும் திராவிடக் கோட்டை!" - மு.க.ஸ்டாலின்


"தலைநகர் டெல்லியில் தலைநிமிரும் திராவிடக் கோட்டை!"

- மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் .

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பெருமித மடல்.

வானத்தில் சிறகடிக்கும் பறவை எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அது தன் கூட்டுக்குத் திரும்பும்போதுதான் பெரும் மகிழ்ச்சி கொள்ளும். பாடுபட்டுச் சேகரித்து வந்த இரையைத் தன் குஞ்சுகளுக்கு ஊட்டுவதில்தான் பறவைக்குப் பேருவகை!

அதுபோல, 5 நாட்கள் அமீரகத்திற்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள தமிழர்களின் தனிப் பாசத்திலும் பேரன்பிலும் மூழ்கித் திளைத்து - திணறி - திக்குமுக்காடி, அந்நாட்டு அரசு சார்பிலான அன்புகனிந்த மரியாதையைப் பெற்று, துபாய் - அபுதாபி தொழில் நிறுவனங்களுடன் முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட்டு, தாய்மண்ணாம் தமிழ்நாட்டிற்கு அதிகாலையில் வந்திறங்கியபோது, சிறகடித்து முடித்துக் கூடு திரும்பும் தாய்ப் பறவையின் உணர்வினைப் பெற்றேன்!

செவ்வாய், 29 மார்ச், 2022

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து எட்டு ஆண்டுகளாகக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத அரசாக பிரதமர் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. - கே.எஸ்.அழகிரி


 மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து எட்டு ஆண்டுகளாகக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத அரசாக பிரதமர் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு, தொழில் உற்பத்தி முடக்கம் என பல்வேறு முனைகளில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் வறுமையின் பிடியில் மக்கள் சிக்கித் தவிக்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

ஞாயிறு, 27 மார்ச், 2022

9,19,400-ஆவது தரவரிசை பெற்றவருக்கு இடம்: நீட் இப்படித் தான் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துகிறதா? - DR.S.ராமதாஸ்

 9,19,400-ஆவது தரவரிசை பெற்றவருக்கு இடம்: நீட் இப்படித் தான் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துகிறதா? - DR.S.ராமதாஸ்

நீட் தேர்வின் அடிப்படையிலான அனைத்திந்திய தரவரிசைப் பட்டியலில் 9,19,400-க்கும் பிந்தைய இடத்தைப் பிடித்த மாணவருக்கு  தமிழ்நாட்டிலும், 9,17,875 ஆவது இடத்தைப் பிடித்தவருக்கு  இராஜஸ்தானிலும், எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மதிப்பெண்களின் அடிப்படையில் அல்லாமல் பணத்தின் அடிப்படையிலேயே இந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படித்  தான் நீட் தேர்வின் மூலம் மருத்துவக் கல்வியின் தரம் உயர்த்தப்படுகிறதா? என்ற வினா எழுகிறது.

வெள்ளி, 25 மார்ச், 2022

காவிரி மட்டுமின்றி, கோதாவரி இணைப்பு உரிமையையும் எதிர்ப்பதா? கர்நாடக பேரவை தீர்மானம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது! - DR.S.ராமதாஸ்


காவிரி மட்டுமின்றி, கோதாவரி இணைப்பு உரிமையையும் எதிர்ப்பதா? கர்நாடக பேரவை தீர்மானம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது!

 - DR.S.ராமதாஸ்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் தொடர்பான அனைத்து அம்சங்களும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லாத பட்சத்தில், அத்திட்டத்தை செயல்படுத்த கர்நாடகம் அனுமதிக்காது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

வியாழன், 24 மார்ச், 2022

பேருந்தில் மது குடித்து மாணவிகள் ரகளை: இன்னும் என்னென்ன சீரழிவுகளுக்காக காத்திருக்கப் போகிறது தமிழ்நாடு அரசு? - DR.S.ராமதாஸ்

 பேருந்தில் மது குடித்து மாணவிகள் ரகளை: இன்னும் என்னென்ன சீரழிவுகளுக்காக  காத்திருக்கப் போகிறது தமிழ்நாடு அரசு?

 - DR.S.ராமதாஸ்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச்  சேர்ந்த மாணவ, மாணவிகள், பள்ளிச்சீருடையில் அரசுப் பேருந்தில் நின்று கொண்டு மது அருந்தி , ரகளை செய்யும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. படிக்க வேண்டிய மாணவ, மாணவிகள் குடித்து விட்டு ரகளை செய்வது மிகுந்த வேதனையளிக்கிறது.

மம்தா அரசை வீட்டுக்கு அனுப்ப, மத்திய பாஜக அரசு களத்தில் இறங்குமா? அல்லது கலங்கி நிற்குமா? - டாக்டர் k.கிருஷ்ணசாமி


கீழவெண்மணியை நினைவுபடுத்தும் மேற்குவங்க சம்பவம்!

பிர்பும் பகுதியில் நடைபெற்ற பச்சைப் படுகொலைக்கு நீதியை நிலைநாட்ட,

மம்தா அரசை வீட்டுக்கு அனுப்ப, மத்திய பாஜக அரசு களத்தில் இறங்குமா? அல்லது கலங்கி நிற்குமா? - டாக்டர் k.கிருஷ்ணசாமி

தமிழகத்தின் அன்றைய கீழத்தஞ்சை, இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் தினச் சம்பளமாக கூடுதலாக அரைப்படி நெல் உயர்வு கேட்டுப் போராடியதற்காகவும், அவர்கள் சார்ந்த அமைப்பிற்கான கொடியை நாட்டியதற்காகவும் 1968 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி நள்ளிரவில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த ஏழை விவசாய உழைப்பாளிகள் பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும், முதியோர்களுமாக 43 பேர் ஒரே  குடிசைக்குள் தள்ளப்பட்டு தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அக்காலகட்டத்தில் இந்தியாவையே உலுக்கியது. அதை ஒத்த ஒரு சம்பவம் நேற்றைய முன் தினம் மேற்கு வங்கம் மாநிலம் ராம்புராட் மாவட்டம், பிர்பும் பகுதியில் அரங்கேறியுள்ளது. அதில் 6 பெண்களையும், 2 குழந்தைகளையும் ஒரே வீட்டினுள் தள்ளித் தீயிட்டு எரித்துக் கொன்றுள்ளனர். இந்த கொடிய சம்பவத்திற்கு எமது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதன், 23 மார்ச், 2022

நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை எட்டுவதில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதால், கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் இதில் பெரும் பங்கு வகிக்க வேண்டும்.- திரு எம். வெங்கைய நாயுடு


 நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை எட்டுவதில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதால், கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் இதில் பெரும் பங்கு வகிக்க வேண்டுமென குடியரசுத் துணைத்தலைவர் திரு எம். வெங்கைய நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியப் பல்கலைகழகங்கள் சங்கத்தின் வருடாந்தரக் கூட்டத்தை காணொலி வாயிலாக தொடங்கி வைத்து, ‘உயர்கல்வி நிறுவனங்கள் வாயிலாக நீடித்த இலக்கை அடைதல்’ பற்றிய தேசிய கருத்தரங்கில் உரையாற்றிய திரு நாயுடு, தொடக்க, இடைநிலை மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள், நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை அடைவதற்கான செயல் திட்டங்களை உணர்வுப்பூர்வமாக பின்பற்ற வேண்டும் என்றார்.

மினி கிளினிக் மருத்துவர்களை நீக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்! - DR.S.ராமதாஸ்

 மினி கிளினிக் மருத்துவர்களை நீக்கும்  

முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் மூடப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றி, இப்போது மாற்றுப் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ள 1820 மருத்துவர்களையும், 1420 பன்நோக்கு மருத்துவப் பணியாளர்களையும்  மார்ச் 31-ஆம் தேதியுடன் பணி நீக்கம் செய்யும்படி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரை பணயம் வைத்து ஈடுபட்ட அவர்களை நீக்குவது எவ்வகையிலும் நியாயமல்ல.

செவ்வாய், 22 மார்ச், 2022

மாத்ருபூமியின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

செய்தித்தாளின் பயணத்தில் முன்னிலை வகிக்கும் ஆளுமைகள் அனைவருக்கும் பிரதமர் புகழாரம் சூட்டினார். “மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மாத்ருபூமி இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காகப் பிறந்தது” என்று அவர் கூறினார்.  காலனி ஆட்சிக்கு எதிராக நமது நாட்டின் மக்களை ஒற்றுமைப்படுத்த இந்தியா முழுவதும் செய்தித்தாள்களையும், பருவ இதழ்களையும் தொடங்கிய புகழ்மிக்க பாரம்பரியத்தில் பதிப்புகளை அவர் முன்வைத்தார். இந்தியாவில் விடுதலைப் போராட்டக் காலத்தில் தங்களின் பணிக்கு செய்தித்தாளைப் பயன்படுத்தியதில் உதாரணங்களாக லோகமான்ய திலகர், மகாத்மா காந்தி, கோபால கிருஷ்ண கோகலே, ஷியாமாஜி கிருஷ்ண வர்மா மற்றும் பலரை அவர் தெரிவித்தார்.  அவசரநிலை காலத்தில் இந்தியாவில் ஜனநாயக மாண்புகளை உயர்த்திப் பிடிக்க திரு எம் பி வீரேந்திர குமாரின் முயற்சிகளைக் குறிப்பாக அவர் நினைவுகூர்ந்தார்.

'எல்லார்க்கும் எல்லாம்' என்ற நூற்றாண்டு கால திராவிட - சமூகநீதிக் கொள்கைகளையும், இக்கால நவீனத் தேவைகளையும் உள்ளடக்கிய அறிக்கையாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.-


“தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், ஒரு வழிகாட்டியின் கூர்மையையும், ஒரு சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்ட நிதிநிலை அறிக்கை” - மு.க.ஸ்டாலின்.

2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் அவர்கள் இன்று காலை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கை தமிழக நிதிநிர்வாகத் துறைக்கு மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது. நிதிநிலை அறிக்கை என்ற எல்லையையும் தாண்டி, தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்கு முன்னோட்டமான கொள்கை அறிக்கையாக அது அமைந்துள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே 2-ஆவது மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மோரிசன் உரையாற்றினார்கள்.


 இந்தியா – ஆஸ்திரேலியா இடையே 2-ஆவது மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மோரிசன் உரையாற்றினார்கள்.  அப்போது இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் பிராந்திய சர்வதேச விவகாரங்கள் குறித்து, இருதலைவர்களும் விவாதித்தனர். 

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லேண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் திரு மோடி கூறினார்.  2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற முதலாவது காணொலிக் காட்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இருதலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.

தொழில்மயம் என்ற பெயரில் பூர்வகுடிமக்களின் நிலங்களை பறித்து, வாழ்வாதாரங்களை அழித்து அவர்களை வீடற்ற நாடோடிகளாக மாற்றும் முயற்சியை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.- DR, அன்புமணி ராமதாஸ்

 நெய்வேலி நிலக்கரி சுரங்கம் என்ற பெயரில் நிலங்களை பறிப்பதா? மார்ச் 27-ஆம் தேதி மக்கள் சந்திப்பு - கருத்துக் கேட்பு கூட்டம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன சுரங்கங்களின் விரிவாக்கம், புதிய சுரங்கங்கள் என்ற பெயரில் கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களை பறிக்கும் என்.எல்.சி நிறுவனத்தின் மனிதநேயமற்ற செயல்கள் தொடர்கின்றன. தொழில்மயம் என்ற பெயரில் பூர்வகுடிமக்களின் நிலங்களை பறித்து, வாழ்வாதாரங்களை அழித்து அவர்களை வீடற்ற நாடோடிகளாக மாற்றும் முயற்சியை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குளறுபடிகள், முறைகேடுகளை விளக்கிக் கூறி, திருமண உதவித் திட்டத்தை, தயவுசெய்து கொச்சைப்படுத்திட நான் விரும்பவில்லை.- மு.க.ஸ்டாலின்


 மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை :  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள் பெயரிலே நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்த திட்டம்தான் இந்தத் திருமண உதவித் திட்டம்.  அதைப் பற்றி மாண்புமிகு நிதித் துறை அமைச்சர் அவர்கள் மிக விளக்கமாக உங்களிடத்திலே குறிப்பிட்டிருக்கிறார்கள்.  இருந்தாலும், அதையொட்டி நான் கொஞ்சம் அழுத்தம் தந்து, அதில் நீங்கள் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக, நீங்கள் மட்டுமல்ல; நாட்டு மக்களும் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக சில விளக்கங்களை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்.  

பா.ஜ.க. அரசு தொடர்ந்து மக்களை பாதிக்கின்ற வகையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். - கே.எஸ். அழகிரி


 மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஈடாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைக்காமல் கலால் வரியை 11 முறை உயர்த்தி ரூபாய் 24 லட்சம் கோடி வருமானத்தை பெருக்கிக் கொண்டது. இதைவிட ஒரு பகற் கொள்ளை வேறு எதுவும் இருக்க முடியாது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை நிர்ணயத்தின்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.16, ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 92.19, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 967 என உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரண ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதோடு, அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

தொடரும் பொள்ளாச்சி, விருதுநகரில் மீண்டும் ஒரு கூட்டு பலாத்காரம்! காலம் தாழ்த்தாது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

 தொடரும் பொள்ளாச்சி, விருதுநகரில் மீண்டும் ஒரு கூட்டு பலாத்காரம்!

காலம் தாழ்த்தாது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்! 

- டாக்டர் K. கிருஷ்ணசாமி

விருதுநகர் மாவட்டம், பாண்டியன் நகர் பகுதியைச் சார்ந்த 22 வயது பெண்மணி அதே பகுதியைச் சேர்ந்த 8 நபர்களால் தொடர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரச் செயலை புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் கூட்டுப் பலாத்காரத்துக்கு ஆளானது தமிழகத்தைத் தாண்டி இந்தியாவெங்கும் எதிரொலித்தது. இப்பொழுது, 22 வயதான பெண்ணுடன் முதலில் நட்பாக பழகி, பின் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஆசை வார்த்தைகளைக் காட்டி, ஏமாற்றி, அப்பெண்ணிடம் மேற்கொண்ட உறவுகளைப் படமாக்கி சிறிதும் கூட மனசாட்சி இல்லாமல் தன்னுடைய சக நண்பர்களுக்கும் பகிர்ந்து, அவர்களும் அந்த காணொளியைச் சுட்டிக் காட்டி அச்சுறுத்தி, அந்தப் பெண்ணை 8 பேர்களும் தொடர்ந்து சீரழித்து இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தனது வாழ்க்கையே சீரழிந்து விடும் என்பதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

வெள்ளி, 18 மார்ச், 2022

துபாயில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வாரத்தை திரைப்பட நடிகர் திரு ஆர் மாதவன் முன்னிலையில் திரு அபூர்வ சந்திரா தொடங்கி வைத்தார்


 துபாயில் நடைபெறும் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரங்கில், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வாரத்தை, திரைப்பட நடிகர் திரு ஆர் மாதவன் முன்னிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் திரு அபூர்வ சந்திரா இன்று தொடங்கி வைத்தார். அவரது தலைமையில் தூர்தர்ஷன் தலைமை இயக்குநர் திரு மயங்க் அகர்வால், தகவல் ஒலிபரப்புத் துறை இணை செயலாளர் திரு விக்ரம் சகாய், மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைமைச் செயல் அதிகாரியும், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநருமான திரு ரவீந்தர் பாக்கர் ஆகியோர் அடங்கிய குழுவினரும் துபாய் சென்றுள்ளனர்.

திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.- வானதி சீனிவாசன்

 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பட்ஜெட் - வானதி சீனிவாசன்

திமுக அரசின் முதல் முமுமையான நிதிநிலை அறிக்கையை, தமிழக நிதியமைச்சர் திரு.பழனிவேல் தியாிகராஜன் தாக்கல் செய்துள்ளார். பெரும்பாலும், மத்திய பாஜக அரசின் திட்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இணையவழியில் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய, மத்திய அரசு, GEM Portal  என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது. அதுபோலவே, தமிழக பட்ஜெட்டிலும் E – Procurement திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் தமிழக அரசின் கடன் ரூ.6 லட்சத்து 53,348 கோடியாக அதிகரிக்கும் என்பதும் கவலையளிக்கிறது. - DR.S.ராமதாஸ்


கல்விக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை:

அதிகரிக்கும் கடன்சுமை கவலையளிக்கிறது! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாடு அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருக்கிறார். நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவையாக இருந்தாலும் கூட, தமிழ்நாட்டை  முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கான பாதையில் தொடர்ந்து செல்கிற சீரிய முயற்சியாகக் கருதிப் பாராட்டுகிறேன் - கே.எஸ்.அழகிரி


 பத்து ஆண்டுக்கால அ.தி.மு.க. ஆட்சியின் தவறான நிதி மேலாண்மையின் காரணமாக, தமிழக அரசின் கடன் சுமை 2021 இல் ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாகவும், பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ஏறத்தாழ ரூபாய் 3.50 லட்சம் கோடியாகவும் ஆக மொத்தம் கிட்டத்தட்ட ரூபாய் 10 லட்சம் கோடி கடன் சுமையை தி.மு.க. தலைமையிலான ஆட்சிக்கு விட்டுச் செல்லப்பட்டது. இதற்கான முழு விவரங்கள் நிதியமைச்சர் தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் விரிவாக வெளியிடப்பட்டது. இந்தப் பின்னணியில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற மகத்தான பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழக அரசு பதவியேற்ற நாளிலிருந்து பணிகளைத் தொடங்கி, சாதனைகளைப் படைத்து வருகிறது. இதனால் தமிழகம் தலைநிமிர்ந்து பீடு நடை போட்டு வருகிறது. இதை உறுதி செய்கிற வகையில் தமிழகத்தின் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

புதன், 16 மார்ச், 2022

தமிழகத்தில் 54 அரசு பள்ளிக்கூடங்களில் தமிழ்வழி கல்வி இல்லை: தமிழ் வாழ்க! - DR.S.ராமதாஸ்

 தமிழகத்தில் 54 அரசு பள்ளிக்கூடங்களில்

தமிழ்வழி கல்வி இல்லை: தமிழ் வாழ்க! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் 54 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை என்றும், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் மட்டும் தான் கல்வி பயிற்றுவிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு  பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டிருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை என்பதை விட பெரிய தலைகுனிவு தமிழர்களுக்கு இருக்க முடியாது.

செவ்வாய், 15 மார்ச், 2022

இமயமலைப் பகுதியில் ரூ.506.23 கோடியில் பல்வேறு வகையிலான 77 விளையாட்டு கட்டமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.- திரு அனுராக் தாக்கூர்


 நாட்டில் விளையாட்டுக்களில் பங்கேற்பதை ஊக்கப்படுத்த இமயமலைப் பகுதி உட்பட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.   விளையாட்டுக்கள் இந்தியா திட்டத்தின் கீழ், இமயமலைப் பகுதியில் ரூ.506.23 கோடியில் பல்வேறு வகையிலான 77 விளையாட்டு கட்டமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்தத் துறைக்கான அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 50% மது கணக்கில் காட்டாமல் விற்பனையா? விசாரணை நடத்த வேண்டும்! - DR.அன்புமணி ராமதாஸ்

 தமிழகத்தில் 50% மது கணக்கில் காட்டாமல்

விற்பனையா? விசாரணை நடத்த வேண்டும்! - DR.அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் மதுவில் சுமார் 50% மது  ஆயத்தீர்வை வரி செலுத்தப்படாமல்  விற்பனை செய்யப்படுவதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். மதுக்கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும் அவர் வினா எழுப்பியிருக்கிறார். தமிழகத்தின் நிதி அமைச்சர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் கடுமையானவை; இவற்றை உதாசீனப்படுத்த முடியாது.

இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்ட கப்பற்படை பயிற்சி 2022 மார்ச் 12 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.


 இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்ட கப்பற்படை பயிற்சி 2022 மார்ச் 12 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இந்திய கப்பற்படை கப்பல்களான சென்னை மற்றும் டேக் இலங்கை கப்பற்படை கப்பல் சிந்துராலாவுடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன. இருநாட்டு கப்பற்படைகளின் கப்பல்கள் இழுவை, கடற்பகுதியில் எரிபொருள் நிரப்புவதற்கான நிலையத்தை பராமரித்தல், நெருக்கமான தூரத்தில் கவனத்துடன் கப்பல்கள் செலுத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டன. இந்த பயிற்சியில் இந்திய கப்பற்படையின் செட்டா ஹெலிகாப்டரும் பங்கேற்றது. இந்திய கப்பல் படையின் தொகுப்பை இலங்கை கப்பல் நெருங்குவதுடன் நடத்தப்பட்ட பாரம்பரிய கடற்பகுதி அணிவகுப்புடன் இந்தப் பயிற்சி நிறைவடைந்தது.   இரு கப்பற்படைகளின் அதிகாரிகளிடையேயான கலந்துரையாடல் பயனுள்ளதாக இருந்தது.

பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் பட்டியல் வகுப்பினரா, பிற்படுத்தப்பட்டவரா, சிறுபான்மையினரா, முன்னேறிய வகுப்பினரா என்று மட்டுமே கேட்கப்பட்டிருந்தது. ஜாதியைக் கேட்கவில்லை.- கி.வீரமணி



பள்ளிகளில் ‘ஜாதி’ கேட்கப்படுகிறது என்ற தவறானப் பிரச்சாரம் வேண்டாம்!

எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., எனும் பிரிவுதான் கேட்கப்படுகிறது

இட ஒதுக்கீடுக்கு இந்தத் தகவல் அவசிய தேவையே! - கி.வீரமணி

தயக்கமில்லாமல் ஜாதிப் பிரிவைக் கூறுக!

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஜாதி விவரக் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து (13.3.2022) வெளியான செய்திக்குப் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் திரு.நந்தகுமார் அவர்கள் நேற்றிரவு அளித்த ஒரு சுற்றறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்திய ஒருங்கிணைந்த சேவை நிறுவனத்தில் ஜெனரல் பிபின் ராவத்தின் சிறப்பு நினைவு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.


 பாதுகாப்புப் படைகளின் மறைந்த தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் 65-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது நினைவாக யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இந்தியா (யுஎஸ்ஐ) நிறுவனத்தில் சிறப்பு இருக்கையை இந்திய ராணுவம் அர்ப்பணித்துள்ளது.

15 மார்ச் 2022 அன்று சவுத் பிளாக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட  விழாவில் இராணுவத் தலைமைத் தளபதியும், அதிகாரப்பூர்வ தலைவருமான ஜெனரல் எம்.எம்.நரவானே இதற்கான முறையான அறிவிப்பை வெளியிட்டார்.முப்படைகளின் உயர்‌ அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.‌  5 லட்ச ரூபாய்க்கான காசோலை மேஜர் ஜெனரல் பி.கே. ஷர்மா (ஓய்வு), இந்திய ஒருங்கிணைந்த சேவை நிறுவனத்தின்  இயக்குனர்,  அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தத் தொகை   பரிந்துரைக்கப்பட்டவருக்கு  கெளரவ முறையில் வழங்கப்படும்.

ஞாயிறு, 13 மார்ச், 2022

தமிழ்நாட்டின் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து, ஆளுநர் ரவியை நீக்க வேண்டும்.- வைகோ அறிக்கை

 பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும். - வைகோ அறிக்கை

தென் மண்டல பல்கலைக்கழகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் பங்கேற்ற, கோவை மாநாட்டில் உரை ஆற்றிய ஆளுநர் ரவி, தமது அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துகளைப் பேசி இருப்பது கண்டனத்திற்கு உரியது.

கூட்டு ஆட்சி பற்றிப் பேசுபவர்கள், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்; இந்தியா என்பது வேறுபட்ட மக்களின் உடன்படிக்கையால் அமைந்தது அல்ல; இந்தியா என்ற நாடு, 1947 ஆம் ஆண்டு பிறந்தது அல்ல என்று அவர் பேசி இருக்கின்றார்.

சனி, 12 மார்ச், 2022

இந்தியா முழுமைக்கும் சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாவதற்கான சூழலை நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்படுத்த வேண்டும். - திரு. மு.க.ஸ்டாலின்

“இந்தியா முழுமைக்கும் சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாவதற்கான சூழலை நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்படுத்த வேண்டும்” - திரு. மு.க.ஸ்டாலின் உரை

இது கழக குடும்பத்தில் நடைபெறும் திருமணம்; நம்முடைய குடும்பத்தில் நடைபெறும் திருமணம் என்கிற உணர்வோடு நாம் எல்லாம் இதில் கலந்துகொண்டு மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களை வாழ்த்தி கொண்டிருக்கிறோம்.

நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்று அந்த அமைச்சரவைக்கு பெருமை சேர்த்த நம்முடைய நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணன் தங்கபாண்டியன் - ராஜாமணி பாப்பாத்தி அவர்களுடைய மகள் வழி பேத்தியும், முன்னாள் ஐ.ஜி. சந்திரசேகர் – திருமதி. சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுடைய புதல்வியுமான மருத்துவர் நித்திலா சந்திரசேகர் எம்.பி.பி.எஸ்., எம்.டி., அவர்களுக்கும் – திரு. வி.எஸ்.ஆர். ராஜராம் - திருமதி. விஜயலட்சுமி ஆகியோரின் பேரனும், மருத்துவர் ஆர். மகேந்திரன் - அபிராமி மகேந்திரன் அவர்களது புதல்வனுமான மருத்துவர் கீர்த்தன் மகேந்திரன் அவர்களுக்கும் நடைபெறும் இந்த இனிய திருமண விழாவில் கலந்துகொண்டு- இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று மணவிழாவை நடத்தி வைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமைப்படுகிறேன்.

காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எண்ணெய் கிணறுகளை அனுமதிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.- DR.S.ராமதாஸ்

 காவிரி படுகையில் புதிய எண்ணெய்

கிணறுகளை அனுமதிக்கக் கூடாது! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களின் 7 வட்டங்களில் எண்ணெய் வளத்தை கண்டறிவதற்காக எண்ணெய் கிணறுகளை தோண்டுவதற்கான பணிகளை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய  சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆணையிட்டிருக்கிறது. காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எண்ணெய் கிணறுகளை அனுமதிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

வெள்ளி, 11 மார்ச், 2022

16 டிஜிபிகள்: மூத்த அதிகாரிகளின் சேவை பரவலாக்கப்பட வேண்டும்! - DR.S.ராமதாஸ்



16 டிஜிபிகள்: மூத்த அதிகாரிகளின்
சேவை பரவலாக்கப்பட வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழக காவல்துறையில் கூடுதல் தலைமை இயக்குனர்கள் நிலையில் பணியாற்றி வந்த 4 அதிகாரிகள் காவல்துறை தலைமை இயக்குனர்களாக (டி.ஜி.பி)  பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இந்த பதவி உயர்வு இவர்களுக்கு பல மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவர்களையும் சேர்த்து தமிழ்நாடு காவல் துறையில் தலைமை இயக்குனர்கள் நிலையிலான அதிகாரிகள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

பாரம்பரிய அறிவாற்றல் முறைகளில் அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.- குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு

 வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட மாநில சட்டமன்றங்கள், அடிக்கடி கூடுவதுடன், அதிக நாட்களுக்கும் நடைபெற வேண்டுமென்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். அப்போது தான் மக்கள் நலம் சார்ந்த விஷயங்களை விவாதிக்கவும், சட்டங்களை போதிய கால அவகாசத்துடன் நிறைவேற்றவும், நிர்வாகத்தின் பொறுப்புடமையை உறுதி செய்யவும் முடியுமென்றும் அவர் கூறியுள்ளார்.

 மிசோரம் சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், சட்டமன்ற கூட்டத் தொடர்கள், நீண்ட அவகாசத்தில் திட்டமிடப்பட்டு கூட்டப்படவேண்டுமென்றும், அப்போது தான் சட்டங்களை இயற்றவும், விவாதிக்கவும் போதிய அவகாசம் கிடைக்குமென்றும் கூறினார். சட்டமன்றங்களை அதிக நாட்களுக்கு கூட்டி ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.

உள்ளூர் பிணைப்புகளை ஏற்படுத்தி, மண்டலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு புதுமையான முறையில் தீர்வு காண பல்கலைக்கழகங்கள் முன் வரவேண்டும். - திரு எம் வெங்கய்யா நாயுடு


 இயற்கை விவசாயம் மற்றும் மருத்துவமுறைகள் போன்ற பாரம்பரிய அறிவாற்றல் முறைகளில், அறிவியல் ஆராய்ச்சிகளை  ஊக்கப்படுத்துவதுடன், ‘நமது அறிவுசார் தலைமையிடத்தை மீண்டும் அடைய’ முறையான வழியில் முயற்சிக்குமாறு  பல்கலைக்கழகங்களை குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

மிசோரம் மற்றும் சிக்கிமில் நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு துணைத்தலைவர், காங்டாக்கில் அன்று (11.03.2022)  கஞ்சென்சோங்கா, மாநில  பல்கலைக்கழகத்திற்கு  அன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சிக்கிம் மாநிலம் இயற்கை விவசாயத்தில் முன்னோடியாக திகழ்வதற்கும், அம்மாநிலத்தில் உள்ள அனைத்து நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், தொழில்பயிற்சியை ஒரு பாடமாக வைத்திருப்பதற்கும் பாராட்டுத் தெரிவித்தார். மேலும், நீடித்த வளர்ச்சியில் கவனம் செலுத்தும் விதமாக தொடக்க பள்ளிகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்தியிருப்பதையும் அவர் பாராட்டினார்.

புதன், 9 மார்ச், 2022

பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி: விரைவில் விடுதலையாகட்டும்! - DR. அன்புமணி ராமதாஸ்

 பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டதில்

மகிழ்ச்சி: விரைவில் விடுதலையாகட்டும்! - DR.அன்புமணி ராமதாஸ்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மிக நீண்ட அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு பேரறிவாளன் பிணையில் விடுதலையாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

செவ்வாய், 8 மார்ச், 2022

பெரியார் பல்கலைக்கழகத்தில் சமூக அநீதி: பெரியார் பல்கலைக்கழகத்தை சீரழிவிலிருந்து தமிழக அரசு காப்பாற்ற வேண்டும். - DR. அன்புமணி ராமதாஸ்


 பெரியார் பல்கலைக்கழகத்தில் சமூக அநீதி:

துணைவேந்தர் மீது நடவடிக்கை தேவை! - DR. அன்புமணி ராமதாஸ்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முறைகேடுகளை தட்டிக் கேட்டதற்காக தொழிற்சங்க  நிர்வாகிகள் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்து ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் குறிப்பாணை வழங்கப்பட்ட 24 மணி நேரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அநீதிக்கு எதிராக போராடிய பெரியாரின் பெயரிலான பல்கலை.யில் இத்தகைய சமூக அநீதி இழைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

இந்த பட்ஜெட்டின் உயர் வளர்ச்சி வேகத்தை பராமரிப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.- பிரதமர் திரு நரேந்திர மோடி


 'வளர்ச்சிக்கான நிதி மற்றும் வளர விரும்பும் பொருளாதாரம்’ என்ற பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இது பிரதமர் உரையாற்றும் பட்ஜெட்டுக்கு பிந்தைய 10-வது கருத்தரங்காகும்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த பிரதமர், முற்போக்கான பட்ஜெட்டை அளித்த பெண் நிதி அமைச்சரை இந்தியா கொண்டுள்ளது என்று கூறினார். 

கல்வியின் தரத்தையும் எளிதில் கிடைப்பதையும் விரிவாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குக் குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.


 கல்வியின் தரத்தையும் எளிதில் கிடைப்பதையும் விரிவாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குக் குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். அறிவின் பரிமாற்றத்திற்கு  பெருந்தொற்று காலம் எவ்வாறு புதிய வழிகளைத் திறந்துது என்பது பற்றி குறிப்பிட்ட திரு நாயுடு, ‘டிஜிட்டல் கருவிகள், கற்றலுக்கும், கலந்துரையாடலுக்கும் கூடுதலாக பயன்படுத்தப்பட்டன’ என்றார். தொழில்நுட்பத்தில்  புதிய வாய்ப்புகளைக் கண்டறியும் அதே சமயம், டிஜிட்டல் முறையில், அதிகரித்து வரும் இடைவெளியையும் சரி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்தோ-பசிபிக் ராணுவ சுகாதாரக் கருத்தரங்கைப் (IPMHE) , பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.


 நான்கு நாட்கள் நடைபெறும்  இந்தோ-பசிபிக் ராணுவ சுகாதாரக் கருத்தரங்கைப் (IPMHE) ,  பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அன்று (மார்ச் 7ம் தேதி) காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். இந்த கருத்தரங்கைப் பாதுகாப்புப் படைகள் மருத்து சேவைகள் பிரிவு (AFMS) மற்றும் அமெரிக்க இந்தோ பசிபிக் கட்டுப்பாட்டு மையம் (USINDOPACOM) ஆகியவை இணைந்து நடத்துகிறது. 

இலங்கை கடற்படையின், ரோந்து கப்பலான எல்எல்என்எஸ் சயூரலா, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கிர்ச் கப்பல் ஆகியவை பயிற்சியில் இடம் பெற்றுள்ளன.


 இந்தியா- இலங்கை இடையே 9-வது கூட்டு கடற்படை பயிற்சி இன்று தொடங்கி வரும் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டு கட்டங்களாக இந்தப் பயிற்சி நடத்தப்பட உள்ளது. முதல்கட்டப் பயிற்சி விசாகப்பட்டினம் துறைமுகத்தில்  இன்றும் நாளையும் நடைபெறவிருக்கிறது. அதன் பின் இரண்டாம் கட்ட பயிற்சி வங்காள விரிகுடாவில் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இலங்கை கடற்படையின், ரோந்து கப்பலான எல்எல்என்எஸ் சயூரலா, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கிர்ச் கப்பல் ஆகியவை பயிற்சியில் இடம் பெற்றுள்ளன. முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு கடற்படை பயிற்சி திரிகோணமலையில் நடைபெற்றது.

இருநாட்டு கடற்படைகளுக்கு இடையே புரிந்துணர்வு, அனுபவ பகிர்வு, கடல் சார் நடவடிக்கைகள், ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இக்கூட்டு கடற்படை பயிற்சி நடைபெறுகிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஹைட்ரஜன் மற்றும் மின்சார வாகனங்களில் தொழில்துறையின் பங்களிப்பும் முதலீடுகளும் அவசியம்.- திரு பியூஷ் கோயல்


 பருவநிலை வீரர்களுக்கு மூன்று செயல்திட்டங்களை மத்திய வர்த்தகம், தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் வழங்கினார்.

பருவநிலை தொழில்முனைதலை ஒரு இயக்கமாக மேற்கொள்ளுமாறு பருவநிலை வீரர்களுக்கு அழைப்பு விடுத்த அவர், பருவநிலை நீதிக்கான புதிய விடியலை இருபத்தி ஓராம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகள் உருவாக்குவதை உறுதி செய்யுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு 1000 கோடி ஒதுக்கீடு! தமிழ்நாட்டின் உரிமை காக்க உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்! - தொல்.திருமாவளவன்

காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு 1000 கோடி ஒதுக்கீடு!

தமிழ்நாட்டின் உரிமை காக்க உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்! 

தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!

கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசு காவிரியின் குறுக்கே மேகெதத்துவில் அணை கட்டுவதற்காக 1000 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதோடு அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டியிருக்கிறது. கர்நாடக அரசின் இந்த சட்டவிரோதப் போக்குக்கு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரும் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட உடனடியாகத் தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இங்கும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்! 

திங்கள், 7 மார்ச், 2022

ஒவ்வொரு மாநிலத்திலும், எய்ம்ஸ் மருத்துவமனை அமையவேண்டும் என்பது பிரதமரின் தொலைநோக்கு சிந்தனையாகும். - இணைஅமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார்


 கல்யாணியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் எம்பிபிஎஸ் 2021ஆம் ஆண்டு வகுப்புத்  தொடக்க விழாவில்  காணொலி காட்சி வாயிலாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணைஅமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தலைமை வகித்தார்.

125 எம்பிபிஎஸ் மாணவர்களுடன்   2021-ஆம் ஆண்டு 3-வது கல்வியாண்டை தொடங்கும் கல்யாணி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின்  மாணவர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் வாழ்த்துத் தெரிவித்ததுடன்  தமது மகிழ்ச்சியையம் மத்திய இணை அமைச்சர் வெளிப்படுத்தினார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பாதி இடங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம்.- பிரதமர் திரு நரேந்திர மோடி


 மக்கள் மருந்தக உரிமையாளர்கள் மற்றும் திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். பொது மருந்துகளின் பயன்பாடு மற்றும் மக்கள் மருந்தகத்  திட்டத்தின்  நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் மார்ச் 1-ம் தேதி முதல் மக்கள் மருந்தக வாரம் கொண்டாடப்படுகிறது. "மக்கள் மருந்தகம், மக்கள் பயன்பாடு" என்பது இந்த வார விழா நிகழ்வின் கருப்பொருள் ஆகும்.

மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறியடித்திட தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும்.- வைகோ

 மேகேதாட்டு அணை; கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறியடிப்போம்! - வைகோ அறிக்கை

கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, மார்ச் 4 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையில், மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அமைத்து 67.16 டி.எம்.சி. நீரை சேமிக்கவும், பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்குப் பயன்படுத்தவும், 400 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட நீர் மின் நிலையம் அமைக்கவும் ரூ. 9 ஆயிரம் கோடி மதிப்பிலானத் திட்டத்தைத் தயாரித்துள்ள கர்நாடக அரசு, தற்போது நிதிநிலை அறிக்கையில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

மிக உயர்ந்த இமயமலையை ஒட்டியுள்ள புவிசார் வளங்கள் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை.- டாக்டர் ஜிதேந்திர சிங்


 இமயமலை பகுதிகளில் உள்ள மக்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு மட்டுமின்றி நாடு முழுமைக்கும் பல்வேறு  வழிகளில் பங்களிக்கக் கூடிய உயரமான இமயமலைப் பகுதியின் புவிசார் வளங்கள் குறித்து இன்னமும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை என்று மத்திய இணை அமைச்சர் (தனி பொறுப்பு) அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்; மாநில அமைச்சர் (தனி பொறுப்பு) புவி அறிவியல்; பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுக் குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி துறைகளின் இணையமைச்சர், டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

ஞாயிறு, 6 மார்ச், 2022

மேகேதாட்டு அணை விவகாரத்திற்கு உச்சநீதிமன்றம் மூலமாக மட்டுமே தீர்வு என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.- DR.அன்புமணி ராமதாஸ்

 மேகேதாட்டு அணை திட்டத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆதரிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது! 

- DR.அன்புமணி ராமதாஸ்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும் என்று உறுதியாக நம்புவதாகவும், அது குறித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் பேச்சு நடத்தப்பட வேண்டும் என்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியிருக்கிறார்.  மேகேதாட்டு அணை விவகாரத்தில் நீதிபதியாக செயல்பட வேண்டிய ஷெகாவத் கர்நாடக வழக்கறிஞராக மாறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.- மு.க.ஸ்டாலின்



நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது.

இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிகளவு மகிழ்ச்சியை அளித்தது.

அந்த மகிழ்ச்சியைக் சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில் இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. வெற்றியை நினைத்தே கவலை அடைய வைக்கிறது.

கோகுல்ராஜ் படுகொலை வழக்கு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைத்தது ஆறுதல் அளிக்கிறது! ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்! - தொல்.திருமாவளவன்


கோகுல்ராஜ் படுகொலை வழக்கு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைத்தது ஆறுதல் அளிக்கிறது! ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்!  தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்! 

கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என நம்புகிறோம். அத்துடன், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளவாறு ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சிறப்புச் சட்டமொன்றை இயற்ற வேண்டுமெனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். 

வெள்ளி, 4 மார்ச், 2022

சமூக அநீதியை போக்கும் வகையில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். - DR.S.ராமதாஸ்


ஒரு வேலைக்கு இரு தேர்வு நியாயமா? இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வை நீக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிகளில் நியமிக்கப்பட மீண்டும் ஒரு போட்டித் தேர்வு எழுத வேண்டும் என்ற சமூகநீதிக்கு எதிரான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் சென்னை பள்ளிக் கல்வி இயக்குனர் வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நான்காவது நாளாக அவர்களின் போராட்டம் தொடரும் நிலையில், அவர்களுடன் பேச்சு நடத்தக்கூட அரசு முன்வராதது ஏமாற்றமளிக்கிறது.

உக்ரைனில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிற இந்தியர்களை பாதுகாப்பதற்கு மோடி அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி


 உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தொடர்ந்து சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். இந்திய அரசின் தெளிவான அணுகுமுறை இல்லாத காரணத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் உட்பட இருவர் இதுவரை பலியாகி இருக்கிறார்கள். எஞ்சியிருக்கும் இந்தியர்கள் அங்கிருந்து எப்படித் தப்பித்து வெளியேறுவது என்று தெரியாமல் மிகுந்த வேதனையுடன் இருக்கிறார்கள். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு அங்குள்ள இந்தியத் தூதரகம் எந்த உதவியும் செய்யவில்லை. மாறாக, உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வில் இந்திய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். அங்கே இருக்கிற இந்தியத் தூதரகம் அவர்களுக்கு குறைவான அவகாசம் வழங்கி அனைவரும் வெளியேறும்படி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இது அங்கு இருக்கிற நூற்றுக்கணக்கான மாணவர்களிடையே கடும் கோபத்தையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக, உக்ரைனில் இருந்து சுமார் 200 மாணவர்கள் மற்றும் இந்தியர்கள், இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.


 மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக, உக்ரைனில் இருந்து சுமார் 200 மாணவர்கள் மற்றும் இந்தியர்கள், இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவர்களை மத்திய ரசாயன உரத்துறை இணையமைச்சர் திரு பகவந்த் கூபா வரவேற்றார்.  இவர்களை ஏற்றி வந்த இன்டிகோ சிறப்பு விமானம் இன்று காலை தில்லி வந்திறங்கியது.